காலிங் பெல் தொடர்ச்சியாக அழைத்தது அதிகாலை தூக்கத்தில் இருந்த சிவா தூக்க கலக்கத்துடன் செல்லில் மணி பார்த்தான் காலை 5.27 காட்டியது. எவனா இருக்கு எவனா இருக்கும் இந்நேரத்துல.... மனதிற்குள் திட்டிக்கொண்டே கதவை நோக்கி அடியெடுத்து வைத்தான்.
கதவை எரிச்சலோடு திறந்தவனுக்கு ஆச்சரியம், அதிகாலை வேலையிலும் காக்கி யுனிபார்ம் உடன் நின்றிருந்தான் அயூப்.
“என்ன டா இந்நேரத்துல”
அவனது கேள்வியை கவனிக்காதவன் போல தன்னுடைய சகாக்களுக்கு உத்தரவு போட்டான்
“சர்ச் எவ்ரி திங் , டோன் டிஸ்டர்ப் கிட்ஸ் அண்ட் நிர்மலா”
கோபமடைந்த சிவா கத்தினான்
“வாட்ஸ் ஹெல் கோயிங்க் ஆன் ஹியர்”
“சாரி சிவா, யு ஆர் அண்டர் அரஸ்ட்”
“ஆர் யூ ஜோக்கிங் , ஒய்”
அயூப் முறைத்த முறைப்பில் சிவாக்கு சர்வம் அடங்கியது
“மினிஸ்டர் தில்லை , அடிரா , ஆனந்த் கொலைகளுக்காக உன்னை கைது பண்ணுறேன்”
பக்காவான ப்ளான் போட்டும் செய்த கொலைகளையும் அதை திசை திருப்ப முயற்சி செய்தவைகளையும் ஞாபகப்படுத்திக்கொண்டான்.
சரியா 6 மணிக்கு சிவாவை அள்ளிப்போட்டு சிபிசிஐடி நோக்கி சென்றது போலீஸ் வாகனம்.
“சிவா எதுக்காகனு சொல்லிடு டார்ச்சர் வேணாம்னு பாக்குறேன்”
“ “
“ஏன் இப்படி நடந்துகிட்ட”
“உன்னோட மூளை ஆராய்ச்சியை உண்மைனு நம்பி ஏமாந்தவன் நான் , ஆனா அது தான் எனக்கும் க்ளூ கிடைச்சது”
சிறிது நேரம் விட்டு தொடர்ந்தான்
“இறந்த மூளையின் செல்களை உயிர்ப்பிக்க முடியாது நீ செய்யுறதா சொன்னியே அந்த ஆராய்ச்சி கூட சாத்தியமே இல்லைனே நேற்று இரவு தான் தெரிஞ்சது”
சிவா ஏதும் பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.
”ஏன் இப்படி ப்ளான் செய்து என்னை ஏமாத்துன”
“யெஸ்..............” கத்தினான் சிவா
“எனக்கு பழிவாங்கனும்....”
ஆச்சரியத்துடன் பார்த்தான் அயூப்
“உன்னை இல்லை நேர்ம்மைக்கு எதிரா இருக்குற எல்லோரையும்”
மீண்டும் ஆச்சரியக்கோடுகள் அயூப் முகத்தில்
“ஒரு மர்டர தற்கொலைனு சொல்ல சொன்னான் அந்த மினிஸ்டர் அதுவும் என்னை துப்பாக்கி முனையில மிரட்டி, அவன் தான் அடிராவை காப்பாத்தினான்”
தொடர்ந்தான்
“அடிரா.... அவனை நீங்களே கோட்டை விட்டீங்க . அவனால் எத்தனை பொண்ணுங்க பாதிக்கப்பட்டிருக்காங்க தெரியுமா”
இவனோட வாக்குமூலம் ரெக்கார்ட் ஆக தொடங்கியது
“ Rohypnol டிரக் தெரியுமா இந்தியாவுல புழக்கத்துல விட்டதே அவன் தான், Rohypnol ஒன்னும் அபின் , கஞ்சா மாதிரி இல்லை . அதை பெண்களுக்கு கொடுத்து செக்ஸ் வச்சிக்கிட்டான், அந்த போதையின் விளைவு தெரியுமா?.....”
“போதை இருக்கும் வரை நடந்தவை ஞாபகத்தில் கொஞ்சம் கூட இருக்காது, அதை விடக்கொடுமை அந்த பொண்ணு கர்பம் தரிக்க மாட்டா , நிரந்தரமாக. எந்த ஒரு விட்னஸ்ஸூம் எடுக்க முடியாது”
கேட்ட அயூப்பும் , சகாக்களும் ஆடிப்போயினர்
”என்கிட்ட டிரீட்மெண்ட் க்கு வந்த அந்த ஏரியா பொண்ணுங்க எல்லாம் பெரிய இடத்து பொண்ணுங்க ஆனாலும் போதையில் சிக்கியதால் எதிர்காலம் இழந்து நிக்குறாங்க”
“என்ன செஞ்சீங்க....”
“ஆனந்த என்ன பண்ணினார் உன்னை?”
“ஆனந்த் கொஞ்சம் புத்திசாலி”
அமைதியாகினான் சிறிது நேரம்
“கரெக்ட்டா என்னை வாட்ச் செய்து நெருங்கிட்டான், அதனால அவன் கதையையும் முடிக்க வேண்டியதா போச்சு”
ஞாபகத்திற்கு வந்தவனாய் அயூப் “ கன் ஏது”
“ஹா ஹா ஹா (பலத்த சத்ததுடன்) சென்னைல கிடைக்காத பொருளா நல்லா தேடுங்க கட்டாயம் கிடைக்கும் ...”
வெறிபிடித்தவன் போல கத்தியவனை மயக்க ஊசி போட்டு ஆசுவாசப்படுத்தினார் மருத்துவர்.
பல நாள் விசாரனைக்குப்பின் சிவா பயங்கரமான மனநோயால் பிடிக்கப்பட்டிருப்பதாக டாக்டர் சர்ட்டிபிகேட் கொடுத்திருந்தார்.
சிவாவுக்கு குறைந்த தண்டனையே கிடைத்தது.
சிறைக்குள் இருந்தா சிவாவினுள் மீண்டும் சிங்கம் எட்டிப்பார்த்தது ஜெயிலரின் கொடுமைகளால்.
முற்றும்
No comments:
Post a Comment
நண்பர்களின் கருத்துக்கள்