Wednesday, December 07, 2011

ஒஸ்தி - விமர்சனம்

அதே டபாங் ரீமேக்.

சல்மான் கானின் முரட்டு உடம்பும் செதுக்கியது போன்ற மீசையுமே ஒரு கம்பீரமும் லேசான அந்த காமெடியையும் சொல்லியது டபாங் வரும் முன்னே.
சிம்பு காப்பாற்றினாரா டபாங் வெற்றியை....?

ரேவதியின் முதல் கணவனின் பிள்ளை சிம்பு , இரண்டாவது கணவரான நாசர் அவரின் பிள்ளை ஜித்தன் ரமேஷ். வழக்கம் போல மாற்றாந்தந்தை பிள்ளை பிரச்சினை.

ஒஸ்தி வேலன் திருநெல்வேலி பக்கம் ஒரு இன்ஸ்(இன்ஸ்பெக்டரை சந்தானம் இப்படி தான் அழைக்கின்றார்) கெட்டவனிடம் கொள்ளையடிக்கும் கெட்டிக்கார(?) ப்போலீஸ்.

அவருக்கு கூட்டணியாக காமெடி போலீஸ் க்ரூப்பே இருக்கு சந்தானம் மயில்சாமி தம்பி ராமையா இப்படி கொள்ள பேரு.

ரிச்சா ஹீரோயின் ஏன் படத்துல இருக்காருனு பார்த்தா நம்ம சிம்புக்கு எப்படியும் ஜோடி வேணும்ல அதான் படத்துல அந்த பொண்ண ஒட்ட வச்சிருக்காரு இயக்குநர் தரணி.

டபாங்கில் இருக்கும் அதேடெம்ப்ளட் காட்சிகள் , எல்லோருக்கும் எப்படியும் கதை தெரியும் சரி திரைக்கதை சும்மா விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு போகனும்ல அங்க தான் தரணி சொதப்பிட்டார் கில்லி , தூள்லாம் எங்க போச்சோ...

சிம்புவை ஒரு காலேஜ் பாய் தோற்றத்தில் தான் பார்க்க தூண்டுகிறது. எப்படி விஜய் போலீஸ் டிரெஸ் போட்டு காமெடி செய்தார் அதே போல சிரிப்பு வருகிறது, அவருக்கு பொருந்தவில்லை என்றே எனக்கு தோனுது.

நல்லா டான்ஸ் ஆடுகின்றார் அடி உதை கொடுக்கின்றார் காமெடியும் செய்கின்றார் ஆனாலும் அந்த மெயின் ரோலான போலீஸ் இன்ஸ் வேலை தான் அவருக்கு செட் ஆகல்.

ரிச்சா மொழு மொழுனு இருக்கார் மயக்கம் என்னவில் செல்வா அருமையாக நடிக்க வச்சிருந்தார் தரணி இப்படத்தில் சும்மா வச்சிருக்கார்.

ரிச்சாவின் அப்பாவாக சிம்புவின் லேட்டஸ் ப்ரண்ட் விடிவி கணேஷ்

டபாங்கில் இருக்கும் வேகம் இதில் இல்லை காரணம் சிம்புவிற்கு பொருந்தாத போலீஸ் தோற்றம்.

படத்துல க்ரீன்மேட் வேலைகள் ரெம்ப அதிகம். எத்தனை மீட்டர் துணி வாங்குனாங்களோ எங்க பார்த்தாலும் சண்டை பாடல்களில் ஒரே சிஜி.

ஒஸ்தி , டபாங்க நெருங்கவில்லை.

Thursday, November 24, 2011

மயக்கம் என்ன

நடிகர்கள் : தனுஷ் , ரிச்சா
இசை : ஜீ.வீ.பிரகாஷ்
இயக்கம் : செல்வராகவன்
தயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்க்கியூட்

வைல்ட் லைப் போட்டோ கிராபர் ஆகனும்னு ஆசைப்படுகிற தனுஷ் அதற்கு உதவி புரியும் நண்பர்கள். நட்பு வட்டம் மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. நண்பன் ஒருவன் டேட்டிங்கு அழைத்து வரும் பெண்ணிற்கும் , தனுஷ்க்கும் லவ் ஏற்பட நட்பு உடைந்து பின் சேர்ந்து தனுஸ் அந்த பெண்ணுடன் திருமண வாழ்வில் இனைகின்றார்.

அவருடைய லட்சியமான வைல்ட் லைப் போட்டோகிராபர் முயற்சி ஒருவரால் ஏமாற்றப்பட்டு அதன் உச்சத்தில் நிகழும் விபத்தில் மனநிலை பிறழ்ந்தவராக மாறுகிறார்.

காதல் மனைவி என்ன செய்கின்றார்? தனுஸ் லட்சியத்தை அடைந்தாரா?

