என்னுடைய முந்தைய தொடரை(தொழில் முறை டிவிடி உருவாக்கம்) ஆதரித்து ஊக்கம் தந்த நண்பர்களுக்கு நன்றி. நான் முன்னரே குறிப்பிட்டிருந்த படி இன்று முதல் ஒளி/ஒலித்தொகுப்பு மென்பொருள் பற்றி காண்போம்.
இன்றைய காலகட்டத்தில் எடிட்டிங் வேலைக்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் இண்ட்ஸ்ட்ரியல் ஸ்டாண்டர் என்று அழைக்கப்படுவை சில மட்டும். அதில் முன்னிலையில் இருப்பவை இரண்டு மென்பொருட்கள் மட்டுமே.
1.அவிட் புரோ
2.பைனல் கட் புரோ
இவை இரண்டு மட்டுமே பெரும்பாலும் திரைப்பட ரீதியிலான படத்தொகுப்பு மென்பொருட்கள்.
அவிடே இதில் பிராதானம், பைனல் கட் புரோ(FCP) ஆப்பிள் நிறுவணத்தின் தயாரிப்பு எனவே கட்டாயம் ஆப்பிள் கணினி வேண்டும் இயக்க. அவிட் விண்டோஸ்/மேக் கில் இயங்கும் படி உள்ளது.
மேலே சொன்ன இரண்டும் நல்ல மென்பொருட்கள் இன்றைய காலகட்டத்தில் அவற்றிற்கு போட்டியாக சில மென்பொருட்கள் உள்ளன.அவற்றை கொண்டு வெளிநாடுகளில் படத்தொகுப்பும் செய்கின்றனர்.
1.அடோப் ப்ரிமியர்
2.பினாக்கில்
3.சோனி வேகாஸ்
4.எடியஸ்
இதில் முதல் இரண்டு மென்பொருட்கள் உங்களுக்கு முன்னரே பரீட்சயம் ஆகி இருக்கலாம் குறைந்த பட்சம் கேள்விப்பட்டிருக்கலாம். அடோப் நிறுவணத்தின் மென் பொருளான ப்ரிமியர் தொகுப்பு நம் நாட்டில் கொஞ்சம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது காரணம் ரெம்ப நாளா பீல்டில் அந்த மென்பொருள் இருப்பதால்.
பினாக்கில் நம்முடைய திருமண வீடியோ தொகுப்பாளர்களின் விருப்பமாக இருக்கிறது காரணம் எளிதான முறை ,திருமண வீடியோக்களுக்கு ஏற்ற டெம்ப்ளட்டுகள், எபக்ட்டுகள் போன்றவை.
எல்லா மென்பொருட்களும் ஒன்றே அவை வித்தியாசப்படும் அளவீடுகள் சில முறைகளை சார்ந்ததே. அவை
1. வெளியீட்டு தரம்
2. உள்ளீட்டு முறைகள்
3. புரிந்து கொள்ளும் தன்மை
4. நீட்சிகள்(ப்ளக்கின்) / உதவிகள்
வெளியீட்டு தரம் எல்லா தொழில்நுட்ப மென்பொருட்களிலும் பெரும்பாலும் ஒரே முறையில் இருக்கும். உள்ளீட்டு முறைகள் இன்றைய காலகட்டத்தில் எல்லா மென்பொருட்களும் எல்லா பார்மட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த கடைசி 2 பாயிண்டுகள் தான் நமக்கு முக்கியம்.
புரிந்து கொள்ளும் தன்மை, அவிட் , fcp போன்றவை புதிய பயனர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையில் இல்லை என்பது உண்மை காரணம் அவற்றின் உயர்வான நிலை. இந்த அவிட் மென்பொருளை பின்பற்றி இடைமுகப்பை (interface)கொண்டுள்ள மென்பொருட்கள் பிரிமியர் மற்றும் இடியஸ். எனவே இவற்றையும் கவனிக்கும் புதிய பயனருக்கு(user) இந்த வகை மென்பொருட்களை கண்டாலே பயம் ஏற்படும்.
