Saturday, November 28, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி-3

போன பகுதி கொஞ்சம் குழப்பிருக்கலாம் மன்னிச்சுக்கங்க அவை எல்லாம் சொல்ல வேண்டிய கட்டாயம்.

சரி புரோகோடரில் உள்ளீடு கொடுத்தாச்சா?

உள்ளீடு கொடுத்த உடன் அந்த வீடியோவின் குணாதிசயங்களை கவனியுங்கள் ntsc/pal ,  frame rate , 4:3 or 16:9 , field order

இதை கவனித்து வெளியீட்டு வீடியோவிலும் இதே முறையை பின்பற்ற வேண்டும்.



டார்கெட்(target) எனும் பட்டனை க்ளிக் செய்யவும் அதில் தோன்றும் விண்டோவில் ஆட்(add) பட்டனை தேர்வு செய்து


மேலே படத்தில் உள்ளது போல தோன்றும் டிவிடியை க்ளிக் செய்தது அதற்கு நேரே உள்ள ஸ்க்ரீனில் mpeg2 - dvd-ntsc(mastering quality) என்பதை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்து பின் ok க்ளிக் செய்து வரவும்.
இப்பொழுது பின் வரும் திரை தோன்றும்



அந்த ஸ்க்ரால் பாரை கீழே இறக்கினால் மேலதிக தகவல் கிடைக்கும் அது கீழே உள்ள படத்தில் உள்ளது.


மேலே உள்ள இரண்டு படங்களில் காணப்படும் பகுதிகளை பற்றி காண்போம்.

1.base name - உங்களுடைய வெளியீட்டு பைலின் பெயர் குறிப்பிட
2.path - எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க
3.use source file name -  பெயர் கொடுக்க சோம்பேறித்தனம் இருந்தா raw பைலின் பெயரை எடுத்துக்கொள்ள சொல்லலாம்
4.file name -  மேலே நீங்கள் செய்த 3 மாற்றங்களின் இறுதி மாதிரி இந்த வரி
stream basic:
1.Stream format - இதற்கு நேரே உள்ள பெட்டியில் இருக்கும் dvd (mpeg Program/elementary stream ) என்பதை தேர்வு செய்யவும் , மேலதிக ஆப்சன்கள் உள்ளன vcd , dvd , svcd ,  hdvd ... போன்றவை அவை நமக்கு இங்கு தேவையானவைகளை தேர்வு செய்துள்ளோம்
2.stream type - இங்கே MPEG2 Elementary stream என்பதை தேர்வு செய்யவும் . ஏன்னா எலிமெண்டரி ஸ்டீர்ம் தான் மேஸ்ட்ரோ எடுத்துக்கும்.
3.file extension video - m2v முன்னரே குறிப்பிட்டுருக்கேன்.
4.file extension audio - default m2a இருக்கும் நாம செய்யபோறது ac3 அதை கீழே உள்ள அப்சனில் தேர்வு செய்யலாம்.
அடுத்து இருக்கும் use marker point if exist என்பதில் இருக்கும் டிக்கை எடுத்து விடுங்க.
video basic:
1.Video standard என்பதில் Ntsc 720 X 480
2.width 
3.height இவை இரண்டும் டிஸ்ஸேபிளா இருக்கும் காரணம் நாம டிவிடிய தேர்ந்தெடுத்தனால் raw mpeg தேர்ந்தெடுத்தா இவை எனபிளாக இருக்கும்.
4.frame rate - 29.976(ntsc) என்பதை தேர்ந்தெடுக்க டிவிடிக்கு (நாம் டார்கெட் செலக்ட் செய்யும் போதே dvd ntsc என்பதை தேர்வு செய்துள்ளோம் என்பதை கருத்தில் கொள்க)
5.interlacing - இங்கே உங்களுடைய source video குனாதிசயங்களை கவனிக்க சொன்னதை பாருங்கள் அங்கே இந்த பகுதியில் என்ன பண்பு இருந்ததோ அதையே இங்கும் கொடுங்கள் . உங்கள் ப்ளேயர் progressive scan ப்ளே செய்தால் progressive கொடுக்கலாம். இல்லையெனில் top or bottom இரண்டே வாய்ப்புகள்.

6.aspect ration - 4:3 or 16:9(wide screen) உங்கள் வீடியோ எந்த பார்மட்டில் இருக்கிறதோ அந்த பார்மட்டை தேர்வு செய்யுங்கள்

7. Quality / speed - இதில் mastering quality என்பதை தேர்வு செய்யுங்கள் அது தான் நல்ல வெளியீடு கொடுக்கும் ஆனால் நேரம் கொஞ்சம் அதிகம் எடுக்கும். இல்லை வேகமாக செய்யனும்னா அதுக்கும் ஆப்சன் இருக்கு.
use closed GOP - remove the tic இதை பத்தி சொன்னா எல்லோரும் என்னை அடிக்க வந்துருவீங்க கொஞ்சம் குழப்பும் அதனால விட்டிடுவோம்

video bit rate 
bitrate type : இதில் VBR(variable bit rate) என்று இருப்பதை தேர்வு செய்தல் நலம் காரணம் இது தான் குறைவான பைல் சைஸில் நிறைவான தரத்தை கொடுக்கும். ஒரு வீடியோ எத்தனை மணி நேரம் ஓடினாலும் அதனுடைய அளவினை(file size) நிர்ணயிக்கும் பகுதி இது தான் பிட்ரேட் அதிகரிக்க அதிகரிக்க பைலின் அளவு கூடும். பிட்ரேட் 8000 மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிட்ரேட் கால்குலேட் எனும் இலவச மென்பொருள் இருக்கிறது இணையத்தில் வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நீங்கள் டிவிடி 5(4.7 ஜிபி) அல்லது டிவிடி 9(8.5 ஜிபி) பயன்படுத்த போறீங்களா என்பதை தீர்மானம் செய்துக்கங்க. டிவிடி 5 யை எடுத்துக்குவோம்.

vbr choose செய்ததும் கீழே இருக்கும் பெட்டிகளில்
1.number of passes - 2 pass கொடுங்க கொஞ்சம் நீளமான வீடியோ என்றால் குறைவான நேரம் கொண்ட வீடியோ என்றால் நாம் vbr தேர்ந்தெடுக்க தேவையில்லை அதற்கு constant bitrate ஓக்கே.
இந்த 2 பாஸில் என்ன செய்யும்னா இரண்டும் முறை என்கோடிங் செய்யும் அதாவது முதல்முறை குவாலிட்டியை நிலை நிறுத்தும் இரண்டாவது முறை நாம் கொடுத்துள்ள பிட்ரேட்டிற்கு தகுந்தார் போல பைல் சைஸை நிலை நிறுத்தும். சில மென்பொருட்களில் 99 பாஸ் கொடுக்கும் வசதி கூட இருக்கு (உதாரணம் சினிமா க்ராப்ட்) ஆனால் அவ்வள்வு தேவையில்லை என்பது என் கருத்து.
video bitrate இதுக்கு இன்னொரு பேரு average bitrate இங்க கொடுக்க கூடிய அளவுதான் நம்முடைய வீடியோவின் அளவினை(size) நிர்ணயிக்க போகிறது எனவே பிட்ரேட் கால்குலேடர் பயன்படுத்தலாம்.
உதரணமாக  ஒரு 3 மணி நேர வீடியோவிற்கு 3200 kbps  கொடுக்கலாம் இது டிவிடி 5 க்கு இதனுடைய கொள்ளளவு 4.7 ஜிபி என்பதை நினைவில் கொள்க.
max bitrate இங்கே 8000 கொடுங்கள் இதை தாண்டி கொடுக்க வேண்டாம்
min bitrate - 0 போதும்

audio basic :
use audio : use always - நீங்கள் இந்த வீடியோவில் உள்ள ஆடியோவை பயன்படுத்துவதாக இருந்தால் இந்த தேர்வை செய்யுங்கள் இல்லை வேற ஆடியோ தனியாக என்கோடிங்க் செய்வதாக இருந்தால் dont use என்பதை தேர்வு செய்துவிடுங்கள்.

audio stream type : AC3 என்பதை தேர்வு செய்யுங்கள் இதுதான் குறைவான பைல் சைஸில் நிறைவான தரம் ஏற்கனவே ஆடியோ பற்றி சொல்லியுள்ளேன் ரிவைஸ் செய்துகங்க.

sample rate - 48.0 disable ஆ இருக்கும் காரணம் நாம டார்கெட்டில் டிவிடி என்பதை தேர்வு செய்ததால் எப்பொழுதுமே டிவிடி ஆடியோ சாம்பிள் ரேட் 48000 . விசிடி, ஆடியோ சிடி போன்றவற்றிற்கு 44100 .

channels : 3 options
               mono - ஆடியோ சிங்கிள் டிராக் என்றால் இது
               stereo - இரண்டு டிராக் என்றால்
               5.1 - சரவுண்ட் சவுண்ட் என்றால் (சாதரண ஆடியோவையும் இதற்கு தேர்ந்தேடுக்கலாம் ஆனால் எபெக்ட் கிடைக்காது தேவையில்லாமல் இடத்தை தான் அடைக்கும்)
audio bitrate : stereo - 128kbps minimum - maximum - 192 kbps
                      5.1 - 224kbps minimum - maximum - 448  kbps
இந்த செட்டிங்கோட இந்த பகுதியை நிறுத்திக்கொள்வோம் மேலதிக டார்கெட் ஆப்சன்கள் அடுத்த பகுதியில்

சந்தேகங்கள் இருந்தால் கேள்விகள் கேட்கலாம்....