தனுஷின் அந்த ’ஜீனியஸ் ’ பட்டம் கொடுத்து அழைக்கும் நட்பு வட்டத்தில் செம இயல்பு. நண்பனின் கேர்ள்பிரண்ட் தன்னை லவ் செய்வதும் அதில் இருந்து அவர் விலகி ஓட நினைப்பதும் இயல்பான நடிப்பு தனுஷின் உழைப்பு அபாரமானது. இரண்டாம் பாதில் மனநிலை பிறழ்ந்தவராக தனுஷ் பிச்சு உதறி இருக்கின்றார். இன்னொரு தேசிய விருது கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

நண்பனின் கேர்ள் பிரண்டாக வந்து தனுஷிடம் காதலில் விழுவதாகட்டும் தனுஷை பார்த்து கொள்வதாகட்டும் அந்த விழிகளிலே என்னா ஒரு எக்ஸ்பிரசன்ஸ் கொடுக்கிறார் ரிச்சா. பிரமிப்பு தான் ஏற்படுகிறது அறிமுக நடிகைக்கு இப்படி ஒரு வாய்ப்பு அதை சரியாக பயன்படுத்தி பட்டைய கெளப்பிருக்கார்.

கணவனின் போட்டோக்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி அவனுக்கு மது கொடுத்து அவனை பத்திரமாக பார்த்து , ரிச்சா நடிப்பில் ரிச்சாக இருக்கிறார்.

கடைசியில் அந்த க்ளைமாக்ஸ் ரிச்சாவின் பெர்பார்ர்மன்ஸ் அருமை அருமை.

இந்த மாதிரி கதை எடுத்து அதை மெதுவாக நகர்த்தி அழகான இயல்பான வசனங்களில் செல்வா மீண்டும் நிரூபிக்கின்றார் அவரது ஆளுமையை


மயக்கம் என்ன - மாற்றுத்திரைப்படம்

கட்டாயம் பாருங்கள் பிடிக்கும்.

Friday, September 16, 2011

வந்தான் வென்றான் - விமர்சனம்

ஜீவா - நந்தா இருவரும் தம்பி - அண்ணன். மாற்றந்தந்தையின்(மாற்றாந்தாய் போல) பிள்ளைகள் இருவரும். அண்ணனுக்கு தம்பி மேல் வெறுப்பு , நந்தா ஊரை விட்டு 10 வயதில் ஓடி மும்பையில் கொஞ்சம் பெரிய டான்னாக இருக்கின்றார். அவரை திருத்தி ஊருக்கு மீண்டும் அழைத்து செல்ல அவரிடம் வருகிறார் ஜீவா.

அர்ஜூனாக ஜீவா இயல்பாய் இருக்கின்றார். அவரது காதலி அஞ்சனாவாக தப்சி. தப்சி நல்ல மெழுகு சிலை. கொஞ்சமாய நடிப்பு வருகிறது. ஆனாலும் அவரது முதிர்ச்சி தோற்றம் ஜீவாவின் இளமையான தோற்றத்தில் நமக்கு கொஞ்சம் ஜர்க் அடிக்கிறது. பாடல் காட்சிகளில் நல்லா இருக்கின்றார் தப்சி.

ஜீவா வழக்கம் போல துறு துறு இளைஞன். நல்லா செய்திருக்கார். சந்தானம் மும்பையில் நந்தாவிடம் சமையல்காரராக இருக்கின்றார். சமையலே தெரியாமல் சமையல்காராக இருக்கின்றார் சந்தானம் வரும் காட்சிகள் எப்பொழுதும் போல கல கல. கவுண்டரை ஞாபகப்படுத்துகிறார்.
“மூக்கை உருஞ்சிக்கிட்டே பேசுனா ரமணா குரல் வரும்னா மூக்கை சொரிஞ்சுகிட்டே பேசுனா தமனா குரல் வருமா” என்று டைமிங் காமெடி அவருக்கு கை கொடுக்கிறது.

முதல் பாதி முழுக்க ஜீவா ராச்சியம். இரண்டாம் பாதியில் நந்தா ஆளுகை நந்தா போன்ற இளைஞரை மும்பையின் டான் ஆக காட்டும் பொழுது சிரிப்பு வரக்கூடாது அல்லவா. நந்தா மிரட்டுகிறார் உடல் மொழியில் நந்தாவுக்கு ஈரத்திற்கு பின் நல்லதொரு வாய்ப்பு. கலக்கி இருக்கிறார். அதிலும் மிரட்டல் அவர் காதலியின் பிரிவு இதையெல்லாம் முகத்திலே இறுக்கத்துடன் வெளிப்படுத்தி சபாஷ் வாங்குகின்றார்.

ஏற்கனவே 3 பாடல் செம ஹிட் அவை படமாக்கிய விதமும் அருமை. அஞ்சனா அஞ்சான, காஞ்சன மாலா பாடல்கள் பிரமாதம்.

பிஜி முத்தையாவின் கேமரா திருவிளையாடளே. நல்லா கொடுத்திருக்கார்

தமனின் இசையில் ஈரத்திற்கு அப்புறம் தமிழில் நல்ல பாடல்கள். தெலுங்குல ஹிட் கொடுக்கின்றவர் இப்பொழுது தமிழிலும்.

வி.டி.விஜயனின் படக்கோர்வை அருமை வேகத்திற்கு வேகம் காதலுக்கு நிதானம் என்று நல்லா செய்திருக்கிறார்.

கண்ணனின் திரைக்கதையில் சில சறுக்கல்கள் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனம் பெரிய சார்ப்பா இல்லை.

