Saturday, December 26, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 11

படங்களை முழுவதும் காண படத்தினை க்ளிக் செய்து காணவும்


அடுத்து சப்டைட்டில் எவ்வாறு சேர்ப்பது என்று காண்போம்


கீழே உள்ள படத்தினை கவனியுங்கள்





மேலே உள்ள படத்தில் ஒரு மூவிக்குரிய பகுதி காட்டப்பட்டுள்ளது இதைபற்றி ஏற்கனவே படித்துள்ளோம்.




முதல் பகுதி- வீடியோவிற்கு 


இரண்டாவது பகுதி - ஆடியோவிற்கு


மூன்றாவது பகுதி - 


சப்டைட்டில்க்கு அதாவது ஏபிசி என்று குறிப்பிட்டிருக்கும் பகுதி , ஒரு மூவிக்கு 99 சப்டைட்டில் வரை இணைக்கலாம். ஏபிசி என்பதற்கு அருக்கில் இருக்கும் பட்டன் மொழிக்குறிய பட்டன் ஆடியோவிலே இதைபற்றி நிறைய சொல்லிவிட்டேன் அதே பயன்பாடுதான் இங்கேயும் அதாவது சப்டைட்டிலின் மொழியை அறிய பயன்படுகிறது இதற்கு ரிமோட்டில் உள்ள பட்டன் உதவும். நீல வண்ணத்தில் கட்டமிடப்பட்டிருக்கும் en என்பதற்கு அருகில் உள்ள கட்டத்தில் டபுள் க்ளிக் செய்தால் சப்டைட்டில் உருவாக்கும் திரை தோன்றும் கீழே வரும் படத்தினை பாருங்கள்.





மேலே படத்தில் இருப்பது சப்டைட்டில் உருவாக்கும் திரை இதிலே சிகப்பு வண்ணத்திலே கட்டமிட்டு எண் இட்டுள்ளேன் அவற்றை காண்போம்.


ஒவ்வொரு எண்ணிற்கு உரிய விளக்கங்கள்


1.ஸ்டார்ட் - ஸ்டாப் எனும் இடத்தில் டைம்கோட் காட்டப்படும் உங்களுடைய வீடியோவின் வாய் அசைவினை கவனித்து அந்த இடங்களின் ஆரம்ப மற்றும் முடிவு நேரத்தை குறித்து இங்கு கொடுக்க வேண்டும்.


உதாரணமாக : ஒரு வசனம் வருகிறது.


“நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்”


இதற்குறிய ஆங்கில (அல்லது உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ அந்த மொழிபெயர்ப்பு) மொழிபெயர்ப்பை செய்துகொண்டு இந்த வசனம் எந்த இடத்தில் ஆரம்பம் ஆகிறது என்று பார்க்க டைம்லைன்(வீடியோவிற்குரிய பகுதி) கொண்டு சரிபார்க்கம் அதை குறித்துக்கொண்டு இங்கே பேச ஆரம்பிக்கும் நேரம் அந்த வசனம் முடிய வேண்டிய நேரம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.


fade in , fade out - 0 விலே வைத்துவிடுங்கள் அதாவத் ஒரு சப்டைட்டில் வசனம் முடிந்த அடுத்த வசனம் தோன்ற அல்லது முடியும் பொழுது கொஞ்சமாக மங்கி மறையும் நிலை இது அவ்வாறு கொடுத்தால் நன்றாக இருக்காது எனவே 0 விலே இருக்கட்டும்.


2.போர்ஸ் டூ டிஸ்ப்ளே - சப்டைட்டில் மெனுவிலே அல்லது ரிமோட்டிலே தேர்ந்தெடுக்காமல் ஆட்டோமேட்டிக்காக ஓடும் வண்ணம் செய்ய இந்த பட்டனை க்ளிக் செய்திருக்க வேண்டும். சப்டைட்டிலை வாட்டர் மார்க்காக கூட பயன்படுத்தலாம் அதற்கு இந்த போர்ஸ் டூ டிஸ்ப்ளே உதவும்.


3.சப் டைட்டிலை நீங்கள் பிட்மேப்(பிஎம்பி) பைலாக மாற்றி வைத்துக்கொண்டும் இங்கே இணைக்கலாம் அதற்குரிய வசதியே இது


4.டெக்ஸ்ட் - இது நேரடியாக மேஸ்ட்ரோவிலே சப்டைட்டில் தட்டச்சு செய்யும் முறை இந்த பெட்டியினுள் தட்ட வேண்டும் உள்ளீடு செய்யும் பொழுது பக்கத்தில் கறுப்பு வண்ணத்திரை(வீடியோ இணைக்கபட்டிருந்தால் வீடியோ தெரியும் பின்புலத்தில்)யில் நீங்கள் தட்டும் எழுத்துக்கள் தெரியும். safe area தாண்டி செல்லா வண்ணம் வரிகளை மடக்கி தட்டச்சவும்.