பிடிச்சிருந்தா ஓட்டு/கமெண்ட் போடுங்க

பிரேத பரிசோதனை (autopsy) நிறைவுப்பகுதி - 7


காலிங் பெல் தொடர்ச்சியாக அழைத்தது அதிகாலை தூக்கத்தில் இருந்த சிவா தூக்க கலக்கத்துடன் செல்லில் மணி பார்த்தான் காலை 5.27 காட்டியது. எவனா இருக்கு எவனா இருக்கும் இந்நேரத்துல.... மனதிற்குள் திட்டிக்கொண்டே கதவை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

கதவை எரிச்சலோடு திறந்தவனுக்கு ஆச்சரியம், அதிகாலை வேலையிலும் காக்கி யுனிபார்ம் உடன்  நின்றிருந்தான் அயூப்.

“என்ன டா இந்நேரத்துல”

அவனது கேள்வியை கவனிக்காதவன் போல தன்னுடைய சகாக்களுக்கு உத்தரவு போட்டான்

“சர்ச் எவ்ரி திங் , டோன் டிஸ்டர்ப் கிட்ஸ் அண்ட் நிர்மலா”

கோபமடைந்த சிவா கத்தினான்

“வாட்ஸ் ஹெல் கோயிங்க் ஆன் ஹியர்”

“சாரி சிவா, யு ஆர் அண்டர் அரஸ்ட்”

“ஆர் யூ ஜோக்கிங் , ஒய்”

அயூப் முறைத்த முறைப்பில் சிவாக்கு சர்வம் அடங்கியது

“மினிஸ்டர் தில்லை , அடிரா , ஆனந்த் கொலைகளுக்காக உன்னை கைது பண்ணுறேன்”

பக்காவான ப்ளான் போட்டும் செய்த கொலைகளையும் அதை திசை திருப்ப முயற்சி செய்தவைகளையும் ஞாபகப்படுத்திக்கொண்டான்.

சரியா 6 மணிக்கு சிவாவை அள்ளிப்போட்டு சிபிசிஐடி நோக்கி சென்றது போலீஸ் வாகனம்.

“சிவா எதுக்காகனு சொல்லிடு டார்ச்சர் வேணாம்னு பாக்குறேன்”

“    “

“ஏன் இப்படி நடந்துகிட்ட”

“உன்னோட மூளை ஆராய்ச்சியை உண்மைனு நம்பி ஏமாந்தவன் நான் , ஆனா அது தான் எனக்கும் க்ளூ கிடைச்சது”

சிறிது நேரம் விட்டு தொடர்ந்தான்

“இறந்த மூளையின் செல்களை உயிர்ப்பிக்க முடியாது நீ செய்யுறதா சொன்னியே அந்த ஆராய்ச்சி கூட சாத்தியமே இல்லைனே நேற்று இரவு தான் தெரிஞ்சது”

சிவா ஏதும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

”ஏன் இப்படி ப்ளான் செய்து என்னை ஏமாத்துன”

“யெஸ்..............” கத்தினான் சிவா

“எனக்கு பழிவாங்கனும்....”

ஆச்சரியத்துடன் பார்த்தான் அயூப்

“உன்னை இல்லை நேர்ம்மைக்கு எதிரா இருக்குற எல்லோரையும்”

மீண்டும் ஆச்சரியக்கோடுகள் அயூப் முகத்தில்

“ஒரு மர்டர தற்கொலைனு சொல்ல சொன்னான் அந்த மினிஸ்டர் அதுவும் என்னை துப்பாக்கி முனையில மிரட்டி, அவன் தான் அடிராவை காப்பாத்தினான்”

தொடர்ந்தான்

“அடிரா.... அவனை நீங்களே கோட்டை விட்டீங்க . அவனால் எத்தனை பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க தெரியுமா”

இவனோட வாக்குமூலம் ரெக்கார்ட் ஆக தொடங்கியது

 Rohypnol டிரக் தெரியுமா இந்தியாவுல புழக்கத்துல விட்டதே அவன் தான், Rohypnol ஒன்னும் அபின் , கஞ்சா மாதிரி இல்லை . அதை பெண்களுக்கு கொடுத்து செக்ஸ் வச்சிக்கிட்டான், அந்த போதையின் விளைவு தெரியுமா?.....”

“போதை இருக்கும் வரை நடந்தவை ஞாபகத்தில் கொஞ்சம் கூட இருக்காது, அதை விடக்கொடுமை அந்த பொண்ணு கர்பம் தரிக்க மாட்டா , நிரந்தரமாக. எந்த ஒரு விட்னஸ்ஸூம் எடுக்க முடியாது”

கேட்ட அயூப்பும் , சகாக்களும் ஆடிப்போயினர்

”என்கிட்ட டிரீட்மெண்ட் க்கு வந்த அந்த ஏரியா பொண்ணுங்க எல்லாம் பெரிய இடத்து பொண்ணுங்க ஆனாலும் போதையில் சிக்கியதால் எதிர்காலம் இழந்து நிக்குறாங்க”

“என்ன செஞ்சீங்க....”

“ஆனந்த என்ன பண்ணினார் உன்னை?”

“ஆனந்த் கொஞ்சம் புத்திசாலி”

அமைதியாகினான் சிறிது நேரம்

“கரெக்ட்டா என்னை வாட்ச் செய்து நெருங்கிட்டான், அதனால அவன் கதையையும் முடிக்க வேண்டியதா போச்சு”

ஞாபகத்திற்கு வந்தவனாய் அயூப் “ கன் ஏது”

“ஹா ஹா ஹா (பலத்த சத்ததுடன்) சென்னைல கிடைக்காத பொருளா நல்லா தேடுங்க கட்டாயம் கிடைக்கும் ...”

வெறிபிடித்தவன் போல கத்தியவனை மயக்க ஊசி போட்டு ஆசுவாசப்படுத்தினார் மருத்துவர்.

பல நாள் விசாரனைக்குப்பின் சிவா பயங்கரமான மனநோயால் பிடிக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சர்ட்டிபிகேட் கொடுத்திருந்தார்.

சிவாவுக்கு குறைந்த தண்டனையே கிடைத்தது.

சிறைக்குள் இருந்தா சிவாவினுள் மீண்டும் சிங்கம் எட்டிப்பார்த்தது ஜெயிலரின் கொடுமைகளால்.

முற்றும்

Friday, November 27, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பாகம் -2

முதல் பகுதி கொஞ்சம் குழப்பம் இல்லாமல் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் . இந்த பகுதியில் எப்படி வீடியோ/ஆடியோக்களை உருவாக்குவது என்று காண்போம்.

புரோகோடரை இயக்கி அதனுடைய முகப்பில் பின்வரும் நிலையில் தெரியும்.



இதில் source என்பதை தேர்வு செய்து அதில் உள்ள Add பட்டனை அழுத்தவும் ஒரு டயலாக் பாக்ஸ் தோன்றும் தோன்றும் டயலாக் பாக்ஸில் உங்களுடைய சோர்ஸ் வீடியோவை தேடி இனைக்கவும். இங்கு avi தான் இனைக்க வேண்டும் என்பதில்லை உங்களுடைய வீடியோ எந்த பார்மட்டாக இருந்தாலும் இனைக்கலாம். உங்களிடம் உள்ள டிவிடியை கூட சோர்ஸ் பைலாக இனைக்கலாம்.
உதாரணமாக இரண்டு படம் உள்ள 2 டிவிடிகள் இருக்கின்றன
1.படம்1 - படம் 2
2.படம் 3 - படம் 4

இந்த இரண்டு டிவிடியின் காம்பினேசன் பிடிக்க வில்லை உங்களுக்கு அதாவது நீங்கள் விரும்பும் காம்பினேசன்
படம் 1 - படம் 4
படம் 2 - படம் 3

ஒரு டிவிடியில் என்ன வகையான பைல்கள் இருக்கும்
இரண்டு போல்டர்கள் இருக்கும் 1. AUDIO_TS (உள்ளே ஒன்னுமே இருக்காது) 2.VEDIO_TS(இதன் உள்ளே பின் வரும் பைல்கள் இருக்கும்)


