கடவுள் பூமியை படைச்சு களைச்சுப்போயி இருந்தார். மக்களுடன் மக்களாகவே தங்கி இருந்தார். ஏதாச்சும் ‘பக்’ இருந்தா களையுறதுக்கு.
ஒரு நாள் ஒரு விவசாயி வந்தாரு ,
“சாமி நான் நாத்து நட்டுருக்கேன் கொஞ்சம் இன்னைக்கு மழை பெய்ய வச்சீனா நல்லா இருக்கும்” சொல்லிட்டு நின்னார்
“சரிப்பா பாக்கலாம்” கடவுள் சொன்னார்
இன்னொரு குயவன் வந்து
“மண் பாண்டம் செஞ்சு காய வச்சுருக்கேன் , மழை பெஞ்சு கெடுத்துட போகுது கொஞ்சம் மழை பெய்யாம வெயில் நல்லா அடிக்க வைச்சுப்பா” இப்படி ஒரு கோரிக்கை வைத்தார்
கடவுள் கொஞ்சம் திணறித்தான் போயிட்டார் ஒரே இடத்துல ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா வானிலை மாற்ற முடியாதே அதனால்.
இதே போல ஏட்டிக்குப்போட்டியாக பிரச்சினைகள் வந்தது கடவுளுக்கு ஆள் கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டாப்ல.
இந்த பயலுக கூட இருந்தா நம்மள கிண்டி கெழங்கெடுத்துடுவானுக. எங்கயாச்சும் போயி ஒக்காந்துகிடனும், யோசிச்சுப்பார்த்தாப்ல
இமய மலை உச்சியில போயி உக்கார்ந்த , ம்ஹூம் ஏறி வந்துடுவாங்க
சரி வானத்துல போயி உக்கார்ந்தா ம்ஹூம் அங்கயும் பறந்து வந்திருவாங்க.
கடலுக்குள்ள் போனாலும் வந்துருவாங்க ஒரே குழப்பமா இருக்கேனு ஆலோசனை கேக்க அந்த ஊரில் வயசான ஒருத்தர பாக்க போனாரு.
அந்த கிழவன் ரெம்ப சிம்பிளா ஒரு பதில் சொன்னாரு
“மனிதனின் ஆள் மனதில் ஒளிஞ்சுக்க” என்று சொன்னார்
கடவுள் சந்தேகத்துடன் பாக்க
“எவன் ஒருவன் தன்னை அறிகிறானோ அவன் என்றுமே உன்னை தொந்தரவு செய்ய மாட்டான். தனக்குள்ளே இருக்கும் கடவுளை அறியாதவனும் உன்னை தொந்தரவு செய்ய முடியாது”
அன்னைக்கு போயி ஒக்காந்தவருதேன் இன்னும் அங்கேயே இருக்கார் இறைவன்,
நன்றிகள்....நன்றாக உள்ளது...கடவுள அங்க இங்க தேடுபவர்கள்...உணர்ந்தவை....
ReplyDeleteகடவுள் கூட ஒளிந்து கொள்ள எண்ணியிருப்பார் என்பது...சூப்பர்ங்க...
நன்றி சரண்யா அவர்களே தங்களின் பின்னூட்டத்திற்கு.என்னுடைய வலைத்தளத்திற்கு வருகை புரிந்தமைக்கும்.
ReplyDelete