Thursday, December 31, 2009

ரோபோ - இயந்திரன்


ரஜினிக்கு டூப் போட்டு மாடலாக பயன்படுத்திய ரோபோ இது தானாம் அப்படிலாம் பொய் சொல்ல மாட்டேன் மெயிலில் வந்த படங்கள்.

































































Monday, December 28, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 12

படங்களை பெரிதாக காண படங்களை க்ளிக் செய்து பார்க்கவும்.

சில வசதிகளை பற்றி காண்போம் இந்த பகுதியில்

மேஸ்ட்ரோவில் முகப்பில் இருக்கும் டூல் பாரில் இருக்கும் விசயங்களை காண்போம்



மேலே உள்ள படத்தில் சில அயிட்டங்களை எண்களால் குறியிட்டுள்ளேன்

1.டிவிடி கம்பைல் செய்ய இந்த பட்டன் உதவுகிறது எல்லா வேலையும் முடிச்சு ப்ரிவீயூலாம் பார்த்த பின் எல்லாம் ஓக்கே எனும் நிலையில் இந்த பட்டனை அழுத்தி தோன்றும் மெனுவில் டிவிடி சேவ் ஆகவேண்டிய டிரைவை செலகட் செய்து கொடுக்கலாம்.

அந்த பட்டனை அழுத்தியதும் கீழே இருப்பது போல ஒரு திரை தோன்றும் அதிலே போல்டரை செலக்ட் செய்து கொடுக்க வேண்டும்.




மேலே படத்தில் உள்ளது போல் செய்துவிட்டு ஓக்கே கொடுத்தவுடன் கம்பைல் ஆகும் கம்பைல் டீட்டெய்ல்லாம் கீழே உள்ளது போல காட்டும். மேலும் எரர் ஏதும் இருந்தாலும் காட்டும். வார்னிங் இருந்தால் கம்பைல் முடிஞ்சதும் காட்டும்.





2- இது டிஸ்க் இமேஜ் உருவாக்க பயன்படுகிறது. இந்த மென்பொருளில் டிவிடி பர்ன் செய்யும் வசதி இருந்தாலும் இது ஹார்ட்வேர் சார்ந்து இயங்க கூடியது எனவே டிஸ்க் இமேஜ் பயன்படுத்த தேவையில்லை நாம் கம்பைல் செய்த புரோகிராமையே நீரோ கொண்டு பர்ன் செய்யலாம்

3-டிவிடியில் பர்ன் செய்ய பயன்படுகிறது இந்த பட்டன் . மேலே சொன்னது போல இப்பொழுது உள்ள ஹார்ட்வேர் இதனுடன் ஒத்தியங்காது எனவே பயன்படுத்த தேவை இல்லை.

4,5,6 இதுவும் ஹார்ட்வேர் சார்ந்து இயங்க கூடியது அதாவது இந்த டிவிடி புராஜக்ட்டை ஒரு டேப்பில் (பீட்டா டேப் , டிவி டேப்) பதிய இந்த மூன்று பட்டன்கள் பயன்படுத்தலாம். 4வது டேப்பில் ரெக்கார்ட் செய்ய , 5- டேப்பை வெரிபை செய்ய , 6-டேப்பை இயக்க.

7-ப்ரிவியூ பட்டன் இதனை கொண்டு நாம் செய்து வைத்துள்ள முழு புராஜக்ட்டையும் செக் செய்து பாக்கலாம் ப்ரிவியூவாக. அந்த பட்டனை அழுத்தினால் பின் வரும் திரை தோன்றும் அதில் டிவிடி ப்ளேயர் ரிமோட் போல பட்டன் இருக்கும் அதனை பயன்படுத்தி சோதனை செய்யலாம்.




மேலே உள்ள திரையே ப்ரிவியூ திரை பொதுவாக நாம் எல்லா வசதிகளையும் பார்த்துவிட்டோம்.

கடைசியாக ஒரு வசதி பார்ப்போம்




மேலே படத்தில் ஒரு மூவியின் மேலே ரைட் க்ளிக் செய்து அதில் தோன்றும் மெனுவில் ப்ராப்பர்ட்டியை க்ளிக் செய்யவும் செய்த உடன் பின் வரும் திரை தோன்றும்.



இதிலே டிஸ்ஸேபிள் யுசர் ஆக்சன் என்பதில் எல்லாவற்றையும் க்ளிக் செய்தால் இந்த வீடியோ ஓடும் போது தேர்வு செய்யப்பட்ட ஆக்சன்கள் எல்லாம் இயங்காது.

உதாரணமாக மோண்டாஜ் , விளம்பரங்கள் போன்றவை ஓடும் பொழுது ரிமோட் மூலமாக நெக்ஸ்ட், பார்வேர்ட், ஸ்டாப், மெனு போன்ற அயிட்டங்களை தேர்வு செய்ய முடியாது அவற்றில் வேண்டியவற்றை டிஸ்ஸேபிள் செய்ய இந்த ப்ராப்பர்ட்டீஸ் உதவுகிறது.
மிச்ச தகவ்ல்கள் எல்லாம் கொஞ்சம் வீடியோ தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும் தற்சமயம் அவை தேவை இல்லை என்றே கருதுகிறேன்.

டிவிடி மேஸ்ட்ரோவில் கருத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்:

1.இணைக்கும் வீடியோ/ஆடியோ பார்மட் m2v / ac3 யாக இருக்கட்டும்.

