Tuesday, September 22, 2009

அகமும் புறமுமாய் நீ - பகுதி-4

பகுதி-1
பகுதி-2
பகுதி-3
அடுத்த சனிக்கிழமையும் வந்தது. அம்மாவிடம் நானே வழிய போய் சொன்னேன்

“இன்னிக்கும் பெருமாளை பாக்கானுமா”

“ஆமடா நல்லவேளை ஞாபகப்படுத்தினே”

“எங்கோ இடிக்குதே...... இரு உங்கப்பாவை கூட வரச்சொல்லுறேன்” இப்படி அம்மா கிண்டலாக கூற சிரிச்சிக்கிட்டே நகர்ந்தேன்.

“பெருமாளை மட்டும் சேவிச்சா நல்லது”

பெருமாள் கோவிலில் வண்டியை நிறுத்தி அர்ச்சனை தட்டும் சீட்டும் வாங்கி உள்ளே வந்தால் உள்ளே அதே வாலு கூட்டத்தின் ஊடே என் அழகி. லட்சம் பட்டாம் பூச்சி நிஜமாவே பறந்தது.

“ஹாய்” நான்

“ஹோய்....” கோரஸாக அவளைத்தவிர எல்லோரும்

வாலுகளானாலும் நல்ல வாலுகள் பின்ன இருவரையும் தனித்து விட்டு நகர்ந்துவிட்டாங்களே அப்ப நல்ல வாலுகள் தானே.

இருவர் மட்டும் தனித்து இருக்கும் முதல் தருணம் வார்த்தைகளோ வாயைவிட்டு வெளிவரவே போராட்டம் நடத்துகின்றன இருவருக்கும்.

“நீங்க ஜான் சிஸ்டர்னு எனக்கு தெரியாது” ஏதோ குப்பையை கிளறினேன்

“ம்ம்...., ரெம்ப முக்கியம்” முனுமுனுத்தாள்

இந்த பொண்ணுகளுக்கு காதலில் எப்படி தான் தைரியம் வருதோ .

“என்ன செய்யுறீங்க” நான்

“எம்.பி.ஏ பைனல் இயர் போயிக்கிட்டு இருக்கு “ அவள்

“வெரிகுட் புராஜக்ட் எங்க செய்யுறீங்க வேணும்னா நான் ஹெல்ப் செய்யுறேன்” நான்

“லெக்சர் கூட கொடுப்பீங்க போல” மெதுவாக “கொடுமை டா சாமி” அவள்

“என்ன....” நான்

“காபி சாப்டுவோமா” நான்

“இல்லை ப்ரண்ட்ஸ்லாம் இருக்காங்க இன்னொரு நாள் பாக்கலாம்”

“பரவாயில்லை எல்லோருக்கும் பே பண்ணிடுவேன்” காமெடி செய்த நினைப்பில்

“ஆக்சுவலி எப்பவும் இப்படித்தானா?” கோபத்தில் கேட்டாள்

“98*** ***** இது என் நம்பர் நோட் பண்ணிக்க்குங்க, கிளம்புறேன் ஆபீஸ்க்கு லேட் ஆச்சு பை” கிளம்பினேன் பதிலை எதிர்பார்க்காமலே.

சனிக்கிழமை என்பதால் வேலை இல்லாததால் கொஞ்சம் கவிதை எழுத முயற்சித்து ரெம்ப முறை தோற்றுப்போனேன். சரி இது நமக்கு ஒத்துவராதுனு மனசுக்கு கடிவாளம் போதும் போது. ஒரு மிஸ்ட் கால். நம்பர் புதுசா இருந்தது பொதுவாகவே மிஸ்ட் கால்களுக்கு பதில் அளிப்பதில்லை ஆனால் அன்றைய மனநிலையில் அந்த எண்ணுக்கு போன் செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது. முழுவதும் ரிங் போய் கட்டானது.