 VIDEO_TS.IFO
The first video play item, IFO, usally a copyright notice or a menu
 VIDEO_TS.VOBThe first video play item, VOB
 VTS_01_0.BUP 
 VTS_01_0.IFOTitle Set 01IFO, usually the main movie
 VTS_01_0.VOBTitle Set 01, VOB 0, the menu for this title
 VTS_01_1.VOBTitle Set 01, VOB 1, the video for this title
 VTS_01_2.VOBTitle Set 01, VOB 2, if larger than 1 GB it will be splitted into several vobs
 VTS_01_3.VOBTitle Set 01, VOB 3
 VTS_01_4.VOBTitle Set 01, VOB 4, up to 10(0-9) VOB files if necassary
 VTS_02_0.BUP 
 VTS_02_0.IFOTitle Set 02IFO, usually movie extras
 VTS_02_0.VOBTitle Set 02, VOB 0, the menu for this title
 VTS_02_1.VOBTitle Set 02, VOB 1, the video for this title
 VTS_xx_x.BUP 
 VTS_xx_x.IFOAnd so on
 VTS_xx_x.VOB 
இப்ப இங்க இருக்கும் vob பைல்களில் தான் வீடியோ ஒளிந்திருக்கும். உள்ளே இருக்கும்  ப்டம் எந்த vob set இல் இருக்குனு கண்டுபிடிக்க நீரோ ஷோ டைம்ல ப்ளே செய்தா கண்டுபிடிக்கலாம் அதுக்கு நீரோ ஷோ டைம்ல இடது க்ளிக் செய்து view மெனு சென்று அதில் உள்ள show additional info on OSD என்பதை தேர்வு செய்திருக்க வேண்டும். இதை தேர்வு செய்தால் படம் ஓடும் பொழுது எந்த டைட்டில் ஓடுது ,  படத்தோட aspect ratio என்ன bit rate என்ன ntsc or pal  ஆ என்று காட்டும் , audio format என்ன அதோட bit rate என்ன போன்ற மேலதிக தகவல்கள் காட்டும்.


இப்ப சம்பந்தமே இல்லாம டிவிடிய எதுக்கு சொல்லித்தாரேன்னு பாக்குறீங்களா உங்களிடம் சோர்ஸ் வீடியோ ஏதும் இல்லாத பட்சத்தில் உங்களிடம் இருக்கும் படங்களின் டிவிடிகளையே பயன்படுத்தி செய்து பார்க்கலாம். அதற்காக தான் இந்த சிறிய விளக்கம்.


புரோகோடரில் சோர்ஸ் விண்டோவை திறந்து உங்களுடைய வீடியோவை இனைத்துக்கொள்ளுங்கள் வீடியோவை இனைத்தவுடன் அந்த வீடியோவின் குணாதியசங்களை பக்கத்தில் இருக்கும் பெட்டில புட்டு புட்டு வச்சுடும் அதாவது 
Ntsc or pal
aspect ratio
frame rate
interlace method
audio format 
போன்ற விசயங்களை காட்டும்


ntsc or pal இதை போன பதிவிலே சொல்லியாச்சு
மிச்சம் இருப்பது பற்றி பார்ப்போம்
aspect ratio
ஒரு வீடியோ காட்சியின் அளவை அதாவது பின்வரும் மாதிரி அளவுகள்
விசிடிக்கு
pal முறையில் 352 X 288 pixels ரெம்ப சிம்பிள்ளா புரிஞ்சுக்கனும்னா ஒரு ப்ரேமோட உயரம் , அகலம் பற்றிய குறியீடு
ntsc - 352 X 240 pixels


டிவிடி யின் அளவு


ntsc - 720 X 480 (இது d1 என்று அழைக்கப்படும்)
         352 X 480 (இது half d1 என்று அழைக்கப்படும்)
pal 720 x 576 pixels  (Called Full-D1)

frame rate:
இது என்னனா நாம அந்த காலத்து டாக்குமெண்டரி படம்லாம் பார்த்துருப்போம் காந்தி வேகமாக ஓடுவாரு , சில காட்சிகள் ஏதோ ஸ்லோமோசனில் இருக்கும் இதையெல்லாம் தீர்மானிப்பவர் தான் இந்த frame rate.
சாதரணமாக ஒரு சினிமா(தியேட்டரில் காட்டப்படும் படம்) வுக்கு 24fps(frames per second) அதாவது ஒரு செகண்டில் 24 ப்ரேம்கள் காட்டப்படும் இதில் ப்ரேம்களின் எண்ணிக்கை அதிகமானால் வேகமாக செல்வது போலவும் குறைவாக இருந்தால் மெதுவாக செல்வது போலவும் இருக்கும் அதனால் தான் நடந்து போன காந்தி ஓடுகிறார். அந்த கால கட்டத்தின் டெக்னிக்கல் குறைபாடு.
சரிமேட்டருக்கு வரும் ஒரு ntsc யின் ப்ரேம் ரேட் என்ன 29.97 (அ) 30 fps . ஒரு pal video frame rate 25 fps. இதை கண்டிப்பா ஞாபகம் வச்சுக்கனும்

interlace method:
ஒரு ntsc வீடியோவில் 525 கோடுகள் கிடைமட்டமாக இருக்கும் இது odd / even என்று பிரிக்கப்பட்டு உள்ளன.இந்த கோடுகள் ஒன்றின் மேல் ஒன்று பொருந்தி நமக்கு சரியான பிம்பம் திரையில் கிடைக்கிறது.  இதில் மூன்று வகை இண்டர்லேஸ் இருக்கின்றன
1.upper top field first
2.lower bottom field first
3.progressive scan
உங்களுக்கு எந்த வகையான இண்டர்லேஸ் வேனுமோ அதை கேப்சரிங் டைமிங்கில் தீர்மானிக்கலம் அப்படி இல்லை ஏற்கனவே வீடியோ கம்யூட்டரில் இருந்தா அதனுடைய இண்டர்லேஸ் மெத்தடை கண்டுபிடிச்சு அதே இண்டர்லேசை உபயோகப்படுத்துங்க. இண்டர்லேசை எப்படி கண்டுபிடிப்பது புரோகோடரில் உங்களின் சோர்ஸ் வீடியோவை இனைத்தவுடன் அதனுடைய குணாதிசியங்கள் பக்கத்து விண்டோவில் காட்டப்படும் என்று மேலே சொன்னேன் இல்லையா அந்த விண்டோவிலே இண்டர் லேஸ் மெத்தட் என்ன என்று காட்டப்படும். எனவே கவலை வேண்டாம்.


சரி குழப்புனது போதும் மேலே உள்ள தொழில்நுட்ப தகவல்கள் கொஞ்ச்ம குழப்பம் வாய்ந்தவையாக இருக்கலாம் வீடியோ/ஆடியோ பற்றி முதல் முறை படிப்பவர்களுக்கு . சரி இந்த விசயத்தை புரிஞ்சுக்க டியலைனு நினைக்குறவங்க மறந்துடலாம்

நாளை முதல் செய்முறை தான்.... நாளை கண்டிப்பாக புரோகோடரில் இன் - அவுட் பற்றி பார்ப்போம்.

பிடிச்சிருந்தா ஓட்டு/கருத்து போடுங்க

Thursday, November 26, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பாகம் -1

நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் நிறைய டிவிடி உருவாக்க மென்பொருட்கள் இருக்கின்றன. என்ன பார்மட் வீடியோ கொடுத்தாலும் அதை டிவிடியாக மாற்றிக்கொடுப்பவை கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும் தொழில் ரீதியாக என்று பார்த்தால் சில மென்பொருட்களே தேறும்.

1.அடோப் நிறுவனத்தின் என்கோர் டிவிடி(Encore) எனும் மென்பொருள்
2.சோனிக் நிறுவனத்தின் டிவிடி இட் (dvd it) மற்றும் scenario
3.சோனி நிறுவனத்தின் டிவிடி ஆர்க்கிடெக்ட்(dvd architect)
4.டிவிடி லேப் (dvd lab)

போன்றவைகள் முன்னிலை வகிக்கின்றன. இந்த வரிசையில் இல்லாத ஆனால் இவற்றிற்கு எல்லாம் முன்னோடியான ஒரு மென்பொருள் மூலமாக நாம் கற்றுக்கொள்ள போகிறோம்,அந்த மென்பொருளின் பெயர்

Spruce Maestro இந்த மென்பொருள் இப்பொழுது விற்பனையில் இல்லை அப்டேட் இல்லை ஏன் கம்பெணியே இல்லை. ஆமாம் இதனுடைய அருமை பெருமைகளை பார்த்த ஆப்பிள் நிறுவனம் இதை விலைக்கு வாங்கி விட்டது . கீழ்வரும் படத்தை பார்த்தாலே தெரியுமே எந்த காலத்து வெர்சன்னு.


ஓல்ட் ஸ் கோல்ட் எனும் பொன்மொழி இந்த மென்பொருளுக்கு பொருந்தும் மேலே சொன்ன 4 மென்பொருட்களும் இன்னும் இந்த மென்பொருளின் வசதிகளையும் உருவாக்கத்தையும் காப்பி அடித்து உருவாகிக்கொண்டிருக்கின்றன ஆனாலும் மேஸ்ட்ரோவின் இடத்தை பிடிக்க இயலவில்லை. இந்த மென்பொருள் வேண்டுவோர் எங்காவது தளங்களில் தேடி எடுத்துக்கொள்ளவும்.

இந்த தளத்தில் இருக்கலாம்

காப்பிரைட் பிரச்சினை எப்படினு தெரியல ஏன்னா கம்பெனியே இல்லை ஒருவேளை கையகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம் ஏதும் செய்யலாம்.

