Tuesday, August 30, 2011

மங்காத்தா - விமர்சனம்

மும்பை தாராவியின் பெரிய தலை செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள் த்ரிஷா. ஐபிஎல் பைனல் மேட்ச்சில் பெரிய பணம் 500 கோடி கறுப்பு பணம்(ஆனா எல்லாம் டாலரா தான் இருந்துச்சு :) ) சூதாட்டத்தில் ஈடுபடப்போவது தெரிந்த செட்டியார் மும்பை டான் களிடம் பேசி அந்த பணத்தை கை மாத்தி விடும் பொறுப்பை ஏற்கிறார்.

இது தெரிந்து அவரிடம் வேலை பார்க்கும் வேலையாள் , தாராவி எஸ். ஐ  கணேஷ், தாராவியில் இருக்கும் பார் ஓனர் மகத் , அவருடைய ஐஐடி கோல்மெடலிஸ்ட் நண்பர் ப்ரேம்(ப்ரேம்ஜி) எல்லோரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க.

அதே பணத்தை கொள்ளையடிக்க அவர்களுடன் நுழைகிறார் தல , அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வினாயக், செட்டியார் பெண்ணை கரெக்ட் செய்து செட்டியாரிடமும் பழகுகிறார்.

சில பல கோக்கு மாக்குகளை செய்து பணத்தை கொள்ளையிடுகிறது இந்த கேங்க். கேங்கிலே பணத்தை மொத்தமாக அடிக்க தல பிளான் போடுகின்றார். பணத்தை தேடி செட்டியார் கேங்க் அலைந்து நூல் பிடித்து  ஆட்களை நெருங்கினால் பணம் அங்கு இல்லை அதை தனியா சுட்டு ப்ரேம்ஜி , மகத்(பேர் தெரியல) லட்சுமிராய் கம்பி நீட்டுகின்றனர்.

பணத்தையும் ஆட்களையும் தேடி இறுதி கட்ட துரத்தல்கள். சூதாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை போலீஸ் அதிகாரியாக அர்ஜூன். அவரும் பணத்தையும் ஆட்களையும் பிடிக்க அலைகின்றார்.

இறுதியில் பணம் கைபற்ற பட்டதா? யார் கைபற்றினார்கள்? செட்டியார்?அர்ஜீன், ப்ரேம்ஜி கேங், தல ... யாருக்கு பணம்

முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தலைக்கு. அந்த நரை முடியிலும் ஹேண்ட்சம் ஆக இருக்கின்றார் தல. அவர் செய்யும் ஹ்யூமர் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. தல மொத்ததில் நெகடிவ் காரெக்டரில் மின்னுகின்றார்.

த்ரிஷா ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே. ஹீரோயின்னு சொல்ல முடியாது அவருடைய கேரக்டருக்கு ஏற்ற காட்சிகள் மட்டுமே படத்தில் என்பது நல்ல விசயமே தேவையில்லாத செண்டிமெண்ட் இல்லாமல் இருக்கின்றது,

அஞ்சலி ஒரு பாட்டுக்கும், லெஷ்மி ராய் 2 பாட்டுக்கும் இருக்கின்றனர்.அஞ்சலி அவ்வளவு அழகு.

ஆக்சன்கிங் அர்ஜீன் வழக்கம் போல போலீஸ் அதிகாரி ஆனா சின்ன ட்வீஸ் இருக்கு க்ளைமாக்ஸ்ல.

வாடா பின்லேடா பாட்டு நல்லா இருக்கு படமாக்கிய விதம். விளையாடு மங்காத்தா பாட்டும் சூப்பர்.

ப்ரேம்ஜி காமெடியில் கலக்குகின்றார் மனுஷன் அந்த நூடுல்ஸ் தலையுடன் எண்ட்ரி ஆகும் போது காமெடி தான்.

விளையாட்டு பிள்ளைனு நினைச்ச வெங்கட் பிரபு திரைக்கதைய கொஞ்சம் கூட பிழை செய்யாமல் நகர்த்துகின்றார். அளவான தேவையான காட்சிகள் மட்டுமே கேரக்டர்களுக்கு. சபாஷ்.

யுவனின் பாட்டுகள் ஏற்கனவே கலக்கிவிட்டதால் பின்னனி இசையிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கார். அந்த தீம் மியுசிக் சான்ஸே இல்லை ராக்க்கிங்.

படம் கொஞ்சம் நீளம் தான் 2 மணி 40 நிமிசம் கிட்ட ஓடுது. ஆனாலும் போர் இல்லை.

ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் சென்சாரில் சிக்கும்னு தெரிஞ்சே வச்சிருக்காங்க. அதிலும் கடைசியார் தல யின் வாய் உச்சரிப்பு என்ன சொல்றார்னு தெளிவா க்ளோசப்ல காட்டுறாங்க. என்ன பன்றது கெட்டவன் கேரக்டருக்கு சரிதான்.

அஜித் கொஞ்சம் சிரமப்பட்டு நடிச்சிருக்கார்.இருக்காதா டான்ஸ்லாம் ஆடியிருக்கார் :)  தலையின் 50 வது படம் தல தீபாவளி போல தான்.