நடிகர்கள்: விஜய் , அனுஷ்கா மற்றும் பலர்
இசை:விஜய் ஆண்டனி
இயக்கம் : பாபு சிவன்
தயாரிப்பு:ஏவிஎம்
வெளியீடு :சன் பிக்சர்ஸ்
தூத்துக்குடியில் வசிக்கும் 4 முறை எழுதி +2 பாஸ் செய்யும் ரவி என்கிற போலீஸ் ரவி , இவருடைய லட்சியமெல்லாம் இவரை இம்ப்ரஸ் செய்த தேவராஜ் ஐபிஎஸ் எனும் போலீஸ் அதிகாரியை போல் ஆக வேண்டும் என்று. மூச்சுக்கு முன்னூறு தடவை தேவராஜ் புகழ் பாடுகிறார் வீட்டுக்கு வெளியே 50 அடியில் கட்டவுட் வைக்கும் அளவுக்கு பற்று.ஊருக்குள்ள போலீஸ் முதல் எல்லோரையும் பின்னி பெடலெடுக்கிறார் அங்கே போடுகிறார் ஒரு பாட்டு நான் அடிச்சா தாங்க மாட்ட பாட்டின் ஓப்பனிங்கில் ஒரு பில்லரை கையால் பதம் பார்க்க கம்பியை மட்டும் விட்டு விட்டு பில்லர் பொல பொலவென உதறுகிறது.(ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்)
ஒரு வழியாக 4 வது அட்டம்ப்டில் பாஸாகி தேவராஜ் படித்த கல்லூரியில் படிக்க சென்னை செல்கிறார். சென்னை செல்லும் வழியில் ரயில்வே ஸ்டேசனில் சுசிலாவை காண்கிறார் காதல் கொள்கிறார். சுசிலாவை மடக்க அவருடைய பாட்டிக்கு ப்ராக்கெட் போடுகிறார். சென்னை செல்லும் ரவி ஆட்டோ ஓட்டிக்கொண்டே படிப்பை தொடர்கிறார் அவருடைய ஆதர்ஷ நாயகன் தேவராஜ் போல.
செல்லானு ஒரு ரௌடி சென்னையை கைக்குள் வச்சிருக்கான் அவன் ஒரு பொண்ணை ஆசைப்பட்டால் அவளுடைய குடும்பத்திற்கு டார்ச்சர் கொடுத்து பொண்ணை அடைந்துவிடுவான். ஒரு சாம்பிளும் காட்டப்படுகிறது. விஜயின் வகுப்பு தோழியாக வரும் உமா(தீபிகா படுகோன் தங்கச்சி ஆனாலும் அட்ராக்சன் இல்லை). இவருடைய தந்தையின் டிராவல்ஸில் ஆட்டோ வாடகைக்கு ஓட்டுகிறார். செல்லா உமாவை பாக்க்க ஆசைப்பட அதைக்கேட்டு பொங்கி எழும் விஜய் வில்லன் அன்கோவை துவம்சம் செய்கிறார் . செல்லா அடிவாங்கி ஓய்ந்தார் ஒரு வழியா படம் முடிஞ்சுச்சுனு பார்த்தா அங்க தான் வேட்டைக்காரன் ஆரம்பிக்கிருறார்.
போலீஸ் பலம் கொண்டு செல்லாவின் அப்பா வேதநாயகம்(இன்னொரு வில்லன் உஷ் அப்பா) ரவியை என்கவுண்டரில் போட ரெடி செய்கிறார். என்கவுண்டரில் வழக்கம் போல தப்பிக்கும் ரவி அவரைப்போலவே வேதநாயகம் அன்கோவால் பாதிக்கப்பட்டிருக்கும் தேவராஜ் உடன் சேர்ந்து மானாவாரியா வில்லன் கோஷ்டிகளை பந்தாடுகிறார். சிட்டியை க்ளின் செய்கிறார்.எங்கோ கேட்ட இல்லை இல்லை பார்த்த கதை மாதிரி இருக்கா ம்ம்ம் கொஞ்சம் திருப்பாச்சி, போக்கிரி, வில்லு எல்லாம் கலந்த கலவை தான்.ஆதியையும் சேர்த்துக்கங்க.
படத்தில் குறிப்பிட தகுந்த அம்சம் அனுக்ஷா தான் செம பிகருங்க. நல்லா இருக்கார் பாட்டிற்கும் சில சீன்களுக்கும் வந்து போகிறார். படம் முழுக்க விஜயை சுத்தி நகருகிறது. நிறைய அறிமுகம் இல்லாத முகங்கள் என்பதால் விஜயை வளைத்து வளைத்து காமிரா காட்டியிருக்கிறது.
வில்லன் போலீஸா வரும் ஷாயாஷி சிண்டே பெருசா ஒன்னுமில்ல அங்க அங்க வரும் மனோபாலாவும் சிரிப்புக்கு உதவவில்லை. விஜய் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் சத்யனும் சிரிக்க வைக்கவில்லை ஆனாலும் விஜய் அந்த வேலையை ஒழுங்கா செய்யுறாரு.
பாடல்கள் நல்லா இருக்கு கேக்கவும் பாக்கவும். ஆனாலும் பாடல்களில் ஆட்டம் குறைவு . பஞ்ச் டயலாக்குகளும் காணோம் ஒரு வேளை சன் டிவி போட்ட கத்திரியில் காணம போச்சோ.
நிறைய புல்லட்டுகளிலும் , நிறைய கத்திகளிலும் தப்பிச்சு ஹீரோயிசத்தை நிறுபிக்கின்றார் விஜய். விஜய் அதே எனர்ஜியோடு இருக்கிறார். ஆனாலும் காலேஜ் போயி படிப்பதெல்லாம் ஓவரு. முரளிக்கு அப்புறம் ரெம்ப காலமாக காலேஜ் போனவர்களின் சரித்திரத்தில் இடம் பிடிக்கின்றார் விஜய்.
