Monday, December 28, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 12

படங்களை பெரிதாக காண படங்களை க்ளிக் செய்து பார்க்கவும்.

சில வசதிகளை பற்றி காண்போம் இந்த பகுதியில்

மேஸ்ட்ரோவில் முகப்பில் இருக்கும் டூல் பாரில் இருக்கும் விசயங்களை காண்போம்



மேலே உள்ள படத்தில் சில அயிட்டங்களை எண்களால் குறியிட்டுள்ளேன்

1.டிவிடி கம்பைல் செய்ய இந்த பட்டன் உதவுகிறது எல்லா வேலையும் முடிச்சு ப்ரிவீயூலாம் பார்த்த பின் எல்லாம் ஓக்கே எனும் நிலையில் இந்த பட்டனை அழுத்தி தோன்றும் மெனுவில் டிவிடி சேவ் ஆகவேண்டிய டிரைவை செலகட் செய்து கொடுக்கலாம்.

அந்த பட்டனை அழுத்தியதும் கீழே இருப்பது போல ஒரு திரை தோன்றும் அதிலே போல்டரை செலக்ட் செய்து கொடுக்க வேண்டும்.




மேலே படத்தில் உள்ளது போல் செய்துவிட்டு ஓக்கே கொடுத்தவுடன் கம்பைல் ஆகும் கம்பைல் டீட்டெய்ல்லாம் கீழே உள்ளது போல காட்டும். மேலும் எரர் ஏதும் இருந்தாலும் காட்டும். வார்னிங் இருந்தால் கம்பைல் முடிஞ்சதும் காட்டும்.





2- இது டிஸ்க் இமேஜ் உருவாக்க பயன்படுகிறது. இந்த மென்பொருளில் டிவிடி பர்ன் செய்யும் வசதி இருந்தாலும் இது ஹார்ட்வேர் சார்ந்து இயங்க கூடியது எனவே டிஸ்க் இமேஜ் பயன்படுத்த தேவையில்லை நாம் கம்பைல் செய்த புரோகிராமையே நீரோ கொண்டு பர்ன் செய்யலாம்

3-டிவிடியில் பர்ன் செய்ய பயன்படுகிறது இந்த பட்டன் . மேலே சொன்னது போல இப்பொழுது உள்ள ஹார்ட்வேர் இதனுடன் ஒத்தியங்காது எனவே பயன்படுத்த தேவை இல்லை.

4,5,6 இதுவும் ஹார்ட்வேர் சார்ந்து இயங்க கூடியது அதாவது இந்த டிவிடி புராஜக்ட்டை ஒரு டேப்பில் (பீட்டா டேப் , டிவி டேப்) பதிய இந்த மூன்று பட்டன்கள் பயன்படுத்தலாம். 4வது டேப்பில் ரெக்கார்ட் செய்ய , 5- டேப்பை வெரிபை செய்ய , 6-டேப்பை இயக்க.

7-ப்ரிவியூ பட்டன் இதனை கொண்டு நாம் செய்து வைத்துள்ள முழு புராஜக்ட்டையும் செக் செய்து பாக்கலாம் ப்ரிவியூவாக. அந்த பட்டனை அழுத்தினால் பின் வரும் திரை தோன்றும் அதில் டிவிடி ப்ளேயர் ரிமோட் போல பட்டன் இருக்கும் அதனை பயன்படுத்தி சோதனை செய்யலாம்.




மேலே உள்ள திரையே ப்ரிவியூ திரை பொதுவாக நாம் எல்லா வசதிகளையும் பார்த்துவிட்டோம்.

கடைசியாக ஒரு வசதி பார்ப்போம்




மேலே படத்தில் ஒரு மூவியின் மேலே ரைட் க்ளிக் செய்து அதில் தோன்றும் மெனுவில் ப்ராப்பர்ட்டியை க்ளிக் செய்யவும் செய்த உடன் பின் வரும் திரை தோன்றும்.



இதிலே டிஸ்ஸேபிள் யுசர் ஆக்சன் என்பதில் எல்லாவற்றையும் க்ளிக் செய்தால் இந்த வீடியோ ஓடும் போது தேர்வு செய்யப்பட்ட ஆக்சன்கள் எல்லாம் இயங்காது.

உதாரணமாக மோண்டாஜ் , விளம்பரங்கள் போன்றவை ஓடும் பொழுது ரிமோட் மூலமாக நெக்ஸ்ட், பார்வேர்ட், ஸ்டாப், மெனு போன்ற அயிட்டங்களை தேர்வு செய்ய முடியாது அவற்றில் வேண்டியவற்றை டிஸ்ஸேபிள் செய்ய இந்த ப்ராப்பர்ட்டீஸ் உதவுகிறது.
மிச்ச தகவ்ல்கள் எல்லாம் கொஞ்சம் வீடியோ தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும் தற்சமயம் அவை தேவை இல்லை என்றே கருதுகிறேன்.

