Friday, November 06, 2009

காதலா ? காமமா?



உயிரோடு தோன்றுவது காதல்
உடலோடு தோன்றுவது காமம்
உயிரும் உடலும் கலப்பே வாழ்க்கை
காமம் பிரியா காதலை
கண்டதில்லை கண்ணோடு

முதல் பார்வையில் காதல்
முற்றிலும் காதலில்லை
முழுக்க முழுக்க காமம்

காதலுக்கும் காமத்திற்கும் இரண்டே வேறுபாடு
எழுத்துக்களில் மட்டுமே அதுவும்

மலர் போன்றவள் என்னவள் என்பர்
மலர் உடலா? உள்ளமா?
உடலால் மலராய் உள்ளத்தால் வேறு பட்டும்
உள்ளத்தால் மலராய் உள்ளத்தால் வேறு பட்டும்
உரக்க சொல்வீர் இவை இரண்டும் பெண்ணல்ல
ஆண்கள் பார்வையில் பெண் யார்?
அன்றலர்ந்த மலராய்
அருகிலும் அணைப்பிலும் இருப்பவள்

பூஜைக்கு மட்டும் மலர் பறிப்பது - காதல்
செடியைக்கண்ட போதெல்லாம் மலர் பறிப்பது - காமம்
எப்பொழுதும் எட்டி நின்று ரசிப்பது - இனக்கவர்ச்சி

என்னடா குழப்புகிறாய் என்கிறது ஒரு குரல்
காதலுக்கும் காமத்திற்கும் வேறு பாடு என்ன
அதட்டுகிறது ஒரு குரல்

மழைநீருக்கும் , கடல் நீருக்கும் உள்ள் வேறுபாடே
காமத்திற்கும் , காதலுக்கும் உள்ள வேறுபாடு
மழை எப்பொழுது வரும் எவ்வளவு நேரம் பொழியும் யார் அறிவார்?
ஆனால் நின்று விடும் திடிரென - அது தான் காமம்

கடல் நீர் என்றாவது வறண்டு விடுமா?
இல்லை ஓடி விடுமா - அது தான் காதல்

ஆனால் இரண்டுமே நீர் தான் கருத்தில் கொள்க

மழை இல்லாமல் கடல் இல்லை
கடல் இல்லாமல் மழை இல்லை
விஞ்ஞானம் சொல்கிறது.

அறிந்ததா வேறுபாடு
உங்கள் பதில் தான் எனக்கும்.

26 மார்ச் 2007 ல் எழுதியது

2 comments:

நண்பர்களின் கருத்துக்கள்