Friday, November 13, 2009

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-6

பிரேத பரிசோதனை(autopsy ) - பகுதி-5


காலை 10 மணி அரசு பொது மருத்துவமனை

ஆன்ந்தின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அதனுடைய உடனடி முடிவை அயூப்பிடம் கொடுத்து விடைபெற்றிருந்தார்.

சிவா சொதப்பிட்டானே மனதிற்குள்ளே திட்டிதீர்த்தான் அயூப்.

வலது நுரையீரலில் ஒரு புல்லட் சொருகியதால் ரத்தத்தை வெளியேற்றாமல் நுரையில் உள்ளே சேமித்ததாலூம் , மியூக்கஸ்(சளி ) சீலியாவில்(நுரையீரலின் நுண்குழல்) மேலேறமுடியாமல் அடைத்துக்கொண்டதாலும் மூச்சு தினறல் ஏற்பட்டு மரணம். மேலும் இரண்டு புல்லட்டுகள் இடது தொடையில் மற்றும் முட்டியில்.

புல்லட்டின் அளவு 7.62 mm குறிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பட்டுள்ளது.

புல்லட்டின் அளவை பார்த்தவுடன் எம் 240 ரக தானியங்கி என்று தெளிவானது அயூப்க்கு.

இதற்கு முன் நடந்த அடிரா கொலையிலும் எம் 240 பி என்ற துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது நினைவுக்கு வந்தது.மூளை கணக்குகளை போட்டது.

பெசண்ட் நகர் பீச் அயூப்-சிவா

“சாரிடா மச்சான், என்னால அந்த கேஸ் அட்டன் பண்ண...”

இழுத்தவனை கையமர்த்தினான்.

“யாரோ நல்லா துப்பாக்கி பிரயோகம் செய்ய தெரிந்தவனாக இருக்கான் கட்டாயம் தீவிரவாதிகளின் வேலையாக இருக்கும் , எம் 240 தான் இதுலயும் கொலை செஞ்சிருக்கு இது எங்க டிபார்ட்மெண்ட்டில் இல்லாத ஆயுதம் கொஞ்சம் பழசுனாலும் ஆர்மில தான் இருக்கும்” சொல்லி பெருமூச்சு விட்டான்.

“ஆனந்த் டெட்பாடி எங்க இருக்கு”

“பேமிலிகிட்ட ஹேண்ட் ஓவர் செய்தாச்சு”

“ம்ம்ம்ம்ம்ம்”

”சரி விடு பாக்கலாம், சிக்கிடுவான், அவ்வளவு பெரிய அப்பார்ட்மெண்ட்ல எப்படி சத்தமில்லாம சுட்டானு தான் புரியல”

“ஏதாச்சும் சைலன்ஸர் பொருத்திருப்பான்...”

“ம் இருக்கலாம்”

சைலன்சர் தான் என்று மனதிற்குள் இருத்திக்கொண்டான் சிவா.

கலைந்து சென்றனர் அந்த ஞாயிறின் மாலைக்கு விடைகொடுத்து.

திங்கள் மதியம் அயூப்பின் இன்பாக்ஸில் எச்சரிக்கை ஒன்று வந்து அமர்ந்து ஹாய் சொல்லியது.

”לא מבין אותנו אחרת יהיה לך על גן עדן”

இந்த வாக்கியங்கள் மட்டுமே இருந்தன கூடவே ஒரு எம்240பி கன் மாடல் படம் ஒன்று.

ஏதோ ஸ்பாமாக இருக்கும் என்று நினைத்தவனுக்கு துப்பாக்கியின் மாடலை பார்த்தவுடன் உஷார் ஆனான். சைபர் க்ரைம்க்கு போன் போட்டான் அவனுடைய பேட்ச்மெட் ஸ்ரீதருக்கு.

அடுத்த அரை மணி நேரத்தில் எக்மோரில் உள்ள சைபர் க்ரைமில் இருந்தான் அயூப்.

