பகுதி-1
பகுதி-3
கோவிலில் நடந்த மோதலில் பெருமாளை மறந்த எனக்கு மீண்டும் அவரை ஞாபகப்படுத்தினார் யாரோ ஒருவர் “கோவிந்தா” “கோவிந்தா” என்று, அதை கேட்டவுடன் அவளுடைய ‘க்ளுக்’ சிரிப்பு எட்டிப்பார்த்தது. ஓவர் நக்கல் தான் , கறுப்பாக இருந்தாலும் களையா இருக்காடா பங்காளி உள் குரல் உரக்க கத்தியது.
பெருமாளை சேவித்துவிட்டு அவளையும் சேமித்து விட்டு அலுவலகம் வந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. பெயர் மட்டும் உறுத்தியது கிறிஸ்டியன் பெயரா இருக்கே எப்படி கோவிலுக்கு அவளும் குங்குமம் கூட வைக்கவில்லை இப்படி பல உறுத்தல்கள் ஆனாலும் வின்னாம்பில் ஒரே காதல் பாடல்கள் தான்.
“என்னுள் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே”
“என்னை ஏதோ செய்துவிட்டாள்
நெஞ்சை பூப்போல் கொய்து விட்டாள்”
கொஞ்ச நேரத்திலே ’ஜான்’ என்ற ’ஜான் ஆபிரஹாம்’ வந்தான் என் ரூமிலிருந்தே தெரிந்தது.வணக்கம் வைச்சான்.பதிலுக்கு தலையை சிலுப்பிவிட்டு இருந்தேன். என் வயது தான் அவனுக்கும் ஆனால் அலுவலகத்தில் ஜூனியர் ஆமா அஸிஸ்டெண்ட் மேனஜரா இருக்கான். பழக்கத்தில் இருவரும் ஒரே ’க்ளாஸ்’ படிக்கும் போதும் சரி குடிக்கும் போது சரி.
உள்ளே வந்தவன் எப்படி தான் கண்டுபிடிச்சானோ வந்த நொடியே கேட்டான்
“என்னடா சட்டைல ஸ்டிக்கர் பொட்டு ” ஜான்
பதிலே சொல்லாமல் கண்ணாடியில் பார்த்தேன் அட ஆமா பொட்டு. எடுத்து பத்திரப்படுத்தி கொண்டேன். ஆனாலும் இந்த பாவி விடாமல் துருவி துருவி கேட்டான் வேற வழி இல்லாம சொல்ல வேண்டியதா போச்சு.
பல்சரிடம் செருப்பை விட்டது முதல் பல் இளித்து திரும்பியது வரை ஒப்புவித்தேன்.
“மச்சான் மாட்டிகிட்ட டா”
“டேய் மோதலயே காதல்னு சொல்ற பைத்தியக்காரன் டா நீ”
“இல்லை மச்சான் இப்படி தான் ஆரம்பிக்கும் பாரேன் அடுத்தவாரம் மறக்காம கோவிலுக்கு போ நான் வேணும்னா வரட்டா”
“ஒரு மண்ணும் வேணாம் நாங்களே பாத்துக்குவோம்”
“பத்தியா நான் சொன்னபடியே நடந்துக்கிற ’You are fall in Love’ டா மச்சான் அதுக்குள்ள நாங்க அப்படினு சொல்லிட்ட நல்லா இருடா”
“ப்ளோல வர்ரதைலாம் புடிச்சிக்கங்கடா”
சனிக்கிழமை என்பதால் அரை நாள் என்பதால் அடுத்த வார வேலைகளை பற்றி டிஸ்கஸ் செய்து முடித்தோம் கருமமே கண்ணாக.
1 மணிக்குலாம் இன்னைக்கு அலாரம் அடிச்சது எக்ஸ்டன்சனில் ஜானை பிடித்து சாப்பிட அழைத்தேன். இருவரும் சிறிது நேரத்தில் அருகில் உள்ள பிரபலமான உணவகத்தில் நுழைந்து ஆர்டர் செய்தோம். நான் பசியின் வேகத்தில் புல் மீல்ஸ்ஸூம் அவன் ஸ்னாக்ஸூம் , காபிக்கும் காத்திருந்தான்.சாப்பாட்டு அவசரத்தில் சூழலை கவனிக்கவில்லை ஏதோ பொண்ணுக குரல் மட்டும் கேக்குது கொஞ்சம் நேரம் கழிச்சு பாருடா மரமண்டைனு உள் மனசு அறிவுறுத்தியதால் நிமிரவில்லை சிறிது தொலைவில் சத்தம் கேட்டதால் நிமிர்ந்து பார்த்தால் என்னழகி நிக்கிறா. சுற்றிலும் பாரதிராஜா பட எபெக்ட்டில் தோழிகள்.
இவ்வளவு நேரம் என்னைத்தான் கிண்டலடித்தார்கள் என்பது நொடியில் புரிந்தது சட்டென வந்த கோபத்தை அடக்கியது, அவளுடன் சேர்த்து தானே என்னை கிண்டலடித்தார்கள் என்பதால்.
“ஹாய்” கையை தூக்கினேன் , நேரே என்னைப்பார்த்து நடந்துவர ஆரம்பித்துவிட்டாள். கூடவே வாலுகளும் பின் தொடர்ந்தன. இந்த பாவி வேற இருக்கானே நைட் ‘ஷிவாஸ்’ மூடியை தொறக்கனும்னு அடம்பிடிப்பானே. இன்னிக்கு என் கதி அதோ கதி தான். கிட்ட வந்தாள்
“அண்ணா” என்றாள்
தொண்டை வரைக்கும் போன தயிர் சாதம் மூச்சுக்குழலில் இறங்கி புரையேற அதிர்ந்து பார்த்தேன்.
தொடரும்..
பகுதி-1
பகுதி-3
No comments:
Post a Comment
நண்பர்களின் கருத்துக்கள்