சரி இந்த மேஸ்ட்ரோவை கற்றுக்கொள்ளும் முன் நமக்கு சில விசயங்கள் தேவை மேஸ்ட்ரோ வெறும் டிவிடி ஆத்தரிங் மென்பொருள் மட்டுமே அதற்கு தேவையான வீடியோக்களை நாம் தனியாக உருவாக்க வேண்டும். எனவே அதற்கு தேவையான ஒரு எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு வீடியோ மாற்றியை நாம் படிக்கலாம்.

நமக்கு தேவையான மென்பொருட்கள்

1.ஸ்ப்ரூஸ் டிவிடி மேஸ்ட்ரோ பதிப்பு எண் 2.9
2.எடியஸ் தற்போதைய பதிப்பு எண் 5 அல்லது புரோகோடர் தற்போதைய பதிப்பு 3 அல்லது கார்பன் கோடர் பதிப்பு 3 
3.போட்டோஷாப்

போட்டோஷாப்:
மெனுக்களை உருவாக்க பயன்படுத்த போகிறோம்

எடியஸ் (அ) புரொகோடர்:
வீடியோவை மாஸ்ட்ரோ மென்பொருளுக்கு ஏற்றவாரு மாற்ற பயன்படுத்த போகிறோம்

ஸ்ப்ரூஸ்:
மாற்றிய வீடியோவையும் , மெனுக்களையும் பயன்படுத்தி டிவிடி உருவாக்கம் செய்ய போகின்றோம்.

முதலில் படிக்க இருப்பது புரோகோடர்:


புரோகோடர் பற்றி சொல்லனும்னா இது க்ராஸ்வேலி(கெனாபஸ்) நிறுவணத்தின் தயாரிப்பு இதே நிறுவணத்தின் தயாரிப்பு தான் எடியஸ்.


புரோகோடருக்கும் , எடியஸ்க்கும் என்ன வித்தியாசம் என்றால்

புரோகோடர் ஒரு சக்திவாய்ந்த வீடியோ/ஆடியோ மாற்றி தொழில் ரீதியாக பயன்படுத்தலாம். பெரும்பாலான பார்மட்டுகளை இன்புட்டாக கொடுக்கலாம். அதே போல அவுட்புட்டாகவும் பெறலாம்,

எடியஸ் என்பது ஒரு தொழில்ரீதியிலான எடிட்டிங் மென்பொருள். நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது இல்லை. மற்ற மென்பொருள் கோடக்குகளை விட எடியஸின் கோடக்குகள் சக்திவாய்ந்தவை நல்ல அவுட்புட் கொடுக்க வல்லவை. இந்த எடியஸ் பற்றி படிக்கவே பெரிய தொடர் ஆகும் என்பதால் நாம் புரோகோடர் பற்றி மட்டும் பார்ப்போம். டைம் லைனில் வேலை செய்ய தெரிந்தவர்கள் எடியஸை பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருட்களை கொஞ்சம் சேகரித்து நிறுவிக்கங்க அடுத்தடுத்து வரும் பகுதிகளில் ஒவ்வொரு செய்முறையாக பார்ப்போம்.

கொஞ்சம் வீடியோக்களை பற்றிய முன்னுரை கொடுப்போமே...

வீடியோக்களில் நிறைய பார்மெட்டுகள் உள்ளன avi ஆரம்பித்து mkv வரை இருக்கின்றன.

raw video format என்று பார்த்தால் அது avi தான். இந்த avi யிலே நிறைய கோடக்குள் இருக்கின்றன. இதில் பொதுவானது மற்றும் நல்ல தரமானது என்றால் uncompressed avi format தான்.

ஆனால் இந்த பார்மட்டை நாம் டிவிடி ஆத்தரிங்கில் நேரடியாக பயன்படுத்த முடியாது எனவே ஆத்தரிங் மென்பொருள் ஏற்றுக்கொள்ளும் வகையில் வீடியோவை மாற்ற வேண்டும் .

பொதுவாக ஆத்தரிங்க் மென்பொருட்கள் ஏற்றுக்கொள்ளும் பார்மட்
mpeg2 , mpeg1 - for videos
pcm , ac3 , dts - for audios

முதலில் வீடியோவை பார்ப்போம்

raw avi யிலிருந்து எம்பெக் காக மாற்றும் பொழுது கோடக்குகளுக்கு தகுந்த அவுட்புட் கிடைக்கும். ஒரு காலத்தில் இதில் கோலோச்சியது Main concept codecs இந்த கோடக்குகள் தான் இன்றுவரை அடோப் ப்ரிமீயர் , சோனி வேகாஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இது சிறந்த கோடக் அல்ல என்பது என் கருத்து ஏனென்றால் வெளியீடு கொஞ்சம் டல்லா இருக்கும். ப்ரிமீயர் , வேகாஸ் இரண்டுமே ஒரே கோடக் என்பதால் வெளியீடு ஒரே தரத்தில் இருக்கும் என்பதை குறித்துக்கொள்க. ஆனாலும் அடோப்பிற்கு ஒரு அருமையான ப்ளக்கின் இருக்கு அது தான் சினிமா க்ராப்ட் என்கோடர்(CCE) விலை தான் கொஞ்சம் கண்ணைக்கட்டும் 2000 டாலர் . இதை காசு கொடுத்து வாங்குனா ஏதோ ஏமாந்த மாதிரி இருக்கும் ஆமா வெறும் 5 எம்பி கூட வராது இந்த மென்பொருள்.

இந்த மெயின்கான்சப்ட் கோடக்கை விட சிறந்தது கெனாபஸின் கோடக் எனவே எடியஸ்/புரோகோடர் அவுட் புட் அருமையாக இருக்கும்.

வீடியோவில் இரண்டு வகையான முறைகள் உள்ளன

1.ntsc
2.pal


நம்ம ஊரு பக்கம் டிவிடிக்கு ஏற்ற முறை ntsc , விசிடிக்கு ஏற்ற முறை pal.

டிவிடிக்கு தேவையான mpeg-2 வகை பற்றி பார்ப்போம்

mpeg2 களை இரண்டு வகையாக பிரிக்கலாம்

1.Program stream
2.Elementary stream

program stream file இன் விரிவுப்பெயர்(extension name) *.mpg (இதில் வீடியோவுடன் இனைந்த பகுதியாக ஆடியோவும் இருக்கும்)
elementary stream file இன் விரிவுப்பெயர் *.m2v,*.m1v  இதில் வீடியோ தனியாக பிரிக்கப்பட்டு இருக்கும்.

நம்முடைய மேஸ்ட்ரோ இந்த elementary stream file களை மட்டுமே எடுக்கும். அதாவது *.m1v and *.m2v பைல்களை மட்டுமே வீடியோவில் ஏற்றுக்கொள்ளும்.

அடுத்து ஆடியோ

ஒரு டிவிடிக்கு தேவையான ஆடியோ வகைகள்

புரோகிராம் ஸ்ட்ரீம் என்றால் வீடியோவுடன் ஆடியோ இனைந்து வரும்
எலிமெண்டரி ஸ்ட்ரீம் என்றால் தனியாக உருவாக்க வேண்டும்

மேஸ்ட்ரோ ஏற்றுக்கொள்ளும் ஆடியோ பார்மட்டுகள்
1.*.ac3
2.*.wav(pcm wav)
3.*.dts

இந்த dts sound support இப்பதான் கொஞ்ச காலமாக என்கோரில் இருக்கு இன்னும் டிவிடி ஆர்க்கிடெக்டில் இல்லை.

ac3 - இதில் இரண்டு வகைகள்
1)2 channel  ஸ்ட்ரியோ
2)5.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் இந்த வகை ஆடியோ பைல்கள் மிகவும் சிறிய கொள்ளவை எடுக்கும் என்பது சிறப்பானது ஒலியும் துல்லியமாக இருக்கும்.

wav - இதிலும் அதே இரண்டு வகை ஆனால் இது uncompressed என்பதால் இதன் அளவு மிகவும் அதிகம்.

dts - தியேட்டரில் பார்க்கும் எபெக்ட் ஏசி-3 யைவிட கொஞ்சம் பெட்டர், பைல் சைஸ் சிறியதே ஆனால் எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் dts யை ப்ளே செய்யும் வசதி இருப்பதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

சரி நாம் படிக்கபோவது எந்த பார்மெட்டுகளை பற்றினு பார்ப்போம்
1.*.m2v
2.*.ac3

அடுத்த பாடத்தில் புரோகோடர் வருகிறது Procoder யை தேடிப்பிடிங்க.....
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க பிடிக்கலைனாலும் கருத்து போடுங்க சந்தேகங்கள் இருப்பின் கேள்விகளும் கேக்கலாம்.

Wednesday, November 25, 2009

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர்கள்

இவரு தான் உயர்ந்த மனிதர் துருக்கில இருக்கார் பெயர் Sultan Kosen. இவரோட உயரம் 2 மீட்டர் 46.5 செ.மீ (8 அடி 1 அங்குலம்). இவரு நீளமான கை மற்றும் கால்களுக்கான சாதனைகளுக்கும் உரியவர்னு சொல்லி அதுக்கும் கின்னஸ் கிட்ட மல்லுகட்டுறார்.