மெயின் ஹீரோ ஜீவா இரண்டாம் பாதியில் இல்லாமலே போவது போன்ற தோற்றம் படத்தின் பலகீனம்.  அந்த க்ளைமாக்ஸ் உல்டா செம சொதப்பல்.

ஆனாலும் தலைப்பிற்கேற்ற படம் வந்தான் வென்றான்

எங்கேயும் எப்போதும் - திரைவிமர்சனம்

சென்னை - திருச்சி மற்றும் திருச்சி - சென்னை முறையே தனியார் மற்றும் அரசுப்பேருந்து புறப்படுகிறது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதி ஒரு விபத்து. அதில் பயணிக்கும் கதாப்பாத்திரங்கள் மற்றும் முக்கிய பாத்திரங்களின்(திரைப்படத்தின்) கதையே எங்கேயும் எப்போது.

அனன்யா - சரவ் காதல் செம சுவாரஸ்யம். அனன்யாவுக்கு உதவும் முன்பின் தெரியாத சரவ்வின் உடல் மொழி செம அட்டகாசம் புது ஹீரோ கிடைச்சுட்டார். படம் பார்ப்பதற்கு முன் அனன்யாவா பிகர் சுமார் தான்னு நினைச்சேன் அந்த திருச்சி போன்ற சிறிய நகரத்தின் பெண் பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு . சரவ்வின் பேரையே கடைசியாக(படம் முடியும் போது) தான் கேட்ப்பார் நமக்கும் அப்போழுது தான் தெரிய வருகிறது. நல்ல அருமையான காதல் கதை இவர்களுடையது. இருவருக்கும் காதல் வந்து சரவ் அனன்யாவை தேடி திருச்சியும் அனன்யா இவரை தேடி சென்னை வந்து பின் திரும்பி செல்லும் போது இருவர் வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.

அஞ்சலி - ஜெய் காதல் அட்டகாசம் கொஞ்சம் போல்ட் ஆன திருச்சி பெண்ணாக அஞ்சலி, திருச்சியில் தங்கி வேலைபார்க்கும் ரெம்ப நல்ல கிராமத்து பையனாக ஜெய். ஜெய்க்கு கூட நடிக்க வருகிறது முந்தைய படங்களுக்கு ரெம்ப ரெம்ப நல்லா பண்ணிருக்கார். ஆனாலும் அஞ்சலில் கேரக்ட்டரைஷேசன் ரெம்ப அருமை. போல்ட் ஆன பொண்ணு காதலிப்பவனை அப்பாவிடம் அனுப்பி சம்மதம் கேட்க்க வைப்பது, அவனை உடல் உறுப்பு தானம் செய்ய வைப்பது எல்லாம் தினிக்கப்படாமல் அவரது கேரக்கடருக்கு ஏற்ற காட்சிகள் படத்தில்.

அந்த பேருந்தில் பயணிக்கும் ஒரு இளைஞனுக்கும் , இளைஞிக்கும் அங்கே மலரும் காதல் , துபாய்யில் 5 வருஷம் இருந்து முதல் முதலாக குழந்தையை பார்க்க வரும் நபர். அவர் குழந்தை நிஜமானு கேட்க்க இவர் பக்கத்தில் இருப்பவரிடம் ஆமானு சொல்ல சொல்ல போன் கொடுக்க அவர் கோபமாய் போனை வாங்க போனின் மறுமுனையில் அந்த குழந்தை லஞ்ச் சாப்பிட்டீங்களா அங்கிள் நு கேட்க்க மனுசன் முக மலர்ச்சியாவது இது போன்ற இயல்பான திரைக்கதை காட்சிகள்.

புதிய திருமண ஜோடி , ஒரு குழந்தை அதன் தாய் எல்லாம் கவனிப்பு பெறுகின்றார்கள்.

படத்தின் மற்றொரு ப்ளஸ் கேமரா மேன் சிறுத்தை யில் பணிபுரிந்த வேல்ராஜ்  நல்லா செய்திருக்கார் முன்னரே நிறைய படம் செய்திருக்கின்றார்.

அந்த விபத்து காட்சி அதில் உறையும் நம்மை ஒவ்வொரு காரக்டரின் சோகத்திற்கே இழுத்து செல்வது நம்மை அறியாமல் நடை பெறுகிறது.

அஞ்சலி செம துரு துருனு இருக்கார். அழகாக இருக்கின்றார். அவ்வளவு போல்ட் ஆன பொண்ணு ஜெய்யை ஆம்புலன்ஸில் சும்மா அனுப்புகிறார்னு நினைத்தால் அவனுக்கு காதுல ரத்தம் வந்துச்சு எனக்கு பயமா இருக்குனு கதறுகிறார்,

ஜெய் உடலை பார்த்து அழும் போது நமக்கும் அழுகை வருகிறது. அஞ்சலி மாதிரி நடிக்க தெரிஞ்ச பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்க இயக்குநர்களே.

கதை , திரைக்கதை அதை எடுத்தவிதம் எல்லாம் சரியாக இருக்க இயக்குநராக சரவணன் நல்லா கொடுத்திருக்கார்.