உதாரணம் படத்திலே உள்ளது அதன் வெளியீடை 7 என்று குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில் காணலாம்.


5.இங்கே எழுத்துரு வகை , அளவு , போல்ட், இட்டாலிக் போன்ற வகை உள்ளது அதனை தேர்ந்தெடுத்து உங்களுடைய விருப்ப பாண்ட் , மொழியை அமைக்கலாம். ஆங்கிலத்திற்கு என்னுடைய தேர்வு ஏரியல் அது தான் கண்ணை உருத்தாது.


6.நாம் உள்ளீடு செய்யும் எழுத்து எந்த பகுதியில் அதாவது ஸ்க்ரீனில் எந்த பாகத்தில் தோன்ற வேண்டும் என்று அமைக்க இந்த பகுதி உதவுகிறது. நம்முடைய தமிழ் மொழிப்படங்களில் பொதுவாக கீழ் பகுதியில் மட்டுமே சப்டைட்டில் காட்டப்படுகிறது. ஒரிஜினல் ஆங்கிலப்படங்களில் பேசும் ஏரியாவிற்கு தகுந்தார் போல சப்டைட்டில் அமைக்கப்படுகிறது.


7. முன்னரே சொன்னது போல வெளியீடை காட்டும் திரை.


சப்டைட்டில் பெரிய வசனம் என்றால் ஒரே பக்கத்தில் முடியா பட்சத்தில் அடுத்த பக்கதிற்கு செல்லும் பொழுது முன்னால் ..... இந்த வாறு சேர்த்துக்கொள்ளுதல் நன்றாக இருக்கும். பாடல்களுக்கு இட்டாலிக் முறையும். வசனங்களின் பின் புலத்தில் பாடல்கள் வரும் பொழுது அதாவது இப்பொழுது உள்ள படங்களில் பழைய இளையராஜா பாடல்களை பயன்படுத்துவது போல அவ்வாறு வரும் பொழுது தமிழரியாதவர் இரண்டையும் வேறுபடுத்தி காண பாடல்களுக்கு இட்டாலிக் மற்றும் வரியின் ஆரம்பத்தில் மியுசிக்கல் நோட் சிம்பளையும் சேர்ப்பது நலம்.


இது தான் பெரிய வேலை டிவிடியை பொருத்த வரையும் ஒவ்வொரு வசனத்தையும் பொறுமையாக தட்டச்சு செய்ய வேண்டும்.


அடுத்த பகுதியில் முடிவடையும் அதன் பிறகு அடுத்த தொடர் ஒளிப்படத்தொகுப்பு பற்றி ...


பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க

9 comments:

  1. இது தான் பெரிய வேலை டிவிடியை பொருத்த வரையும் ஒவ்வொரு வசனத்தையும் பொறுமையாக தட்டச்சு செய்ய வேண்டும்.
    Thats why I see lot of mismatches appears in movies esp. which are screened in singapore.Some time font and background also don't match well.

    ReplyDelete
  2. ரொம்ப அருமையா எழுதிட்டு வர்றீங்க தல. ஆனால்.. டிவிடி-யின் தரத்தைப் பற்றி, அதை தயாரிக்கும் கம்பெனிகளுக்கே அத்தனை ஞானம் இல்லைங்கறதுதான் என் வருத்தம்.

    ஸோர்ஸ் இம்ப்ரூவ்மெண்ட் கொஞ்சம் கூட இல்லாம.. விசிடி-யை கூட அப்படியே டிவிடியா மாத்தித் தர்றாங்க.
    --

    அடுத்தத் தொடருக்கும் என் வாழ்த்துகள்!! கலக்குங்க! :) :)

    ReplyDelete
  3. addboxdinesh
    Tamilalagan
    hollywoodbala
    ajeevatharshan
    ambuli
    nanban2k9
    mvetha
    easylife
    Mahizh
    ganpath
    puspaviji

    தமிழிஷில் ஓட்டளித்து பாப்புலர் ஆக்கிய நெஞ்சங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. //இது தான் பெரிய வேலை டிவிடியை பொருத்த வரையும் ஒவ்வொரு வசனத்தையும் பொறுமையாக தட்டச்சு செய்ய வேண்டும்.
    Thats why I see lot of mismatches appears in movies esp. which are screened in singapore.Some time font and background also don't match well.//