இவரு 12 இன்ச் உள்ள ஒரு அலுமினியம் வறுக்கும் பாத்திரத்தை 30 செகண்ட்டில் சுருட்டி இருக்கார் சுருட்டியுள்ள அளவு 6.87 இன்ச்கள். இந்த சுட்டல் ஆசாமி பேரு Scott Murphy நல்லா சுருட்டுராரே அரசியல்வாதியா இருப்பரோ


இந்த ஆளு ஒத்த சக்கர சைக்கிள்லயே ஒரு நாளைக்குள்(24 மணி நேரம்) 453.6 கி.மீ தூரத்தை கடந்திருக்கார் அதாவது 281.85 மைல்கள். இந்த ஆளு பேரு Sam Wakeling.


1094 வகையான கடிகாரங்களை சேர்த்து வச்சுருக்காப்ல நல்ல நேரம் எதுல பார்த்தா ராசி.

இது தான் உலகத்துல நீளமான பனிச்சறுக்கு கட்டை இதை காலில் மாட்டியிருக்கும் நபர்களின் எண்ணிக்கை 1043 இது ஸ்வீடனில் நடந்தது


இவரு தான் வேகமாக ஸ்கேட்டிங் செய்யுறவராம் பேரு Douglas da Silva பிரேசில் காரர். வேகம் கொஞ்சம் தான் 113 கி.மீ / 1 மணி நேரம்(70.2 மைல் வேகம்).


கீழே இருக்கே இந்த நாயின் வலது காதின் நீளம் 34.9 செ.மீ இடது காதின் நீளம் 34.2 செ.மீ நீளம் இது தான் அதிகபட்ச நீளமாம் இதிலிருந்து என்ன தெரியுது ஓர் நாயின் இரண்டு காதுகளும் வெவ்வேறு நீளம் உள்ளவைனு


அடுத்து நம்ம நாட்டு காரர் இவரோட காது முடியின் நீளம் 18.1 செ.மீ இவரோட பேரு அந்தோனி விக்டர் இனிமே யாரும் ம** போச்சுனு சொல்லாதீங்க அதிலும் சாதனை செய்யலாம்.


இந்த ஆளை பாக்கவே பயமா இருக்குல இவரு பேரு Garry Turner, இங்கிலாந்துக்காரர் . இவரோட பொழுது போக்கு இந்த மாதிரி இவருடைய தோலை இழுத்து காட்டுவது தானாம். இவர் இப்படி இழுக்கும் போது வெளிப்படும் தோலின் நீளம் 15.8 செ.மீ வயிற்றின் தோல் பகுதியை இழுத்தாராம்.


இது தான் இதுவரைக்கும் கிடைச்ச நத்தைகளில் பெருசாம் ஆப்பிரிக்க இன நத்தையாம் இது கூடை விட்டு வெளியே இழுத்தா இதோட நீளம் 39.3 செ.மீ ஆம்கூட்டோட சேர்த்து வெறும் கூட்டின் நீளம் 27.3 செமீ ஆம். இதன் எடை 900 கிராம்.


இது தான் அதிக எடையுள்ள ஆப்பிளாம் ஜப்பானில் விளைந்ததாம் எடை 1.849 கி.கி ஆம். 


உலகின் மிகவும் குள்ளமான நடமாடும் மனிதர் தான் கீழ இருப்பவர்(கீழே உள்ள போட்டோனு சொல்ல வந்தேன் சிரிக்காதீங்க)  பேரு He Pingping ஆம் சைனா காரர் 74.61 செ.மீ உயரம் உடையவர் . இந்த படத்துல இன்னொரு மேட்டரும் இருக்கே இந்த குள்ளருக்கு மேலே ஒரு சாரி ரெண்டு கால் தெரியுதே அந்த அம்மனி பேரு Pankratova ஆம் ரஷ்யாக்கார புள்ள வயசு 36 புள்ளயா பெண்மணியா? இவரு என்ன சாதனைனா இவருடைய கால்கள் தான் நீளமாம் 4.33 அடியாம் அம்மணி உயரம் 6.43 அடியாம்.


இந்த மனுசனை பார்த்தீகளா தண்ணிக்குள்ள சைக்கிள் ஓட்டுறாப்ள இதுக்காக ஸ்பெசலா செஞ்சதாம் அந்த சைக்கிள் தண்ணிக்குள்ள் 66.5 மீட்டர் ஆழத்துள்ள ஓட்டிருக்காப்ல சைக்கிள்ள பேரு Vittorio Innocente இத்தாலிக்காரராம்.




மிச்சம் அடுத்த பதிவில்

சில புகைப்படங்கள்

இப்படி கணக்க சொல்லிக்கொடுத்தா நல்லா இருக்கும்ல இதுக்கு பேரு ஒயிட் போர்ட்டா???



அனில் - (முகேஷ் இல்லை) சண்டை

எதை தேர்வு செய்யலாம் எல்லாமே கழிசடைகள் தான்

வேகமா ஓடு கல்லு கிட்டக்க வந்திருச்சு....

புகை நமக்கு பகை எப்பவுமே அபாயம்....

காலை காணோம் மண்ணள்ளி போட்டா கல்லாச்சு பொண்ணும் காணம போச்சு

Saturday, November 21, 2009

பா - பாடல்கள்

அபிஷேக் பச்சனின் மகனாகஅமிதாப் நடித்துள்ள படம். படத்தை இயக்கியுள்ளவர் பால்கி என்கிற பாலகிருஷ்ணன்(தமிழர்) இவர் ஏற்கனவே அமிதாப்பை வச்சு சீனிகம் எனும் வெற்றிப்படத்தை கொடுத்தவர்.
சீனிகம்மிற்கு இசை அமைத்த இசைஞானியே இந்த படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.பாடல்களுக்கு வரிகள் அளித்துள்ளவர் Swanand Kirkire , படம் டிசம்பரில் வெளியாக உள்ளது. அபிஷேக்கின் ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.


ஏழு பாடல்களுடன் படத்தின் தீம் மியுசிக்காக ஒரு கோரஸ்ஸூம் உள்ளது.

80களின் ராஜாவாக தெரிகிறார் ஞானி.

இரண்டு நல்ல தமிழ் பாடல்களை மீண்டும் பயன்படுத்தியுள்ளார்.


புத்தும் புது காலை பொன்னிற வேளை - அலைகள் ஓய்வதில்லை படத்தில் உள்ள ஜானகி பாடிய பாடலையும்


சங்கத்தில் கானாத கவிதை - ஆட்டோ ராஜா(விஜயகாந்த்) படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலையும்
அமிதாப் ஒரு பாடல் பாடியிருக்கார் - mere paa எனும் பாடல்

பவதாரினி ஒரு பாடலை பாடியிருக்கார்.Gumm Summ Gumm எனும் பாடல்


Mudhi Mudhi  பாடல் நன்றாக இருக்கு 

எல்லாமே மெலடி ரகம். கேக்கலாம். ஆனால் அனைத்து பாடல்களும் 80களை ஞாபகப்படுத்துகின்றன, ஒரு வேளை ராஜா இன்னும் அந்த வட்டத்தில் இருக்கிறாரோ அல்லது படத்திற்கு அது போல் தேவைப்பட்டிருக்கோ என்று தெரியவில்லை படம் வெளிவ்நதால் தான் தெரியும்.

Monday, November 16, 2009

பணம்

ஒரு மனிதன் இருந்தான் நல்லா உழைப்பான் நல்லா பணம் சேமிப்பான், அதே நேரம் அதை செலவழிக்க மாட்டான். பெரும் செல்வம் சேர்த்து வைத்தான். அதை எண்ணிப்பார்ப்பதில் பெரும் ஆனந்தம் கொள்வான். தினமும் வேலை முடித்து வந்து பணத்தை எண்ணிப்பார்த்து ஆனந்தப்பட்டுக்கொண்ட பின்பே தூங்க செல்வான்.

ஒரு நாள் தன் மனைவியிடம் சொன்னான்

“நான் இறந்துவிட்டால் என்னுடைய பணம் முழுவதையும் என்னுடன் சேர்த்து புதைக்க வேண்டும் , என்னுடைய இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு அந்த பணம் தேவை”

“சரி” என்றாள் மனைவி

“நீ எனக்கு சத்தியம் செய்து கொடு “ என்றான் கணவன்

அவளும் பைபிள் மேல் வைத்து சத்தியம் செய்தாள்.இந்த நிகழ்ச்சி நடக்கும் போது மனைவியின் தோழியும் உடனிருந்தாள்.

திடிரென கணவன் இறந்துவிட அடக்கத்தின் போது ஒரு சிறிய கவரை சவப்பெட்டியினுள் போட்டாள், பின்பு அடக்கம் முடிந்தது.

