Tuesday, April 12, 2011

பண நாயகம்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா என்றாலே பழைய காலங்களில் வீதிக்கு வீதி சுவர்களை ஆக்கிரமிக்கும் சின்னங்களும், ஒவ்வொரு பகுதியில் கிளைச்செயலாளர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக 10-15 பேரோடு ஓட்டர் லிஸ்ட்டை எடுத்துக்கொண்டு அலைவார்கள். இது எல்லாம் தி.மு க்கு முந்திய காலம் அது என்ன ராசா தி.மு னு கேக்கலாம். வேற ஒன்னுமில்லை திருமங்கலம் தேர்தலுக்கு முந்தின காலம். திருமங்கலம் தேர்தல் தமிழக தேர்தல் வரலாற்றில் பணநாயகத்தை காட்டியது.

தி.மு காலம் முன்பு வரை தேர்தல் என்றால் கட்சி உறுப்பிணர்களுக்கு மட்டுமே பணப்புழக்கம் ப்ரியானிலாம் பழக்கம். தி.மு வில் முதல் முறையாக வாக்காளர்கள் பக்கா கவனிப்பிற்கு உள்ளானார்கள். வேளா வேளைக்கு சோறு வீதி வீதிக்கு பந்தல் வச்சு கறிச்சோறும் சாராயமும் பரிமாறப்பட்டதாய் கேள்வி. ஓட்டு இருக்கும் வீட்டிற்கு தலை எண்ணிக்கைக்கு ஏற்ப பக்காவாக பணம் சொளையா கெடைச்சதாகவும் கேள்வி. வீடு பூட்டியிருந்தாலும் கவர் உள்ளே விழுந்தது.

ஆங்... இந்த தேர்தலில் கூட இன்றைய காலையில் ஒரு செய்தி வீட்டில் ஆள் இல்லாத போதும் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட கவரில் தலைக்கு 500 வச்சு சொருகப்பட்டிருந்ததாய் கேட்டேன். ம்ம்ம்ம் என்ன ஒரு கவனிப்பு. தொகுதியில் குறைந்தது 1 லட்சம் ஓட்டுகளாவது இருக்கும் 1 ஓட்டுக்கு 500 என்றால் 5 கோடி அம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இலவசங்கள் மனிதனை சோம்பேறி ஆக்கிவிடும், நமக்கு முன் பின் தெரியாதவர் பெரும் பாலும் உதவி புரிகையில் நம்மிடம் இருந்து பலனை எதிர்பார்ப்பர். ஒரு நாள் கூத்திறு பல கோடிகளை இறைக்கும் வேட்பாளர்கள் நம்ம வரிப்பணத்தை எப்படி லவட்டுவார்கள்.

இதில் ஆளும்/எதிர் கட்சி பாகுபாடு இல்லை வசதி உள்ளவன் அள்ளி வீசுறான்..

ஓட்டுப்போட்டு உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்... யாரையுமே பிடிக்கலையா ‘ஓ’ போடுங்க தப்பு செய்தவங்களுக்கு சுளீர்னு உறைக்கும். கடமையை செய்ய தவறாதீர் பணத்திற்காக விலை போகாதீர் உங்களுக்கு இனாம் கொடுத்து பிச்சைக்காரனைப் போல மாற்றும் இந்த அவலம் நமக்கு தேவையில்லை. சிறந்த குடிமகனாகி நாட்டிற்கும் உங்கள் குழந்தைகளிற்கும் முன் உதாரணமாகுங்கள்.

தவறான பாதையை காட்டி விடாதீர்கள் வருங்கால சமுதாயத்திற்கு விரலில் மை இடும் முன்னே உங்கள் மீது கறை படிய விடாதீர்.

மையிட்ட கையும் சுத்தமாகிவிடும் ஆனால் உங்கள் மன சாட்சி....?

உழைத்து கிடைக்காத காசு பிச்சைக்கு சமம்...

பணநாயகம் ஒழிக , பார் போற்றும் தமிழனாய் தலை நிமிர்வோம்.

தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்கொரு குணம் உண்டு.

வாழ்க இந்தியா வளர்க நம் ஜனநாயகம்

பணநாயகம் அழித்து சனநாயகம் மீண்டும் தலைக்க குறைந்த பட்சம் ஓ வாச்சும் போடுங்க.