Sunday, February 26, 2012

மெய்யோடு பொய்யாக - ரகசியம் - பகுதி-1

மெய்யோடு பொய்யாக
( ரகசியம் )


கீழே கிடந்தவனின் ரத்தம் வெள்ளை நிற சட்டையை தாண்டி , காவிரியின் புதுப்புனல் போல கிழிந்த சட்டையின் பாகங்களில் கால் பரப்பி அந்த அறையை ஆக்கிரமிக்க தொடங்கியது.

இன்னும் வெறி வந்தவன் போல கையில் அந்த அந்த 3 அடி நீள ராஜா காலத்து வாளை பிடித்துக்கொண்டு, விளக்கொளியில் பள பளக்கும் அந்த வாளை வெறித்துக்கொண்டிருந்தான்.....

பின்னால் இருந்து ஒரு குரல்

கட் இட் - குரலின் முதலாளி ஜேகே என்று அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் முன்னனி இயக்குநர். இவர் இயக்கத்தில் நடிக்க பாலிவுட் முதல் போஜ்பூரி நாயகர்கள் வரை தவமிருக்கின்றனர். மனுசன் பெர்பக்‌ஷன்ல கில்லாடி. சில இயக்குநர்கள் மாதிரி படத்தை 2-3 வருசம் எடுத்து அதுல பெர்பஷன் காட்டுறவரில்லை. படம் தொடங்க குறைந்தது 1 வருஷம் எடுத்துக்கிடுவார். ஆரம்பிச்சாச்சுனா இயற்கை தொல்லை கொடுக்காவிட்டால் 6 மாசம் தான். எல்லாம் சொந்த தயாரிப்பு. முடித்தவுடன் நல்ல விலைக்கு பெட்டியோட ஆட்கள் நிற்கையில் அவருக்கு என்ன வருத்தம்.

ராஜேஷ் கண்டினியுட்டி பாரு - ஜேகே குரல் கொடுக்க

ஹீரோ மாதிரி ஒருத்தன் ஓடி வருகிறான் பாருங்கள் இவன் தான் நம்ம ஹீரோ.பேரு ராஜேஷ் கண்ணன் , வீட்ல கூப்பிடறது கண்ணன் இவன் விருப்பப்பட்டு எல்லோரையும் கூப்பிட வைக்கிறது ராஜேஷ். ஜேகே கிட்ட 4 வருஷமா இருக்கான் எம்பிஏ வும் எஞ்சினீயரிங்க் ல படிச்ச எலக்க்ட்ரானிக்ஸூம் கை கொடுக்க ஜேகே சேர்த்துக்கிட்டார். இப்ப அசோசியேட்டா இருக்கான். ஒரு கதை ரெடியா வச்சிருக்கான், முன்னனி நடிகர் க்ருஷை மனசில் வச்சிருக்கான். இந்த படம் முடியவும் ஜேகே நல்ல புரொடியூசர் அரேஞ்ச் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கார்.

ஜெஸி அந்த ப்ராபர்டீஸ்லாம் எடுத்து வை - ராஜேஷ்

ஜெஸி - ஜேகே யோட அஸிஸ்டண்ட் ல ஒருத்தி லயோலாவின் விசுவல் கம்யூனிகேசன் கை கொடுக்க அதை விட பெரிய சப்போர்ட் லொட லொட வாய் அதனாலே ஜேகே வாய்ப்பு கொடுத்திருக்கார். சத்தியமா இவ தான் ஹீரோயின்.