அடுத்த சில நொடிகளில் டொய்ங் என்ற சத்தத்துடன் ஒரு மெசேஜ் வந்தது.

“hi its me Jenifer'

மனம் உற்சாக கூச்சல் போட்டது முதல் வேலையாக சேமித்தேன் எண்ணை.என் சேமிப்பை கரைக்கும் எண் என்றாலும் சேமித்தேன்.

அடுத்த சில பரிமாற்றங்களின் முடிவில் இன்று மாலையே ஒரு காபி ஷாப்பில் சந்திப்பதாக ஏற்பாடு. ஏதோ சாதிச்ச உணர்வு. டைமிங் பார்த்து வின்னாம்பும் வேலைசெய்தது

“இதற்கு பேர் தான் காதலா
வானம் இன்று பக்கமானதே..”

அடுத்த கவலை மச்சானை எப்படி கழட்டி விடுறது. பொதுவாவே யாரையும் எங்கயும் கழட்டிவிடுறதில்லை ஆனாலும் அவனை கூட கூட்டிப்போக ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி தடுத்தது. நல்ல வேளையாக அவன் இன்னைக்கு மாலை அலுவலக வேலையாக மதுரை செல்வது ஞாபகம் வர ஒரு பிரச்சினை முடிஞ்சது.

6 மணி காபிஷாப் மீட்டிங்கு 5.30 க்கே வந்துட்டேன் இந்த சின்சியாரிட்டிய அலுவலகத்தில் காட்டிருந்தால் இந்நேரம் டெரிட்டரி மேனஜர் ஆயிருக்கலாம் எனும் போது சிரிப்பு வந்தது. 5.45க்கே அவளும் வெள்ளைச்சுடிதாரில் அம்சமாக அரங்கேறினாள் காப்பி ஷாப்பினுள். கண்ணாலே ஹாய் சொல்லி அருகில் வந்து அமர்ந்தாள். பிரமித்துப்போய் இருந்தேன்....

தொடரும்...

பகுதி-1
பகுதி-2
பகுதி-3

Monday, September 21, 2009

அகமும் புறமுமாய் நீ - பகுதி-3

பகுதி-1
பகுதி-2
ஏதோ நழுவி போவது போல் உணர்ந்தேன். ஆபத்தில் கை கொடுக்க தானே நண்பன்.இங்கேயும் அவன் தான் கை கொடுத்தான்.

அவள் “அண்ணா” என்று அழைத்தது என்னை அல்ல ஜானை என்று அறிந்து கொண்டேன் அந்த நொடிகள் ஏதோ மரணத்தை தொட்ட உணர்வு. இது தான் காதலோ?

ஜான் அவளுடன் அலவலாவிக்கொண்டிருந்தான், அவளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்

“ஜெனி, மீட் மிஸ்டர் ரமேஷ் என்னோட மேனஜர் ” என்றான்

அவனை செல்லமாய் அடிக்க கையை உயர்த்தியவுடன்

“ஓக்கே கூல் , என்னோட பிரண்ட் இவன் நம்ம காலேஜ் தான் , நீ இவனை பார்த்ததில்லையா”

“ஓ பார்த்திருக்கோமே” இது வால்களின் குரல்கள்

“ஊப்ஸ் அப்ப இவனை தெரியும் அப்படி தானே”

“எங்கள்ல ஜெனிக்கு தான் நல்லா தெரியும் “ இதுவும் வால்கள்

அவன் என்னைப்பார்த்தான் பார்வையிலே சில பல கேள்விகளை கேட்டான் , பிறகு

“இது ஜெனி என் சித்தி பொண்ணு” என்று அறிமுகம் செய்தான்

ஹாய் , ஹலோக்கல் பரிமாற்றம் முடிந்தவுடன் ஒரு வாலு முனுமுனுக்க ஆரம்பித்தது.

“காலையில இவ ஏதோ தொலைச்சுட்டாளாம்.........”

