Thursday, February 04, 2010
அசல் - பழைய படங்களின் நகல்
நடிப்பு: அஜித் , பிரபு , சமீரா ரெட்டி , பாவனா , சுரேஷ் , யூகி சேது, சம்பத் , ராஜீவ் கிருஷ்ணா.
இசை : பரத்வாஜ்
இயக்கம் : சரண்
தயாரிப்பு : சிவாஜி பிலிம்ஸ்
கதை:
ப்ரான்ஸில் வசிக்கும் ஜீவானந்ததின்(அப்பா அஜீத்) மனைவியின் மகன்களுக்கும் , அவருடைய இல்லீகல் மனைவியின் மகனுக்கும்(மற்றொரு அஜீத்) நடக்கும் போட்டியில் யார் அசல் வாரிசாக இறுதியில் ஜெயிக்கிறார்கள் என்பதே.
ஜீவானந்தம் பல்வேறு நாடுகளுக்கு சட்டப்படி ஆயுதம் ஏற்றுமதி செய்யும் யுரோசியா எனும் நிறுவனத்தை நடத்துகின்றார் அவரது மகன்களாக சம்பத் மற்றும் ராஜூவ் கிருஷ்ணா. அவரது மற்றொரு மகன் சிவாவாக மற்றொரு அஜீத். ஜீவானந்தம் , சிவாவை நம்பி மட்டுமே பொறுப்புகள் கொடுக்க மிச்ச இரண்டு மகன்களுக்கும் கோபம். ஜீவானந்திற்கு பிடிக்காத இல்லீகல் ஆயுத பிசினஸ் செய்ய முற்படுகின்றனர் இருவரும். இந்நிலையில் ஜீவானந்தம் மகன்களால் கொல்லப்படுகிறார். ஆயூத கடத்தலில் ஏற்படும் போட்டி காரணமாக ராஜீவ் கிருஷ்ணாவை மும்பையில் இருக்கும் கும்பல் கடத்துகிறது. அவரை விடுவிக்க அஜீத் மும்பை பயனமாகிறார். அவருடன் அவருடைய உதவியாளர் சமீராவும் மும்பை செல்கிறார். சமீராவுக்கு அஜித் மேல் காதல்.
மும்பையில் ஜீவானந்ததின் நண்பரான பிரபுவின் பாதுகாப்பில் இருக்கின்றனர். பிரபுவிடம் வேலை பார்க்கும் பாவனாவும் கண்டவுடன் காதல் கொள்கிறார். மேலும் பிரபுவிடம் வேலைபார்க்கும் டான் சமோஷா பேரைப்படித்தாலே காமெடி பீஸூனு தெரியுது தானே ஆமாம் கதையின் சொந்தக்காரரான யூகி சேது. அவருக்கு இரண்டு அடிப்பொடிகள் ஜீரா , சட்னி என்ற நாமகரணத்துடன்.
இவர்கள் செய்யும் சேட்டைகள் சிறிது சிரிப்பை வரவழைக்கின்றன.
இடையே பாவனா இரண்டு டூயட்டும், சமீரா ஒரு டூயட்டும் முடிக்கின்றனர். மும்பை கும்பலில் இருந்து ராஜீவ் கிருஷ்ணாவை மீட்டும் திரும்பும் போது அஜீத்தை போட்டு தள்ளுகின்றனர் ராஜீவும், சம்பத்தும். போட்டாச்சு இண்டர்வெல்.
பேக் டூ பாரீஸ் ஏன் அஜித்தை கொலை செய்ய முயற்சித்தார்கள்? அவர்களை அஜீத் எப்படி பழி வாங்கினார் என்பது தான் மிச்ச சொச்சம்.
வழக்கமான ப்ழைய காலத்து காட்சி அமைப்புகள். மும்பை என்று சொல்லிவிட்டு அதைக்கூட மலேசியாவில் படமாக்கியுள்ளனர். பாரீஸையும் அறிமுக கேமராமேன் அற்புதமாக படமாக்கியுள்ளார். வில்லன் போலீஸாக வரும் சுரேஷ்(பழைய நதியா சுரேஸே தான்) கடைசியில் திருந்துவது அக்மார்க் தமிழ் சினிமா.
சமீரா, பாவனா முன்னவர் குதிரை பின்னவர் மான் குட்டி. ஆனாலும் மான் மனதில் ஒட்டிக்கொள்கிறது. அசடாக நடித்துள்ளார் பாவனா.
இசை பரத்வாஜ் இன்னும் அப்படியே தூங்கிகிட்டு இருக்கார். ஒன்னுமே சரியில்லை பிஜிஎமெல்லாம். பாட்டு 2-3 தேறுது.
ஆண்டனியின் படத்தொகுப்பு நல்லா இருக்கு.
சரன் இனிமேலாச்சும் பழைய கதை, பழைய சீன்கள் , பழைய திரைக்கதையை விடுங்க ப்ளீஸ். சரனும் பரத்வாஜ்ஜூம் கொஞ்சம் இல்லை இல்லை நிறைய மாறனும். ஜெயித்த கூட்டணி என்பதற்காக ஜெயித்த கதைகளையும் காட்சி அமைப்புகளையும் அடுக்குவது ஆவ்வ்வ்வ் சொல்ல வைக்குது. காட்சிகள் அனைத்தும் முன் கூட்டியே யூகிக்க வைக்கின்றன.
அசல் பழைய காட்சிகளின் நகல்
வகைகள்
சினிமா,
திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
real review ?
ReplyDeleteis tis revu real? whr u had watched movy?
ReplyDelete:)
ReplyDelete’அசல்’ விமர்சனம் தான் நண்பர்களே.
ReplyDeleteடேய் உண்மையான பெயர் கமெண்ட் போடத்தெரியாதவனே. தைரியமா நிஜ முகவரியுடன் கமெண்ட் போடு. படம் பார்க்காம கமெண்ட் போடாதே. நீ என்ன ப்ளாக்கர் ஓனர்னு நினைப்பா, போடா சின்ன புள்ள தனமா காமெடி பண்ணாத. நான் விஜய் ரசிகனும் அல்ல. என்னுடைய வேட்டைக்காரன் ரிவியூ பார்த்தவங்களுக்கு தெரியும். மொத்ததில் சிவா ஒரு அரைவேக்காடு இல்லை குறைப்பிரவசம் என்றே தோனுது.
ReplyDeleteஎன்னுடைய விமர்சனம். படிட்துவிட்டு கமெண்ட் போடுங்கள்...
ReplyDeletehttp://thalafanz.blogspot.com/