வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.
கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.
பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.
இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.
என்ன கொடுமை விஜய் சார் இது ஏதோ ரசிகர்கள் புண்ணியத்தில் ஓப்பனிங் அமர்களமாக இருந்தது என்பதற்காக இப்படிலாம் சொல்லக்கூடாது. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்.
செய்தி ஆதாரம் -நன்றி தட்ஸ் தமிழ்.
//"வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை//
ReplyDeleteஉக்காந்து யோசிப்பாய்ங்கலோ ?