ஆரஞ்சு வண்ண போர்ஷே சர்னு வந்து நின்னது. மொத்த யுனீட்டும் திரும்பி வாய் பிளக்க. உள்ளே இருந்து பஜன்லால் பெரிய தொப்ப்பையுடன் வெளியே இறங்கினார். ஜேகேயை பார்த்து கைகூப்பி கும்பிட்டார். ஜேகேயும் பதிலுக்கு கை கூப்பி கட்டித்தழுவி வரவேற்றார். ஜேகேயின் பைனான்ஸியர் தான் பஜன்லால். அதையும் தாண்டி நல்ல நட்பு இருந்தது. இருக்காத பின்ன , பஜன்லால் ஜேகேயின் ஒரு படத்தில் குறைந்தது 7-10 கோடி வரை சம்பாதிப்பார் அதுவும் 6 மாசமே முதலீட்டீல். ஆனாலும் மனுசன் தங்கமானவர். ஜேகே சிடு சிடுனு பேசுனாலும் சமாளிப்பார். பஜன்லால்க்கு அவர் பேர் போட்டு பேனரில் அவர் தயாரிப்பில் ஒரு மெகா பட்ஜெட் படம் பண்ணனும்னு ஆசை ஜேகேயை நச்சரிச்சிக்கிட்டே இருக்கார். ஜேகே பிடிகொடுக்கவில்லை.

பஜன்லால்லை அந்த சின்ன சேர் வாங்கி கொள்ள அவரது உடல் அசௌரியமாக நினைத்து உதட்டை பிதுக்குவது போல உடலை வெளியே தள்ளிக்கொண்டு பேலன்ஸ் செய்தது.

ராஜேஸ் இங்க வாடா- ஜேகே கூப்பிட

சார் ஒரு 5 நிமிசம்.... - ராஜேஸ்

ஜெஸி கிட்ட பார்க்க சொல்லிட்டு வா..- ஜேகே

இவன் தான் என்று ஜேகே பஜன்லாலை பார்வையிலே காட்டுகின்றார்.

நீ சொன்ன பையன் இவன் தானா ஜேகே

ஆமா லால் நல்ல டேலண்ட் டெக்னிக்கலி நல்ல அப்டேட் , எக்ஸ்ட்ராடினரி பாய். டோண்ட் வொரி

லால் கொஞ்சம் அவநம்பிக்கையுடன் தலையாட்டினார்.

ஹலோ சார் ரெம்ப நாளாச்சு பார்த்து ஆபிஸ் பக்கமே காணோம்- ராஜேஷ்

என்னைத்தெரியுமா - பஜன்

இவன் என் புள்ளை மாதிரி என்னைப்பற்றி எல்லாம் தெரியும் லால் - ஜேகே

ஓஓஓஓஓஒ....

ராஜேஷ் அந்த மெய்யோடு பொய்யாக கதையை நம்ம சேட்டுகிட்ட சொல்லு இவன் தான் உன் புரடியூசர் இப்பல இருந்த. ஆல் த பெஸ்ட்னு கை கொடுத்தார்.

மாடர்ன் பையன் தான் ராஜேஷ் ஆனாலும் சடார்னு ஜேகே கால்ல விழ மொத்த யுனீட்டும் திரும்பி பார்த்தது, அவனை தூக்கி கட்டிபிடித்து மீண்டும் வாழ்த்து சொன்னார்.

சார் , பேட்ஜ் ஒர்க் கொஞ்சம் இருக்கு அப்புறம் எடிட் கொஞ்சம் பேலன்ஸ் இருக்கு அது வரைக்குமாச்சும் நான் இருக்கேனே - ராஜேஸ் தயங்கி சொல்ல

உன்னை நம்பியே இருக்கமுடியுமா அடுத்தாளை ரெடி செய்யனும் , ஜெஸி இருக்கா தானே பார்த்துக்கிருவா.

ஜர்க் அடித்து நின்றான் ராஜேஷ் , சார் என்னோட அஸோசியேட்டா ஜெஸி தான் இருக்க போறா....

சரி அதை அப்புறம் பார்க்கலாம் நீ இப்ப பஜன்லால் கூட போய் கதை சொல்லு.

இருவரையும் உள்வாங்கிய போர்சே நுங்கம்பாக்கத்தின் மிகப்பெரிய ஹோட்டலின் வாயிலில் நின்றது. கார் ஜாக்கி போர்சேவின் கீயை ஆர்வமுடன் வாங்கி பார்க்க செய்ய கிளம்பினான்.

பஜன்லால் ஒரு சூட் போட்டிருந்தார்.