காட்சிகளோடு ஒட்டிய இயல்பை மீறாத பாடல்கள் நன்றாக ரசிக்க வைக்கிறது. இசை அமைப்பாளர் நல்ல செய்திருக்கின்றார்.

அன்றாடம் செய்தி தான் படம் நல்ல மெசேஜ் கூடவே உறுப்பு தானம் பற்றியும் சொல்லிருக்காங்க

படம் பார்த்து முடித்தும் இன்னும் நினைவில் இருந்து மாறவில்லை

விமர்சனத்தை இவ்வளவு நீளமாக காட்சிகளை சொல்லி சொல்லிவிட்டாலும் அதை திரையில் உணரும் பொழுது நிச்சயம் ரசிப்பீர்கள்.

எங்கேயும் எப்போது - விபத்து நேரலாம் வரும் முன் காப்போம். நல்ல படம் கட்டாயம் விரசம் இல்லை குடும்பத்துடன் பார்க்கலாம்.

Tuesday, August 30, 2011

மங்காத்தா - விமர்சனம்

மும்பை தாராவியின் பெரிய தலை செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள் த்ரிஷா. ஐபிஎல் பைனல் மேட்ச்சில் பெரிய பணம் 500 கோடி கறுப்பு பணம்(ஆனா எல்லாம் டாலரா தான் இருந்துச்சு :) ) சூதாட்டத்தில் ஈடுபடப்போவது தெரிந்த செட்டியார் மும்பை டான் களிடம் பேசி அந்த பணத்தை கை மாத்தி விடும் பொறுப்பை ஏற்கிறார்.

இது தெரிந்து அவரிடம் வேலை பார்க்கும் வேலையாள் , தாராவி எஸ். ஐ  கணேஷ், தாராவியில் இருக்கும் பார் ஓனர் மகத் , அவருடைய ஐஐடி கோல்மெடலிஸ்ட் நண்பர் ப்ரேம்(ப்ரேம்ஜி) எல்லோரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க.

அதே பணத்தை கொள்ளையடிக்க அவர்களுடன் நுழைகிறார் தல , அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வினாயக், செட்டியார் பெண்ணை கரெக்ட் செய்து செட்டியாரிடமும் பழகுகிறார்.

சில பல கோக்கு மாக்குகளை செய்து பணத்தை கொள்ளையிடுகிறது இந்த கேங்க். கேங்கிலே பணத்தை மொத்தமாக அடிக்க தல பிளான் போடுகின்றார். பணத்தை தேடி செட்டியார் கேங்க் அலைந்து நூல் பிடித்து  ஆட்களை நெருங்கினால் பணம் அங்கு இல்லை அதை தனியா சுட்டு ப்ரேம்ஜி , மகத்(பேர் தெரியல) லட்சுமிராய் கம்பி நீட்டுகின்றனர்.

பணத்தையும் ஆட்களையும் தேடி இறுதி கட்ட துரத்தல்கள். சூதாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை போலீஸ் அதிகாரியாக அர்ஜூன். அவரும் பணத்தையும் ஆட்களையும் பிடிக்க அலைகின்றார்.

இறுதியில் பணம் கைபற்ற பட்டதா? யார் கைபற்றினார்கள்? செட்டியார்?அர்ஜீன், ப்ரேம்ஜி கேங், தல ... யாருக்கு பணம்

முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தலைக்கு. அந்த நரை முடியிலும் ஹேண்ட்சம் ஆக இருக்கின்றார் தல. அவர் செய்யும் ஹ்யூமர் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. தல மொத்ததில் நெகடிவ் காரெக்டரில் மின்னுகின்றார்.

த்ரிஷா ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே. ஹீரோயின்னு சொல்ல முடியாது அவருடைய கேரக்டருக்கு ஏற்ற காட்சிகள் மட்டுமே படத்தில் என்பது நல்ல விசயமே தேவையில்லாத செண்டிமெண்ட் இல்லாமல் இருக்கின்றது,

அஞ்சலி ஒரு பாட்டுக்கும், லெஷ்மி ராய் 2 பாட்டுக்கும் இருக்கின்றனர்.அஞ்சலி அவ்வளவு அழகு.

ஆக்சன்கிங் அர்ஜீன் வழக்கம் போல போலீஸ் அதிகாரி ஆனா சின்ன ட்வீஸ் இருக்கு க்ளைமாக்ஸ்ல.

வாடா பின்லேடா பாட்டு நல்லா இருக்கு படமாக்கிய விதம். விளையாடு மங்காத்தா பாட்டும் சூப்பர்.

ப்ரேம்ஜி காமெடியில் கலக்குகின்றார் மனுஷன் அந்த நூடுல்ஸ் தலையுடன் எண்ட்ரி ஆகும் போது காமெடி தான்.

விளையாட்டு பிள்ளைனு நினைச்ச வெங்கட் பிரபு திரைக்கதைய கொஞ்சம் கூட பிழை செய்யாமல் நகர்த்துகின்றார். அளவான தேவையான காட்சிகள் மட்டுமே கேரக்டர்களுக்கு. சபாஷ்.

யுவனின் பாட்டுகள் ஏற்கனவே கலக்கிவிட்டதால் பின்னனி இசையிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கார். அந்த தீம் மியுசிக் சான்ஸே இல்லை ராக்க்கிங்.