என்ன என்பது போல நானும் , ஜானும் பார்த்தோம் அதே வாலு தொடர்ந்தது

“அவளோட இ...” வாலு இழுத்தது

“இல்லை ஸ்ட்டிக்கர் பொட்டு” ஜெனி பதற

எல்லாம் புரிந்தவன் போல் அமைதியானான் ஜான், எனக்கே கொஞ்சம் நெர்வஸ் ஆனது போல இருந்தது. சூழ்நிலையை சகஜமாக்க

“என்ன சாப்டுறீங்க” நான் கேட்டேன்

“இப்ப தான் சாப்பிட்டோம் , நோ தேங்க்ஸ்” ஜெனி

“ஓக்கேண்ணா நாங்க கெளம்புறோம் , பை சார்” சொல்லிவிட்டு கிளம்பிட்டாங்க. அவங்க போனது தான் தெரியும் எனக்கு அவனை பார்க்கவே கூச்சமா இருந்தது. அவனே ஆரம்பிச்சான்

“மச்சான் , மச்சான் சொல்லி கடைசில மச்சானாக்கிட்டியேடா” ஜான் சிரிச்சிக்கிட்டே சொல்ல அப்ப தான் நிம்மதியானேன்.

”காலைல இந்த பொண்ணை தான் சொன்னேன் டா”

“ம் சரி, என்னோட சித்தி பொண்ணு அப்பா இல்லை 4 வருஷத்துக்கு முன்னால இறந்துட்டார், ஒரே பொண்ணு . டீட்டெய்ல் போதுமா இன்னும் வேணுமா”

“நீ மச்சான் இல்லடா அதுக்குமேல” நான் சொல்ல

“என்ன மாமா வா” செல்ல முறைப்போடு சொன்னான்

”மாப்ள இன்னைக்கு சிவாஸ் நீதான்”

“சரிங்க மாமா”

காலையில் ஏதோ நல்ல மூஞ்சில முழிச்சுருக்கோம் போலனு நினைச்சுக்கிட்டே இடத்தை காலி செய்தேன்.

தொடரும்...
பகுதி-1
பகுதி-2

அகமும் புறமுமாய் நீ - பகுதி-2

பகுதி-1
பகுதி-3

கோவிலில் நடந்த மோதலில் பெருமாளை மறந்த எனக்கு மீண்டும் அவரை ஞாபகப்படுத்தினார் யாரோ ஒருவர் “கோவிந்தா” “கோவிந்தா” என்று, அதை கேட்டவுடன் அவளுடைய ‘க்ளுக்’ சிரிப்பு எட்டிப்பார்த்தது. ஓவர் நக்கல் தான் , கறுப்பாக இருந்தாலும் களையா இருக்காடா பங்காளி உள் குரல் உரக்க கத்தியது.

பெருமாளை சேவித்துவிட்டு அவளையும் சேமித்து விட்டு அலுவலகம் வந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. பெயர் மட்டும் உறுத்தியது கிறிஸ்டியன் பெயரா இருக்கே எப்படி கோவிலுக்கு அவளும் குங்குமம் கூட வைக்கவில்லை இப்படி பல உறுத்தல்கள் ஆனாலும் வின்னாம்பில் ஒரே காதல் பாடல்கள் தான்.

“என்னுள் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே”

“என்னை ஏதோ செய்துவிட்டாள்
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்”

கொஞ்ச நேரத்திலே ’ஜான்’ என்ற ’ஜான் ஆபிரஹாம்’ வந்தான் என் ரூமிலிருந்தே தெரிந்தது.வணக்கம் வைச்சான்.பதிலுக்கு தலையை சிலுப்பிவிட்டு இருந்தேன். என் வயது தான் அவனுக்கும் ஆனால் அலுவலகத்தில் ஜூனியர் ஆமா அஸிஸ்டெண்ட் மேனஜரா இருக்கான். பழக்கத்தில் இருவரும் ஒரே ’க்ளாஸ்’ படிக்கும் போதும் சரி குடிக்கும் போது சரி.