அரை மணி நேரத்தில் மொத்த கதையையும் அதன் முக்கியமான காட்சிகளையும் விளக்கி தெளிவாக கூறினான் ராஜேஷ்

சேட்டு ரெம்ப சந்தோஷத்தில் இருந்ததார் அடுத்த ஜேகே நீ தான்ப்பா.

என்ன பட்ஜெட் படத்திற்கு ப்ளான் செய்திருக்க?

அவன் சொன்ன தொகை சேட்டிற்கு செட் ஆகலை

இன்னும் கொஞ்சம் ஏத்திக்க , பட்ஜெட் பிரச்சினை இல்லை.

இல்லை சார் இவ்வளவு தான் ஆகும் என்று கான்பிடண்ட்டா பேசியதில் சேட்டு டோட்டல் ஆஃப்.

45 நாள் லண்டன் ஷெட்யூல் இருக்குல நீ இந்த வாரம் லோகேசன் பார்க்க போயிடு. எத்தனை அஸிஸ்டெண்ட் கூட்டிப்போற.

ஒரே ஒரு ஆள் சார் என்னோட அசோசியேட்

ஆங்...க் என்னவோ பேர் சொன்னீயே ஜெ.....ஸி...

ஆம சார் ஜெஸி கிறிஸ்டோபர்

சரி நீ பாஸ்போர்ட் டீட்டெய்ல் ரெண்டு பேரோடதை கொடுத்துடு நம்ம ஆபீஸ்ல. சௌகார் பேட் ஆபீஸ் ஓக்கேவா இல்லைனா சொல்லு உனக்கு ஏற்ற இடத்தில் வச்சுக்கலாம்.

படம் ஆரம்பிக்கும் போது அதை சொல்றேன்....

ஏதென்ஸ்(Athens, க்ரீஸ் நாடு) ன் தெற்கு பகுதியில் உள்ள Glyfada அழகான கடற்கரையை உடையது. ஏதென்ஸில் உள்ள பெரும் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் எல்லோரையும் உள்ளடக்கி இருந்தாலும் Glyfada  அந்த அலை இல்லா கடலை போல ரெம்ப அமைதியா இருக்கும்.

கடற்கரையோரம் Karamanli Ave இருக்கும் Sea n' City இரவு விடுதியில் நான்கு பேர் அமரும் டேபிளை ஆக்கிரமத்து இருந்தனர். ஆர்1 , பிகாம்ப்ளக்ஸ், சைக்கிள் மற்றும் ரேடார் முறையே கடிகார முள் சுற்றும் திசையில் அவர்களது பெயர்.

ஆம் அவர்கள் 4 பேருக்குமே மற்றொவருடைய நிஜப்பெயர் தெரியாது. 4 பேரும் அமெரிக்க உளவு அமைப்பான் சிஐஏ வின் நேரடி ஏஜெண்டுகள்.

டாம் வருகைக்காக காத்திருந்தனர். க்ளன்ஃபெட்ஜ் சிங்கிள் மால்ட் 18  இய்ர்ஸ் தாகம் தனித்து கொண்டு இருந்தது நால்வருக்கும்.

நாலு டேபிள் தள்ளி ரூல்ஸ் , போன வாரம் பார்க் செய்திருந்த ரெமி மார்ட்டீனை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். இவர்களை நோட்டம் இட்ட படி.

ரூல்ஸீன் சாமர்த்திய பார்வையை கேட்ச் செய்த ரேடார் தன்னுடைய M1911 semi automatic ன் மேக்கசீனை அழுத்தி சரி பார்த்து டிரிக்கரில் விரலை மாட்டிக்கொண்டான்.

சரியா அடுத்த 4 நிமிடத்தில் டாம் வந்து சேர்ந்தான். சில சம்பாஷனைகளுக்கு பிறகு சைக்கிளின் பிஸ்டல் துப்பிய ஒரு தோட்டா டாமின் தலையில் வசதியாய் பார்க் செய்ய டாம் விழித்தபடியே பிணமானான்.

பாரில் ஏற்பட்ட குழப்பத்தை போக்க ரூல்ஸ் எழுந்து சத்தமாக..

