நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் நிறைய டிவிடி உருவாக்க மென்பொருட்கள் இருக்கின்றன. என்ன பார்மட் வீடியோ கொடுத்தாலும் அதை டிவிடியாக மாற்றிக்கொடுப்பவை கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும் தொழில் ரீதியாக என்று பார்த்தால் சில மென்பொருட்களே தேறும்.
1.அடோப் நிறுவனத்தின் என்கோர் டிவிடி(Encore) எனும் மென்பொருள்
2.சோனிக் நிறுவனத்தின் டிவிடி இட் (dvd it) மற்றும் scenario
3.சோனி நிறுவனத்தின் டிவிடி ஆர்க்கிடெக்ட்(dvd architect)
4.டிவிடி லேப் (dvd lab)
போன்றவைகள் முன்னிலை வகிக்கின்றன. இந்த வரிசையில் இல்லாத ஆனால் இவற்றிற்கு எல்லாம் முன்னோடியான ஒரு மென்பொருள் மூலமாக நாம் கற்றுக்கொள்ள போகிறோம்,அந்த மென்பொருளின் பெயர்
Spruce Maestro இந்த மென்பொருள் இப்பொழுது விற்பனையில் இல்லை அப்டேட் இல்லை ஏன் கம்பெணியே இல்லை. ஆமாம் இதனுடைய அருமை பெருமைகளை பார்த்த ஆப்பிள் நிறுவனம் இதை விலைக்கு வாங்கி விட்டது . கீழ்வரும் படத்தை பார்த்தாலே தெரியுமே எந்த காலத்து வெர்சன்னு.
ஓல்ட் ஸ் கோல்ட் எனும் பொன்மொழி இந்த மென்பொருளுக்கு பொருந்தும் மேலே சொன்ன 4 மென்பொருட்களும் இன்னும் இந்த மென்பொருளின் வசதிகளையும் உருவாக்கத்தையும் காப்பி அடித்து உருவாகிக்கொண்டிருக்கின்றன ஆனாலும் மேஸ்ட்ரோவின் இடத்தை பிடிக்க இயலவில்லை. இந்த மென்பொருள் வேண்டுவோர் எங்காவது தளங்களில் தேடி எடுத்துக்கொள்ளவும்.
இந்த தளத்தில் இருக்கலாம்
காப்பிரைட் பிரச்சினை எப்படினு தெரியல ஏன்னா கம்பெனியே இல்லை ஒருவேளை கையகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம் ஏதும் செய்யலாம்.
சரி இந்த மேஸ்ட்ரோவை கற்றுக்கொள்ளும் முன் நமக்கு சில விசயங்கள் தேவை மேஸ்ட்ரோ வெறும் டிவிடி ஆத்தரிங் மென்பொருள் மட்டுமே அதற்கு தேவையான வீடியோக்களை நாம் தனியாக உருவாக்க வேண்டும். எனவே அதற்கு தேவையான ஒரு எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு வீடியோ மாற்றியை நாம் படிக்கலாம்.
நமக்கு தேவையான மென்பொருட்கள்
1.ஸ்ப்ரூஸ் டிவிடி மேஸ்ட்ரோ பதிப்பு எண் 2.9
2.எடியஸ் தற்போதைய பதிப்பு எண் 5 அல்லது புரோகோடர் தற்போதைய பதிப்பு 3 அல்லது கார்பன் கோடர் பதிப்பு 3
3.போட்டோஷாப்
போட்டோஷாப்:
மெனுக்களை உருவாக்க பயன்படுத்த போகிறோம்
எடியஸ் (அ) புரொகோடர்:
வீடியோவை மாஸ்ட்ரோ மென்பொருளுக்கு ஏற்றவாரு மாற்ற பயன்படுத்த போகிறோம்
ஸ்ப்ரூஸ்:
மாற்றிய வீடியோவையும் , மெனுக்களையும் பயன்படுத்தி டிவிடி உருவாக்கம் செய்ய போகின்றோம்.
