எப்பொழுதும் போல இன்று மதியம் உணவருந்திவிட்டு அருகில் இருக்கும் ஒரு மாமா(தமிழ் முஸ்லீம்களை அப்படித்தான் இங்கு அழைக்கின்றார்கள்) கடைக்கு சென்று சிறிது பேசிவிட்டு வருவது என்று சென்றேன். அங்கு கடையின் முதலாளி பஷீர் அவர்கள் இருந்தார். கடையின் ஊழியரான சிக்கந்தர் வெள்ளி என்பதால் தொழுகைக்கு சென்றிருந்தார்.
முன்பு ஒரு நாள் பாக்கு என்பதற்கு மலாயில் என்ன வார்த்தை என்று கேட்டேன். நமக்கு தான் மலாய் தெரியாது (வந்து 4 வருஷத்திற்கு மேல் ஆச்சு) ஏதோ சின்ன வார்த்தைகள் தெரியும் அதையும் பயன்படுத்துவதில்லை. சூழல் எல்லாம் தமிழ் சார்ந்ததாகவும் , கொஞ்சம் ஆங்கிலம் சார்ந்ததாகவும் இருப்பதால் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு. சரி சுய புராணம் முடிச்சிக்குவோம்.எங்க விட்டேன்...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பாக்குல விட்டேன்...
“பாக்குக்கு என்ன மலாய்ல சொல்லனும்” இது நான்
“பினாங்கு தெரியுமா மணி உங்களுக்கு” இது அவர்
ஆள் கொஞ்சம் என்னை மாதிரி ஒரு கேள்வி கேட்டால் நேரடியாக பதில் சொல்லமாட்டார் கொஞ்சம் சுற்றி ஆனால் முழு மேட்டரையும் தொட்டுச்செல்வார் . அதனால் இவரிடம் எப்பொழுதும் பேசுவதில் ஒரு ப்ரியம் ஆனால் இவரின் ஊழியருக்கோ இவர் வழ வழனு பேசுகிறார் என்று வருத்தம். சரி மேட்டருக்கு போவோம்
“தெரியுமே புலாவ் பினாங்கு”
புலாவ்னா ஏதோ சாப்பாட்டு அயிட்டம்னு தோனும் நமக்கு ஆனால் மலாயில் தீவுனு அர்த்தம்.
”அந்த பினாங்குன்ற பேரு எப்படி வந்துச்சுனா , பின்னாங் எனும் வார்த்தையில் இருந்து, பின்னாங் அப்படினா பாக்குனு அர்த்தம்”
நான் முந்திரிக்கொட்டை மாதிரி
“பாங்கு மரங்களாக இருந்ததால் தான் புலாவ் பினாங்குனு பேர் வந்துச்சோ?”
“ஆமா அதான் கரெக்ட்”
மேலும் தொடர்ந்தார்
“முன்ன நெறைய பாக்கு மரம் இருக்கும் நாங்கு ஊருக்கு(இந்தியா) போகும் போதெல்லாம் பாக்கை மூட்டை கட்டி எடுத்துப்போவோம், நம்ம ஊரு பாக்கு போல சின்னதாலாம் இருக்காது நல்லா பெருசா இருக்கும்”
இப்படி சொல்லி அன்றொருநாள் அவரிடம் இருந்து ஒரு வார்த்தையும் ஒரு பெயர்க்காரணமும் கற்றுக்கொண்டேன்.
கொசுவத்தியை சுத்துற நிறுத்திட்டு இன்னைக்கு வருவோம்
மீண்டும் பாக்கின் பெயர் மறந்துவிட்டதால் கேட்டேன். மீண்டும் சொன்னார் பெரியவர்.
“satu ponguse pinnang" இப்படி மலாய்ல கேக்கனும்னு சொன்னார்
பொங்கூஸ் அப்படினா பார்சல் , பாக்கெட் , மூடை போன்றவற்றிற்கு பயன் படும் வார்த்தை.