நீட்சிகள் என்று அழைக்கப்படும் ப்ளக்கின்கள் பெரும்பாலும் முன்னிலையில் உள்ள நிறுவனங்களுக்கே அதிகமாக கிடைக்கின்றன. அந்த வகையில் அதிகம் காசு பார்ப்பவர் முதல் இரண்டு நிறுவணங்களும் , அடோப்பும் மட்டும். பினாக்கில் இந்த நீட்சிகளின் மூலமாக தான் பொழப்பை நடத்திக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை. அந்த வகையில் பினாக்கில் கொஞ்சம் விலை குறைவே. ஒரு யுஎஸ்பி கேப்சர் கார்ட் பினாக்கிலில் வாங்கினாலே போதும் உடனே ஒரு பினாக்கில் மென்பொருள் சேர்த்தே கொடுத்துருவாங்க .
நம்மில் பெரும்பாலோனர் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்து பல குறிப்புகள், மின் புத்தகங்களை படித்து முயற்சி செய்தாலும் சில அடிப்படை தொழில்நுட்ப தகவல்கள் தெரியாததாலும், இடைமுகப்பின் குழப்பமான சூழலும் நமக்கு பெரும் பின்னடைவை தரும் என்று சொல்லுதல் மிகையாகாது.
நான் உங்களுக்கு இந்த தொடரில் தரமான ஒரு தொழில் நுட்ப ரீதியிலான மென்பொருளை பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த மென்பொருளின் தரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆங்கிலப்படங்கள் இந்த மென்பொருளில் தொகுக்கப்பட்டுள்ளது(எடிட்) . மேலும் வீடியோ துறையில் ஒரு உலகப்புகழ் பெற்ற நிறுவணத்தின் வெளியீடு. மிக எளிதான் விண்டோஸின் அமைப்பை கொண்ட இடைமுகப்பு இதனை விண்டோஸ்/மேக் இரண்டிலுமே இயக்கலாம். சரி பில்டப் போதும் அந்த மென்பொருளின் பெயர் சோனி வேகாஸ்
ஆம் சோனி நிறுவனத்தின் தயாரிப்பு தான் இந்த சோனி வேகாஸ். சோனி நிறுவனத்தில் இதே போல நிறைய மென்பொருட்கள் வெளியிடப்படுகின்றன. அந்த நிறுவணத்தின் இணையத்தளத்தில் நீங்கள் காணலாம். மேலும் எல்லா மென்பொருட்களுக்கும் இலவச சோதனைகால தொகுப்பு உள்ளது. நீங்கள் தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.
இந்த மென்பொருளை தேர்ந்தெடுக்க காரணங்கள்
1.எல்லோருக்கும் பார்த்தவுடன் குழப்பம் ஏற்படா இடைமுகப்பு
2.தொழில் நுட்ப ரீதியிலானது
3.கையாள எளிது
மேலும் என்னுடைய நோக்கம் ஒரு மென்பொருளை கற்பிப்பது அல்ல வீடியோ எடிட்டிங்கை பற்றி சொல்லித்தருவதே அதனை ஒரு எளிய அதே நேரத்தில் தரமான மென்பொருள் கொண்டு விளக்கும் போது உங்களுக்கு எளிதில் புரிந்து கொள்ள முடியும் அதனைக்கொண்டு நீங்க இன்ன பிற மேலே சொன்ன மென்பொருட்களையும் கையாளலாம் எளிதாக.
விருப்பப்படும் நண்பர்கள் இந்த மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள் அடுத்த பகுதியில் இருந்து நேரடியாக மென்பொருளுக்கு செல்வோம்.
தொடரும்....
பிடிச்சிருந்தா ஓட்டும்/ கருத்தும் போடுங்க நண்பர்களே!
VERY GOOD EXPECTING MORE LESSON.
ReplyDeleteநல்ல தொடர் நண்பர உங்கள் பதிவு வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். எங்களை போன்றவர்களுக்கு ஒரு நல்ல வலைப்பூ... நன்றி நண்பரே...
ReplyDeleteஅன்றி கிருது அவர்களே ,மலர் அவர்களே. உங்களுடைய ஆதரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி. என்னால முடிந்த அளவு சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன்.
ReplyDeleteநிறுவனம் என்பதே சரி,பல இடங்களில் பெரிய "ண" இருக்கு.
ReplyDeleteமென்பொருட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுங்க,புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
நன்றி நண்பரே. திருத்திக்கொள்கிறேன்.
ReplyDeleteNice and keep it up
ReplyDeletesuperb excellent fantastic balle!!!
ReplyDelete