போலீஸ் , ஐ’ம் சிட்டி கமிஷனர் ரூல்ஸ்

சிஐஏ கூட்டத்தை பார்த்து கமான் பாய்ஸ் லெட்ஸ் மூவ் என்று அழைத்து சென்றார்...

தொடரும்

Friday, January 13, 2012

வேட்டை விமர்சனம்

பயந்தாங்கொள்ளி அண்ணன் அவருக்கு தைரியமான தம்பி. அப்பாவின் போலீஸ் உத்தியோகம் பயம் உள்ள அண்ணனுக்கு கிடைக்க அவருக்காக தம்பி எப்படி போராடுகிறார் ....


தந்தையின் இறப்பினால் மாதவனுக்கு தந்தையுடைய போலீஸ் எஸ்.ஐ வேலை கிடைக்கிறது அவரை கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைக்கிறார் தம்பி ஆர்யா.

தூத்துக்குடியே மிரளும் இரு ரௌடி கோஷ்டிகளிடையே மாட்டிக்கொள்கின்றார் மாதவன். அவருக்காக ரௌடிகளை பந்தாடி அண்ணனுக்கு புகழ் சேர்க்கின்றார் ஆர்யா. இது வில்லன் கோஷ்டிகளுக்கு தெரிய மாதவனை பெடல் எடுக்கின்றனர். அவர்களை மாதவனும் , ஆர்யாவும் என்ன செய்கின்றனர் என்பதே மிச்சம்.

போலீஸ் ஸ்டேசனிலே ஒருவனை பெட்ரோல் ஊத்தி எரிக்க பார்த்து பயந்து நடுங்கும் மாதவன் அப்பாவியாக ஸ்கோர் செய்கின்றார். நல்லா வெயிட் போட்டு தொப்பையோடு இருக்கின்றார் சாக்லேட் பாய்.

சமீரா-அமலா அக்கா தங்கை. அக்காவை மாதவன் திருமணம் செய்ய தங்கச்சியை கரெக்ட் செய்து சினிமா இலக்கணத்தை நிறைவு செய்கின்றார் ஆர்யா.

பொதுவான பேக்டிராப் இல்லாமல் படம் நகர்கிறது. லிங்குசாமி-யுவன் - நீரவ்ஷா - ஆண்டனி என்று ஜாம்பவான்கள் இருந்தாலும் கடைசி இருவரின் உழைப்பு மட்டுமே படத்தில் தெரிகிறது.

பின்னி மில் - மாதவன் வீடு - வில்லன் வீடு இது தான் லொகேசன் அதனால் எல்லா பிரேமிலும் மாதவன் இல்லைனா ஆர்யா இருக்கின்றனர். கொஞ்சம் போர் அடிக்கிறது,

விறு விறுனு போகவேண்டிய ஆக்சன் மசாலாவில் ஏகப்பட்ட பிரேக் எல்லா பிரேக்கையும் விட பெரிய பெரிய ஸ்பீட் பிரேக்கர்கள் பாடல்கள் கடைசி பாட்டை தவிர ஒன்னும் தேறலை. அதைவிட கொடுமை காட்சிபடுத்திய விதம்.

சில சண்டைகள் கட்டாயம் பாராட்டனும். அதில் நீரவ்ஷாவின் கேமிராவும் அற்புதம். ரன் படத்தில் வரும் ஓப்பனிங் பாடல் போலவே இதிலும் ஒரு பாடல்.

சமீரா ரெம்ப முதிர்ச்சியாக இருக்கிறார் அதிலும் அதிகமான க்ளோசப் ஷாட்டுகள். அமல பால் கண்கள் கவிதை. பாவாடை தாவனியில் பக்காவாக இருக்கின்றார். மாடர்ன் டிரெஸில் சகிக்கலை. அவங்க இருவரும் முடிஞ்சளவுக்கு ஸ்கோர் செய்கின்றனர்.

யுவனுக்கு தான் என்ன ஆச்சுனு தெரியல ராஜபாட்டை , வேட்டைனு செம சறுக்கல்....

வேட்டை கோட்டை விட்டுட்டாங்க....

Wednesday, December 07, 2011

ஒஸ்தி - விமர்சனம்

அதே டபாங் ரீமேக்.

