Wednesday, December 02, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி-4

சென்ற 3 ஆம் பகுதியில் உள்ளீடு கொடுப்பது பற்றி பார்ப்போம் அதில் கொஞ்சம் மேலதிக தகவல்கள் பார்ப்போம்

கீழே உள்ள படத்தினை பாருங்கள்


உங்களுடைய இனைக்கப்பட்ட வீடியோ சிகப்பு வண்ணமிட்ட இடத்தில் இருக்கும் படி மாற்றப்போகின்றோம் அந்த வெளியீட்டு வீடியோவில் மாற்றங்கள் செய்ய சில பில்டர்களை பயன்படுத்தலாம் நிறைய பில்டர் இருக்கு ஆனால் எல்லாவற்றையும் விளக்க கொஞ்சம் தாமதம் ஆகும் கொஞ்சம் தேவையான பில்டர்களை பார்ப்போம் சிகப்பு வண்ணமிட்டுருக்கும் பகுதியை இரட்டை க்ளிக் செய்யவும் கீழ்வரும் திரை தோன்றும்.

மேலே உள்ள திரையில் இருக்கும் video filter எனும் tab யை தேர்ந்தெடுக்கவும் பின் B என்று குறிப்பிட்டுருக்கும் பட்டனை அழுத்தவும். இதே விண்டோவில் original and result எனும் இரண்டு ப்ரிவியூ திரையிலும் உங்கள் வீடியோ தெரியும் source - target வித்தியாசம் பாத்துக்கலாம்.

மேலே படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள bitmap keying என்பதை பயன்படுத்தி வீடியோவினுள் logo - watermark text போன்றவை செய்யலாம். இதற்கு உங்களது லோகோவை அல்லது டெக்ஸ்டை ஒரு bitmap file ஆக உருவாக்கி கொள்ளுங்கள் பேக்கிரவும் ஒரே வண்ணத்தில் உருவாக்கி அந்த வண்ணமும் லோகோ-டெக்ஸ்ட் வண்ணமும் வேறு வேறாக இருக்கட்டும் அப்பொழுது தான் பேக்கிரவுண்டை நீக்க வசதியாக இருக்கும்.


மற்றொரு பில்டர் pulldown இது எதுக்குனா ஒரு வீடியோவின் ப்ரேம் ரேட் பிலிம் ரேட்டுக்கு அதாவது 23.97 ஆக இருந்தால் அதை டிவிடிக்கு ஏற்ற 29.97 க்கு மாற்ற பயன்படும் இதிலே உள்ள மற்றொரு ஆப்சனின் மூலம் 29.97 லிருந்து 23.97 க்கு மாற்றலாம்.
B என்ற இடத்தில் வட்டமிடப்பட்டிருக்கும் sharpen எனும் பில்டர் கொண்டு உங்கள் வீடியோவின் sharpness கூட்டலாம். குறைக்கலாம். மிக அதிகமான sharpness வைத்தால் படம் தெளிவாக இருக்காது. வீடியோ கொஞ்சம் டல்லாக இருந்தால் மட்டும் 1-2 பாயிண்ட் சார்ப்னெஸ் வைக்கலாம். மத்தபடி கெனாபஸின் கோடெக்கிலே சார்ப்னெஸ் இருக்கு,


ஆடியோ பில்டர் இதிலே இரண்டு முக்கியமான பில்டர்களை சுட்டிக்காட்டியுள்ளேன்.
A - normalize இதன் மூலம் உங்கள் வீடியோவின் ஒலியை ஒரே சீராக மாற்றியமைக்கலாம் ஏற்ற இறக்கம் இல்லாத ஒலியாக.
B-volume இதன் மூலம் உங்கள் வீடியோவின் ஒலியை அதிகப்படுத்தலாம்.
இதையெல்லாம் முடிச்சிட்டு ஓக்கே கொடுத்து இடது புறம் உள்ள convert பட்டனை சொடுக்கவும்


convert -   button யை சொடுக்கினால் வீடியோ நம்முடைய மாற்றத்திற்கு செய்யப்படும். preview tic செய்யப்பட்டிருந்தால் வீடியோ மாற்றத்தின் போது என்ன ப்ரேம் மாற்றப்படுகிறது என்பதனை காணலாம். வேலை முடிந்தவுடன் கணினியை தானாகவே நிறுத்த shutdown pc when finished எனும் தேர்வை தேர்ந்தெடுக்கலாம்.

இப்படியாக உங்களது சோர்ஸ் வீடியோவினை மேஸ்ட்ரோவுக்கு ஏற்ற பார்மட்டுக்கு மாத்திடலாம். அடுத்து மெனு , அதன் பின் மேஸ்ட்ரோவில் டிவிடி செய்யும் முறை.

2 comments:

  1. நிறைய நேரம் எடுக்கும் வேலை,ஆர்வம்/கற்பனை வளம் இருப்பவர்கள் பிரகாசிக்க முடியும்.

    ReplyDelete
  2. ஆமாம் நேரம் அதிகமாக எடுக்கும் வேலை தான் அதிலும் இந்த பாடல்கள் மட்டும் செய்யும் டிவிடி யில் இன்னும் வேலை அதிகம். தொழில் முறையில் செய்ய லேப் -ல் நிறைய பேர் இருப்பதால் எளிதாக முடிந்துவிடும். நன்றி நண்பரே.

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்