மனசில்லாமல் மருகி தவிக்குறேன்
மகராணி மனசு புருஞ்சு
ஒத்தையடிப்பாதையில் போனாலும்
ஒத்தப்பனை போல ஒய்யாரமா
ஒம்மொகந்தேன்
கொலுசோட கொழுவச்சிருக்கும் மணி போல
கெரண்டை காலுல எனை கட்டி
ஒரண்டை இழுக்கிறா
மனசில்லாமல் மருகி தவிக்குறேன்
மங்கைய தான் மறக்கமுடியாம
மந்தியாகிட்டேன்
கேட்ட சேதிக்கு பதில் சொல்ல
குதிக்குதடி எம்மனசு
தாவாரத்து மழைத்தண்ணி போல
படிச்சு படிச்சு தேஞ்சு போன கடுதாசி
பல நாளைக்கு தூக்கத்த கெடுக்குமடி
பல்லுவெளக்க கூட மறந்துட்டேன்
பச்சைக்கிளி ஒன்னெனப்புல
இத்தனையும் சொல்லி
பயபுள்ள பவிச காட்டுது
பாழாப்போன காதல்
wow........madurai village slang la beautiful lines!!!
ReplyDeletereally nice!!!
நன்றி உங்களுடைய கருத்துக்களுக்கும் என்னுடைய ப்ளோக்கை பார்வையிட்டமைக்கும்.
ReplyDelete