2.கனெக்சன் விண்டோவில் டைட்டில் மெனு , பர்ஸ்ட் ப்ளே அயிட்டம் போன்றவைகள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

3.ஒவ்வொரு வீடியோவிற்கும் கடைசி சாப்டரின் எண்ட் ஆக்சன் கட்டாயம் கொடுங்கள் அப்பொழுது தான் அந்த வீடியோ ஓடி முடிஞ்சதும் அடுத்த இடத்திற்கு செல்லும் இல்லையெனில் நின்று விடும்.

4.பர்ன் செய்ய நீரோ பயன்படுத்தும் பொழுது டேட்டா வெரிபிகேசன் கொடுங்க.

5.மெனுக்களை கட்டாயம் பிஎம்பி பார்மட்டில் சேவ் செய்யுங்கள்

6.சப்பிக்சரை சேமிக்கும் பொழுது பின்புலம் இல்லாமல் சேமியுங்கள் ஆனால் பிஎம்பியாக சேமிப்பதால் வெள்ளை பின்புலம் சேர்க்கப்படும். அதை மேஸ்ட்ரோவே நீக்கி விடும்.

7.மேஸ்ட்ரோ பழைய காலத்து சாப்ட்வேர் எனப்தால் பி4 வகை ப்ராசசர் வரை மட்டுமே சப்போர்ட் செய்யும் இந்த காலத்து i5,i7,dual core , core 2 dua  போன்ற பிராசசர்களை ஏற்றுக்கொள்ளாது. எனவே ஒரே ஒரு ப்ராசரை கொண்டு மேஸ்ட்ரோவை இயக்கும் படி செய்யுங்கள்.இதற்காக பி4யை தேடி செல்ல வேண்டாம் உங்களது லேட்டஸ்ட் ப்ரசசரிலே மேஸ்ட்ரோவுக்கு ஒரு ப்ராசரை மட்டும் எடுத்துக்கொள்ளும் படி செய்துகொள்ளுங்கள் அனேகமாக எல்லோருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.

நிறைவுற்றது. சந்தேகங்கள் இருந்தால் கேட்கும் கேள்விகளை தொகுத்து ஒரு பதிவாக போடலாம் என்று நினைக்கிறேன்.

பிடிச்சிருந்தால் ஓட்டளிக்கவும்.

Saturday, December 26, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 11

படங்களை முழுவதும் காண படத்தினை க்ளிக் செய்து காணவும்


அடுத்து சப்டைட்டில் எவ்வாறு சேர்ப்பது என்று காண்போம்


கீழே உள்ள படத்தினை கவனியுங்கள்





மேலே உள்ள படத்தில் ஒரு மூவிக்குரிய பகுதி காட்டப்பட்டுள்ளது இதைபற்றி ஏற்கனவே படித்துள்ளோம்.




முதல் பகுதி- வீடியோவிற்கு 


இரண்டாவது பகுதி - ஆடியோவிற்கு


மூன்றாவது பகுதி - 


சப்டைட்டில்க்கு அதாவது ஏபிசி என்று குறிப்பிட்டிருக்கும் பகுதி , ஒரு மூவிக்கு 99 சப்டைட்டில் வரை இணைக்கலாம். ஏபிசி என்பதற்கு அருக்கில் இருக்கும் பட்டன் மொழிக்குறிய பட்டன் ஆடியோவிலே இதைபற்றி நிறைய சொல்லிவிட்டேன் அதே பயன்பாடுதான் இங்கேயும் அதாவது சப்டைட்டிலின் மொழியை அறிய பயன்படுகிறது இதற்கு ரிமோட்டில் உள்ள பட்டன் உதவும். நீல வண்ணத்தில் கட்டமிடப்பட்டிருக்கும் en என்பதற்கு அருகில் உள்ள கட்டத்தில் டபுள் க்ளிக் செய்தால் சப்டைட்டில் உருவாக்கும் திரை தோன்றும் கீழே வரும் படத்தினை பாருங்கள்.





மேலே படத்தில் இருப்பது சப்டைட்டில் உருவாக்கும் திரை இதிலே சிகப்பு வண்ணத்திலே கட்டமிட்டு எண் இட்டுள்ளேன் அவற்றை காண்போம்.


ஒவ்வொரு எண்ணிற்கு உரிய விளக்கங்கள்


1.ஸ்டார்ட் - ஸ்டாப் எனும் இடத்தில் டைம்கோட் காட்டப்படும் உங்களுடைய வீடியோவின் வாய் அசைவினை கவனித்து அந்த இடங்களின் ஆரம்ப மற்றும் முடிவு நேரத்தை குறித்து இங்கு கொடுக்க வேண்டும்.


உதாரணமாக : ஒரு வசனம் வருகிறது.


“நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்”


இதற்குறிய ஆங்கில (அல்லது உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ அந்த மொழிபெயர்ப்பு) மொழிபெயர்ப்பை செய்துகொண்டு இந்த வசனம் எந்த இடத்தில் ஆரம்பம் ஆகிறது என்று பார்க்க டைம்லைன்(வீடியோவிற்குரிய பகுதி) கொண்டு சரிபார்க்கம் அதை குறித்துக்கொண்டு இங்கே பேச ஆரம்பிக்கும் நேரம் அந்த வசனம் முடிய வேண்டிய நேரம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.


fade in , fade out - 0 விலே வைத்துவிடுங்கள் அதாவத் ஒரு சப்டைட்டில் வசனம் முடிந்த அடுத்த வசனம் தோன்ற அல்லது முடியும் பொழுது கொஞ்சமாக மங்கி மறையும் நிலை இது அவ்வாறு கொடுத்தால் நன்றாக இருக்காது எனவே 0 விலே இருக்கட்டும்.


