இப்படி ஒரு போர்ட் மாட்டி ஒரு விற்பனை அங்காடி மொத்தம் ஐந்து தளங்கள் கொண்ட அந்த பேரங்காடியில் ஒவ்வொரு தளமாக மேலே செல்ல செல்ல மிகவும் சிறந்த தகுதிகளுடன் கணவன்கள் இருப்பார்கள் மேலும் மேலே சென்றுவிட்டால் மீண்டும் கீழே வந்து தேர்ந்தெடுக்க முடியாது மேலே மட்டுமே செல்ல முடியும்.
ஒரு நவநாகரீக மங்கை விஜயம் செய்தாள் கடைக்கு
கீழ்தளத்தில் அவளிடம் கட்டுப்பாடுகளை விளக்கி கூறினான் விற்பனையாளன்
ஒவ்வொரு தளத்திலும் அந்த தளத்தை பற்றிய குறிப்பு வெளியே வைக்கப்பட்டிருக்கும். குறிப்பை படித்துவிட்டு உள்ளே சென்றாள் அந்த தளத்தில் மட்டுமே நீங்கள் கட்டாயம் உங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முடியும் பிறதளங்களுக்குள் நுழைய முடியாது. மேலும் மேலே சென்று விட்டால் கீழே உள்ள தளங்களில் தேர்ந்தெடுக்க முடியாது.
சரி என்று தலையாட்டி கணவனை தேர்ந்தெடுக்க ஆயத்தமானாள் மங்கை.
1.முதல் மாடி - வெளியில் உள்ள குறிப்பு
இங்கே உள்ள ஆண்கள் வேலை கிடையாது வீட்டு வேலைகள் செய்வார்கள்.
வேணாம்னு நுழையாமல் அடுத்த மாடிக்கு ஏறினாள்
2.இரண்டாம் மாடி - குறிப்பு
இங்கே உள்ள ஆண்களுக்கு வேலை உண்டு ஆனால் வீட்டு வேலைகள் செய்ய மாட்டார்கள்
இது தேவையில்லைனு அடுத்த மாடிக்கு முன்னேறினாள்.
3 மூன்றாம் ஆம் மாடி - குறிப்பு
இங்கே உள்ள ஆண்கள் நல்ல உத்தியோகம் , நல்ல சம்பளம் , குழந்தைகளை கவணித்து கொள்வார்கள் ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லை.
அய்யோ இது நமக்கு ஆகாதுனு ந்கர்ந்தாள்
4 நான்காம் மாடி குறிப்பு
இங்கே உள்ள ஆண்கள் நல்ல வேலை , மிக அதிகமான சம்பளம், குழந்தைகளையும் கவனித்துக்கொள்வார்கள், கடவுள் நம்பிக்கை உண்டு, வீட்டு வேலைகளையும் செய்வார்கள் மற்றும் மனைவியை எதிர்த்து பேசமாட்டார்கள்.
இங்கே ஜெர்க்காகி நின்றாள் மங்கை இங்கேயே எடுத்துடுவோமேனு மனசு சொல்ல , நோ நோ இன்னும் ஒரு மாடி இருக்கு அங்க இதை விட பெஸ்ட் இருப்பாங்க தானே கீழே அப்படி தானே சொன்னாங்க சோ நாம அங்க போயி தேர்ந்தெடுக்கலாம். என்று நகர்ந்தாள் 5வது மாடிக்கு
5 ஐந்தாவது மாடி
வெறும் மொட்டை மாடி வெறும் டிஜிட்டல் குறிப்பு மட்டும் தொங்கி கிட்டு இருந்தது. நீங்கள் 10000004 வது ஆள் இந்த மாடிக்கு. நீங்கள் நிற்பதற்கு நேர் எதிரானா திசையிலே உங்களுக்கு வெளியேறும் பாதை உள்ளது. நீங்கள் செல்லலாம்
நீதி : பேராசை பெரும் நஷ்டம் , பெண்களின் ஆசைக்கு அளவில்லை(பெண்கள் கோபம் கொள்ள வேண்டாம்)
குறிப்பு : படத்திற்கும் செய்திக்கும் சம்ப்ந்தம் இல்லை.
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க , பிடிக்கலைனாலும் கருத்து சொல்லுங்க
hello unmailye miga arumaiyana pathyu sinthithu ezhitiyathu pola weldon
ReplyDeleteவாங்க தமிழ் இது சொந்த சரக்கல்ல முன்னர் எங்கோ எதிலோ படிச்சது என்னுடைய ப்ளாக்கிற்கு வருகைபுரிந்து கருத்துக்கள் தந்தமைக்கும் நன்றிகள்.
ReplyDelete