    அனுபவம்/புலமை இல்லா மொழிபெயர்ப்பு காரணம் பணம் சிங்கப்பூரில் ஒரு பட மொழிபெயர்ப்பிற்கு ஸ்க்ரிப்ட்லாம் கொடுத்தும் கூட 1000 சிங்கப்பூர் டாலருக்கு மேல் வாங்குறாங்க. அவசர கதியில் செய்யும் வேலையும் ஒரு காரணம். என்னைப்பொறுத்த வரையில் ஏரியல் நல்ல பாண்ட் சப்டைட்டிலுக்கு.

    ReplyDelete
  5. //ரொம்ப அருமையா எழுதிட்டு வர்றீங்க தல. ஆனால்.. டிவிடி-யின் தரத்தைப் பற்றி, அதை தயாரிக்கும் கம்பெனிகளுக்கே அத்தனை ஞானம் இல்லைங்கறதுதான் என் வருத்தம்.

    ஸோர்ஸ் இம்ப்ரூவ்மெண்ட் கொஞ்சம் கூட இல்லாம.. விசிடி-யை கூட அப்படியே டிவிடியா மாத்தித் தர்றாங்க.
    --

    அடுத்தத் தொடருக்கும் என் வாழ்த்துகள்!! கலக்குங்க! :) :) //

    நன்றி நண்பா. ஏதோ எனக்கு தெரிஞ்சத தமிழில் தருவதற்கான முயற்சி ,காலம் ஒத்துழைத்தால் நன்றாக இருக்கும்.

    சிலர் காப்பி ரைட் வச்சிருக்காங்க சிலர் அவங்களிடம் இருந்து உரிமை பெற்று வெளியிடுறாங்க. லேபில் இருக்கும் நெகட்டிவில் இருந்து லேபிலே டிவிடி தயாரிக்க 1,50,000 ரூபாய் ஆகும் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.மேலும் மக்களையும் இந்த விசயத்தில் குறை சொல்லியே ஆகனும் 10-20 ரூபாய்க்கு கிடைக்குது என்பதற்காக தரமற்ற டிவிடிகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். தமிழில் நல்ல தரமுடன் வெளியிடும் நிறுவணங்கள் ஐங்கரன் , ஏபி இண்டர் நேஷனல் , மோசர்பேயர் . முதல் இரண்டு நிறுவணங்களின் தரம் துல்லியம் மோசர் பேயர் குறைந்த விலை , ஏபியின் விலை 100-150-200 என்று இருக்கிறது ஐங்கரன் 500-600 ரூபாயாக இருக்கிறது மேலும் ஐங்கரன் இந்தியாவில் வெளியிட உரிமை இல்லை. தமிழில் 80 முதல் 2005 வரை பெரும்பாலான உரிமைகள் ஏபியிடம் இருப்பதாக கேள்வி. பழைய படங்கள் பலரிடம் இருக்கு.
    உங்களுடைய வாழ்த்திற்கும் உற்சாக்கத்திற்கும் நன்றி நண்பா.

    ReplyDelete
  6. AP International ஐங்கரனின், இந்தியக் கம்பெனின்னு கேள்விப் பட்டேனே.

    என்கிட்ட சில AP டிவிடி இருக்கு. நிறைய ஐங்கரனும். இது ரெண்டும் டீஸண்ட்ன்னு சொல்லலாமே தவிர, இதிலும்... ஸ்க்ராச், கலர், காண்ட்ராஸ்ட், ப்ரைட் எல்லா பிரச்சனையும் இருக்கு.

    நான் டோரண்டில் ஆக்டிவா இருந்தப்ப, ரிப்பிங் வெளியிடும்போது, தனியா avisynth ஸ்கிரிப்ட் எழுதி, சோர்ஸ் க்ளீன் பண்ணி வெளியிடுவோம் (CCE மாதிரி கோடக் யூஸ் பண்ணி).

    எனக்குப் பிடிக்காத கம்பெனின்னா, மோஸரும், பிரமிடும். கொடுமை. விஜிபி கஜினியை ப்ளூரேவில் கொண்டு வர ட்ரை பண்ணுறாங்களாம். ஒரிஜினலில்.. ஏகப்பட்ட ஸ்க்ராச். இதில் என்ன பண்ணுறாங்கன்னு பார்க்கலாம்.

