Friday, January 13, 2012

வேட்டை விமர்சனம்

பயந்தாங்கொள்ளி அண்ணன் அவருக்கு தைரியமான தம்பி. அப்பாவின் போலீஸ் உத்தியோகம் பயம் உள்ள அண்ணனுக்கு கிடைக்க அவருக்காக தம்பி எப்படி போராடுகிறார் ....


தந்தையின் இறப்பினால் மாதவனுக்கு தந்தையுடைய போலீஸ் எஸ்.ஐ வேலை கிடைக்கிறது அவரை கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைக்கிறார் தம்பி ஆர்யா.

தூத்துக்குடியே மிரளும் இரு ரௌடி கோஷ்டிகளிடையே மாட்டிக்கொள்கின்றார் மாதவன். அவருக்காக ரௌடிகளை பந்தாடி அண்ணனுக்கு புகழ் சேர்க்கின்றார் ஆர்யா. இது வில்லன் கோஷ்டிகளுக்கு தெரிய மாதவனை பெடல் எடுக்கின்றனர். அவர்களை மாதவனும் , ஆர்யாவும் என்ன செய்கின்றனர் என்பதே மிச்சம்.

போலீஸ் ஸ்டேசனிலே ஒருவனை பெட்ரோல் ஊத்தி எரிக்க பார்த்து பயந்து நடுங்கும் மாதவன் அப்பாவியாக ஸ்கோர் செய்கின்றார். நல்லா வெயிட் போட்டு தொப்பையோடு இருக்கின்றார் சாக்லேட் பாய்.

சமீரா-அமலா அக்கா தங்கை. அக்காவை மாதவன் திருமணம் செய்ய தங்கச்சியை கரெக்ட் செய்து சினிமா இலக்கணத்தை நிறைவு செய்கின்றார் ஆர்யா.

பொதுவான பேக்டிராப் இல்லாமல் படம் நகர்கிறது. லிங்குசாமி-யுவன் - நீரவ்ஷா - ஆண்டனி என்று ஜாம்பவான்கள் இருந்தாலும் கடைசி இருவரின் உழைப்பு மட்டுமே படத்தில் தெரிகிறது.

பின்னி மில் - மாதவன் வீடு - வில்லன் வீடு இது தான் லொகேசன் அதனால் எல்லா பிரேமிலும் மாதவன் இல்லைனா ஆர்யா இருக்கின்றனர். கொஞ்சம் போர் அடிக்கிறது,

விறு விறுனு போகவேண்டிய ஆக்சன் மசாலாவில் ஏகப்பட்ட பிரேக் எல்லா பிரேக்கையும் விட பெரிய பெரிய ஸ்பீட் பிரேக்கர்கள் பாடல்கள் கடைசி பாட்டை தவிர ஒன்னும் தேறலை. அதைவிட கொடுமை காட்சிபடுத்திய விதம்.

சில சண்டைகள் கட்டாயம் பாராட்டனும். அதில் நீரவ்ஷாவின் கேமிராவும் அற்புதம். ரன் படத்தில் வரும் ஓப்பனிங் பாடல் போலவே இதிலும் ஒரு பாடல்.

சமீரா ரெம்ப முதிர்ச்சியாக இருக்கிறார் அதிலும் அதிகமான க்ளோசப் ஷாட்டுகள். அமல பால் கண்கள் கவிதை. பாவாடை தாவனியில் பக்காவாக இருக்கின்றார். மாடர்ன் டிரெஸில் சகிக்கலை. அவங்க இருவரும் முடிஞ்சளவுக்கு ஸ்கோர் செய்கின்றனர்.

யுவனுக்கு தான் என்ன ஆச்சுனு தெரியல ராஜபாட்டை , வேட்டைனு செம சறுக்கல்....

வேட்டை கோட்டை விட்டுட்டாங்க....