2.போர்ஸ் டூ டிஸ்ப்ளே - சப்டைட்டில் மெனுவிலே அல்லது ரிமோட்டிலே தேர்ந்தெடுக்காமல் ஆட்டோமேட்டிக்காக ஓடும் வண்ணம் செய்ய இந்த பட்டனை க்ளிக் செய்திருக்க வேண்டும். சப்டைட்டிலை வாட்டர் மார்க்காக கூட பயன்படுத்தலாம் அதற்கு இந்த போர்ஸ் டூ டிஸ்ப்ளே உதவும்.


3.சப் டைட்டிலை நீங்கள் பிட்மேப்(பிஎம்பி) பைலாக மாற்றி வைத்துக்கொண்டும் இங்கே இணைக்கலாம் அதற்குரிய வசதியே இது


4.டெக்ஸ்ட் - இது நேரடியாக மேஸ்ட்ரோவிலே சப்டைட்டில் தட்டச்சு செய்யும் முறை இந்த பெட்டியினுள் தட்ட வேண்டும் உள்ளீடு செய்யும் பொழுது பக்கத்தில் கறுப்பு வண்ணத்திரை(வீடியோ இணைக்கபட்டிருந்தால் வீடியோ தெரியும் பின்புலத்தில்)யில் நீங்கள் தட்டும் எழுத்துக்கள் தெரியும். safe area தாண்டி செல்லா வண்ணம் வரிகளை மடக்கி தட்டச்சவும்.


உதாரணம் படத்திலே உள்ளது அதன் வெளியீடை 7 என்று குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில் காணலாம்.


5.இங்கே எழுத்துரு வகை , அளவு , போல்ட், இட்டாலிக் போன்ற வகை உள்ளது அதனை தேர்ந்தெடுத்து உங்களுடைய விருப்ப பாண்ட் , மொழியை அமைக்கலாம். ஆங்கிலத்திற்கு என்னுடைய தேர்வு ஏரியல் அது தான் கண்ணை உருத்தாது.


6.நாம் உள்ளீடு செய்யும் எழுத்து எந்த பகுதியில் அதாவது ஸ்க்ரீனில் எந்த பாகத்தில் தோன்ற வேண்டும் என்று அமைக்க இந்த பகுதி உதவுகிறது. நம்முடைய தமிழ் மொழிப்படங்களில் பொதுவாக கீழ் பகுதியில் மட்டுமே சப்டைட்டில் காட்டப்படுகிறது. ஒரிஜினல் ஆங்கிலப்படங்களில் பேசும் ஏரியாவிற்கு தகுந்தார் போல சப்டைட்டில் அமைக்கப்படுகிறது.


7. முன்னரே சொன்னது போல வெளியீடை காட்டும் திரை.


சப்டைட்டில் பெரிய வசனம் என்றால் ஒரே பக்கத்தில் முடியா பட்சத்தில் அடுத்த பக்கதிற்கு செல்லும் பொழுது முன்னால் ..... இந்த வாறு சேர்த்துக்கொள்ளுதல் நன்றாக இருக்கும். பாடல்களுக்கு இட்டாலிக் முறையும். வசனங்களின் பின் புலத்தில் பாடல்கள் வரும் பொழுது அதாவது இப்பொழுது உள்ள படங்களில் பழைய இளையராஜா பாடல்களை பயன்படுத்துவது போல அவ்வாறு வரும் பொழுது தமிழரியாதவர் இரண்டையும் வேறுபடுத்தி காண பாடல்களுக்கு இட்டாலிக் மற்றும் வரியின் ஆரம்பத்தில் மியுசிக்கல் நோட் சிம்பளையும் சேர்ப்பது நலம்.


இது தான் பெரிய வேலை டிவிடியை பொருத்த வரையும் ஒவ்வொரு வசனத்தையும் பொறுமையாக தட்டச்சு செய்ய வேண்டும்.


அடுத்த பகுதியில் முடிவடையும் அதன் பிறகு அடுத்த தொடர் ஒளிப்படத்தொகுப்பு பற்றி ...


பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க

Tuesday, December 22, 2009

வேட்டைக்காரன் மெகா ஹிட்: விஜய்

சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.

வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.

கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்"
என்றார்.





என்ன கொடுமை விஜய் சார் இது ஏதோ ரசிகர்கள் புண்ணியத்தில் ஓப்பனிங் அமர்களமாக இருந்தது என்பதற்காக இப்படிலாம் சொல்லக்கூடாது. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.




செய்தி ஆதாரம் -நன்றி தட்ஸ் தமிழ்.

Sunday, December 20, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 10

சென்ற பகுதியில் மெனுக்கள்-வீடியோவுடன் ஒருங்கினைக்கப்படும் கனெக்சன்ஸ் பற்றி பார்த்தோம். இன்று அடுத்த கட்டத்திற்கு செல்வோம்.