சல்மான் கானின் முரட்டு உடம்பும் செதுக்கியது போன்ற மீசையுமே ஒரு கம்பீரமும் லேசான அந்த காமெடியையும் சொல்லியது டபாங் வரும் முன்னே.
சிம்பு காப்பாற்றினாரா டபாங் வெற்றியை....?

ரேவதியின் முதல் கணவனின் பிள்ளை சிம்பு , இரண்டாவது கணவரான நாசர் அவரின் பிள்ளை ஜித்தன் ரமேஷ். வழக்கம் போல மாற்றாந்தந்தை பிள்ளை பிரச்சினை.

ஒஸ்தி வேலன் திருநெல்வேலி பக்கம் ஒரு இன்ஸ்(இன்ஸ்பெக்டரை சந்தானம் இப்படி தான் அழைக்கின்றார்) கெட்டவனிடம் கொள்ளையடிக்கும் கெட்டிக்கார(?) ப்போலீஸ்.

அவருக்கு கூட்டணியாக காமெடி போலீஸ் க்ரூப்பே இருக்கு சந்தானம் மயில்சாமி தம்பி ராமையா இப்படி கொள்ள பேரு.

ரிச்சா ஹீரோயின் ஏன் படத்துல இருக்காருனு பார்த்தா நம்ம சிம்புக்கு எப்படியும் ஜோடி வேணும்ல அதான் படத்துல அந்த பொண்ண ஒட்ட வச்சிருக்காரு இயக்குநர் தரணி.

டபாங்கில் இருக்கும் அதேடெம்ப்ளட் காட்சிகள் , எல்லோருக்கும் எப்படியும் கதை தெரியும் சரி திரைக்கதை சும்மா விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு போகனும்ல அங்க தான் தரணி சொதப்பிட்டார் கில்லி , தூள்லாம் எங்க போச்சோ...

சிம்புவை ஒரு காலேஜ் பாய் தோற்றத்தில் தான் பார்க்க தூண்டுகிறது. எப்படி விஜய் போலீஸ் டிரெஸ் போட்டு காமெடி செய்தார் அதே போல சிரிப்பு வருகிறது, அவருக்கு பொருந்தவில்லை என்றே எனக்கு தோனுது.

நல்லா டான்ஸ் ஆடுகின்றார் அடி உதை கொடுக்கின்றார் காமெடியும் செய்கின்றார் ஆனாலும் அந்த மெயின் ரோலான போலீஸ் இன்ஸ் வேலை தான் அவருக்கு செட் ஆகல்.

ரிச்சா மொழு மொழுனு இருக்கார் மயக்கம் என்னவில் செல்வா அருமையாக நடிக்க வச்சிருந்தார் தரணி இப்படத்தில் சும்மா வச்சிருக்கார்.

ரிச்சாவின் அப்பாவாக சிம்புவின் லேட்டஸ் ப்ரண்ட் விடிவி கணேஷ்

டபாங்கில் இருக்கும் வேகம் இதில் இல்லை காரணம் சிம்புவிற்கு பொருந்தாத போலீஸ் தோற்றம்.

படத்துல க்ரீன்மேட் வேலைகள் ரெம்ப அதிகம். எத்தனை மீட்டர் துணி வாங்குனாங்களோ எங்க பார்த்தாலும் சண்டை பாடல்களில் ஒரே சிஜி.

ஒஸ்தி , டபாங்க நெருங்கவில்லை.

Thursday, November 24, 2011

மயக்கம் என்ன

நடிகர்கள் : தனுஷ் , ரிச்சா
இசை : ஜீ.வீ.பிரகாஷ்
இயக்கம் : செல்வராகவன்
தயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்க்கியூட்

வைல்ட் லைப் போட்டோ கிராபர் ஆகனும்னு ஆசைப்படுகிற தனுஷ் அதற்கு உதவி புரியும் நண்பர்கள். நட்பு வட்டம் மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. நண்பன் ஒருவன் டேட்டிங்கு அழைத்து வரும் பெண்ணிற்கும் , தனுஷ்க்கும் லவ் ஏற்பட நட்பு உடைந்து பின் சேர்ந்து தனுஸ் அந்த பெண்ணுடன் திருமண வாழ்வில் இனைகின்றார்.