முதலில் படிக்க இருப்பது புரோகோடர்:
புரோகோடர் பற்றி சொல்லனும்னா இது க்ராஸ்வேலி(கெனாபஸ்) நிறுவணத்தின் தயாரிப்பு இதே நிறுவணத்தின் தயாரிப்பு தான் எடியஸ்.
புரோகோடருக்கும் , எடியஸ்க்கும் என்ன வித்தியாசம் என்றால்
புரோகோடர் ஒரு சக்திவாய்ந்த வீடியோ/ஆடியோ மாற்றி தொழில் ரீதியாக பயன்படுத்தலாம். பெரும்பாலான பார்மட்டுகளை இன்புட்டாக கொடுக்கலாம். அதே போல அவுட்புட்டாகவும் பெறலாம்,
எடியஸ் என்பது ஒரு தொழில்ரீதியிலான எடிட்டிங் மென்பொருள். நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது இல்லை. மற்ற மென்பொருள் கோடக்குகளை விட எடியஸின் கோடக்குகள் சக்திவாய்ந்தவை நல்ல அவுட்புட் கொடுக்க வல்லவை. இந்த எடியஸ் பற்றி படிக்கவே பெரிய தொடர் ஆகும் என்பதால் நாம் புரோகோடர் பற்றி மட்டும் பார்ப்போம். டைம் லைனில் வேலை செய்ய தெரிந்தவர்கள் எடியஸை பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருட்களை கொஞ்சம் சேகரித்து நிறுவிக்கங்க அடுத்தடுத்து வரும் பகுதிகளில் ஒவ்வொரு செய்முறையாக பார்ப்போம்.
கொஞ்சம் வீடியோக்களை பற்றிய முன்னுரை கொடுப்போமே...
வீடியோக்களில் நிறைய பார்மெட்டுகள் உள்ளன avi ஆரம்பித்து mkv வரை இருக்கின்றன.
raw video format என்று பார்த்தால் அது avi தான். இந்த avi யிலே நிறைய கோடக்குள் இருக்கின்றன. இதில் பொதுவானது மற்றும் நல்ல தரமானது என்றால் uncompressed avi format தான்.
ஆனால் இந்த பார்மட்டை நாம் டிவிடி ஆத்தரிங்கில் நேரடியாக பயன்படுத்த முடியாது எனவே ஆத்தரிங் மென்பொருள் ஏற்றுக்கொள்ளும் வகையில் வீடியோவை மாற்ற வேண்டும் .
பொதுவாக ஆத்தரிங்க் மென்பொருட்கள் ஏற்றுக்கொள்ளும் பார்மட்
mpeg2 , mpeg1 - for videos
pcm , ac3 , dts - for audios
முதலில் வீடியோவை பார்ப்போம்
raw avi யிலிருந்து எம்பெக் காக மாற்றும் பொழுது கோடக்குகளுக்கு தகுந்த அவுட்புட் கிடைக்கும். ஒரு காலத்தில் இதில் கோலோச்சியது Main concept codecs இந்த கோடக்குகள் தான் இன்றுவரை அடோப் ப்ரிமீயர் , சோனி வேகாஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இது சிறந்த கோடக் அல்ல என்பது என் கருத்து ஏனென்றால் வெளியீடு கொஞ்சம் டல்லா இருக்கும். ப்ரிமீயர் , வேகாஸ் இரண்டுமே ஒரே கோடக் என்பதால் வெளியீடு ஒரே தரத்தில் இருக்கும் என்பதை குறித்துக்கொள்க. ஆனாலும் அடோப்பிற்கு ஒரு அருமையான ப்ளக்கின் இருக்கு அது தான் சினிமா க்ராப்ட் என்கோடர்(CCE) விலை தான் கொஞ்சம் கண்ணைக்கட்டும் 2000 டாலர் . இதை காசு கொடுத்து வாங்குனா ஏதோ ஏமாந்த மாதிரி இருக்கும் ஆமா வெறும் 5 எம்பி கூட வராது இந்த மென்பொருள்.