”சென்னை ல இருந்து ப்ராக்ஸி யூஸ் பண்ணிருக்கான் , ப்ராக்ஸி டெல் அவிவ் யை காட்டுது , சென்னை ஐபியை புடிச்சு விசாரிக்க சொல்லிருக்கேன் இன்னும் 30 மினிட்ஸ்ல டீட்டெய்ல் கிடைச்சிடும் அயூப்”

“தேங்க்ஸ் ஸ்ரீ”

“என்ன எழுதியிருக்குனு சொல்ல முடியுமா?”

“எங்களை தொடர முயற்சிக்காதே , முயற்சித்தால் உனக்கு சொர்க்கத்தில் இடமுண்டு, ஹூப்ருல எழுதிருக்கு”

புருவம் உயர்த்தி ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான் அயூப் , ஏகப்பட்ட அடிராக்கள் இருப்பானுக போலனு மனதிற்கும் நினைத்துக்கொண்டான்.

ஸ்ரீதரின் சகா சல்யூட்டுடன் நுழைந்தான்

“சொல்லுங்க வில்லியம்”

“அண்ணா நகரில் இருக்கும் ஒரு ப்ரவுசிங் செண்டரோட ஐபி, ப்ரவுசிங்க் செண்டர சர்ச் பண்ண அண்ணாநகர் ஸ்டேசன் எஸ்.ஐ க்கு ஆர்டர் போட்டாச்சு சார், நம்ம டீம் ஒன்னும் கெளம்ப ரெடியா இருக்கோம் வித் யுவர் பெர்மிசன்..”

“கோ அகெட் வில்லியம், நானும் கெளம்பி வரேன். மீட் மிஸ்டர் அயூப் க்ரைம்ப்ராஞ் கமிஷனர்”

சம்பிரதாய கைகுலுக்கல் முடித்து கிளம்பினர் அண்ணா நகருக்கு.

மிகசாதரண ப்ரவுசிங் செண்டர் , பெரிய இன்ப்ராஸ்ட்ரெக்சர் இல்லை , சிசிடிவியும் இல்லை இதையெல்லம் பார்த்தவுடன் கோபமான ஸ்ரீதர்

“இவனுகளுக்கெல்லாம் எவன் லைசன்ஸ் கொடுத்தான் , எங்கய்யா ஓனர்”

“சார் இந்தாளு தான் ஓனர்” ஒரு 25 வயது சோடாபுட்டியை கை காட்டினார் கான்ஸ்டபிள்

பைய வெடவெடத்து போயிருந்தான்.

“லாக் புக் இருக்கா, என்ன சாப்ட்வேர் போட்டு எல்லா சிஸ்டமையும் கண்ட்ரோல் செய்யுறீங்க”

"லாக் புக் இருக்கு சார், Employee Computer Monitoring Software யூஸ் பண்றோம் சார்”

மெயில் டைமை பார்த்து லாக்புக்கில் பார்த்தான் சுதாகர் என்று ஆங்கிலத்தில் கையெழுத்திட்டிருந்தது பச்சை மையில் அதன் நேரே சிஸ்டம் நம்பர் 4 என்று குறிக்கப்பட்டிருந்தது வெறும் 10 நிமிட பயன்பாடு.

அந்த பெயரை சுட்டிக்காட்டி “யார் இது ரெகுலர் கஸ்டமரா”

“இல்லை சார் புதுசா இருந்தார் , ஐடி கேட்டேன் அவசரம்னு சொன்னார் ஆள் பாக்க ரெம்ப டீசண்டா பெரிய உத்தியோகத்தில் இருப்பவர் போல இருந்ததால விட்டுட்டேன், கண்ணாடி போட்டிருந்தார் சார் , லேசா காதோரங்களில் நரை இருந்தது சார்”

“ஆளைப்பார்த்தா அடையாளம் காட்டுவியா”

“ஸ்யர் சார்”

அதற்குள் சிஸ்டமினின் கேச்சை,ஹிஸ்டரியை தேடி பார்த்த காக்கிகள் ஏமாந்து போய் சர்வரை துழாவி எடுத்தன. ஈமெயில் ஐடி புதிது அன்று தான் உருவாக்கப்பட்டதற்கான சாட்சியாய் யாஹூவின் வரவேற்பு மெயில் இருந்தது.

சுதாகர் எஸ் பி என்று இன்சியல் வேற...

தொடரும்

பிடிச்சிருந்தால் ஓட்டு போடுங்க.

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்