அவருடைய லட்சியமான வைல்ட் லைப் போட்டோகிராபர் முயற்சி ஒருவரால் ஏமாற்றப்பட்டு அதன் உச்சத்தில் நிகழும் விபத்தில் மனநிலை பிறழ்ந்தவராக மாறுகிறார்.

காதல் மனைவி என்ன செய்கின்றார்? தனுஸ் லட்சியத்தை அடைந்தாரா?

தனுஷின் அந்த ’ஜீனியஸ் ’ பட்டம் கொடுத்து அழைக்கும் நட்பு வட்டத்தில் செம இயல்பு. நண்பனின் கேர்ள்பிரண்ட் தன்னை லவ் செய்வதும் அதில் இருந்து அவர் விலகி ஓட நினைப்பதும் இயல்பான நடிப்பு தனுஷின் உழைப்பு அபாரமானது. இரண்டாம் பாதில் மனநிலை பிறழ்ந்தவராக தனுஷ் பிச்சு உதறி இருக்கின்றார். இன்னொரு தேசிய விருது கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

நண்பனின் கேர்ள் பிரண்டாக வந்து தனுஷிடம் காதலில் விழுவதாகட்டும் தனுஷை பார்த்து கொள்வதாகட்டும் அந்த விழிகளிலே என்னா ஒரு எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கிறார் ரிச்சா. பிரமிப்பு தான் ஏற்படுகிறது அறிமுக நடிகைக்கு இப்படி ஒரு வாய்ப்பு அதை சரியாக பயன்படுத்தி பட்டைய கெளப்பிருக்கார்.

கணவனின் போட்டோக்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவனுக்கு மது கொடுத்து அவனை பத்திரமாக பார்த்து , ரிச்சா நடிப்பில் ரிச்சாக இருக்கிறார்.

கடைசியில் அந்த க்ளைமாக்ஸ் ரிச்சாவின் பெர்பார்ர்மன்ஸ் அருமை அருமை.

இந்த மாதிரி கதை எடுத்து அதை மெதுவாக நகர்த்தி அழகான இயல்பான வசனங்களில் செல்வா மீண்டும் நிரூபிக்கின்றார் அவரது ஆளுமையை


மயக்கம் என்ன - மாற்றுத்திரைப்படம்

கட்டாயம் பாருங்கள் பிடிக்கும்.

Friday, September 16, 2011

வந்தான் வென்றான் - விமர்சனம்

ஜீவா - நந்தா இருவரும் தம்பி - அண்ணன். மாற்றந்தந்தையின்(மாற்றாந்தாய் போல) பிள்ளைகள் இருவரும். அண்ணனுக்கு தம்பி மேல் வெறுப்பு , நந்தா ஊரை விட்டு 10 வயதில் ஓடி மும்பையில் கொஞ்சம் பெரிய டான்னாக இருக்கின்றார். அவரை திருத்தி ஊருக்கு மீண்டும் அழைத்து செல்ல அவரிடம் வருகிறார் ஜீவா.

அர்ஜூனாக ஜீவா இயல்பாய் இருக்கின்றார். அவரது காதலி அஞ்சனாவாக தப்சி. தப்சி நல்ல மெழுகு சிலை. கொஞ்சமாய நடிப்பு வருகிறது. ஆனாலும் அவரது முதிர்ச்சி தோற்றம் ஜீவாவின் இளமையான தோற்றத்தில் நமக்கு கொஞ்சம் ஜர்க் அடிக்கிறது. பாடல் காட்சிகளில் நல்லா இருக்கின்றார் தப்சி.

