Saturday, December 05, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 6

இந்த பகுதியினுள் நாம் மேஸ்ட்ரோவை ஆரம்பிக்க போகின்றோம்.
மேஸ்ட்ரோவை திறந்த உடன் கீழ் காணும் திரை அமைப்பு காணப்படும்.

மேலே படத்தில் காணப்படும் திரை போல தோன்றும் இடது புறம் மேலே இருப்பது நாம் ஒரு புராஜக்டில் எத்தனை வீடியோ , மெனுக்கள் இணைத்திருக்கிறோம் என்பதை காட்டும். இங்கு movie1, menu1 போன்றவை காட்டப்படும் இவற்றின் பெயரை right click செய்து rename என்பதை தேர்வு செய்து மாற்றலாம். அதே போல அதிகமான movie, menu சேர்க்க right click மூவி ஏரியாவில் வைத்து அதில் தோன்றும் திரையில் add movie அதே போலே மெனுவிற்கும் சேர்க்கலாம்.

அதற்கு வலது புறத்திலே இருப்பது connection window இது நாம் சேர்த்துள்ள மெனு மற்றும் வீடியோக்களை ஒருங்கினைக்க பயன்படுகிறது

கீழே இடது ஓரத்தில் இருப்பது compile , result window இது கம்பைல் செய்யும் போது நடைபெறுவதை காட்டுகிறது மேலும் ஏதேனும் தவறுகள் இருக்குமாயின் கம்பைலின் போது சுட்டிக்காட்டும்.

கீழே நடுவில் இருப்பது preview window ப்ரிவியூ பார்க்க பயன்படுகிறது

கீழே வலது புறத்தில் இருப்பது asset bin இந்த பகுதியில் நாம் ஒரு புராஜக்ட்டில் இனைக்க வேண்டிய மெனு/வீடியோ /ஆடியோ போன்றவற்றை கொண்டு வந்து வைத்துக்கொள்ளவேண்டும். இங்கே எடுத்து வைப்பதால் புராஜக்ட்டில் இணைத்துவிட்டதாய் அர்த்தம் இல்லை. இங்கே இருப்பதால் புராஜக்ட்டின் கொள்ளவும் மாறப்போவதில்லை.ஆனால் புராஜக்ட்டில் இணைக்கும் அனைத்து பைல்களும் இந்த விண்டோவினுள் இருந்தாக வேண்டும். எவற்றையும் இங்கு கொண்டு வராமல் நேரடியாக இனைக்க இயலாது.
இந்த asset bin ல் பைல்களை சேர்க்க பின்வரும் படத்தினை கவனியுங்கள்


asset bin ல் வைத்து ரைட்க்ளிக் செய்து தோன்றும் மெனுவில் import media asset என்பதை தேர்வு செய்யவும் வழக்கம் போல விண்டோஸின் open திரை தோன்றும் வேண்டிய பைலை இனைத்துக்கொள்ளுங்கள் வீடியோ/ஆடியோ மட்டும் இணைக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் இரண்டும் செக் செய்ய வேண்டி உள்ளதால் ஒரு 3-5 நிமிடங்கள் ஆகலாம் மூன்று மணி நேர வீடியோவுக்கு.
மேலே உள்ள படத்தின் கீழ்-வலது புறத்தில் சிகப்பாய் வட்டமிடப்பட்டிருக்கும் இடம் புராஜக்ட்டின் சைஸை குறிப்பிடுகிறது. ஒரு டிவிடி5 புராஜக்ட் என்றால் 4.7 ஜிபியை தாண்ட அனுமதிக்ககூடாது.


மேலே உள்ள படத்தில் அசெட் பின்னில் ஒரு வீடியோ ஒரு ஆடியோ ஒரு பின்புல மெனு ஒரு சப்பிக்சர் மெனு இணைக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள படத்தில் movie1 என்று இருக்கும் பகுதியை ரைட்க்ளிக் செய்து ரீநேம் மூலம் songs என்று மாற்றியுள்ளேன். அதே போல menu1 என்பதை top என்று மாற்றியுள்ளேன்.இப்பொழுது அந்த songs எனப்படும் movie யை இரட்டை க்ளிக் செய்யும் பொழுது படத்தில் உள்ளது போல அந்த songs க்கு உரிய வீடியோ வைக்கும் டைம் லைன் தெரியும். படத்தில் காட்டியுள்ளது போல இப்பொழுது இங்கு வீடியோ பகுதி/ ஆடியோ பகுதி பிரித்துக்காட்டியுள்ளேன் படத்தில் அந்த அந்த இடங்களும் முறையே வீடியோ/ஆடியோவை drag செய்து விட்டால் போதும் இனைக்கப்பட்டுவிடும்.படத்தில் குறிப்பிட்டது போல ஆடியோ டிராக்கில் en என்று இருப்பது english யை குறிப்பது அதாவது ஆடியோவின் மொழியைக்குறிப்பது இது எதற்கு என்றால் உங்களுடைய டிவிடி ப்ளேயரின் ரிமோட்டில் audioஎனும் பட்டன் இருப்பதை பார்த்திருப்பீர்கள் அந்த பட்டனை அழுத்திய வுடன் சில விவரங்கள் காட்டப்படும்