டிவிடி மேஸ்ட்ரோவில் கருத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்:

1.இணைக்கும் வீடியோ/ஆடியோ பார்மட் m2v / ac3 யாக இருக்கட்டும்.

2.கனெக்சன் விண்டோவில் டைட்டில் மெனு , பர்ஸ்ட் ப்ளே அயிட்டம் போன்றவைகள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

3.ஒவ்வொரு வீடியோவிற்கும் கடைசி சாப்டரின் எண்ட் ஆக்சன் கட்டாயம் கொடுங்கள் அப்பொழுது தான் அந்த வீடியோ ஓடி முடிஞ்சதும் அடுத்த இடத்திற்கு செல்லும் இல்லையெனில் நின்று விடும்.

4.பர்ன் செய்ய நீரோ பயன்படுத்தும் பொழுது டேட்டா வெரிபிகேசன் கொடுங்க.

5.மெனுக்களை கட்டாயம் பிஎம்பி பார்மட்டில் சேவ் செய்யுங்கள்

6.சப்பிக்சரை சேமிக்கும் பொழுது பின்புலம் இல்லாமல் சேமியுங்கள் ஆனால் பிஎம்பியாக சேமிப்பதால் வெள்ளை பின்புலம் சேர்க்கப்படும். அதை மேஸ்ட்ரோவே நீக்கி விடும்.

7.மேஸ்ட்ரோ பழைய காலத்து சாப்ட்வேர் எனப்தால் பி4 வகை ப்ராசசர் வரை மட்டுமே சப்போர்ட் செய்யும் இந்த காலத்து i5,i7,dual core , core 2 dua  போன்ற பிராசசர்களை ஏற்றுக்கொள்ளாது. எனவே ஒரே ஒரு ப்ராசரை கொண்டு மேஸ்ட்ரோவை இயக்கும் படி செய்யுங்கள்.இதற்காக பி4யை தேடி செல்ல வேண்டாம் உங்களது லேட்டஸ்ட் ப்ரசசரிலே மேஸ்ட்ரோவுக்கு ஒரு ப்ராசரை மட்டும் எடுத்துக்கொள்ளும் படி செய்துகொள்ளுங்கள் அனேகமாக எல்லோருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.

நிறைவுற்றது. சந்தேகங்கள் இருந்தால் கேட்கும் கேள்விகளை தொகுத்து ஒரு பதிவாக போடலாம் என்று நினைக்கிறேன்.

பிடிச்சிருந்தால் ஓட்டளிக்கவும்.

5 comments:

  1. :-)

    கலக்கல்! :) :)

    வாழ்த்துகள் மணி! :)

    ReplyDelete
  2. அன்பு நண்பரே,

    மிகுந்த சிரத்தை எடுத்து, மிக விளக்கமாக நீங்கள் தந்துள்ள இப்பதிவு என்னை வியப்பிற்கு உள்ளாக்கியது. தமிழில் இத்தகைய பதிவுகள் அதிகம் வர வேண்டும். உங்களுக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும் உரித்தாகட்டும்.

    நீங்கள் கூறியபடி ஸ்ப்ரூஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்திருக்கிறேன். பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த ஜிப் கோப்பினை திறக்க கடவுச்சொல் வழங்கப்படவில்லை! ஏதேனும் வழி இருக்கிறதா..? எனக்கு அறியதந்தால் மகிழ்வேன்.

    எனது மின்னஞ்சல் முகவரி:
    murugapoopathi@gmail.com

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே
    தங்களுடைய வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. அந்த கோப்பு நான் தரவேற்றவில்லை இணையத்தில் தேடித்தந்ததே. நீங்கள் வேறு சில warez தளங்களில் spruce dvd maestro என்று தேடிப்பாருங்களேன் கிடைக்கும். முழுவதும் விரிவு செய்யப்பட்ட கோப்பாக இருக்கும். சில கோப்புகளை system/system32 folder ல் சேர்க்குமாறு சொல்லிருப்பாங்க பின் பற்றுங்க. நானும் தேடி மின்ஞ்சல் செய்கிறேன்.

    ReplyDelete
  4. mohamedFeros
    puspaviji
    hollywoodbala
    gunaathamizh
    vilambi
    spice74
    mounakavi
    suthir1974
    MVRS
    arasu08
    eroarun

    தமிழிஷில் ஓட்டளித்து ஆதரவு தந்த நண்பர்களுக்கு நன்றி.

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்