வேட்டைக்காரன் நம்மை வேட்டையாடுகிறான்.
:))
ReplyDeleteவாங்க செந்தில் வேலன் , உங்களுடைய ஸ்மைலி கருத்துக்கு நன்றி.
ReplyDeleteathukulla film ma enga pathinga.. unga sontha karpanaiya ethu...?
ReplyDeleteநான் நேற்றே பார்த்துவிட்டேன் நண்பா.நேற்றே விமர்சனம் போட்டு ரசிக கண்மனிகளை ட்ரியல் செய்ய விரும்பாததால் இன்று விமர்சனம் போட்டே. சொந்த கற்பனையில்லை படம் பார்த்து உறுதி செய்யவும்.
ReplyDeleteeppa padam nalla erukunnu solluirngala illa valakkam pola flop dana?
ReplyDeleteபடத்தில் வித்தியாசம்லாம் ஏதும் இல்லை ஒரு பாட்டுக்கு முடிமாற்றி வைத்திருக்கிறார். வழக்கமான மசாலா தான் . அவருடைய ரசிகர்கள் ரசிக்கலாம் பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில் சந்தேகமே. பெரிய படங்கள் ஏதும் இல்லாததாலும் சன் டிவியின் விளம்பரத்தினாலும் படத்தை ஓட்டலாம்.
ReplyDeletehttp://tamilkuraal.blogspot.com/2009/12/blog-post_18.html
ReplyDeleteethu enna?
என்னுடைய பதிவை சுட்டு போட்டிருக்கார் நானும் அவருக்கு ஒரு பின்னூட்டம் இட்டுள்ளேன். இதற்கு பெயர் தான் பதிவு திருட்டு போல.
ReplyDeleteஅவருடைய பதிவு 30 நிமிடங்களுக்கு முன்பு போடப்பட்டதை பாருங்கள்.
ReplyDeleteஅப்ப பிளாப்புன்னு சொல்லுங்க...ஏய் டண்டனக்கா... வில்லு,குருவி லிஸ்டுல வே.கா.
ReplyDeleteவிமர்சனம் சூப்பரப்பு... கடைசி பன்ச் சூப்பரு...
"விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட....
ReplyDeleteஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!".
அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.
வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.
விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.
டப்பா படம்.குப்பை படம்.
இதெல்லாம் ஒரு படம்னு பார்த்து எங்களுக்காக உங்களை தியாகம் செய்ததற்கு நன்றி
ReplyDeleteSATHYAM படம் .......same same
ReplyDeletewatever.... rely annoying comments... 1st of all try 2 watch a movie and comment
ReplyDeletemaappu, vimarsanam super.
ReplyDeletepadam pottu vimarsanam panni kalakitteenga.
super hit film poramai yala intha varthaiya ealuthiringa enga vijay next super star aiyrovaronu ajith vita better ah tha vijay nadikararu...........
ReplyDelete"எங்கோ கேட்ட இல்லை இல்லை பார்த்த கதை மாதிரி இருக்கா ம்ம்ம் கொஞ்சம் திருப்பாச்சி, போக்கிரி, வில்லு எல்லாம் கலந்த கலவை தான்.ஆதியையும் சேர்த்துக்கங்க".அப்படியே போலீஸ் ஆர்வத்துக்கு "சத்யம்" படத்தையும்,என்கவுண்டர்ல இருந்து தப்பிக்கறதுக்கு "சிவாஜி" படத்தையும் சேர்த்துகிட்டா ஒரு நிறைவா இருக்கும்ல.
ReplyDeleteவிஜய் : வேற வேற வேற வேற வேற வேற வேற ஒரு நல்ல படத்தை போய் பாருங்கையா.
ReplyDeleteரசிகர்கள்: ?????
என்ன ஒரு கொலவெறி ...
ReplyDeleteமொத நாளே பாத்துட்டு விமர்சனம் போடுர அளவுக்கு
padam parka 3 hours than.but nika vina comments adikkurathukku nall mulukka venadikkirinka.oruthan ulaikiran unakku viruppam ilaviddal parkathe.un tholilai inoruvan vimarchisa eppadiirukkum.naan vijay ku aka sollavilai.eelarukkum poruthum.veru velai irutha uruppadiyai seiyaparukks.vijay in poster ru kku paal othuravanka wast enral.vijay in ovaru move i um parthu parthu bad comments adikkiravankalum wast than.en enral time wast ?????????????????
ReplyDeleteநன்றி நாஞ்சில் பிரதாப்
ReplyDeleteநன்றி செந்தில்ஸ்
நன்றி விசு
நன்றி ஷபி
நன்றி ஜலந்தன்
நன்றி கொத்து பரோட்டா
நன்றி ராமன்
நன்றி சிவா
நன்றி போவாஸ்
நன்றி சரவணன் ரங்கநாதன்
நன்றி சிவசுந்தரம்
இதில் உள் குத்து வெளி குத்துலாம் ஏதும் இல்லை. படத்தை பற்றிய ஒரு விமர்சனமே.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சினிமா என்பது ஒரு மாஸ் மீடியா அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதே நேரத்தில் சினிமாவும் விமர்சனத்திற்குறியதே என்பது என்னுடைய கருத்து. விஜயை கமெண்ட் அடிப்பதல்ல நோக்கம் படத்தையே.
ReplyDeleteபில்லர் பொல பொலவென உதறுகிறது
ReplyDeleteConcrete that bad??
ஹா ஹா ஹா எல்லாமே கிராபிக்ஸ்
ReplyDeletesame blood
ReplyDelete