அடுத்து பார்க்க இருப்பது ஒரு டிவிடி புராஜக்ட்டின் பிராப்பர்டீஸ் மேலே படத்தில் காட்டப்பட்டிருப்பது போல புராஜக்ட்டின் பெயர் உள்ள இடத்தில் ரைட்க்ளிக் செய்து தோன்றும் மெனுவில் கடைசியாய் உள்ள ப்ராபர்டீஸ் எனும் தேர்வை தேர்ந்தெடுத்தால் கீழே படத்தில் காணும் திரை தோன்றும்.



இதில் ஜெனரல் டேபின் கீழ் 3 விசயங்கள் குறிப்பிட்டுள்ளேன்

1.டிவி சிஸ்டம் - நமக்கு ஏற்ற சிஸ்டம் எண்டிஎஸ்ஸி என்பதால் அதனை தேர்வு செய்துள்ளோம். மேலும் பால் சிஸ்டம் வேண்டுவோர் அதனை தேர்வு செய்தல் நலம் . எண்டிஎஸ்ஸி/பால் பற்றி ஏற்கனவே பார்த்துள்ளோம்.

2.பேரண்டல் கண்ட்ரோல் - குழந்தைகள் பார்க்கும்/பார்க்காத வண்ணம் டிவிடியை தயாரிக்க இந்த வசதி. அதாவது சென்சார் சர்டிபிகேட்டில் யு/ஏ/யு &ஏ போல இங்கே வீடியோவின் தன்மை குறித்து குறித்துக்கொள்ளலாம் மேலும் இங்கே செய்வதனால் மட்டும் டிவிடியை குழந்தைகள் பார்க்காவண்ணம் செய்துவிட முடியாது உங்களுடைய டிவிடி ப்ளேயரிலும் செட்டிங்க்ஸில் குழந்தைகளுக்கு ஏற்ற செட்டிங்கை செய்துவிட்டால் மட்டுமே இது போன்ற டிவிடி செட்டிங்குகள் வேலை செய்யும்.

3.16*9 மெனு ரேசியோ - உங்களுடைய டிவிடி 16*9 வைட் ஸ்க்ரீனை சப்போர்ட் செய்யாவிட்டால் மெனு மற்றும் படங்கள் திரையை தாண்டி செல்ல வாய்ப்புள்ளது இப்பொழுது வரும் டிவிக்களில் அகலத்திரை வசதி உள்ளது எனவே ப்ரச்சினை இல்லை ஆனாலும் நான் தேர்வு செய்துள்ளது போல் லெட்டர் பாக்ஸ் மோட் தேர்வு செய்தால் நலம்.




டிஸ்க் இமேஜ் எனும் டேபை தேர்ந்தெடுங்கள் அதிலேயும் 3 அம்சங்கள் குறியிடப்பட்டுள்ளன

1.டிவிடி வால்யூம் நேம் - உங்களுடைய டிவிடியின் பெயரை கொடுங்க குறிப்பு:நாம் டிவிடியை பர்ன் செய்ய வேறு மென் பொருளே பயன்படுத்தப்போகின்றோம் எனவே இங்கே பெயர் கொடுப்பது எந்த விதத்திலும் பாதிக்காகது சோ நீங்க கொடுத்தாலும் /கொடுக்காவிட்டாலும் தப்பில்லை.

2.லேஅவுட் பைல் ஆப்சன் - இதில் டிவிடி வீடியோ ஒன்லி என்பதை தேர்வு செயுங்கள் அது தான் எல்லா டிவிடி ப்ளேயரிலும் ஓடும் டிவிடி ரோம் தேர்வு செய்தால் எல்லா கணினிகளிலும் சில ப்ளேயர்களிலும் மட்டும் ஓடும்.

3.இது தொழில் முறைக்கு பயன்படக்கூடியது மற்றும் டிவிடி யை காப்பி செய்வதையும் தடுக்க கூடிய மேக்ரோ உள்ளது. இந்த மேக்ரோவெல்லாம் கதைக்கு ஆகாது லேட்டஸ் மேக்ரோ கூட காலியாகும் படி மென்பொருள்கள் இருக்கின்றன. எனவே நல்ல புள்ளையாட்டம் காப்பிரைட் இல்லைனு வச்சிடுங்க அப்படி இல்லை காப்பி ரைட் வைக்கனும்னா அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அதிலே நீங்கள் பேக்டரியில் ஸ்டாம்பர் செய்யும் உரிமையை தேர்வு செய்துக்கங்க.

ஸ்டாம்பர் - நீங்கள் கொடுக்கும் மாஸ்டர் சிடி/டிவிடி க்கள் பேக்டரில் ஸ்டாம்பர் இமேஜாக மாற்றப்பட்டு ஒரு தனி டிஸ்கில் சேமிக்கப்படும் சிங்கில் லேயர்(டிவிடி5) என்றால் ஒரு டிஸ்க் டபுள் லேயர்(டிவிடி9) என்றால் இரண்டு டிஸ்கில் சேமிக்கப்பட்டு பக்காவாக பாதுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இதனை கொண்டு டிவிடி உருவாக்கும் எந்திரங்களில் டிவிடியை உற்பத்தி செய்வார்கள். இந்த ஸ்டாம்பர் சேதமடைந்தால் பயன்படுத்த முடியாது.