    தமிழினி- எனக்கு ரொம்ப பிடிச்ச கம்பெனி. அட்லீஸ்ட் எல்லா டிவிடிலயும், DTS, Dolby ரெண்டு ஆடியோவுமாவது கிடைக்கும். ஐங்கரன் எல்லாம் ஸோ-ஸோ-ன்னுதான் சொல்லுவேன்.

    சிவாஜியை, dts-ல ஒன்னும், Dolby -யில் ஒன்னும்னு ரெண்டு டிவிடி கொடுத்தாங்க. அதுக்குப் பதிலா, இண்டர்வெல் வரைக்கும் ஒரு டிவிடி, அப்புறம் இன்னொன்னு கொடுத்திருந்தா.. வீடியோவாவது தேறியிருக்கும் (அன்பே சிவம் படத்துக்கு இப்படி பண்ணியிருந்தாங்க).

    பிரச்சனை.. நம்ம தயாரிப்பாளர்களே.. தங்களோட ஒரிஜினல் சோர்ஸை சரியா வைக்கிறது இல்லை. முதல்வன் படம் இனிமே என்ன நினைச்சாலும், ப்ளூரேவில் வராது. அதோட சோர்ஸ் காலி.

    மக்களும் ஒரு காரணம்தான். இன்னும் லோ ரெசல்யூசன்லயே பார்த்துகிட்டு இருக்காங்க.

    ReplyDelete
  7. ஆமாம் நண்பா , ஐங்கரன் - தமிழினி இருவருமே மாஸ்டரிங் செய்வது பிரசாத் லேப். தமிழினி ஐங்கரனின் போட்டி நிறுவனம் ஆனாலும் அவர்களால் இவர்களுடன் போட்டியிட முடியவில்லை. மேலும் ஐங்கரனின் பெரும்பான்மை பங்குகள் ஈராஸ் வாங்கிவிட்டதாக இரண்டு ஆண்டுகள் முன்பே பேச்சு. ஏபி ஐங்கரனின் இந்திய நிறுவனம் அல்ல அவங்க பிசினிஸ் ரீதியிலான் கூட்டாளிகள் மட்டுமே. தமிழின் அதிகமான டிவிடி உரிமை ஏபியிடம் இருக்கு. சேட்டிலைட் உரிமையும் அவங்க கிட்ட தான் இருந்தது இதைப்பற்றி பேசுனா அரசியல் வரும் விட்டுடுவோம். ஹி...

    ஆமாம் பழைய தேவர் பிலிம்ஸ் படங்கள் எதுவுமே இல்லை என்று கேள்வி லேபில் பராமரிப்பு கட்டணம் செலுத்தாதல் காலியாம்.

    சிவாஜி ப்ளூரே வந்ததுனு நினைக்குறேன்.அவங்க வெப்சைட்ல பார்த்ததா ஞாபகம் வெளியானதா என்னனு தெரியல.

    மக்களுக்கு படம் ஓடுனா சரி டெக்னாலஜி பார்ப்பதில்லை.

    ReplyDelete
  8. புத்தாண்டு வாழ்த்துகள் மணி! :)

    -----

    சிவாஜி ப்ளூரேவின்... முதல் ஷிப்மெண்டில் நானும் ஒரு கஸ்டமர்! வீட்டுக்கு யார் வந்தாலும் அந்த டிஸ்கை போட்டு உட்கார வச்சிடுவேன். :)

    DI சோர்ஸை ரொம்ப சாஃப்ட் ஆக்கிட்டாங்க. கொஞ்சம் கூட ஷார்ப்னஸ் இல்லாம எல்லோரும் மொழு.. மொழுன்னு. :)

    அதுக்கப்புறம் அவங்க ரிலீஸ் பண்ணின வில்லு, போக்கிரி, குருவி, கடைசியா கந்தசாமி வரைக்கும் எனக்குப் பிடிச்சது பில்லா மட்டும்தான். போக்கிரியில் பாட்டு எல்லாம் 4K-விலும், படத்தை 2K-விலும் எடுத்திருந்தாங்களாமே.

    அப்புறம்.. ஐங்கரனின் பங்கை எரோஸ் வாங்கினது உண்மைதான் (49%-ன்னு கேள்விப் பட்டேன்).

    ---

    இந்த வருசத்தின் என் முதல் கமெண்ட். ஓவரா மொக்கை போடாம விட்டுடுறேன். :)

    ReplyDelete
  9. ஓஹோ அப்படியா. இதுல மொக்கையிலாம் இல்லை நண்பா. புது வருடத்தில் உங்களுடைய கமெண்டே சிறப்பு.

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்