நடிகர்கள் : ரஜினி, ஐஸ்வர்யா ராய்
இசை : ஏ,ஆர், ரஹ்மான்
இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : சன் பிக்சர்ஸ்
ஆராய்ச்சியாளர் வசீகரன் 10 ஆண்டுகள் பாடுபட்டு ஒரு ரோபோவை (சிட்டி)வடிவமைக்கிறார். அதற்கு அவருடைய உருவத்தையே கொடுக்கிறார். இவரின் வளர்ச்சி அவருடைய குருநாதரான வில்லனுக்கு பிடிக்கவில்லை. ரஜினியை தூண்டிவிட்டு அதற்கு மனித குணநலன்களான உணர்வுகள், ஆசைகள் எல்லாம் உருவாக்க வைக்கிறார். உணர்வுகள் உண்டாகும் சகல பலம் பொருந்திய ரோபோவை போர்முனைக்கு பயன்படுத்த ஆசைப்படுகிறார் வசீகரன். ஆனால் எதிரி நாடுகளிடம் விற்க ஆசைப்படுகிறார் வில்லன். வசீகரனின் காதலி சனா (ஐஸ்) மீது ரோபோவிற்கு காதல் பொங்கி வழிய அதை அழிக்கின்றார் வசீ. மீண்டும் அதை உருவாக்கி அதனை அழிவுப்பாதைக்கு திருப்புகிறார் வில்லன். காதல் பித்து பிடிக்கும் ரோபோ என்னவெல்லாம் செய்கிறது ஒரு பெண்ணிற்காக என்பதே கதை. இறுதி வெற்றி யாருக்கு மனிதனா? ரோபோவா?
ரஜினிக்கு சயிண்டிஸ்ட் வேடம் பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது. ஆனாலும் ஆள் ரெம்ப ஸ்மாட்ர்ட் இளமையாக இருக்கிறார். அவருடைய உதவியாளர்களா சந்தாணம் மற்றும் கருணாஸ் சும்மா மொக்கை போடுகின்றனர். சயிண்டிஸ்டுக்கு படத்தில் பாடல் பாடுவதை தவிர வேறு ஹீரோயிசம் இல்லை. ரெம்ப சாதுவாக காட்சிகள் உள்ளது. அவர் உருவாக்கும் ரோபோ ரஜினி செம ஸ்மார்ட். மனுசன் பின்னுகிறார். நல்ல உடல் மொழி லாவகமான நடிப்பு என சகலமும் ஸ்கோர் செய்கிறார் ரோபோ ரஜினி. விஞ்ஞானியின் காதலியாக ஐஸ் , 36 வயசிலும் நல்லாத்தான் இருக்கார். நல்லா நடிக்கவும் செய்கிறார். ஆனாலும் நேட்டிவிட்டு ஒட்டவில்லை.
முதல் பாதியில் விஞ்ஞானியின் காதலும் , ரோபோவின் அட்டகாசங்களுமாக போகிறது. இரண்டாம்பாதியில் ரோபோ வில்லனாகி ஐஸை கடத்தை கொஞ்சம் சூடு பிடிக்கிறது, ஆனாலும் இழுவையான பேசும் காட்சி அமைப்புகள் செம போர் டயலாக் ரெம்ப போர். ஆத்தோ ஆத்துனு ஆத்துகின்றார்கள் ஆளாளுக்கு.
இரண்டாம் பாதியில் கடைசி 30 நிமிடங்கள் உச்சகட்ட கிராபிக்ஸ் அதுவே கொஞ்சம் திகட்டுகிறது எங்கு பார்த்தாலும் ரஜினி. மேலும் டெக்னிக்கல் வசனகங்கள் பெரும்பாலும் வலுவில்லை. ஏனோ தானோ என்றே இருக்கிறது சுஜாதா இல்லாதது அப்பட்டமாக தெரிகிறது.
ரோபோவின் சாகசங்களும் காட்சிகளும் நல்ல வடிவமைக்கு. இறுதிக்காட்சி கிராபிக்ஸ்களும் கலக்கல். டிரைலரில் பார்த்த சீன்களே படத்தில் பார்க்கும் பொழுது வேறு பரிணாமத்தையும் நம்முடைய காட்சிப்பிழையையும் சுட்டிக்காட்டுகிறது.
ஏ.ஆர்.ஆர் அசத்திருக்கார். கிராபிக்ஸ் டீம் நல்ல திறமையான வடிவமைப்புகளில் பின்னிருக்காங்க. ரத்னவேலுவின் கேமரா அருமை. ரோபோவை டிஸ்மாண்டலிங் பண்ணும் போது நல்லா இருக்கு இரண்டு தடவையும்.
இறுதிகாட்சிகளில் எங்கு நோக்கினும் ரஜினி என்பதால் ஆர்வம் ஏற்பட்டு பின்பு அதுவே சலிப்பை கொடுக்கிறது.
ரயில் காட்சியும் இறுதிக்காட்சிய்யும் தவிர பெரிய சுவாரஸ்யம் இல்லை. ரஜினி ரசிகன் எதிர்ப்பார்க்கும் ஹீரோயிச காட்சிகளும் இல்லை.
ரோபோ திரையரங்குகளில் மட்டுமே ரசித்து காண முடியும்.
ரோபோ போரோ என்றே தோன்றுகிறது.
ரோபோ போரோ..ஹ ஹ ஹ...நல்லா மாத்தி யோசிச்சிருக்கீங்க...
ReplyDeleteஉங்களின் பார்வை நல்லாத்தான் இருக்கிறது .
ReplyDeleteThanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
ReplyDeleteby
TS
டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
இத விட மொக்கையா ஒரு பதிவு எழுத முடியாது. உங்களுக்கு என்ன வருமோ அத ப்ளாக்குல உருப்படியா எழுத முயற்சி பண்ணுங்க..நானும் விமர்சனம் எழுதுரேன்னு ஹாப்பாயில் போடதிங்க.
ReplyDeleteவிமர்சனம் எழுதி இருப்பேங்க அப்படின்னு வந்தா படத்தோட புல் கதை சொல்லி இருக்கேங்க.....
ReplyDeleteஎன்னங்க இது.....