அடுத்து ரிப்ளிகேசன் டேபை தேர்ந்தெடுங்கள், ரிப்ளிகேசன் என்பது இந்த மாஸ்டர் டிவிடியை கொண்டு பேக்டரியில் அதிகமான காப்பிகள் தயாரிக்கபடுவதே.

1.ரீஜினல் மேனஜ்மெண்ட் சிஸ்டம்ஸ்
இதில் எல்லாவற்றையும் மானாவாரியா டிக் அடிங்க அப்ப தான் எல்லா ரீனஜிலும் ஓடும். இப்ப உள்ள டிவிடிக்களில் ஏதாச்சும் ஏரியா விட்டோம்னாலும் கூட ஓடும் ஆமா ப்ளேயர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வசதியை இப்பொழுது கண்ட்ரோல் செய்வதில்லை எல்லாம் சீன தயாரிப்புகள் மற்றும் உலகமயமாக்கலே காரணம். ஆனாலும் நல்ல புள்ளையாட்டம் எல்லா ரீஜனையும் டிக் அடிச்சிடுங்க குறைந்த பட்சம் அந்த அந்த ரீஜனாச்சும் வேணும் இல்லை பேக்டரியில் ரிப்ளிகேசன் செய்ய ஸ்டாம்பர் செய்ய இயலாது திருப்பி அனுப்பிடுவாங்க.

2.நம்பர் ஆப் டிஸ்க் சைட்ஸ் - ஒரு பக்கம் தான் நமக்கு கொஞ்சம் காலம் 2 பக்கம் உள்ள டிவிடிலாம் வந்துச்சு டிவிடி9 ல ஒரு லேயர் மேலே ஒருலேயர் கீழேனு அந்தகாலத்து கிராமபோன் ரெக்கார்டின் பாதிப்பு போல.

3.கரெண்ட் சைட் ஆப் டிஸ்க் - ஏ தான்

4.ரிப்ளிக்கா டிஸ்க் சைஸ் - 12 செ.மீ கொடுங்கள்

5.டுயல் லேயர் ஆப்சன் - இது டிவிடி 9க்கு உரியது உங்கள் புராஜக்ட் டிவிடி 9 என்றால் இந்த வசதி தோன்றும்.

சரி இந்த ப்ராப்ர்டீஸ் முடிஞ்சது அடுத்து கொஞ்சம் கொஞ்சம் விடுபட்ட வசதிகள் பற்றி காண்போம்.

பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க

Friday, December 18, 2009

ஒயின் பாட்டில் வைக்க நல்ல இடங்கள்



































வேட்டைக்காரன் - வேட்டையாடுகிறான் நம்மை

நடிகர்கள்: விஜய் , அனுஷ்கா மற்றும் பலர்
இசை:விஜய் ஆண்டனி
இயக்கம் : பாபு சிவன்
தயாரிப்பு:ஏவிஎம்
வெளியீடு :சன் பிக்சர்ஸ்


தூத்துக்குடியில் வசிக்கும் 4 முறை எழுதி +2 பாஸ் செய்யும் ரவி என்கிற போலீஸ் ரவி , இவருடைய லட்சியமெல்லாம் இவரை இம்ப்ரஸ் செய்த தேவராஜ் ஐபிஎஸ் எனும் போலீஸ் அதிகாரியை போல் ஆக வேண்டும் என்று. மூச்சுக்கு முன்னூறு தடவை தேவராஜ் புகழ் பாடுகிறார் வீட்டுக்கு வெளியே 50 அடியில் கட்டவுட் வைக்கும் அளவுக்கு பற்று.ஊருக்குள்ள போலீஸ் முதல் எல்லோரையும் பின்னி பெடலெடுக்கிறார் அங்கே போடுகிறார் ஒரு பாட்டு நான் அடிச்சா தாங்க மாட்ட பாட்டின் ஓப்பனிங்கில் ஒரு பில்லரை கையால் பதம் பார்க்க கம்பியை மட்டும் விட்டு விட்டு பில்லர் பொல பொலவென உதறுகிறது.(ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்)


ஒரு வழியாக 4 வது அட்டம்ப்டில் பாஸாகி தேவராஜ் படித்த கல்லூரியில் படிக்க சென்னை செல்கிறார். சென்னை செல்லும் வழியில் ரயில்வே ஸ்டேசனில் சுசிலாவை காண்கிறார் காதல் கொள்கிறார். சுசிலாவை மடக்க அவருடைய பாட்டிக்கு ப்ராக்கெட் போடுகிறார். சென்னை செல்லும் ரவி ஆட்டோ ஓட்டிக்கொண்டே படிப்பை தொடர்கிறார் அவருடைய ஆதர்ஷ நாயகன் தேவராஜ் போல.

செல்லானு ஒரு ரௌடி சென்னையை கைக்குள் வச்சிருக்கான் அவன் ஒரு பொண்ணை ஆசைப்பட்டால் அவளுடைய குடும்பத்திற்கு டார்ச்சர் கொடுத்து பொண்ணை அடைந்துவிடுவான். ஒரு சாம்பிளும் காட்டப்படுகிறது. விஜயின் வகுப்பு தோழியாக வரும் உமா(தீபிகா படுகோன் தங்கச்சி ஆனாலும் அட்ராக்சன் இல்லை). இவருடைய தந்தையின் டிராவல்ஸில் ஆட்டோ வாடகைக்கு ஓட்டுகிறார். செல்லா உமாவை பாக்க்க ஆசைப்பட அதைக்கேட்டு பொங்கி எழும் விஜய் வில்லன் அன்கோவை துவம்சம் செய்கிறார் . செல்லா அடிவாங்கி ஓய்ந்தார் ஒரு வழியா படம் முடிஞ்சுச்சுனு பார்த்தா அங்க தான் வேட்டைக்காரன் ஆரம்பிக்கிருறார்.