படம் கொஞ்சம் நீளம் தான் 2 மணி 40 நிமிசம் கிட்ட ஓடுது. ஆனாலும் போர் இல்லை.

ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் சென்சாரில் சிக்கும்னு தெரிஞ்சே வச்சிருக்காங்க. அதிலும் கடைசியார் தல யின் வாய் உச்சரிப்பு என்ன சொல்றார்னு தெளிவா க்ளோசப்ல காட்டுறாங்க. என்ன பன்றது கெட்டவன் கேரக்டருக்கு சரிதான்.

அஜித் கொஞ்சம் சிரமப்பட்டு நடிச்சிருக்கார்.இருக்காதா டான்ஸ்லாம் ஆடியிருக்கார் :)  தலையின் 50 வது படம் தல தீபாவளி போல தான்.

Tuesday, June 28, 2011

மெய்யா? பொய்யா?

காதல் மெய்யா? பொய்யா?
மெய் தான் ...

மெய் என்னும் உடல் கொஞ்சம்
உறங்கி எழ தேவைப்படும்
நிழல் தான் காதல்.

நீ பேசி விட்டு சென்ற வார்த்தைகள் 
உன்னைக் கொல்லுமா தினம்?
புரியவில்லை எப்படி என்று?

நீ பேசிய கனிமொழி இன்னுமும்
காதோரம் கேட்பதிலே 
உறக்கம் தொலைக்கின்றன் 
என் இரவுகள்

மெய்யிலே திளைத்த நம் காதல்
மெய்யோடு மெய் மறந்து நின்றதெப்படி?

வாய் வார்த்தைகள் கூட 
வாக்கு என்று வாழும் எனக்கு
உன் பொய் வார்த்தைகள் 
மெய் என்று புரியாமல் போனதே....

எத்தனை நடிப்புகள்
எத்தனை ஏமாற்று வித்தைகள்

நேற்று அல்ல இன்றல்ல 
எத்தனை நாட்கள் என்பதை 
எழுத நாள் காட்டி கூட கிடைக்காதே...

உன் மீது கோபம் வந்தாலும்
என் மீதே பழி தீர்க்கிறேன்

திருப்பி தந்த பரிசை எதிர்பார்க்கவில்லை
என்றோ சொன்ன வார்த்தை கூட 
உனக்கு ஞாபகமில்லையா?

பொய்களில் திளைக்கும்
பெண்களின் காதல் 
மெய்யோடு போய்விடுகிறது.

காதல் மெய்யில் திளைக்கும் பொய்யே
ஆதலால் காதல் செய்யாதீர் 


Friday, June 03, 2011

சூப்பர் ஸ்டார் என்ன செய்கின்றார்

கடந்த ஒரு மாத காலமாகவே உடல் நலமில்லாமல் இருக்கும் தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் திரு ரஜினிகாந்த அவர்கள் எப்படி இருக்கின்றார் என்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிராகவே உள்ளது.

சிங்கப்பூரில் அளிக்கப்பட்ட சிகிச்சையினால் தற்பொழுது நல்ல உடல் நல முன்னேற்றத்துடன் காணப்படுகின்றார் அதனால் அவரது கிட்னியின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.எனவே டயாலஸிஸ் நிற்த்தப்பட்டுள்ளது. அவரை சந்திக்க உடன் சென்ற உறவினர்கள் தவிர பிறருக்கு அனுமதி இல்லை.

மேலும் உடல் நலம் முழுவதும் சகஜ நிலைக்கு திரும்ப மேலதிக சிகிச்சைக்காக திரு ரஜினிகாந்த அவர்கள் ஒரு மாத காலம் அந்த மருத்துவமனையில் இருக்கப்போகின்றார். அவருடைய குடும்பதார்கள் ஒரு தற்போது இருந்து வரும் ஹோட்டலை காலி செய்து மருத்துவமனையின் எதிர் புறத்தில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருக்கின்றார்கள் என்று தெரிகிறது.

சூப்பர்ஸ்டார் முழுவதும் குணமாகி நலமுடன் நாடு திரும்ப இறைவனை பிரார்த்திப்போம்.

Thursday, May 05, 2011

எங்கேயும் காதல்

நடிப்பு : ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோத்வானி, சுமன், ராஜூ சுந்தரம்
இசை : ஹாரீஸ்
இயக்கம் : பிரபு தேவா

இந்தியாவில் இருக்கும் மேற்கத்திய கலாச்சாரம் பிடித்த ஆணும் , பாரீஸீல் இருக்கும் இந்திய கலாச்சாரம் பிடிக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல்.

