பகுதி-1
பகுதி-2
பகுதி-3
அடுத்த சனிக்கிழமையும் வந்தது. அம்மாவிடம் நானே வழிய போய் சொன்னேன்
“இன்னிக்கும் பெருமாளை பாக்கானுமா”
“ஆமடா நல்லவேளை ஞாபகப்படுத்தினே”
“எங்கோ இடிக்குதே...... இரு உங்கப்பாவை கூட வரச்சொல்லுறேன்” இப்படி அம்மா கிண்டலாக கூற சிரிச்சிக்கிட்டே நகர்ந்தேன்.
“பெருமாளை மட்டும் சேவிச்சா நல்லது”
பெருமாள் கோவிலில் வண்டியை நிறுத்தி அர்ச்சனை தட்டும் சீட்டும் வாங்கி உள்ளே வந்தால் உள்ளே அதே வாலு கூட்டத்தின் ஊடே என் அழகி. லட்சம் பட்டாம் பூச்சி நிஜமாவே பறந்தது.
“ஹாய்” நான்
“ஹோய்....” கோரஸாக அவளைத்தவிர எல்லோரும்
வாலுகளானாலும் நல்ல வாலுகள் பின்ன இருவரையும் தனித்து விட்டு நகர்ந்துவிட்டாங்களே அப்ப நல்ல வாலுகள் தானே.
இருவர் மட்டும் தனித்து இருக்கும் முதல் தருணம் வார்த்தைகளோ வாயைவிட்டு வெளிவரவே போராட்டம் நடத்துகின்றன இருவருக்கும்.
“நீங்க ஜான் சிஸ்டர்னு எனக்கு தெரியாது” ஏதோ குப்பையை கிளறினேன்
“ம்ம்...., ரெம்ப முக்கியம்” முனுமுனுத்தாள்
இந்த பொண்ணுகளுக்கு காதலில் எப்படி தான் தைரியம் வருதோ .
“என்ன செய்யுறீங்க” நான்
“எம்.பி.ஏ பைனல் இயர் போயிக்கிட்டு இருக்கு “ அவள்
“வெரிகுட் புராஜக்ட் எங்க செய்யுறீங்க வேணும்னா நான் ஹெல்ப் செய்யுறேன்” நான்
“லெக்சர் கூட கொடுப்பீங்க போல” மெதுவாக “கொடுமை டா சாமி” அவள்
“என்ன....” நான்
“காபி சாப்டுவோமா” நான்
“இல்லை ப்ரண்ட்ஸ்லாம் இருக்காங்க இன்னொரு நாள் பாக்கலாம்”
“பரவாயில்லை எல்லோருக்கும் பே பண்ணிடுவேன்” காமெடி செய்த நினைப்பில்
“ஆக்சுவலி எப்பவும் இப்படித்தானா?” கோபத்தில் கேட்டாள்
“98*** ***** இது என் நம்பர் நோட் பண்ணிக்க்குங்க, கிளம்புறேன் ஆபீஸ்க்கு லேட் ஆச்சு பை” கிளம்பினேன் பதிலை எதிர்பார்க்காமலே.
சனிக்கிழமை என்பதால் வேலை இல்லாததால் கொஞ்சம் கவிதை எழுத முயற்சித்து ரெம்ப முறை தோற்றுப்போனேன். சரி இது நமக்கு ஒத்துவராதுனு மனசுக்கு கடிவாளம் போதும் போது. ஒரு மிஸ்ட் கால். நம்பர் புதுசா இருந்தது பொதுவாகவே மிஸ்ட் கால்களுக்கு பதில் அளிப்பதில்லை ஆனால் அன்றைய மனநிலையில் அந்த எண்ணுக்கு போன் செய்தே தீரவேண்டும் என்று தோன்றியது. முழுவதும் ரிங் போய் கட்டானது.
அடுத்த சில நொடிகளில் டொய்ங் என்ற சத்தத்துடன் ஒரு மெசேஜ் வந்தது.
“hi its me Jenifer'
மனம் உற்சாக கூச்சல் போட்டது முதல் வேலையாக சேமித்தேன் எண்ணை.என் சேமிப்பை கரைக்கும் எண் என்றாலும் சேமித்தேன்.
அடுத்த சில பரிமாற்றங்களின் முடிவில் இன்று மாலையே ஒரு காபி ஷாப்பில் சந்திப்பதாக ஏற்பாடு. ஏதோ சாதிச்ச உணர்வு. டைமிங் பார்த்து வின்னாம்பும் வேலைசெய்தது
“இதற்கு பேர் தான் காதலா
வானம் இன்று பக்கமானதே..”
அடுத்த கவலை மச்சானை எப்படி கழட்டி விடுறது. பொதுவாவே யாரையும் எங்கயும் கழட்டிவிடுறதில்லை ஆனாலும் அவனை கூட கூட்டிப்போக ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி தடுத்தது. நல்ல வேளையாக அவன் இன்னைக்கு மாலை அலுவலக வேலையாக மதுரை செல்வது ஞாபகம் வர ஒரு பிரச்சினை முடிஞ்சது.
6 மணி காபிஷாப் மீட்டிங்கு 5.30 க்கே வந்துட்டேன் இந்த சின்சியாரிட்டிய அலுவலகத்தில் காட்டிருந்தால் இந்நேரம் டெரிட்டரி மேனஜர் ஆயிருக்கலாம் எனும் போது சிரிப்பு வந்தது. 5.45க்கே அவளும் வெள்ளைச்சுடிதாரில் அம்சமாக அரங்கேறினாள் காப்பி ஷாப்பினுள். கண்ணாலே ஹாய் சொல்லி அருகில் வந்து அமர்ந்தாள். பிரமித்துப்போய் இருந்தேன்....
தொடரும்...
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
No comments:
Post a Comment
நண்பர்களின் கருத்துக்கள்