Friday, September 16, 2011

எங்கேயும் எப்போதும் - திரைவிமர்சனம்

சென்னை - திருச்சி மற்றும் திருச்சி - சென்னை முறையே தனியார் மற்றும் அரசுப்பேருந்து புறப்படுகிறது அவை இரண்டும் நேருக்கு நேர் மோதி ஒரு விபத்து. அதில் பயணிக்கும் கதாப்பாத்திரங்கள் மற்றும் முக்கிய பாத்திரங்களின்(திரைப்படத்தின்) கதையே எங்கேயும் எப்போது.

அனன்யா - சரவ் காதல் செம சுவாரஸ்யம். அனன்யாவுக்கு உதவும் முன்பின் தெரியாத சரவ்வின் உடல் மொழி செம அட்டகாசம் புது ஹீரோ கிடைச்சுட்டார். படம் பார்ப்பதற்கு முன் அனன்யாவா பிகர் சுமார் தான்னு நினைச்சேன் அந்த திருச்சி போன்ற சிறிய நகரத்தின் பெண் பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு . சரவ்வின் பேரையே கடைசியாக(படம் முடியும் போது) தான் கேட்ப்பார் நமக்கும் அப்போழுது தான் தெரிய வருகிறது. நல்ல அருமையான காதல் கதை இவர்களுடையது. இருவருக்கும் காதல் வந்து சரவ் அனன்யாவை தேடி திருச்சியும் அனன்யா இவரை தேடி சென்னை வந்து பின் திரும்பி செல்லும் போது இருவர் வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து.

அஞ்சலி - ஜெய் காதல் அட்டகாசம் கொஞ்சம் போல்ட் ஆன திருச்சி பெண்ணாக அஞ்சலி, திருச்சியில் தங்கி வேலைபார்க்கும் ரெம்ப நல்ல கிராமத்து பையனாக ஜெய். ஜெய்க்கு கூட நடிக்க வருகிறது முந்தைய படங்களுக்கு ரெம்ப ரெம்ப நல்லா பண்ணிருக்கார். ஆனாலும் அஞ்சலில் கேரக்ட்டரைஷேசன் ரெம்ப அருமை. போல்ட் ஆன பொண்ணு காதலிப்பவனை அப்பாவிடம் அனுப்பி சம்மதம் கேட்க்க வைப்பது, அவனை உடல் உறுப்பு தானம் செய்ய வைப்பது எல்லாம் தினிக்கப்படாமல் அவரது கேரக்கடருக்கு ஏற்ற காட்சிகள் படத்தில்.

அந்த பேருந்தில் பயணிக்கும் ஒரு இளைஞனுக்கும் , இளைஞிக்கும் அங்கே மலரும் காதல் , துபாய்யில் 5 வருஷம் இருந்து முதல் முதலாக குழந்தையை பார்க்க வரும் நபர். அவர் குழந்தை நிஜமானு கேட்க்க இவர் பக்கத்தில் இருப்பவரிடம் ஆமானு சொல்ல சொல்ல போன் கொடுக்க அவர் கோபமாய் போனை வாங்க போனின் மறுமுனையில் அந்த குழந்தை லஞ்ச் சாப்பிட்டீங்களா அங்கிள் நு கேட்க்க மனுசன் முக மலர்ச்சியாவது இது போன்ற இயல்பான திரைக்கதை காட்சிகள்.

புதிய திருமண ஜோடி , ஒரு குழந்தை அதன் தாய் எல்லாம் கவனிப்பு பெறுகின்றார்கள்.

படத்தின் மற்றொரு ப்ளஸ் கேமரா மேன் சிறுத்தை யில் பணிபுரிந்த வேல்ராஜ்  நல்லா செய்திருக்கார் முன்னரே நிறைய படம் செய்திருக்கின்றார்.

அந்த விபத்து காட்சி அதில் உறையும் நம்மை ஒவ்வொரு காரக்டரின் சோகத்திற்கே இழுத்து செல்வது நம்மை அறியாமல் நடை பெறுகிறது.

அஞ்சலி செம துரு துருனு இருக்கார். அழகாக இருக்கின்றார். அவ்வளவு போல்ட் ஆன பொண்ணு ஜெய்யை ஆம்புலன்ஸில் சும்மா அனுப்புகிறார்னு நினைத்தால் அவனுக்கு காதுல ரத்தம் வந்துச்சு எனக்கு பயமா இருக்குனு கதறுகிறார்,

ஜெய் உடலை பார்த்து அழும் போது நமக்கும் அழுகை வருகிறது. அஞ்சலி மாதிரி நடிக்க தெரிஞ்ச பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்க இயக்குநர்களே.

கதை , திரைக்கதை அதை எடுத்தவிதம் எல்லாம் சரியாக இருக்க இயக்குநராக சரவணன் நல்லா கொடுத்திருக்கார்.

காட்சிகளோடு ஒட்டிய இயல்பை மீறாத பாடல்கள் நன்றாக ரசிக்க வைக்கிறது. இசை அமைப்பாளர் நல்ல செய்திருக்கின்றார்.

அன்றாடம் செய்தி தான் படம் நல்ல மெசேஜ் கூடவே உறுப்பு தானம் பற்றியும் சொல்லிருக்காங்க

படம் பார்த்து முடித்தும் இன்னும் நினைவில் இருந்து மாறவில்லை

விமர்சனத்தை இவ்வளவு நீளமாக காட்சிகளை சொல்லி சொல்லிவிட்டாலும் அதை திரையில் உணரும் பொழுது நிச்சயம் ரசிப்பீர்கள்.

எங்கேயும் எப்போது - விபத்து நேரலாம் வரும் முன் காப்போம். நல்ல படம் கட்டாயம் விரசம் இல்லை குடும்பத்துடன் பார்க்கலாம்.

1 comment:

  1. நல்ல விமர்சனம். விரைவில் படம் பார்க்க வேண்டும்

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்