போலீஸ் பலம் கொண்டு செல்லாவின் அப்பா வேதநாயகம்(இன்னொரு வில்லன் உஷ் அப்பா) ரவியை என்கவுண்டரில் போட ரெடி செய்கிறார். என்கவுண்டரில் வழக்கம் போல தப்பிக்கும் ரவி அவரைப்போலவே வேதநாயகம் அன்கோவால் பாதிக்கப்பட்டிருக்கும் தேவராஜ் உடன் சேர்ந்து மானாவாரியா வில்லன் கோஷ்டிகளை பந்தாடுகிறார். சிட்டியை க்ளின் செய்கிறார்.எங்கோ கேட்ட இல்லை இல்லை பார்த்த கதை மாதிரி இருக்கா ம்ம்ம் கொஞ்சம் திருப்பாச்சி, போக்கிரி, வில்லு எல்லாம் கலந்த கலவை தான்.ஆதியையும் சேர்த்துக்கங்க.


படத்தில் குறிப்பிட தகுந்த அம்சம் அனுக்‌ஷா தான் செம பிகருங்க. நல்லா இருக்கார் பாட்டிற்கும் சில சீன்களுக்கும் வந்து போகிறார். படம் முழுக்க விஜயை சுத்தி நகருகிறது. நிறைய அறிமுகம் இல்லாத முகங்கள் என்பதால் விஜயை வளைத்து வளைத்து காமிரா காட்டியிருக்கிறது.

வில்லன் போலீஸா வரும் ஷாயாஷி சிண்டே பெருசா ஒன்னுமில்ல அங்க அங்க வரும் மனோபாலாவும் சிரிப்புக்கு உதவவில்லை. விஜய் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் சத்யனும் சிரிக்க வைக்கவில்லை ஆனாலும் விஜய் அந்த வேலையை ஒழுங்கா செய்யுறாரு.

பாடல்கள் நல்லா இருக்கு கேக்கவும் பாக்கவும். ஆனாலும் பாடல்களில் ஆட்டம் குறைவு . பஞ்ச் டயலாக்குகளும் காணோம் ஒரு வேளை சன் டிவி போட்ட கத்திரியில் காணம போச்சோ.


நிறைய புல்லட்டுகளிலும் , நிறைய கத்திகளிலும் தப்பிச்சு ஹீரோயிசத்தை நிறுபிக்கின்றார் விஜய். விஜய் அதே எனர்ஜியோடு இருக்கிறார். ஆனாலும் காலேஜ் போயி படிப்பதெல்லாம் ஓவரு. முரளிக்கு அப்புறம் ரெம்ப காலமாக காலேஜ் போனவர்களின் சரித்திரத்தில் இடம் பிடிக்கின்றார் விஜய்.

வேட்டைக்காரன் நம்மை வேட்டையாடுகிறான்.

Saturday, December 12, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 9

இந்த பகுதியை கவனமாக புரிந்து கொள்ளவும் மிகவும் முக்கியமான பகுதி இது. புரியாததை கேள்விகள் மூலம் தெளிவு செய்து கொள்ளுங்கள்.

சென்ற பாடத்தில் மெனுக்கள்/மூவிகள்/ப்ளேலிஸ்ட்கள் உருவாக்கும் முறை கையாளும் முறை பற்றி கண்டோம். இன்று மேலதிக விசயங்கள் அவை சார்ந்ததாக பார்க்கப்போகின்றோம்

படங்களை முழுவதும் காண படத்தின் மீது க்ளிக் செய்து காணவும்.

முதலில் பார்க்க இருப்பது கனெக்சன்ஸ் பின் வரும் படத்தினை காணுங்கள்



மேலே உள்ள படத்தில் இருக்கும் கனெக்சன்ஸ் பட்டனை அழுத்தியவுடன் மேலே படத்தில் இருப்பது போல தோன்றும் இந்த கனெக்சன் விண்டோவில் புராஜக்ட் முழுவதும் காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது சிகப்பு கட்டத்தில் புராஜக்ட்டை நாம் சேமிக்கும் பொழுது கொடுக்கும் பெயர் தோன்றி அதை தேர்வு செய்துள்ளோம். இந்த கனெக்சன் விண்டோவினை இவ்வாறும் புராஜக்ட் மொத்ததிற்கும் அல்லது தனித்தனியாக மூவி/மெனு போன்றவற்றிற்கும் காணலாம் அவ்வாறு செய்ய அந்த அந்த மூவி/மெனுவினை தேர்வு செய்தால் போதும். view வழியாக கனெக்சன் விண்டோவினை வரவழைக்கும் முறை கீழே படத்தில் உள்ளது.