ஜீவா வழக்கம் போல துறு துறு இளைஞன். நல்லா செய்திருக்கார். சந்தானம் மும்பையில் நந்தாவிடம் சமையல்காரராக இருக்கின்றார். சமையலே தெரியாமல் சமையல்காராக இருக்கின்றார் சந்தானம் வரும் காட்சிகள் எப்பொழுதும் போல கல கல. கவுண்டரை ஞாபகப்படுத்துகிறார்.
“மூக்கை உருஞ்சிக்கிட்டே பேசுனா ரமணா குரல் வரும்னா மூக்கை சொரிஞ்சுகிட்டே பேசுனா தமனா குரல் வருமா” என்று டைமிங் காமெடி அவருக்கு கை கொடுக்கிறது.

முதல் பாதி முழுக்க ஜீவா ராச்சியம். இரண்டாம் பாதியில் நந்தா ஆளுகை நந்தா போன்ற இளைஞரை மும்பையின் டான் ஆக காட்டும் பொழுது சிரிப்பு வரக்கூடாது அல்லவா. நந்தா மிரட்டுகிறார் உடல் மொழியில் நந்தாவுக்கு ஈரத்திற்கு பின் நல்லதொரு வாய்ப்பு. கலக்கி இருக்கிறார். அதிலும் மிரட்டல் அவர் காதலியின் பிரிவு இதையெல்லாம் முகத்திலே இறுக்கத்துடன் வெளிப்படுத்தி சபாஷ் வாங்குகின்றார்.

ஏற்கனவே 3 பாடல் செம ஹிட் அவை படமாக்கிய விதமும் அருமை. அஞ்சனா அஞ்சான, காஞ்சன மாலா பாடல்கள் பிரமாதம்.

பிஜி முத்தையாவின் கேமரா திருவிளையாடளே. நல்லா கொடுத்திருக்கார்

தமனின் இசையில் ஈரத்திற்கு அப்புறம் தமிழில் நல்ல பாடல்கள். தெலுங்குல ஹிட் கொடுக்கின்றவர் இப்பொழுது தமிழிலும்.

வி.டி.விஜயனின் படக்கோர்வை அருமை வேகத்திற்கு வேகம் காதலுக்கு நிதானம் என்று நல்லா செய்திருக்கிறார்.

கண்ணனின் திரைக்கதையில் சில சறுக்கல்கள் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம் பெரிய சார்ப்பா இல்லை.

மெயின் ஹீரோ ஜீவா இரண்டாம் பாதியில் இல்லாமலே போவது போன்ற தோற்றம் படத்தின் பலகீனம்.  அந்த க்ளைமாக்ஸ் உல்டா செம சொதப்பல்.

ஆனாலும் தலைப்பிற்கேற்ற படம் வந்தான் வென்றான்

எங்கேயும் எப்போதும் - திரைவிமர்சனம்

சென்னை - திருச்சி மற்றும் திருச்சி - சென்னை முறையே தனியார் மற்றும் அரசுப்பேருந்து புறப்படுகிறது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதி ஒரு விபத்து. அதில் பயணிக்கும் கதாப்பாத்திரங்கள் மற்றும் முக்கிய பாத்திரங்களின்(திரைப்படத்தின்) கதையே எங்கேயும் எப்போது.

அனன்யா - சரவ் காதல் செம சுவாரஸ்யம். அனன்யாவுக்கு உதவும் முன்பின் தெரியாத சரவ்வின் உடல் மொழி செம அட்டகாசம் புது ஹீரோ கிடைச்சுட்டார். படம் பார்ப்பதற்கு முன் அனன்யாவா பிகர் சுமார் தான்னு நினைச்சேன் அந்த திருச்சி போன்ற சிறிய நகரத்தின் பெண் பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு . சரவ்வின் பேரையே கடைசியாக(படம் முடியும் போது) தான் கேட்ப்பார் நமக்கும் அப்போழுது தான் தெரிய வருகிறது. நல்ல அருமையான காதல் கதை இவர்களுடையது. இருவருக்கும் காதல் வந்து சரவ் அனன்யாவை தேடி திருச்சியும் அனன்யா இவரை தேடி சென்னை வந்து பின் திரும்பி செல்லும் போது இருவர் வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.