கமல்(ரவி) இந்திய பிசினஸ் மேன் வருடம் முழுவதும் உழைத்து ஒரு மாதம் பிரான்ஸில் ரெஸ்ட் எடுத்து அனுபவிக்க வரும் நபர். பெண் நண்பிகள் ஏராளம் காதல்னா வெறுப்பு. கயல் விழி(ஹன்சிஹா) பாரீஸீல் வளரும் இளம்பெண் இந்திய கலாச்சாரம் பிடிக்கும் ஒருவனுக்கு ஒருத்தி . கமலை கண்டவுடன் காதல் வருகிறது. கமலுக்கு அவருடைய ஒரு கேர்ள்பிரண்டால் ஏற்படும் ஆபத்தை தடுக்க முயற்சிக்கிறார். அங்கே சினேகம் ஆகும் நட்பு. ஹன்சிகாவுக்கு காதல் பொங்கி வழிய இவரே காதல்லாம் சுத்த ஹம்பக்னு பீட்டர் விட்டு கிளம்புகிறார் இந்தியாவுக்கு மீண்டும் பார்ட்டியில் சந்திக்கும் ஹன்சிகா தனக்கு பாய்பிரண்டுகள் நிறைய இருப்பது போல் காட்டி ரவியை பொறாமை பட வைக்கிறார். கடைசியில் பொய் என்று தெரிந்து விலகுகிறார். காதல் கை கூடியதா????

ரவி நல்லா டான்ஸ் ஆடுகிறார் என்ஞ்சாய் செய்கிறார். ஆனாலும் முகத்தில் ஒரு டல். கொடுக்கப்பட்ட வேலையை கரெக்ட்டா முடிக்கிறார்.

ஹன்சிகா அழகா இருக்கிறார். மாப்பிள்ளை படத்தைவிட செம க்யூட். ஆனாலும் ஏதோ வெள்ளைக்கார பெண் போன்ற தோற்றம் இருக்கிறது. முந்தைய படத்தைவிட இதில் நடிப்பு இன்னும் பெட்டர்.காதலிப்பதும் ஏமாறுவதும் நல்லாத்தான் இருக்கு. இவரை வச்சு கொஞ்சம் காமெடி பரவாயில்லை.

ரவியின் நண்பராக சில காட்சிகளில் தலைகாட்டும் ராஜூ சுந்தரம் சிரிப்பே வரலை சார்.

ஹன்சிகாவின் அப்பாவாக பிரைவேட் டிடெக்டிவ்வாக சுமன் ஏதோ வந்து போகிறார்.

படம் முழுவது எல்லா காட்சிகளிலும் ரவி, ஹன்சிகா அல்லது இருவரில் ஒருவர் கட்டாயம் உள்ளார்,

பிரபு தேவா எங்கேயும் காதல் படத்துக்கும் கொஞ்சம் கதை சொல்லவும் வருகிறார்.

படம் ரெம்ப சின்ன படம் 2 மணி நேரம் கூட இல்லை.

பாரீஸையும் இளம் யுவதிகளையும் அழகாக படம் பிடித்துள்ளனர், நல்ல கேமரா

ஹாரீஸ் இசையில் பாடல்கள் ஓக்கே பின்னனி இசை குறிப்பிடதகுந்தபடி இல்லை.

முழுக்க முழுக்க பாரீஸ் என்பதால் இருவரை மட்டும் வைத்து படத்தை முடித்துள்ளார். ஆனாலும் ஏதோ நாடகம் போலே போகிறது. பாடல்களும் அடிக்கடி வரும் தோற்றம் உள்ளது.

ஏதோ 90களின் ஹிந்தி படங்களை போல இருக்கிறது அதிலும் கடைசி க்ளைமாக்ஸ் அச்சு அசல் ஹிந்தி டைப். கொஞ்சம் கூட பொருந்தாத க்ளைமாக்ஸ் வேற யோசனையே இல்லையோ

பாடல்கள், பாரீஸ் அப்புறம் ஹன்சிகாவுக்காக பாக்கலாம்.

எங்கேயும் காதல் - ஏமாற்றம்

Tuesday, April 12, 2011

பண நாயகம்

தமிழகத்தில் தேர்தல் திருவிழா என்றாலே பழைய காலங்களில் வீதிக்கு வீதி சுவர்களை ஆக்கிரமிக்கும் சின்னங்களும், ஒவ்வொரு பகுதியில் கிளைச்செயலாளர்கள் வெள்ளையும் சொள்ளையுமாக 10-15 பேரோடு ஓட்டர் லிஸ்ட்டை எடுத்துக்கொண்டு அலைவார்கள். இது எல்லாம் தி.மு க்கு முந்திய காலம் அது என்ன ராசா தி.மு னு கேக்கலாம். வேற ஒன்னுமில்லை திருமங்கலம் தேர்தலுக்கு முந்தின காலம். திருமங்கலம் தேர்தல் தமிழக தேர்தல் வரலாற்றில் பணநாயகத்தை காட்டியது.

தி.மு காலம் முன்பு வரை தேர்தல் என்றால் கட்சி உறுப்பிணர்களுக்கு மட்டுமே பணப்புழக்கம் ப்ரியானிலாம் பழக்கம். தி.மு வில் முதல் முறையாக வாக்காளர்கள் பக்கா கவனிப்பிற்கு உள்ளானார்கள். வேளா வேளைக்கு சோறு வீதி வீதிக்கு பந்தல் வச்சு கறிச்சோறும் சாராயமும் பரிமாறப்பட்டதாய் கேள்வி. ஓட்டு இருக்கும் வீட்டிற்கு தலை எண்ணிக்கைக்கு ஏற்ப பக்காவாக பணம் சொளையா கெடைச்சதாகவும் கேள்வி. வீடு பூட்டியிருந்தாலும் கவர் உள்ளே விழுந்தது.