ஆடியோ வகை - dolby digital(5.1 or 2 channel) or dts or pcm

ஆடியோ மொழி - என்ன மொழி இங்கு தேர்வு செய்கிறோமோ அதைக்காட்டும்.

அதாவது தமிழ் மொழி அறிமுகமே இல்லாத நபர் ஒருவர் தமிழ் படத்தை காணும் போது ஆர்வத்தினால் இது என்ன மொழி என்று அறிய முயற்சிக்கும் பொழுது இந்த வசதி கைகொடுக்கும்.

இங்கு en ல் அழுத்தவும் தோன்றும் மெனுவில் தமிழையோ அல்லது உங்களது வீடியோவின் ஒலி மொழியை தேர்ந்தெடுத்துக்கங்க.

வீடியோவினையும் ஆடியோவினையும் அதற்குறிய இடத்தில் பொருத்திய பின்னர் கீழே-வலது மூலைளில் பாருங்கள் அந்த பச்சை வண்ண பகுதியில் புராஜக்ட்டின் அளவு காட்டப்படும். கூடி இருக்கிறதா? இதே போல நாம் சேர்க்கும் பைலுக்கு ஏற்ப அளவு கூடும். டிவிடி5 என்றால் இந்த அளவினை 4.7 ஜிபிக்குள் அடக்க வேண்டும்.

மேலே உள்ள படத்தில் edit marker எனும் துனை திரை காணப்படுகிறது அது chapter உருவாக்க பயன்படும் திரை. இந்த திரை தோன்ற நாம் வீடியோவின் மேல் பகுதில் (படத்திலே குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில் ) க்ளிக் செய்ய வேண்டும்.,இந்த திரையில் எளிதான சாப்டர் மார்க் செய்வது பற்றி சொல்கிறேன்

சாப்டர் நேம் என்று இருப்பதில் உங்களுக்கு அடையாளம் காணக்கூடிய பெயரை கொடுத்தால் நன்றாக இருக்கும். start time எனும் பகுதியில் சாப்டர் ஆரம்பிக்கும் நேரத்தை கொடுக்க வேண்டும் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் அதற்கு கீழே snap to default க்கு கீழே 3 பட்டன் இருக்கும்  இந்த பட்டன்களை பயன்படுத்தி அடுத்தடுத்த ப்ரேம்களை பெறாலம் சரியான ப்ரேம் வந்த உடன் ஓக்கே கொடுத்து வெளியேறினால் சாப்டர் உருவாக்கப்பட்டிருக்கும். இங்கே ஒரு சந்தேகம் வரலாம் இந்த பட்டன்களை இயக்கும் பொழுது வீடியோவை எங்கு காண்பது என்று அதற்கு தான் மேலே உள்ள படத்தில் மேற்பகுதியில் ப்ரிவியூ திரை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதனில் பார்க்கலாம். இதே போல எத்தனை சாப்டர்கள் வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.

ப்ளே கர்சரும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது இந்து டைம்லைனில் எங்கு வேண்டுமானாலும் வைத்து அந்த இடத்தில் வீடியோவை இயக்கி பாக்கலாம். டைம்லைனில் ப்ளே கர்சரை வைக்க எங்கு வேண்டுமோ அங்கு ரைட் க்ளிக் அதன் மூலம் ப்ளே கர்சர் ஆப்சனை தேர்வு செய்யலாம்.

இது வீடியோ ஆடியோவினை கையாளும் முறை இதில் இன்னும் கொஞ்சம் தகவல் இருக்கு அதற்கு முன் அடுத்த பகுதியில் மெனுவினை கையாளும் முறை பற்றி காண்போம்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க

2 comments:

  1. மொழி ஆப்ஷன் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்ற சந்தேகம்
    இதற்கு முந்தைய பதிவிலேயே இந்த சந்தேகம் வந்தது.

    ReplyDelete
  2. முடிந்தவரை எல்லா வசதிகளையும் கற்றுத்தர முயற்சிக்கிறேன். நண்பரே உங்கள் பின்னூட்டம் நல்ல ஊக்கம் அளிக்கிறது.

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்