Friday, November 06, 2009

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-5

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-1
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-2
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-3
பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-4


சென்னை அசோக் நகரில் இருக்கும் விஸ்வாஸ் அப்பார்ட்மெண்ட் காலையிலே காக்கிகளின் கூடாரமாக இருந்தது. கான்ஸ்டபிள்களை விட அதிகாரிகளே அதிகம் தென்பட்டனர். பிரச்சினையின் வீரியத்தை உணர்த்திக்கொண்டிருந்தன காக்கிகளின் வாக்கிடாக்கிகள் , செல்லிடப்பேசிகள். எல்லோருக்கும் கவலை தோய்ந்த முகம் நிஜ வருத்ததை காட்டியது.

”ஏழாவது மாடியில் இரண்டாவது வீடு சார்” அயூப், ராமச்சந்திரனுக்கு வழிகாட்டினார்

பேசிக்கொண்டே மாடி ஏறினர் லிப்டில்

“எப்படி நடந்திருக்கு அயூப் , ஏதும் மோட்டிவேஷன் இருக்கா “

“மோட்டிவேஷன் ஏதும் இல்லை சார், ரெம்ப க்ருசியலா இருக்கு பாக்கவே”

”பேமிலி சிட்சுவேசன் என்ன”

“அவரு ஒய்ஃப் நேத்து நைட்டு தான் திருச்சிக்கு போயிருக்காங்க இவரு ஏத்திவிட்டுருக்கார் ராக்போர்ட் ல , 2 வயசுல ஒரு பையன் இருக்கான்”

”இன்பார்ம் செய்துட்டீங்களா..”

“ம் ஆச்சு சார்”

“இவரோட கரெண்ட் புராஜெக்ட் என்ன?”

பேசிக்கொண்டே வீட்டை அடைந்தனர் , ஃபாரன்சிக் ஆட்கள் ஒவ்வொன்றாக ரசாயணத்தால் ஒத்தி எடுத்துக்கொண்டிருந்தனர்.

பிணமாகியிருந்த ஆனந்தை சுற்றி கோடு வரைந்து காத்திருந்தனர் காவலர்கள். வீட்டின் நுழைவாயில் அருகே கிடந்தார் ஆனந்த் ஐபிஎஸ். சூழ்நிலைகளை சிறிது நேரம் அவதானித்த ராமச்சந்திரன். அங்கிருந்து கிளம்ப அயூப்பிடம் சமிக்கை செய்தார்.

“அந்த மினிஸ்டர் கேஸில் என் க்ரூப்ல தான் இருந்தார்”

ஆச்சரியங்களுடன் புருவத்தை வளைத்து பார்த்தார் ராமச்சந்திரன்.

“குற்றவாளியை நெருங்கி கோட்டை விட்டிருக்கோம் அயூப்”

அயூப் தலையாட்டி ஆமோதித்தார்

“அவரோட லாஸ்ட் மினிட் மூவ்மெண்ட்லாம் கலெக்ட் பண்ணுங்க ஏதும் கிடைக்குதானு பார்ப்போம்”

“யெஸ் சார்”

“டேக்கேர் அயூப் “ தோளில் தட்டி விடைபெற்றார் ராமச்சந்திரன்

தன்னுடைய சகாக்களில் இருவரை அழைத்து

“பாய்ஸ் நாம அக்யூஸ்ட்டை நெருங்கி கோட்டை விட்டிருக்கோம், ஆனந்தோட லாஸ்ட் மொமண்ட்ஸ் கலெக்ட் செய்யுங்க, வில் மீட் இன் தி ஆபீஸ் ”

அருகில் இருக்கும் சிவாவின் வீட்டிற்கு விட்டான் வாகனத்தை.

“வாங்க அண்ணா, என்ன இந்நேரத்துல” நிர்மலா ஆச்சரியத்துடன் கேட்டாள்

“இல்லைம்மா , ஒரு கேஸ் டிபார்ட்மெண்ட்ல மர்டர் , விஸ்வாஸ் அபார்ட்மெண்ட்ல”

“அய்யோ” பதறினாள்

“சிவா இல்லையா”

“அவர் ஏதோ ஆபரேஷன் இருக்குனு நேத்து நைட் போனவர் இன்னும் வரல”

“சரிம்மா , நான் கெளம்புறேன் வந்தான்னா சொல்லிடு இல்லை வேணாம் நான் காண்டக்ட் பண்ணிக்கிறேன் , ஹாஸ்பிடல் தான் போறேன்”

விடைபெற்று கிளம்பினான் மருத்துவமனைக்கு.

பாரீஸில் உள்ள பொது மருத்துவமனையில் சாண்ட்ரோவை வெளியில் விட்டு விட்டு சென்றான்.

கேண்டீனில் சிவாவும், அயூப்பும் காபி ஆர்டர் செய்து காத்திருந்தனர்.

“என்னடா இந்நேரத்துல , போன் கூட செய்யாம வந்திருக்க ஆனந்த் மர்டருக்காக வந்தியா”

“ஹே வீட்டுக்கு போயிருந்தேன் நிம்மி சொன்னா, ஆனந்த் மர்டர் அதுக்குள்ள இங்க வந்திருச்சா”

“உங்களை விட நாங்க சார்ப் டா மச்சான்”

”ம் சரி சரி, மச்சான் ஆனந்த கொஞ்சம் இம்பார்ட்டண்ட் பெர்சன் என்னோட க்ரூப்ல, அவன் கொலையாளியை நெருங்கிட்டாப்ல தெரியுது அதான் நீ கொஞ்சம் ஹெல்ப் செய்யனும்”

“நான் நைட் டூட்டில இருக்கேன் இன்னும்30 மினிட்ஸ்ல டூட்டி முடிஞ்சுடும் , காலைல ம்ம்ம்ம்ம்ம் ராஜன் வருவார் அவர்கிட்ட நான் போன் பண்ணி சொல்லிடுறேன்”

“டேய் போஸ்ட்மர்டம் ரிப்போர்ட்டை விட உன்னோட ரிப்போர்ட் வேணும்னு சொல்றேன்”

யோசித்தான் சிவா,” மச்சான் நான் இப்ப ஹேண்டில் பண்ண சிக்கலாயிடும் ...”

“என்னோட கொலிக்ஸே என்ன சந்தேக பட ஆரம்பிச்சிடுவாங்க”

“நீ என்ன செய்வீயோ தெரியாது எனக்கு லாஸ்ட் மொமண்ட் டீட்டெய்ல்ஸ் வேணும்”

பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டிருந்தான் அயூப்

நமுட்டு சிரிப்புடன் அயூப் போவதை பார்த்தது இரண்டு விழிகள்...

தொடரும்...

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்