Sunday, November 08, 2009
அலைபேசியில் அன்பு முறிவு
கதறியழ தோன்றுகிறது
இந்த நிமிடம்
அலைபேசி அலறியதே
அபசகுணமென தோன்றியது
அன்பு முறிவை கூட
அழகாய் வெளிப்படுத்துகிறாய்
ஆறுதலின்றி ஆற்றுகிறேன்
என்னோடு நீ இல்லை
இனி எப்போதும் ’நாம்’ இல்லை
கண்ணோடும் கண்ணீர் இல்லை
கதறி அழ பெண்ணாய் இல்லை
எங்கே அழுதுவிடுவேனோ
எனக்கே தெரியவில்லை
மழை பொழிந்தால் கூட பரவாயில்லை
நனைந்து கொண்டே அழிக்கலாம்
உன் நினைவுகளை அல்ல
என் இயலாமையின் கண்ணீரை
நீ இன்றி நிழல் கூட இல்லை
நிஜம் எப்படி வாழப்போகிறது
வாழ்கையின் ஓட்டத்திலே
நீ ஒரு வழி அதன் மேல்
விழி வைத்து இன்னும்
இருக்கிறேன் விடியாதவனாய்
உதிர்த்தது உதடுகளென்றாலும்
வெடித்தது இதயமன்றோ
இனி எப்போதும் வைத்திடுவேன்
மௌனமாய் என் அலைபேசியை
அதன் சத்தம் இனி அபசகுணமே
ஓட்டளியுங்கள் பிடித்திருந்தால்
வகைகள்
Tamil Poem,
கவிதை,
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
அச்சோ ....கஷ்டமாயிருந்தாலும் கவிதை நல்லாருக்கு!
ReplyDeleteநன்றி அருணா அவர்களே. உங்கள் கருத்திற்கும் என் ப்ளாக்கிற்கு வருகை புரிந்தமைக்கும் நன்றிகள்.
ReplyDeleteஅருணா அவர்களுடைய வாக்கிற்கும் நன்றி
ReplyDeleteஒன்னும் சொல்ல வரலை மணி.... வலிக்கும் நிஜங்கள் வரிகளாய் வார்த்தைகள் அனைத்தும் வைரங்களாய்....இதுவும் ஒருநாள் மாறும்.
ReplyDeleteஇக்கவிதைக்கு கருத்திடுவதற்காக ப்ளாக்கிற்கு வந்தேன்.
தமிழிஸ்ஸில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.
ReplyDelete