உள்ளே வந்தவன் எப்படி தான் கண்டுபிடிச்சானோ வந்த நொடியே கேட்டான்

“என்னடா சட்டைல ஸ்டிக்கர் பொட்டு ” ஜான்

பதிலே சொல்லாமல் கண்ணாடியில் பார்த்தேன் அட ஆமா பொட்டு. எடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன். ஆனாலும் இந்த பாவி விடாமல் துருவி துருவி கேட்டான் வேற வழி இல்லாம சொல்ல வேண்டியதா போச்சு.

பல்சரிடம் செருப்பை விட்டது முதல் பல் இளித்து திரும்பியது வரை ஒப்புவித்தேன்.

“மச்சான் மாட்டிகிட்ட டா”

“டேய் மோதலயே காதல்னு சொல்ற பைத்தியக்காரன் டா நீ”

“இல்லை மச்சான் இப்படி தான் ஆரம்பிக்கும் பாரேன் அடுத்தவாரம் மறக்காம கோவிலுக்கு போ நான் வேணும்னா வரட்டா”

“ஒரு மண்ணும் வேணாம் நாங்களே பாத்துக்குவோம்”

“பத்தியா நான் சொன்னபடியே நடந்துக்கிற ’You are fall in Love’ டா மச்சான் அதுக்குள்ள நாங்க அப்படினு சொல்லிட்ட நல்லா இருடா”

“ப்ளோல வர்ரதைலாம் புடிச்சிக்கங்கடா”

சனிக்கிழமை என்பதால் அரை நாள் என்பதால் அடுத்த வார வேலைகளை பற்றி டிஸ்கஸ் செய்து முடித்தோம் கருமமே கண்ணாக.

1 மணிக்குலாம் இன்னைக்கு அலாரம் அடிச்சது எக்ஸ்டன்சனில் ஜானை பிடித்து சாப்பிட அழைத்தேன். இருவரும் சிறிது நேரத்தில் அருகில் உள்ள பிரபலமான உணவகத்தில் நுழைந்து ஆர்டர் செய்தோம். நான் பசியின் வேகத்தில் புல் மீல்ஸ்ஸூம் அவன் ஸ்னாக்ஸூம் , காபிக்கும் காத்திருந்தான்.சாப்பாட்டு அவசரத்தில் சூழலை கவனிக்கவில்லை ஏதோ பொண்ணுக குரல் மட்டும் கேக்குது கொஞ்சம் நேரம் கழிச்சு பாருடா மரமண்டைனு உள் மனசு அறிவுறுத்தியதால் நிமிரவில்லை சிறிது தொலைவில் சத்தம் கேட்டதால் நிமிர்ந்து பார்த்தால் என்னழகி நிக்கிறா. சுற்றிலும் பாரதிராஜா பட எபெக்ட்டில் தோழிகள்.

இவ்வளவு நேரம் என்னைத்தான் கிண்டலடித்தார்கள் என்பது நொடியில் புரிந்தது சட்டென வந்த கோபத்தை அடக்கியது, அவளுடன் சேர்த்து தானே என்னை கிண்டலடித்தார்கள் என்பதால்.

“ஹாய்” கையை தூக்கினேன் , நேரே என்னைப்பார்த்து நடந்துவர ஆரம்பித்துவிட்டாள். கூடவே வாலுகளும் பின் தொடர்ந்தன. இந்த பாவி வேற இருக்கானே நைட் ‘ஷிவாஸ்’ மூடியை தொறக்கனும்னு அடம்பிடிப்பானே. இன்னிக்கு என் கதி அதோ கதி தான். கிட்ட வந்தாள்

“அண்ணா” என்றாள்

தொண்டை வரைக்கும் போன தயிர் சாதம் மூச்சுக்குழலில் இறங்கி புரையேற அதிர்ந்து பார்த்தேன்.