தோழி கேட்டாள் “உன் கணவன் சொன்னபடி நீ பணத்தை போட வில்லையே”

“நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள் வாக்கு தவறமாட்டேன் நான் தான் சிறிய கவர் ஒன்னு போட்டேனே பாக்கலையா” திரும்பி கேட்டாள்

“உன் கணவன் நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தானே”

“ஆமாம் எல்லாவற்றையும் என்பேரில் ஒரு பேங்க் அக்கவுண்டில் போட்டு கணவரது பெயரில் செக் எழுதி அந்த கவரில் வைத்து போட்டேன் “என்றாள்

தோழிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க

Sunday, November 15, 2009

கடவுள் எங்கே

கடவுள் பூமியை படைச்சு களைச்சுப்போயி இருந்தார். மக்களுடன் மக்களாகவே தங்கி இருந்தார். ஏதாச்சும் ‘பக்’ இருந்தா களையுறதுக்கு.
ஒரு நாள் ஒரு விவசாயி வந்தாரு ,


“சாமி நான் நாத்து நட்டுருக்கேன் கொஞ்சம் இன்னைக்கு மழை பெய்ய வச்சீனா நல்லா இருக்கும்” சொல்லிட்டு நின்னார்

“சரிப்பா பாக்கலாம்” கடவுள் சொன்னார்

இன்னொரு குயவன் வந்து

“மண் பாண்டம்  செஞ்சு காய வச்சுருக்கேன் , மழை பெஞ்சு கெடுத்துட போகுது கொஞ்சம் மழை பெய்யாம வெயில் நல்லா அடிக்க வைச்சுப்பா” இப்படி ஒரு கோரிக்கை வைத்தார்

கடவுள் கொஞ்சம் திணறித்தான் போயிட்டார் ஒரே இடத்துல ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா வானிலை மாற்ற முடியாதே அதனால்.

இதே போல ஏட்டிக்குப்போட்டியாக பிரச்சினைகள் வந்தது கடவுளுக்கு ஆள் கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டாப்ல.

இந்த பயலுக கூட இருந்தா நம்மள கிண்டி கெழங்கெடுத்துடுவானுக. எங்கயாச்சும் போயி ஒக்காந்துகிடனும், யோசிச்சுப்பார்த்தாப்ல

இமய மலை உச்சியில போயி உக்கார்ந்த , ம்ஹூம் ஏறி வந்துடுவாங்க

சரி வானத்துல போயி உக்கார்ந்தா ம்ஹூம் அங்கயும் பறந்து வந்திருவாங்க.

கடலுக்குள்ள் போனாலும் வந்துருவாங்க ஒரே குழப்பமா இருக்கேனு ஆலோசனை கேக்க அந்த ஊரில் வயசான ஒருத்தர பாக்க போனாரு.

அந்த கிழவன் ரெம்ப சிம்பிளா ஒரு பதில் சொன்னாரு

“மனிதனின் ஆள் மனதில் ஒளிஞ்சுக்க” என்று சொன்னார்

கடவுள் சந்தேகத்துடன் பாக்க

“எவன் ஒருவன் தன்னை அறிகிறானோ அவன் என்றுமே உன்னை தொந்தரவு செய்ய மாட்டான். தனக்குள்ளே இருக்கும் கடவுளை அறியாதவனும் உன்னை தொந்தரவு செய்ய முடியாது”

அன்னைக்கு போயி ஒக்காந்தவருதேன் இன்னும் அங்கேயே இருக்கார் இறைவன்,

Saturday, November 14, 2009

கணவன் விற்பனைக்கு

இப்படி ஒரு போர்ட் மாட்டி ஒரு விற்பனை அங்காடி மொத்தம் ஐந்து தளங்கள் கொண்ட அந்த பேரங்காடியில் ஒவ்வொரு தளமாக மேலே செல்ல செல்ல மிகவும் சிறந்த தகுதிகளுடன் கணவன்கள் இருப்பார்கள் மேலும் மேலே சென்றுவிட்டால் மீண்டும் கீழே வந்து தேர்ந்தெடுக்க முடியாது மேலே மட்டுமே செல்ல முடியும்.

ஒரு நவநாகரீக மங்கை விஜயம் செய்தாள் கடைக்கு


கீழ்தளத்தில் அவளிடம் கட்டுப்பாடுகளை விளக்கி கூறினான் விற்பனையாளன்
ஒவ்வொரு தளத்திலும் அந்த தளத்தை பற்றிய குறிப்பு வெளியே வைக்கப்பட்டிருக்கும். குறிப்பை படித்துவிட்டு உள்ளே சென்றாள் அந்த தளத்தில் மட்டுமே நீங்கள் கட்டாயம் உங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முடியும் பிறதளங்களுக்குள் நுழைய முடியாது. மேலும் மேலே சென்று விட்டால் கீழே உள்ள தளங்களில் தேர்ந்தெடுக்க முடியாது.
சரி என்று தலையாட்டி கணவனை தேர்ந்தெடுக்க ஆயத்தமானாள் மங்கை.

1.முதல் மாடி - வெளியில் உள்ள குறிப்பு
இங்கே உள்ள ஆண்கள் வேலை கிடையாது வீட்டு வேலைகள் செய்வார்கள்.

வேணாம்னு நுழையாமல் அடுத்த மாடிக்கு ஏறினாள்

2.இரண்டாம் மாடி - குறிப்பு
இங்கே உள்ள ஆண்களுக்கு வேலை உண்டு ஆனால் வீட்டு வேலைகள் செய்ய மாட்டார்கள்

இது தேவையில்லைனு அடுத்த மாடிக்கு முன்னேறினாள்.

3 மூன்றாம் ஆம் மாடி - குறிப்பு
இங்கே உள்ள ஆண்கள் நல்ல உத்தியோகம் , நல்ல சம்பளம் , குழந்தைகளை கவணித்து கொள்வார்கள் ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லை.
அய்யோ இது நமக்கு ஆகாதுனு ந்கர்ந்தாள்

4 நான்காம் மாடி குறிப்பு
இங்கே உள்ள ஆண்கள் நல்ல வேலை , மிக அதிகமான சம்பளம், குழந்தைகளையும் கவனித்துக்கொள்வார்கள், கடவுள் நம்பிக்கை உண்டு, வீட்டு வேலைகளையும் செய்வார்கள் மற்றும் மனைவியை எதிர்த்து பேசமாட்டார்கள்.

இங்கே ஜெர்க்காகி நின்றாள் மங்கை இங்கேயே எடுத்துடுவோமேனு மனசு சொல்ல , நோ நோ இன்னும் ஒரு மாடி இருக்கு அங்க இதை விட பெஸ்ட் இருப்பாங்க தானே கீழே அப்படி தானே சொன்னாங்க  சோ நாம அங்க போயி தேர்ந்தெடுக்கலாம். என்று நகர்ந்தாள் 5வது மாடிக்கு

5 ஐந்தாவது மாடி
வெறும் மொட்டை மாடி வெறும் டிஜிட்டல் குறிப்பு மட்டும் தொங்கி கிட்டு இருந்தது. நீங்கள் 10000004 வது ஆள் இந்த மாடிக்கு. நீங்கள் நிற்பதற்கு நேர் எதிரானா திசையிலே உங்களுக்கு வெளியேறும் பாதை உள்ளது. நீங்கள் செல்லலாம்

நீதி : பேராசை பெரும் நஷ்டம் , பெண்களின் ஆசைக்கு அளவில்லை(பெண்கள் கோபம் கொள்ள வேண்டாம்)

குறிப்பு : படத்திற்கும் செய்திக்கும் சம்ப்ந்தம் இல்லை.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க , பிடிக்கலைனாலும் கருத்து சொல்லுங்க

Friday, November 13, 2009

சீனாவுடன் சண்டையா நான் ரெடி

ஏதும் சீரியஸ் பதிவுனு யாரும் வந்தீங்கனா நான் பொறுப்பல்ல

இந்த புள்ள கூட சண்டை போட முடியுமா , கல்யாணம் கூட ஆகல(எனக்கு தான்) ஆயிருந்தா சம்சாரம் நெனைப்புல சண்டை போடலாம்



இந்த புள்ளயோட கெறக்க பார்வையில நான் கெறங்கி போயிடுவேன்.



என்ன ஒரு போஸ் சண்டைக்கு போறவனெல்லாம் சரண் அடைந்து விடுவான் இவளது பார்வையிலே.

நோ கமெண்ட்ஸ் இந்த படத்துக்கு கட்டாயம் விளக்கம் தேவையில்ல, எதிராளி கண்(ன்) எடுக்காமல் பார்த்துக்கிட்டே இருப்பான்


ஏதோ பாலே டான்ஸ் ஆடப்போறவ மாதிரியே நிக்குது இந்த புள்ள ம்ஹூம் நான் போறேன் சண்டைக்கு நான் போகனும் வரேன் வரேன் வந்துகிட்டே இருக்கேன்

இந்த சிரிப்பினை எங்கு பார்த்தேன்

இப்ப சொல்லுங்க யார் யார் எங்கூட வாரீகனு

புடிச்சா கருத்தும்/ஓட்டும் போடுங்க பிடிக்கலைனாலும் கமெண்ட் போடுங்க

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-6

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-5


காலை 10 மணி அரசு பொது மருத்துவமனை

ஆன்ந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அதனுடைய உடனடி முடிவை அயூப்பிடம் கொடுத்து விடைபெற்றிருந்தார்.

சிவா சொதப்பிட்டானே மனதிற்குள்ளே திட்டிதீர்த்தான் அயூப்.

