Wednesday, January 26, 2011

அகமும் புறமுமாய் நீ-5

இரவு சரியாக 11 மணிக்கு எஸ்.எம்.எஸ் பேசலாமா? என்று அவளிடம்

நானும் பேசலாமே என்று மறுமொழியிட அப்பொழுதுதான் அந்த உலக அதிசயம் நடந்தது அவளே அழைத்தால்.

ஆமா ஏதோ கவிதை சொன்னீங்களே என்னது?

இல்லை அது என்னது உனக்காக எழுதியது

இந்த நக்கலுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை

ஒருமையில் வார்த்தைகள் விழ இது நடப்பது காபி ஷாப் மீட்டீங் முடிஞ்சு சரியா ஒரு மாதம் கழித்து. காபி ஷாபில் நடந்தது....

நீங்க என்ன லவ் பண்ணுறீங்களா?

முதல் கேள்வியிலே போட்டுத்தாக்கினாள் நான் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து கேள்விகள் தொடர

முதல் கேள்வி தொடங்கி கடைசி வரை ஆமாம் போட்டு வைத்தேன்

பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டே இருந்தாள்

நீங்க என்னை கல்யாணம் செய்யனும்னா நிறைய இழக்கனுமே? கொக்கி போட்டாள்

என்ன என்பது போல பார்த்தேன்?

இப்பொழுது வேண்டாம் பயந்துடுவீங்க பிறகு பேசலாம் அதைப்பற்றி என்றவள் உடனே கிளம்பி சென்றாள்.

சில பல சந்திப்புகளில் எங்கள் காதல் சந்திப்புகளில் கூட நிற்காத தொடர்வண்டியாய் சென்றது.

அவளது படிப்பும் முடியும் நேரம்.

அன்னைக்கு காபிஷாபில் சொன்னது ஞாபகம் இருக்கா?

என்ன டி?

நீங்க நிறைய விட்டுக்கொடுக்கனும்னு அய்யா மறந்துட்டீங்களா?

ஓ ஓ அதுவா ....

ம்....... எங்க வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க எனக்கு பதில் சொல்ல கூட தைரியம் வரமாட்டேங்குது,

நிறுத்தினாள் அவளே தொடரட்டும் என்று காத்திருந்தேன்

இருக்கீங்களா?

சொல்லுடா? இது நான்

இப்ப என்ன பண்ணனும் இதுவும் நான்

நீங்க உங்க வீட்ல பேசி சம்மதம் வாங்குகங்க எங்க வீட்ல பொண்ணு கேளுங்க

ஓக்கே என் சைட் நான் சரி பண்ணுறேன் உன் சைட் நீ மட்டும் தான் முடியும் நான் முயற்சி செய்து அவமானப்பட்டா என் வீட்ல என்னால ஒன்னும் செய்ய முடியாது

அப்ப என்னை மறந்துடுங்க என்றாள் வேகமாக.

என்ன பொண்ணுங்களோ ஒரு ஆண் ஒரு பெண்ணை தூக்கி எறிய பல நாட்கள் ஆகின்றது இப்படி பழகியவனை தூக்கி எறியும் வார்த்தை சில நொடியில் தோன்றியதில் நொறுங்கியவன் உடனே கால் கட் செய்துவிட்டேன்.

ஏகப்பட்ட மிஸ்ட் கால்கள் 50 கிட்ட இருக்கும் எடுக்கவே இல்லை. அந்த நேரத்தில் டொய்ங் டொய்ங் என்ற சத்தத்துடன் குறுஞ்செய்தி ஒன்று வந்து விழுந்தது அவள் தான் அனுப்பியிருந்தாள்

எங்களுடைய பெர்சனல் கொஞ்சல்களில் ஆரம்பித்து ஒரு காதலன் வாய் திறக்க கூட முடியாமல் பாச மழை பொழிந்திருந்தாள் நானே போன் செய்து பேசும் பொழுது இரவு 2.30 ஆகியிருந்தது



No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்