தொடரும்..
பகுதி-1
பகுதி-3

அகமும் புறமுமாய் நீ - பகுதி-1

பகுதி-2
பகுதி-3
நேற்றைய தூக்கம் என்னை வாட்டி வதைத்தது இன்றைய அதிகாலை ஒன்பது வரை. சோம்பல் முறித்து எழுத்தால் சூரியன் சுட்டுக்கிட்டு இருந்தான். இன்னைக்கும் லேட் தானா? எனக்குள்ளே கேள்விய கேட்டு கேள்வியின் நாயகன் ஆனேன்.

ஒரு வழியா கிளம்பி கண்டிப்பா ஆண்(பல்சர் - டெபனெட்லி மேல்)வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டேன். புறப்படும் போதே அம்மாவின் குரல்
“டேய் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு போயிட்டு ஆபீஸ்போடா”,

ஏழரை நடக்குதாம் அதான் இந்த பக்கா புரடக்‌ஷன் ப்ளான். தாய் சொல்லை தட்டாமல் செய்வோம்னு தெரு முக்குல இருக்குற பெருமாளை சேவிக்க சென்றேன்.

ஷூவை பல்சரிடம் பாதுகாப்பாக வைத்துவிட்டு பெருமாளிடம் எனக்கு பாதுகாப்பு கேட்டு சென்றேன். அபயம் என்று அடைந்தவர்களை அலைய விடமாட்டார் ஏழுமலையான். பழைய கோவில் என்றாலும் பெருமை சாற்றிக்கொண்டிருக்கிறது இன்னும்.

”கோவிந்தா” , ”கோவிந்தா” , ”கோவிந்தா”

கோஷத்தை பலரும் கூறினார். என் வாழ்க்கை கோவிந்தா ஆகப்போவதை யார் யாரோ உணர்த்துகிறார்கள் என்பது அறியாமலே நல்லாபிள்ளையாட்டம் சேவித்து கொண்டிருந்தேன்.

பிரகாரம் சுற்றி வருகையில் ஒரு சரியான வளைவில் எதிரில் வந்தவள் என் மீது மோதிவிட்டாள் பிறகு தான் தெரிந்தது நான் தான் மோதி விட்டேன் என்று ஆமாம் அப்பிரதட்சனமாக சுற்றியதன் விளைவு. மருகி மருகி ”சாரி” கேட்டவளை ரசிக்க முடியாமல் இருக்கவில்லை.

”கண்டிப்பா வாங்கி தாரேன்ங்க” சிரிப்போடு நான்

“என்னது” பெயர் அறியா அழகி

”கண்டிப்பா வாங்கி தாரேன்” மேலதிக நக்கலுடன் நான்

அவளும் புரிந்தவளாய் வெட்கச்சிரிப்போடு நின்றாள் கூட இருந்த (அப்புறம் தான் தெரிஞ்சது அவள் தான் கூட வந்திருக்காள் என்று) அவள் தோழிகள் ஒரு வழியாய் ’ஓட்ட’ ஆரம்பித்துவிட்டார்கள்.அப்ப தான் பெயர் தெரிந்த அழகி ஆனாள் . பெயரை கேட்டதும் கொஞ்சம் ஷாக், இவள் எப்படி இங்க என்பது போல் கேள்விகனைகள் தொடர்ந்து மீண்டும் கேள்வியின் நாயகனாக்கியது. டேய் ஸ்பாட்டுக்கு வா என்று மண்டையில் போட்டுக்கொண்டேன். அவள் பெயர் சொல்ல மற்ந்துட்டேன்ல

“ஜெனி” முழுப்பெயர் தெரியவில்லை கேட்டுச்சொல்றேன்...

தொடரும்.
பகுதி-2
பகுதி-3

வணக்கம்

வணக்கம் நண்பர்களே!

ப்ளாக்கரில் குதிக்கனும் என்கிற எண்ணம் இப்பொழுது தான் கைகூடியிருக்கு பார்ப்போம் எத்தனை நாட்களுக்கு என்று.