“அப்ப மலாய்ல வார்த்தைகள் குறைவு தானா” என்று கேட்டேன்
அதுக்கும் அவர் நேரடியா பதில் சொல்லலை அவரோட அனுபவத்தை சொன்னார்
“நாம் அப்ப யுனிவர்சிட்டில வேலைபார்த்தேன்”
நான் மண்டையாட்டிக்கொண்டே கேட்டேன்
“இப்புராஹீம்னு ஒரு மலாய் புரபஷர் இருந்தார்”
“என்னிடம் கொஞ்சம் நல்லா பேசுவார், ஒரு நாள் அவருடைய அறைக்கு ஒரு பொருள் எடுத்து செல்லும் போது இதே கேள்வியை கேட்டேன் “
பஷீர்-புரபஷர் பேச்சு
”அவர் பதிலாக ஒரு கேள்வியை கேட்டார் கூடவே ஒரு பதிலையும் சொன்னார்”
“எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு வார்த்தை தான் மலாய்னு சொன்னார் புரபஷர் நானும் ஆர்வக்கோளாறில் என்ன வார்த்தைனு கேட்டேன் அவர் பதில் சொல்லாமல்”
“இந்த ரூமில் இருப்பவை எல்லாவற்றிற்கும் மலாய்ல சொல்லு பஷீர்னு சொன்னார்”
“நானும் கட்டில், அலமாரி ,மேசை , போன்றவற்றை சொன்னேன் எல்லாமே பிறமொழிச்சொற்கள்”
(அலமார், மேசை , கட்டில் எல்லாமே மலாயில் பயன்படுத்தப்படும் வார்த்தை கொஞ்சம் உச்சரிப்பு வேறுபடும்)
“ஆமாம் இதே போல தான் நிறைய வார்த்தைகள் மலாயில் உள்ளன. கப்பல் -
அயிர்-கப்பல் = தண்ணீரில் போகும் கப்பல் , விமானத்திற்கும் பெயர் - கப்பல்”
“சரி புரபஷர் ஒரு வார்த்தை தான் மலாய்னு சொன்னீங்களே அது என்னனு கேட்டேன்”
“paddy ங்ற வார்த்தை தான் மலாய் அதையும் வெள்ளைக்காரன் கொண்டு போயிட்டான்”
நான் வேகமாக குறுக்கிட்டு
“அது இங்க்லீஸ் வார்த்தை”
“இல்லை அது மலாய்ல இருந்து போனது” சொன்னார்
எனக்கு மலாய் அறிவு குறைச்சல் என்பதால் அது பற்றி விவாதிக்காமல் பேச்சு ஆங்கிலம் பற்றி திரும்பியது
“வெள்ளைக்காரன் மொதல்ல ப்ரெஞ்ச் தான் பேசினான் பின்னால ஏதோ இனச்சண்டைல தான் பிரெஞ்ச் பேசுற விட்டுட்டு ஆங்கிலத்துக்கு மாறினான்னு “ சொன்னார்
நான் நம்பாமல் பார்த்தேன் அதைப்பற்றி அவருக்கு கவலையில்ல
மேலதிக தகவலை தொடர்ந்தால்
கிரேக்க நாட்டில் இருந்தும் அரபியில் இருந்து நிறைய ஆங்கிலேயர்கள் சுட்டிருப்பதாக சொன்னார்
அது தான் நமக்கும் தெரியுமேனு நினைச்சுக்கிட்டிருந்தேன் அப்ப தான் அவரு அரபி எழுதி காமிச்சார்
மேலே உள்ள கட்டத்திற்கு உதவிய விக்கிபீடியாவிற்கு நன்றி
இப்படியே இன்றைக்கு பேச்சு போனது சிக்கந்தர் பள்ளிவாசல் சென்று திரும்பிவிட்டார் எங்களின் பேச்சின் ஊடே. சிக்கந்தரும் 2 நாட்களாக இணையத்தில் அவருடைய செல்லிடப்பேசி எண்ணிற்கு காலர் டியூன் வைக்க சொல்லி கேட்டிருந்தார் காலையில் ஒரு மிஸ்ட் கால் மூலம் ஞாபகம் மூட்டினார் நானும் அதை செய்து முடித்துவிட்டதை பற்றி கேட்டுக்கொண்டு எஸ் ஆனேன் ஆமா இல்லைனா சிக்கந்தர் அடுத்து ஆரம்பிச்சிருவார். நான் கெளம்புறேனு சொல்லிட்டு கெளம்பிவந்துட்டுட்டு இந்த பதிவை உடனே தட்ட ஆரம்பிச்சிட்டேன்.
கொஞ்சம் தேடிப்பார்த்ததில் நிறைய வார்த்தைகள் தமிழில்(தமிழ் குடும்பம்) இருந்து ஆங்கிலதிற்கு சென்றுள்ளது.
copra - முழுவதும் காய்ந்த தேங்காய் , இது கொப்பரைத்தேங்காய் எனும் தமிழ் வார்த்தையில் இருந்து வந்திருக்குதாம். (அப்ப தேங்காயை முதலில் பதப்படுத்தியது நாம தானோ?)
இதே போல மலையாளம் எனும் வார்த்தையின் விளக்கம்
மலை + ஆள் - மலையாள் இதிலிருந்தே மலையாளம் தோன்றியதாம் சேர நாடு மலைகள் சூழ்ந்தது தானே
mango - மாங்காய் எனும் தமிழ் தான் கொடுத்திருக்கிறது
anaconda - ஆனை கொன்றான் என்று தமிழில் வழங்கிவரப்பட்ட மலைப் பாம்பே அனகோண்டா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது
coolie - தமிழில் பயன்படுத்தும் கூலி எனும் வார்த்தை
மொக்கையாக இருந்தால் மன்னிக்கவும்.
சுவாரசியமானது என்னவென்றால் 'Orange' என்ற ஆங்கிலச் சொல் 'நாரங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தது. ஆனால் நாமோ இன்று அதை ஏதோ ஆங்கிலச் சொல் என நினைத்து 'ஆரஞ்சு' என வழங்குகிறோம்.
ReplyDeleteதங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே. ஆரஞ்சு -நாராங்காய் தெரியாத விசயமே நன்றி. நாராங்காய் - நார்த்தங்காயா?
ReplyDeleteநாரங்காய் வேறு நார்த்தங்காய் வேறு. ஆனால் இரண்டுமே ஒரே வேரில் இருந்து வந்தவை. நாரங்காய் = நாறுங்காய் = நாறும் + காய். நாறும் = இனிய மணம் வீசும்.
ReplyDeleteWikipedia - The word orange is derived from Sanskrit nāraṅgaḥ "orange tree." The Sanskrit word is in turn derived from a Dravidian root 'fragrant'. In Tamil bitter orange is called 'Narandam' (இதுவே நார்த்தம் என்று மருவி விட்டது), sweet orange is called 'nagarugam' and 'naari' means fragrance.
உங்களின் விளக்கத்திற்கு நன்றி நண்பரே. இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.
ReplyDelete