இந்த மெயின்கான்சப்ட் கோடக்கை விட சிறந்தது கெனாபஸின் கோடக் எனவே எடியஸ்/புரோகோடர் அவுட் புட் அருமையாக இருக்கும்.
வீடியோவில் இரண்டு வகையான முறைகள் உள்ளன
1.ntsc
2.pal
நம்ம ஊரு பக்கம் டிவிடிக்கு ஏற்ற முறை ntsc , விசிடிக்கு ஏற்ற முறை pal.
டிவிடிக்கு தேவையான mpeg-2 வகை பற்றி பார்ப்போம்
mpeg2 களை இரண்டு வகையாக பிரிக்கலாம்
1.Program stream
2.Elementary stream
program stream file இன் விரிவுப்பெயர்(extension name) *.mpg (இதில் வீடியோவுடன் இனைந்த பகுதியாக ஆடியோவும் இருக்கும்)
elementary stream file இன் விரிவுப்பெயர் *.m2v,*.m1v இதில் வீடியோ தனியாக பிரிக்கப்பட்டு இருக்கும்.
நம்முடைய மேஸ்ட்ரோ இந்த elementary stream file களை மட்டுமே எடுக்கும். அதாவது *.m1v and *.m2v பைல்களை மட்டுமே வீடியோவில் ஏற்றுக்கொள்ளும்.
அடுத்து ஆடியோ
ஒரு டிவிடிக்கு தேவையான ஆடியோ வகைகள்
புரோகிராம் ஸ்ட்ரீம் என்றால் வீடியோவுடன் ஆடியோ இனைந்து வரும்
எலிமெண்டரி ஸ்ட்ரீம் என்றால் தனியாக உருவாக்க வேண்டும்
மேஸ்ட்ரோ ஏற்றுக்கொள்ளும் ஆடியோ பார்மட்டுகள்
1.*.ac3
2.*.wav(pcm wav)
3.*.dts
இந்த dts sound support இப்பதான் கொஞ்ச காலமாக என்கோரில் இருக்கு இன்னும் டிவிடி ஆர்க்கிடெக்டில் இல்லை.
ac3 - இதில் இரண்டு வகைகள்
1)2 channel ஸ்ட்ரியோ
2)5.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் இந்த வகை ஆடியோ பைல்கள் மிகவும் சிறிய கொள்ளவை எடுக்கும் என்பது சிறப்பானது ஒலியும் துல்லியமாக இருக்கும்.
wav - இதிலும் அதே இரண்டு வகை ஆனால் இது uncompressed என்பதால் இதன் அளவு மிகவும் அதிகம்.
dts - தியேட்டரில் பார்க்கும் எபெக்ட் ஏசி-3 யைவிட கொஞ்சம் பெட்டர், பைல் சைஸ் சிறியதே ஆனால் எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் dts யை ப்ளே செய்யும் வசதி இருப்பதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
சரி நாம் படிக்கபோவது எந்த பார்மெட்டுகளை பற்றினு பார்ப்போம்
1.*.m2v
2.*.ac3
அடுத்த பாடத்தில் புரோகோடர் வருகிறது Procoder யை தேடிப்பிடிங்க.....
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க பிடிக்கலைனாலும் கருத்து போடுங்க சந்தேகங்கள் இருப்பின் கேள்விகளும் கேக்கலாம்.
அருமையான தொடராக அமைய வாழ்த்துக்கள்.மென்பொருட்களின் விலை கண்ணைகட்டுவதால் முயற்ச்சிக்க ஏதுவாக இருக்காது.
ReplyDeleteஆரம்ப நாட்களில் மீடியா ஸ்டோடியா புரோ உபயோகித்தேன் பிறகு ஆர்வம் போய்விட்டது.
தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகவும் நன்றி குமார் அவர்களே.
ReplyDeleteஇந்த தொடரின் முடிவிலே இலவச வீடியோமாற்றி கொண்டு செயல்படுவது பற்றியும் சொல்ல முயற்சிக்கிறேன் தொழில் முறை உருவாக்கம் என்பதால் மென்பொருட்கள் கொஞ்சம் விலை அதிகமே.