கீழ் வரும் படத்தில் கொஞ்சம் அதிகமான விளக்கம் இருக்கிறது கவனியுங்கள்


நான் மேலே சொன்னது போல மொத்த புராஜக்ட்டுக்கும் கனெக்சனை பார்க்க புராஜக்ட்டின் பெயரை படத்தில் சிகப்பு வண்ணத்தில்(இடது புறம்) கட்டம் கட்டியுள்ளதை செலக்ட் செய்யவேண்டும் செலக்ட் செய்வது என்றால் இங்கே அதன் மீது ஒரு க்ளிக் செய்தால் போது. அதற்கு முன்பு முதல் படத்தில் சொல்லியபடி கனெக்சன் விண்டோவினை தெரிவு செய்திருக்கனும்

சரி அவ்வாறு செய்த பின்பு வலது புற பகுதியில் மேலதிக கட்டங்கள் கட்டியுள்ளேன் ஒவ்வொன்றாக காண்போம்
1.first Play - டிவிடி ப்ளேயரில் ப்ளே ஆகும் பொழுது முதலில் எந்த அயிட்டம்(மூவி/மெனு) ப்ளே ஆகவேண்டும். உதாரணமாக தொழில் சார்ந்த டிவிடிக்களை ஏதேனும் சினிமா சம்பந்தமான நிறுவணங்கள் வெளியிடும் (உதாரணமாக:மோசர்பேயர் , ஐங்கரன், ஏபி இண்டர் நேஷனல்) இவர்கள் முதல் ஐயிட்டமாக அவர்களது கம்பெனியின் மோண்டாஜை(montage) வைத்திருப்பார்கள் அதாவது கம்பெணி பெயர் வருமே அது (உதாரணமாக : நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை- இது சன் டிவியின் montage) . அல்லது warning யை முதலில் ப்ளே ஆகும் படி செய்திருப்பாங்க. இது போல நீங்கள் உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்யலாம்.

நீங்கள் உங்களுடைய பெர்சனல் வீடியோ என்றால் டைட்டில்(நம்முடைய புராஜக்டில்top என்று ரீநேம் செய்துள்ளேன்) மெனுவை முதலில் ப்ளே ஆகுமாறு செய்யலாம்.

2.title menu: இதைப்பற்றியும் நாம் கொஞ்சம் விளக்கமாக பார்போம். உங்களுடைய டிவிடி ரிமோட்டை கவனியுங்கள் மெனுவிற்கு இரண்டு பட்டன்கள் இருக்கும்.

1.Title or title menu or Top menu
2.DVD menu or menu


மேலே உள்ள படத்தில் காணும் சாம்பிள் டிவிடி ரிமோட்டை காணுங்கள் அதன் கீழ் பகுதியில் உள்ள பட்டன்களில் Top menu and menu என்று இரண்டு பட்டன் இருக்கே . இவ்வாறு இருக்கும் அல்லது மேலே சொன்னது போல title னு கூட இருக்கும் பெரும்பாலும் title தான் இருக்கும்.

சரி மேட்டருக்கு வர்ரேன்.

இந்த டைட்டில் மெனு என்றால் பெரும்பாலும் முதன்மை மெனுவாக இருக்கும் உதாரணமாக இரண்டு படங்கள் உள்ள டிவிடியை எடுத்துக்கொள்வோம் அதில் டைட்டில் மெனு என்பது இரண்டு படங்களில் எதை தெரிவு செய்ய வேண்டும் என காட்டும் மெனு . டிவிடி ஓடும் பொழுது இந்த டைட்டில் பட்டனை அழுத்தினால் எங்கு இருந்தாலும் டைட்டில் மெனுவினில் கொண்டு வந்து நிறுத்திவிடும் அதற்கு நாம் இங்கே சரியாக தேர்வு செய்ய வேண்டும். நம்முடைய புராஜக்டில் டாப் எனும் மெனுவே டைட்டில் மெனு. 

டிவிடி மெனு என்பது- இரண்டு படங்கள் டிவிடியில் ஒரு படம் பார்த்துக்கிட்டு இருக்கோம் அந்த படத்திற்கு உரிய மெனுவிற்கு செல்ல வேண்டும்(டைட்டில் மெனு அல்ல) இந்த நிலையில் செட் செய்வதே டிவிடி மெனு அல்லது மெனு.

சரி மேலே உள்ள கனெக்சன் விண்டோவில் வட்டமிடப்பட்டுள்ள
title menu - இது தான் டாப்/டைட்டில் மெனு

அதன் கீழே கட்டமிடப்பட்டுள்ளது
song2: menu key - இங்கு song என்பது நாம் மூவிக்கு கொடுத்துள்ள பெயர் 2 என்பது அந்த மூவியில் உள்ள 2வது சாப்டரின் பெயர்.

அதாவது சாங்க் 2 ப்ளே ஆகும் பொழுது மெனு(டிவிடி மெனு) கீயை அழுத்தினால் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இங்கு கொடுக்க வேண்டும் .

டிவிடி மெனு என்பது- இரண்டு படங்கள் டிவிடியில் ஒரு படம் பார்த்துக்கிட்டு இருக்கோம் அந்த படத்திற்கு உரிய மெனுவிற்கு செல்ல வேண்டும்(டைட்டில் மெனு அல்ல) இந்த நிலையில் செட் செய்வதே டிவிடி மெனு அல்லது மெனு.

சரியா....