அஞ்சலி - ஜெய் காதல் அட்டகாசம் கொஞ்சம் போல்ட் ஆன திருச்சி பெண்ணாக அஞ்சலி, திருச்சியில் தங்கி வேலைபார்க்கும் ரெம்ப நல்ல கிராமத்து பையனாக ஜெய். ஜெய்க்கு கூட நடிக்க வருகிறது முந்தைய படங்களுக்கு ரெம்ப ரெம்ப நல்லா பண்ணிருக்கார். ஆனாலும் அஞ்சலில் கேரக்ட்டரைஷேசன் ரெம்ப அருமை. போல்ட் ஆன பொண்ணு காதலிப்பவனை அப்பாவிடம் அனுப்பி சம்மதம் கேட்க்க வைப்பது, அவனை உடல் உறுப்பு தானம் செய்ய வைப்பது எல்லாம் தினிக்கப்படாமல் அவரது கேரக்கடருக்கு ஏற்ற காட்சிகள் படத்தில்.

அந்த பேருந்தில் பயணிக்கும் ஒரு இளைஞனுக்கும் , இளைஞிக்கும் அங்கே மலரும் காதல் , துபாய்யில் 5 வருஷம் இருந்து முதல் முதலாக குழந்தையை பார்க்க வரும் நபர். அவர் குழந்தை நிஜமானு கேட்க்க இவர் பக்கத்தில் இருப்பவரிடம் ஆமானு சொல்ல சொல்ல போன் கொடுக்க அவர் கோபமாய் போனை வாங்க போனின் மறுமுனையில் அந்த குழந்தை லஞ்ச் சாப்பிட்டீங்களா அங்கிள் நு கேட்க்க மனுசன் முக மலர்ச்சியாவது இது போன்ற இயல்பான திரைக்கதை காட்சிகள்.

புதிய திருமண ஜோடி , ஒரு குழந்தை அதன் தாய் எல்லாம் கவனிப்பு பெறுகின்றார்கள்.

படத்தின் மற்றொரு ப்ளஸ் கேமரா மேன் சிறுத்தை யில் பணிபுரிந்த வேல்ராஜ்  நல்லா செய்திருக்கார் முன்னரே நிறைய படம் செய்திருக்கின்றார்.

அந்த விபத்து காட்சி அதில் உறையும் நம்மை ஒவ்வொரு காரக்டரின் சோகத்திற்கே இழுத்து செல்வது நம்மை அறியாமல் நடை பெறுகிறது.

அஞ்சலி செம துரு துருனு இருக்கார். அழகாக இருக்கின்றார். அவ்வளவு போல்ட் ஆன பொண்ணு ஜெய்யை ஆம்புலன்ஸில் சும்மா அனுப்புகிறார்னு நினைத்தால் அவனுக்கு காதுல ரத்தம் வந்துச்சு எனக்கு பயமா இருக்குனு கதறுகிறார்,

ஜெய் உடலை பார்த்து அழும் போது நமக்கும் அழுகை வருகிறது. அஞ்சலி மாதிரி நடிக்க தெரிஞ்ச பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்க இயக்குநர்களே.

கதை , திரைக்கதை அதை எடுத்தவிதம் எல்லாம் சரியாக இருக்க இயக்குநராக சரவணன் நல்லா கொடுத்திருக்கார்.

காட்சிகளோடு ஒட்டிய இயல்பை மீறாத பாடல்கள் நன்றாக ரசிக்க வைக்கிறது. இசை அமைப்பாளர் நல்ல செய்திருக்கின்றார்.

அன்றாடம் செய்தி தான் படம் நல்ல மெசேஜ் கூடவே உறுப்பு தானம் பற்றியும் சொல்லிருக்காங்க

படம் பார்த்து முடித்தும் இன்னும் நினைவில் இருந்து மாறவில்லை

விமர்சனத்தை இவ்வளவு நீளமாக காட்சிகளை சொல்லி சொல்லிவிட்டாலும் அதை திரையில் உணரும் பொழுது நிச்சயம் ரசிப்பீர்கள்.

எங்கேயும் எப்போது - விபத்து நேரலாம் வரும் முன் காப்போம். நல்ல படம் கட்டாயம் விரசம் இல்லை குடும்பத்துடன் பார்க்கலாம்.