வலது நுரையீரலில் ஒரு புல்லட் சொருகியதால் ரத்தத்தை வெளியேற்றாமல் நுரையில் உள்ளே சேமித்ததாலூம் , மியூக்கஸ்(சளி ) சீலியாவில்(நுரையீரலின் நுண்குழல்) மேலேறமுடியாமல் அடைத்துக்கொண்டதாலும் மூச்சு தினறல் ஏற்பட்டு மரணம். மேலும் இரண்டு புல்லட்டுகள் இடது தொடையில் மற்றும் முட்டியில்.

புல்லட்டின் அளவு 7.62 mm குறிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பட்டுள்ளது.

புல்லட்டின் அளவை பார்த்தவுடன் எம் 240 ரக தானியங்கி என்று தெளிவானது அயூப்க்கு.

இதற்கு முன் நடந்த அடிரா கொலையிலும் எம் 240 பி என்ற துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது நினைவுக்கு வந்தது.மூளை கணக்குகளை போட்டது.

பெசண்ட் நகர் பீச் அயூப்-சிவா

“சாரிடா மச்சான், என்னால அந்த கேஸ் அட்டன் பண்ண...”

இழுத்தவனை கையமர்த்தினான்.

“யாரோ நல்லா துப்பாக்கி பிரயோகம் செய்ய தெரிந்தவனாக இருக்கான் கட்டாயம் தீவிரவாதிகளின் வேலையாக இருக்கும் , எம் 240 தான் இதுலயும் கொலை செஞ்சிருக்கு இது எங்க டிபார்ட்மெண்ட்டில் இல்லாத ஆயுதம் கொஞ்சம் பழசுனாலும் ஆர்மில தான் இருக்கும்” சொல்லி பெருமூச்சு விட்டான்.

“ஆனந்த் டெட்பாடி எங்க இருக்கு”

“பேமிலிகிட்ட ஹேண்ட் ஓவர் செய்தாச்சு”

“ம்ம்ம்ம்ம்ம்”

”சரி விடு பாக்கலாம், சிக்கிடுவான், அவ்வளவு பெரிய அப்பார்ட்மெண்ட்ல எப்படி சத்தமில்லாம சுட்டானு தான் புரியல”

“ஏதாச்சும் சைலன்ஸர் பொருத்திருப்பான்...”

“ம் இருக்கலாம்”

சைலன்சர் தான் என்று மனதிற்குள் இருத்திக்கொண்டான் சிவா.

கலைந்து சென்றனர் அந்த ஞாயிறின் மாலைக்கு விடைகொடுத்து.

திங்கள் மதியம் அயூப்பின் இன்பாக்ஸில் எச்சரிக்கை ஒன்று வந்து அமர்ந்து ஹாய் சொல்லியது.

”לא מבין אותנו אחרת יהיה לך על גן עדן”

இந்த வாக்கியங்கள் மட்டுமே இருந்தன கூடவே ஒரு எம்240பி கன் மாடல் படம் ஒன்று.

ஏதோ ஸ்பாமாக இருக்கும் என்று நினைத்தவனுக்கு துப்பாக்கியின் மாடலை பார்த்தவுடன் உஷார் ஆனான். சைபர் க்ரைம்க்கு போன் போட்டான் அவனுடைய பேட்ச்மெட் ஸ்ரீதருக்கு.

அடுத்த அரை மணி நேரத்தில் எக்மோரில் உள்ள சைபர் க்ரைமில் இருந்தான் அயூப்.

”சென்னை ல இருந்து ப்ராக்ஸி யூஸ் பண்ணிருக்கான் , ப்ராக்ஸி டெல் அவிவ் யை காட்டுது , சென்னை ஐபியை புடிச்சு விசாரிக்க சொல்லிருக்கேன் இன்னும் 30 மினிட்ஸ்ல டீட்டெய்ல் கிடைச்சிடும் அயூப்”

“தேங்க்ஸ் ஸ்ரீ”

“என்ன எழுதியிருக்குனு சொல்ல முடியுமா?”

“எங்களை தொடர முயற்சிக்காதே , முயற்சித்தால் உனக்கு சொர்க்கத்தில் இடமுண்டு, ஹூப்ருல எழுதிருக்கு”

புருவம் உயர்த்தி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் அயூப் , ஏகப்பட்ட அடிராக்கள் இருப்பானுக போலனு மனதிற்கும் நினைத்துக்கொண்டான்.

ஸ்ரீதரின் சகா சல்யூட்டுடன் நுழைந்தான்

“சொல்லுங்க வில்லியம்”

“அண்ணா நகரில் இருக்கும் ஒரு ப்ரவுசிங் செண்டரோட ஐபி, ப்ரவுசிங்க் செண்டர சர்ச் பண்ண அண்ணாநகர் ஸ்டேசன் எஸ்.ஐ க்கு ஆர்டர் போட்டாச்சு சார், நம்ம டீம் ஒன்னும் கெளம்ப ரெடியா இருக்கோம் வித் யுவர் பெர்மிசன்..”

“கோ அகெட் வில்லியம், நானும் கெளம்பி வரேன். மீட் மிஸ்டர் அயூப் க்ரைம்ப்ராஞ் கமிஷனர்”

சம்பிரதாய கைகுலுக்கல் முடித்து கிளம்பினர் அண்ணா நகருக்கு.

மிகசாதரண ப்ரவுசிங் செண்டர் , பெரிய இன்ப்ராஸ்ட்ரெக்சர் இல்லை , சிசிடிவியும் இல்லை இதையெல்லம் பார்த்தவுடன் கோபமான ஸ்ரீதர்

“இவனுகளுக்கெல்லாம் எவன் லைசன்ஸ் கொடுத்தான் , எங்கய்யா ஓனர்”

“சார் இந்தாளு தான் ஓனர்” ஒரு 25 வயது சோடாபுட்டியை கை காட்டினார் கான்ஸ்டபிள்

பைய வெடவெடத்து போயிருந்தான்.

“லாக் புக் இருக்கா, என்ன சாப்ட்வேர் போட்டு எல்லா சிஸ்டமையும் கண்ட்ரோல் செய்யுறீங்க”

"லாக் புக் இருக்கு சார், Employee Computer Monitoring Software யூஸ் பண்றோம் சார்”

மெயில் டைமை பார்த்து லாக்புக்கில் பார்த்தான் சுதாகர் என்று ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருந்தது பச்சை மையில் அதன் நேரே சிஸ்டம் நம்பர் 4 என்று குறிக்கப்பட்டிருந்தது வெறும் 10 நிமிட பயன்பாடு.

அந்த பெயரை சுட்டிக்காட்டி “யார் இது ரெகுலர் கஸ்டமரா”

“இல்லை சார் புதுசா இருந்தார் , ஐடி கேட்டேன் அவசரம்னு சொன்னார் ஆள் பாக்க ரெம்ப டீசண்டா பெரிய உத்தியோகத்தில் இருப்பவர் போல இருந்ததால விட்டுட்டேன், கண்ணாடி போட்டிருந்தார் சார் , லேசா காதோரங்களில் நரை இருந்தது சார்”

“ஆளைப்பார்த்தா அடையாளம் காட்டுவியா”

“ஸ்யர் சார்”

அதற்குள் சிஸ்டமினின் கேச்சை,ஹிஸ்டரியை தேடி பார்த்த காக்கிகள் ஏமாந்து போய் சர்வரை துழாவி எடுத்தன. ஈமெயில் ஐடி புதிது அன்று தான் உருவாக்கப்பட்டதற்கான சாட்சியாய் யாஹூவின் வரவேற்பு மெயில் இருந்தது.

சுதாகர் எஸ் பி என்று இன்சியல் வேற...

தொடரும்

பிடிச்சிருந்தால் ஓட்டு போடுங்க.

Sunday, November 08, 2009

அலைபேசியில் அன்பு முறிவு



கதறியழ தோன்றுகிறது
இந்த நிமிடம்
அலைபேசி அலறியதே
அபசகுணமென தோன்றியது
அன்பு முறிவை கூட
அழகாய் வெளிப்படுத்துகிறாய்
ஆறுதலின்றி ஆற்றுகிறேன்

என்னோடு நீ இல்லை
இனி எப்போதும் ’நாம்’ இல்லை
கண்ணோடும் கண்ணீர் இல்லை
கதறி அழ பெண்ணாய் இல்லை
எங்கே அழுதுவிடுவேனோ
எனக்கே தெரியவில்லை

மழை பொழிந்தால் கூட பரவாயில்லை
நனைந்து கொண்டே அழிக்கலாம்
உன் நினைவுகளை அல்ல
என் இயலாமையின் கண்ணீரை

நீ இன்றி நிழல் கூட இல்லை
நிஜம் எப்படி வாழப்போகிறது
வாழ்கையின் ஓட்டத்திலே
நீ ஒரு வழி அதன் மேல்
விழி வைத்து இன்னும்
இருக்கிறேன் விடியாதவனாய்

உதிர்த்தது உதடுகளென்றாலும்
வெடித்தது இதயமன்றோ
இனி எப்போதும் வைத்திடுவேன்
மௌனமாய் என் அலைபேசியை
அதன் சத்தம் இனி அபசகுணமே

ஓட்டளியுங்கள் பிடித்திருந்தால்

Friday, November 06, 2009

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-5

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-2
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-3
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-4


சென்னை அசோக் நகரில் இருக்கும் விஸ்வாஸ் அப்பார்ட்மெண்ட் காலையிலே காக்கிகளின் கூடாரமாக இருந்தது. கான்ஸ்டபிள்களை விட அதிகாரிகளே அதிகம் தென்பட்டனர். பிரச்சினையின் வீரியத்தை உணர்த்திக்கொண்டிருந்தன காக்கிகளின் வாக்கிடாக்கிகள் , செல்லிடப்பேசிகள். எல்லோருக்கும் கவலை தோய்ந்த முகம் நிஜ வருத்ததை காட்டியது.