ஆங்... இந்த தேர்தலில் கூட இன்றைய காலையில் ஒரு செய்தி வீட்டில் ஆள் இல்லாத போதும் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட கவரில் தலைக்கு 500 வச்சு சொருகப்பட்டிருந்ததாய் கேட்டேன். ம்ம்ம்ம் என்ன ஒரு கவனிப்பு. தொகுதியில் குறைந்தது 1 லட்சம் ஓட்டுகளாவது இருக்கும் 1 ஓட்டுக்கு 500 என்றால் 5 கோடி அம்மாடியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இலவசங்கள் மனிதனை சோம்பேறி ஆக்கிவிடும், நமக்கு முன் பின் தெரியாதவர் பெரும் பாலும் உதவி புரிகையில் நம்மிடம் இருந்து பலனை எதிர்பார்ப்பர். ஒரு நாள் கூத்திறு பல கோடிகளை இறைக்கும் வேட்பாளர்கள் நம்ம வரிப்பணத்தை எப்படி லவட்டுவார்கள்.

இதில் ஆளும்/எதிர் கட்சி பாகுபாடு இல்லை வசதி உள்ளவன் அள்ளி வீசுறான்..

ஓட்டுப்போட்டு உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்... யாரையுமே பிடிக்கலையா ‘ஓ’ போடுங்க தப்பு செய்தவங்களுக்கு சுளீர்னு உறைக்கும். கடமையை செய்ய தவறாதீர் பணத்திற்காக விலை போகாதீர் உங்களுக்கு இனாம் கொடுத்து பிச்சைக்காரனைப் போல மாற்றும் இந்த அவலம் நமக்கு தேவையில்லை. சிறந்த குடிமகனாகி நாட்டிற்கும் உங்கள் குழந்தைகளிற்கும் முன் உதாரணமாகுங்கள்.

தவறான பாதையை காட்டி விடாதீர்கள் வருங்கால சமுதாயத்திற்கு விரலில் மை இடும் முன்னே உங்கள் மீது கறை படிய விடாதீர்.

மையிட்ட கையும் சுத்தமாகிவிடும் ஆனால் உங்கள் மன சாட்சி....?

உழைத்து கிடைக்காத காசு பிச்சைக்கு சமம்...

பணநாயகம் ஒழிக , பார் போற்றும் தமிழனாய் தலை நிமிர்வோம்.

தமிழன் என்றோர் இனம் உண்டு தனியே அவர்கொரு குணம் உண்டு.

வாழ்க இந்தியா வளர்க நம் ஜனநாயகம்

பணநாயகம் அழித்து சனநாயகம் மீண்டும் தலைக்க குறைந்த பட்சம் ஓ வாச்சும் போடுங்க.

Friday, February 11, 2011

காதல்


தியானம் சென்றால்
மனம் ஒரு முகம் ஆகுமாம்
காதலித்து பாருங்கள்
ஒரு முகமே மனம் எங்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இன்னும் ஞாபகம் இருக்கிறது
அந்த மாலை நேரம்
ஓர் ஆண்டிற்குப் பிறகான சந்திப்பு

வந்தவுடன் கண் மூட சொன்னேன்
எரிப்பது போல் பார்த்துவிட்டு மூடினாய்
பரீட்சயமான உன் கரங்களை பற்றுகிறேன்
வெட்கத்தில் இன்னும் சிவக்கிறது உள்ளங்கை

உனக்கான என் முதல் பரிசாய்
உன் விரல்களில் நுழைக்கும் தருணம்
கண்களை திறக்க சொல்கின்றேன்

கையில் இருந்த வைரத்தை விட
உன் கண்ணில் ஒளி அதிகமடி
முதன் முதலாய் உனக்கு என்று தேடியது
உன்னிடம் தோன்றுத்தான் போனது

நானும் தோற்றுத்தான் போனேன்
எதை உனக்கு அளிப்பது என்று
தடுமாறிப்போனேன்

உன் முத்தங்களை விட
இந்த கல் என்ன பெரிதா?
கண் மூடச்சொல்லிவிட்டாய்?
தடுமாறாமல் கேட்டாய்

Wednesday, January 26, 2011

அகமும் புறமுமாய் நீ-5

இரவு சரியாக 11 மணிக்கு எஸ்.எம்.எஸ் பேசலாமா? என்று அவளிடம்

நானும் பேசலாமே என்று மறுமொழியிட அப்பொழுதுதான் அந்த உலக அதிசயம் நடந்தது அவளே அழைத்தால்.

ஆமா ஏதோ கவிதை சொன்னீங்களே என்னது?

இல்லை அது என்னது உனக்காக எழுதியது

இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை

ஒருமையில் வார்த்தைகள் விழ இது நடப்பது காபி ஷாப் மீட்டீங் முடிஞ்சு சரியா ஒரு மாதம் கழித்து. காபி ஷாபில் நடந்தது....

நீங்க என்ன லவ் பண்ணுறீங்களா?