அடுத்து உள்ளது
songs 2 : end action
song2: menu key - இங்கு song என்பது நாம் மூவிக்கு கொடுத்துள்ள பெயர் 2 என்பது அந்த மூவியில் உள்ள 2வது சாப்டரின் பெயர்.இதே போல எல்லா சாப்டருக்கும் இருக்கும் நான் இது ஒன்றை மட்டும் உதாரணமாக்கி கற்றுக்கொடுக்கிறேன்.

end action என்றால் இந்த 2 வது சாப்டர் முடிவடையும் பொழுது என்ன நடக்க வேண்டும் என்று சொல்வது.ஒரு சாப்டர்  எங்கு முடிவடையும் எனும் கேள்வி எழலாம் ஆமாம் அடுத்த சாப்டரின் தொடக்கதிற்கு முந்த ப்ரேமே ஒரு சாப்டர் முடிவடையும் இடம்
உதாரணமாக 1 வது சாப்டர் எங்கு முடியும் என்றால் 2 வது சாப்டர் ஆரம்பிக்கும் ப்ரேமுக்கு முதல் ப்ரேமில் முடிவடையும்.

சரி எண்ட் ஆக்சனுக்கு வரும் இதை நீங்கள் எல்லா இடங்களில் பயன்படுத்தனும்னு கட்டாயம் இல்லை. ஒரு படத்தில் பல சாப்டர்கள் இருக்கிறது எல்லா சாப்டருகும் இதே போல எண்ட் ஆக்சன் இருக்கும் அதிலே நீங்கள் அடுத்த சாப்டருக்கும் செல்லும் படி செய்தால் டிவிடி கொஞ்ச நேரம் நின்று பின்னரே ப்ளே ஆகும் இதை தவிர்க்க முழு படத்திற்கும் எண்ட் ஆக்சனை ஒன்னுமே செய்யாமல் விட்டுவிடலாம். ஆனால் கடைசி சாப்டரின் எண்ட் ஆக்சனை மட்டும் அதற்குரிய மெனுவிற்கு செல்லும் படி செய்யவேண்டும். இல்லைனா டிவிடி குழம்பிவிடும்.

ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
கட்டாயம் டைட்டில் மெனு கொடுக்கனும், டிவிடி மெனு(மெனு) கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.அவ்வாறு கொடுப்பது நன்றாக இருக்கும்.

சரி கீழே வரும் படங்களை கவனியுங்கள்


இடது புறத்தில் மூவியை(சாங்க்ஸ்) மட்டும் தேர்வு செய்ததால் தோன்றும் கனெக்சன் விண்டோ இங்கு பர்ஸ்ட் ப்ளே-டைட்டில் மெனு போன்றவை இருக்காது. அந்த மூவியில் இருக்கும் சாப்டர்களின் மெனு கீ மற்றும் எண்ட் ஆக்சன் மட்டுமே இருக்கும்.

இதே போல எத்தனை மூவி இனைத்துள்ளீர்களோ அத்தனைக்கும் கனெக்சன் விண்டோவினை தனித்தனியாக தோன்ற வைக்கலாம்.

கீழே வரும் விண்டோவினை கவனியுங்கள் இது மெனுவிற்கு மட்டும் உள்ள கனெக்சன் விண்டோ அதைப்பற்றிய மேலதிக தகவல்கள் படத்திற்கு கீழே


இது டாப் எனும் மெனுவினை தேர்வு செய்ததால் தோன்றும் கனெக்சன் விண்ட்டோ இதிலே இருக்கும் பகுதிகளை காண்போம்
1.Top timeout - Top என்பது மெனுவின் பெயர் இந்த மெனு டைம் அவுட் ஆகும் பொழுது என்ன செய்யனும் அப்படினு இங்கே கொடுக்கனும் அவ்வாறு கொடுக்கும் பொழுது அந்த மெனுவின் முதல் பட்டன் அல்லது பட்டனில்லா அந்த மெனுவினை தேர்வு செய்யலாம் அடுத்து வரும் படம் அதனை காட்டும்.
2.button1 - பட்டன்கள் மெனுவில் உருவாக்கினோம் அல்லவா அவையே இங்கு காட்டப்படுகின்றன. அதாவது முதல் பட்டனை அழுத்தினால் என்ன நடக்க வேண்டுமோ அதை இனைக்கவேண்டும் கீழே உள்ள படம் விளக்கும். இதே போல எல்லா பட்டன்களுக்கும்.



மேலே படத்தில் உள்ளது போல கனெக்சன் கொடுக்க வேண்டும்.top timeout க்கு சாம்பிள் காட்டபட்டுள்ளது இதை கொண்டு வர top timeout க்கு நேரே உள்ள காலிக்கட்டத்தில்(கட்டமிடப்பட்டுள்ளது) ரைட்க்ளிக் செய்தால் இந்த துனை வசதிகள் காட்டப்படும்.படத்தில் மெனு விரித்து காட்டப்பட்டுள்ளது இதே போல மூவிஸையும் விரித்தால் மூவிகள் /சாப்டர்கள் தோன்றும். இவ்வாறு இனைப்பு கொடுக்க வேண்டும்.


மேலே உள்ள படத்தில் மூவிக்கு கனெக்சன்



இது முழுவதும் கனெக்சன் செய்யப்பட்ட சாங்க்ஸ் கனெக்சன் விண்டோ .




இது புராஜக்ட் முழுவதும் கனெக்சன் செய்யப்பட்ட கனெக்சன் விண்டோ.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க