Monday, September 21, 2009

அகமும் புறமுமாய் நீ - பகுதி-1

பகுதி-2
பகுதி-3
நேற்றைய தூக்கம் என்னை வாட்டி வதைத்தது இன்றைய அதிகாலை ஒன்பது வரை. சோம்பல் முறித்து எழுத்தால் சூரியன் சுட்டுக்கிட்டு இருந்தான். இன்னைக்கும் லேட் தானா? எனக்குள்ளே கேள்விய கேட்டு கேள்வியின் நாயகன் ஆனேன்.

ஒரு வழியா கிளம்பி கண்டிப்பா ஆண்(பல்சர் - டெபனெட்லி மேல்)வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டேன். புறப்படும் போதே அம்மாவின் குரல்
“டேய் சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு போயிட்டு ஆபீஸ்போடா”,

ஏழரை நடக்குதாம் அதான் இந்த பக்கா புரடக்‌ஷன் ப்ளான். தாய் சொல்லை தட்டாமல் செய்வோம்னு தெரு முக்குல இருக்குற பெருமாளை சேவிக்க சென்றேன்.

ஷூவை பல்சரிடம் பாதுகாப்பாக வைத்துவிட்டு பெருமாளிடம் எனக்கு பாதுகாப்பு கேட்டு சென்றேன். அபயம் என்று அடைந்தவர்களை அலைய விடமாட்டார் ஏழுமலையான். பழைய கோவில் என்றாலும் பெருமை சாற்றிக்கொண்டிருக்கிறது இன்னும்.

”கோவிந்தா” , ”கோவிந்தா” , ”கோவிந்தா”

கோஷத்தை பலரும் கூறினார். என் வாழ்க்கை கோவிந்தா ஆகப்போவதை யார் யாரோ உணர்த்துகிறார்கள் என்பது அறியாமலே நல்லாபிள்ளையாட்டம் சேவித்து கொண்டிருந்தேன்.

பிரகாரம் சுற்றி வருகையில் ஒரு சரியான வளைவில் எதிரில் வந்தவள் என் மீது மோதிவிட்டாள் பிறகு தான் தெரிந்தது நான் தான் மோதி விட்டேன் என்று ஆமாம் அப்பிரதட்சனமாக சுற்றியதன் விளைவு. மருகி மருகி ”சாரி” கேட்டவளை ரசிக்க முடியாமல் இருக்கவில்லை.

”கண்டிப்பா வாங்கி தாரேன்ங்க” சிரிப்போடு நான்

“என்னது” பெயர் அறியா அழகி

”கண்டிப்பா வாங்கி தாரேன்” மேலதிக நக்கலுடன் நான்

அவளும் புரிந்தவளாய் வெட்கச்சிரிப்போடு நின்றாள் கூட இருந்த (அப்புறம் தான் தெரிஞ்சது அவள் தான் கூட வந்திருக்காள் என்று) அவள் தோழிகள் ஒரு வழியாய் ’ஓட்ட’ ஆரம்பித்துவிட்டார்கள்.அப்ப தான் பெயர் தெரிந்த அழகி ஆனாள் . பெயரை கேட்டதும் கொஞ்சம் ஷாக், இவள் எப்படி இங்க என்பது போல் கேள்விகனைகள் தொடர்ந்து மீண்டும் கேள்வியின் நாயகனாக்கியது. டேய் ஸ்பாட்டுக்கு வா என்று மண்டையில் போட்டுக்கொண்டேன். அவள் பெயர் சொல்ல மற்ந்துட்டேன்ல

“ஜெனி” முழுப்பெயர் தெரியவில்லை கேட்டுச்சொல்றேன்...

தொடரும்.
பகுதி-2
பகுதி-3

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்