முதல் கேள்வியிலே போட்டுத்தாக்கினாள் நான் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து கேள்விகள் தொடர

முதல் கேள்வி தொடங்கி கடைசி வரை ஆமாம் போட்டு வைத்தேன்

பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே இருந்தாள்

நீங்க என்னை கல்யாணம் செய்யனும்னா நிறைய இழக்கனுமே? கொக்கி போட்டாள்

என்ன என்பது போல பார்த்தேன்?

இப்பொழுது வேண்டாம் பயந்துடுவீங்க பிறகு பேசலாம் அதைப்பற்றி என்றவள் உடனே கிளம்பி சென்றாள்.

சில பல சந்திப்புகளில் எங்கள் காதல் சந்திப்புகளில் கூட நிற்காத தொடர்வண்டியாய் சென்றது.

அவளது படிப்பும் முடியும் நேரம்.

அன்னைக்கு காபிஷாபில் சொன்னது ஞாபகம் இருக்கா?

என்ன டி?

நீங்க நிறைய விட்டுக்கொடுக்கனும்னு அய்யா மறந்துட்டீங்களா?

ஓ ஓ அதுவா ....

ம்....... எங்க வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க எனக்கு பதில் சொல்ல கூட தைரியம் வரமாட்டேங்குது,

நிறுத்தினாள் அவளே தொடரட்டும் என்று காத்திருந்தேன்

இருக்கீங்களா?

சொல்லுடா? இது நான்

இப்ப என்ன பண்ணனும் இதுவும் நான்

நீங்க உங்க வீட்ல பேசி சம்மதம் வாங்குகங்க எங்க வீட்ல பொண்ணு கேளுங்க

ஓக்கே என் சைட் நான் சரி பண்ணுறேன் உன் சைட் நீ மட்டும் தான் முடியும் நான் முயற்சி செய்து அவமானப்பட்டா என் வீட்ல என்னால ஒன்னும் செய்ய முடியாது

அப்ப என்னை மறந்துடுங்க என்றாள் வேகமாக.

என்ன பொண்ணுங்களோ ஒரு ஆண் ஒரு பெண்ணை தூக்கி எறிய பல நாட்கள் ஆகின்றது இப்படி பழகியவனை தூக்கி எறியும் வார்த்தை சில நொடியில் தோன்றியதில் நொறுங்கியவன் உடனே கால் கட் செய்துவிட்டேன்.

ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள் 50 கிட்ட இருக்கும் எடுக்கவே இல்லை. அந்த நேரத்தில் டொய்ங் டொய்ங் என்ற சத்தத்துடன் குறுஞ்செய்தி ஒன்று வந்து விழுந்தது அவள் தான் அனுப்பியிருந்தாள்

எங்களுடைய பெர்சனல் கொஞ்சல்களில் ஆரம்பித்து ஒரு காதலன் வாய் திறக்க கூட முடியாமல் பாச மழை பொழிந்திருந்தாள் நானே போன் செய்து பேசும் பொழுது இரவு 2.30 ஆகியிருந்தது



Tuesday, January 18, 2011

அவளுக்கு ஒரு கடிதம்

கண்ணுக்குள் வந்து செல்லும்
கானல் நீராய் நீ இருக்க

தொட்டனைத்து நீ இட்ட சபதங்கள்
சம்பிரதாய பேச்சாக

ஏன் என்று காரணம் சொல்லக்கூட
விரும்பாமல் நீ இருக்க

உனக்கென வாழ்வேன் இல்லையேல்
என்றவளை காணவில்லை

எங்கேயும் தேடிப்பார்த்தேன்
என்னில் ஏதும் தவறா என்று

மென் தவறுகளின்றி வேறொன்றும் இல்லை
ஊடல் இல்லா காதல் எங்கேனும் உண்டா?

வாய்க்கு வந்த காரணங்களை வசை பாடிய
உன்னைக்கண்டு அழுவதா சிரிப்பதா

நித்தம் நித்தம் பேசிய தொலைபேசி கூட
கேலியாய் எனை பார்க்குதடி

மறப்பதற்கு மனது ஒன்றும் பட்ட மரம் அல்ல
உன்னால் நான் நிற்கின்றேன் கல் பட்ட மரமாய்

ஊரறிய உனக்கு நான் எனக்கு நீ என தெரியும்
உதறி தள்ளி ஒய்யாரமாய் நீ இருக்கிறாய்

கசங்கிய சேலையும் கால் கொலுசுமாய் எதிர்கால 
பேச்சுக்கள் கூட கசங்கி போனதடி

உனக்கு வேண்டியவற்றை நான் எப்பொழுதும் மறுத்ததில்லை
என்னிடமே கேட்டிருக்கலாமே?

விருப்பமில்லை விருப்பமில்லை என்று அலற்றி 
காரியம் சாதித்துக்கொண்டாய் 

கனவோடு பேசிய பேச்சுக்கள் நித்தம்
தூக்கத்தை கெடுக்கின்றன

ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் கூட 
நிம்மதியாய் நான் இருந்திருப்பேன்

உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டாய்
எனையும் கொன்றுவிட்டுச் சென்றிருக்கலாமே

கல்லால் ஆனதா உனது இதயம் 
கண்ணீரோடு கானல் ஆகின்றேன்