”ஏழாவது மாடியில் இரண்டாவது வீடு சார்” அயூப், ராமச்சந்திரனுக்கு வழிகாட்டினார்

பேசிக்கொண்டே மாடி ஏறினர் லிப்டில்

“எப்படி நடந்திருக்கு அயூப் , ஏதும் மோட்டிவேஷன் இருக்கா “

“மோட்டிவேஷன் ஏதும் இல்லை சார், ரெம்ப க்ருசியலா இருக்கு பாக்கவே”

”பேமிலி சிட்சுவேசன் என்ன”

“அவரு ஒய்ஃப் நேத்து நைட்டு தான் திருச்சிக்கு போயிருக்காங்க இவரு ஏத்திவிட்டுருக்கார் ராக்போர்ட் ல , 2 வயசுல ஒரு பையன் இருக்கான்”

”இன்பார்ம் செய்துட்டீங்களா..”

“ம் ஆச்சு சார்”

“இவரோட கரெண்ட் புராஜெக்ட் என்ன?”

பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர் , ஃபாரன்சிக் ஆட்கள் ஒவ்வொன்றாக ரசாயணத்தால் ஒத்தி எடுத்துக்கொண்டிருந்தனர்.

பிணமாகியிருந்த ஆனந்தை சுற்றி கோடு வரைந்து காத்திருந்தனர் காவலர்கள். வீட்டின் நுழைவாயில் அருகே கிடந்தார் ஆனந்த் ஐபிஎஸ். சூழ்நிலைகளை சிறிது நேரம் அவதானித்த ராமச்சந்திரன். அங்கிருந்து கிளம்ப அயூப்பிடம் சமிக்கை செய்தார்.

“அந்த மினிஸ்டர் கேஸில் என் க்ரூப்ல தான் இருந்தார்”

ஆச்சரியங்களுடன் புருவத்தை வளைத்து பார்த்தார் ராமச்சந்திரன்.

“குற்றவாளியை நெருங்கி கோட்டை விட்டிருக்கோம் அயூப்”

அயூப் தலையாட்டி ஆமோதித்தார்

“அவரோட லாஸ்ட் மினிட் மூவ்மெண்ட்லாம் கலெக்ட் பண்ணுங்க ஏதும் கிடைக்குதானு பார்ப்போம்”

“யெஸ் சார்”

“டேக்கேர் அயூப் “ தோளில் தட்டி விடைபெற்றார் ராமச்சந்திரன்

தன்னுடைய சகாக்களில் இருவரை அழைத்து

“பாய்ஸ் நாம அக்யூஸ்ட்டை நெருங்கி கோட்டை விட்டிருக்கோம், ஆனந்தோட லாஸ்ட் மொமண்ட்ஸ் கலெக்ட் செய்யுங்க, வில் மீட் இன் தி ஆபீஸ் ”

அருகில் இருக்கும் சிவாவின் வீட்டிற்கு விட்டான் வாகனத்தை.

“வாங்க அண்ணா, என்ன இந்நேரத்துல” நிர்மலா ஆச்சரியத்துடன் கேட்டாள்

“இல்லைம்மா , ஒரு கேஸ் டிபார்ட்மெண்ட்ல மர்டர் , விஸ்வாஸ் அபார்ட்மெண்ட்ல”

“அய்யோ” பதறினாள்

“சிவா இல்லையா”

“அவர் ஏதோ ஆபரேஷன் இருக்குனு நேத்து நைட் போனவர் இன்னும் வரல”

“சரிம்மா , நான் கெளம்புறேன் வந்தான்னா சொல்லிடு இல்லை வேணாம் நான் காண்டக்ட் பண்ணிக்கிறேன் , ஹாஸ்பிடல் தான் போறேன்”

விடைபெற்று கிளம்பினான் மருத்துவமனைக்கு.

பாரீஸில் உள்ள பொது மருத்துவமனையில் சாண்ட்ரோவை வெளியில் விட்டு விட்டு சென்றான்.

கேண்டீனில் சிவாவும், அயூப்பும் காபி ஆர்டர் செய்து காத்திருந்தனர்.

“என்னடா இந்நேரத்துல , போன் கூட செய்யாம வந்திருக்க ஆனந்த் மர்டருக்காக வந்தியா”

“ஹே வீட்டுக்கு போயிருந்தேன் நிம்மி சொன்னா, ஆனந்த் மர்டர் அதுக்குள்ள இங்க வந்திருச்சா”

“உங்களை விட நாங்க சார்ப் டா மச்சான்”

”ம் சரி சரி, மச்சான் ஆனந்த கொஞ்சம் இம்பார்ட்டண்ட் பெர்சன் என்னோட க்ரூப்ல, அவன் கொலையாளியை நெருங்கிட்டாப்ல தெரியுது அதான் நீ கொஞ்சம் ஹெல்ப் செய்யனும்”

“நான் நைட் டூட்டில இருக்கேன் இன்னும்30 மினிட்ஸ்ல டூட்டி முடிஞ்சுடும் , காலைல ம்ம்ம்ம்ம்ம் ராஜன் வருவார் அவர்கிட்ட நான் போன் பண்ணி சொல்லிடுறேன்”

“டேய் போஸ்ட்மர்டம் ரிப்போர்ட்டை விட உன்னோட ரிப்போர்ட் வேணும்னு சொல்றேன்”

யோசித்தான் சிவா,” மச்சான் நான் இப்ப ஹேண்டில் பண்ண சிக்கலாயிடும் ...”

“என்னோட கொலிக்ஸே என்ன சந்தேக பட ஆரம்பிச்சிடுவாங்க”

“நீ என்ன செய்வீயோ தெரியாது எனக்கு லாஸ்ட் மொமண்ட் டீட்டெய்ல்ஸ் வேணும்”

பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டிருந்தான் அயூப்

நமுட்டு சிரிப்புடன் அயூப் போவதை பார்த்தது இரண்டு விழிகள்...

தொடரும்...

காதலா ? காமமா?



உயிரோடு தோன்றுவது காதல்
உடலோடு தோன்றுவது காமம்
உயிரும் உடலும் கலப்பே வாழ்க்கை
காமம் பிரியா காதலை
கண்டதில்லை கண்ணோடு

முதல் பார்வையில் காதல்
முற்றிலும் காதலில்லை
முழுக்க முழுக்க காமம்

காதலுக்கும் காமத்திற்கும் இரண்டே வேறுபாடு
எழுத்துக்களில் மட்டுமே அதுவும்

மலர் போன்றவள் என்னவள் என்பர்
மலர் உடலா? உள்ளமா?
உடலால் மலராய் உள்ளத்தால் வேறு பட்டும்
உள்ளத்தால் மலராய் உள்ளத்தால் வேறு பட்டும்
உரக்க சொல்வீர் இவை இரண்டும் பெண்ணல்ல
ஆண்கள் பார்வையில் பெண் யார்?
அன்றலர்ந்த மலராய்
அருகிலும் அணைப்பிலும் இருப்பவள்

பூஜைக்கு மட்டும் மலர் பறிப்பது - காதல்
செடியைக்கண்ட போதெல்லாம் மலர் பறிப்பது - காமம்
எப்பொழுதும் எட்டி நின்று ரசிப்பது - இனக்கவர்ச்சி

என்னடா குழப்புகிறாய் என்கிறது ஒரு குரல்
காதலுக்கும் காமத்திற்கும் வேறு பாடு என்ன
அதட்டுகிறது ஒரு குரல்

மழைநீருக்கும் , கடல் நீருக்கும் உள்ள் வேறுபாடே
காமத்திற்கும் , காதலுக்கும் உள்ள வேறுபாடு
மழை எப்பொழுது வரும் எவ்வளவு நேரம் பொழியும் யார் அறிவார்?
ஆனால் நின்று விடும் திடிரென - அது தான் காமம்

கடல் நீர் என்றாவது வறண்டு விடுமா?
இல்லை ஓடி விடுமா - அது தான் காதல்

ஆனால் இரண்டுமே நீர் தான் கருத்தில் கொள்க

மழை இல்லாமல் கடல் இல்லை
கடல் இல்லாமல் மழை இல்லை
விஞ்ஞானம் சொல்கிறது.

அறிந்ததா வேறுபாடு
உங்கள் பதில் தான் எனக்கும்.

26 மார்ச் 2007 ல் எழுதியது