Sunday, February 26, 2012

மெய்யோடு பொய்யாக - ரகசியம் - பகுதி-1

மெய்யோடு பொய்யாக
( ரகசியம் )


கீழே கிடந்தவனின் ரத்தம் வெள்ளை நிற சட்டையை தாண்டி , காவிரியின் புதுப்புனல் போல கிழிந்த சட்டையின் பாகங்களில் கால் பரப்பி அந்த அறையை ஆக்கிரமிக்க தொடங்கியது.

இன்னும் வெறி வந்தவன் போல கையில் அந்த அந்த 3 அடி நீள ராஜா காலத்து வாளை பிடித்துக்கொண்டு, விளக்கொளியில் பள பளக்கும் அந்த வாளை வெறித்துக்கொண்டிருந்தான்.....

பின்னால் இருந்து ஒரு குரல்

கட் இட் - குரலின் முதலாளி ஜேகே என்று அழைக்கப்படும் ஜே.கிருஷ்ணமூர்த்தி.

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் முன்னனி இயக்குநர். இவர் இயக்கத்தில் நடிக்க பாலிவுட் முதல் போஜ்பூரி நாயகர்கள் வரை தவமிருக்கின்றனர். மனுசன் பெர்பக்‌ஷன்ல கில்லாடி. சில இயக்குநர்கள் மாதிரி படத்தை 2-3 வருசம் எடுத்து அதுல பெர்பஷன் காட்டுறவரில்லை. படம் தொடங்க குறைந்தது 1 வருஷம் எடுத்துக்கிடுவார். ஆரம்பிச்சாச்சுனா இயற்கை தொல்லை கொடுக்காவிட்டால் 6 மாசம் தான். எல்லாம் சொந்த தயாரிப்பு. முடித்தவுடன் நல்ல விலைக்கு பெட்டியோட ஆட்கள் நிற்கையில் அவருக்கு என்ன வருத்தம்.

ராஜேஷ் கண்டினியுட்டி பாரு - ஜேகே குரல் கொடுக்க

ஹீரோ மாதிரி ஒருத்தன் ஓடி வருகிறான் பாருங்கள் இவன் தான் நம்ம ஹீரோ.பேரு ராஜேஷ் கண்ணன் , வீட்ல கூப்பிடறது கண்ணன் இவன் விருப்பப்பட்டு எல்லோரையும் கூப்பிட வைக்கிறது ராஜேஷ். ஜேகே கிட்ட 4 வருஷமா இருக்கான் எம்பிஏ வும் எஞ்சினீயரிங்க் ல படிச்ச எலக்க்ட்ரானிக்ஸூம் கை கொடுக்க ஜேகே சேர்த்துக்கிட்டார். இப்ப அசோசியேட்டா இருக்கான். ஒரு கதை ரெடியா வச்சிருக்கான், முன்னனி நடிகர் க்ருஷை மனசில் வச்சிருக்கான். இந்த படம் முடியவும் ஜேகே நல்ல புரொடியூசர் அரேஞ்ச் செய்து கொடுப்பதாக வாக்கு கொடுத்திருக்கார்.

ஜெஸி அந்த ப்ராபர்டீஸ்லாம் எடுத்து வை - ராஜேஷ்

ஜெஸி - ஜேகே யோட அஸிஸ்டண்ட் ல ஒருத்தி லயோலாவின் விசுவல் கம்யூனிகேசன் கை கொடுக்க அதை விட பெரிய சப்போர்ட் லொட லொட வாய் அதனாலே ஜேகே வாய்ப்பு கொடுத்திருக்கார். சத்தியமா இவ தான் ஹீரோயின்.

ஆரஞ்சு வண்ண போர்ஷே சர்னு வந்து நின்னது. மொத்த யுனீட்டும் திரும்பி வாய் பிளக்க. உள்ளே இருந்து பஜன்லால் பெரிய தொப்ப்பையுடன் வெளியே இறங்கினார். ஜேகேயை பார்த்து கைகூப்பி கும்பிட்டார். ஜேகேயும் பதிலுக்கு கை கூப்பி கட்டித்தழுவி வரவேற்றார். ஜேகேயின் பைனான்ஸியர் தான் பஜன்லால். அதையும் தாண்டி நல்ல நட்பு இருந்தது. இருக்காத பின்ன , பஜன்லால் ஜேகேயின் ஒரு படத்தில் குறைந்தது 7-10 கோடி வரை சம்பாதிப்பார் அதுவும் 6 மாசமே முதலீட்டீல். ஆனாலும் மனுசன் தங்கமானவர். ஜேகே சிடு சிடுனு பேசுனாலும் சமாளிப்பார். பஜன்லால்க்கு அவர் பேர் போட்டு பேனரில் அவர் தயாரிப்பில் ஒரு மெகா பட்ஜெட் படம் பண்ணனும்னு ஆசை ஜேகேயை நச்சரிச்சிக்கிட்டே இருக்கார். ஜேகே பிடிகொடுக்கவில்லை.

பஜன்லால்லை அந்த சின்ன சேர் வாங்கி கொள்ள அவரது உடல் அசௌரியமாக நினைத்து உதட்டை பிதுக்குவது போல உடலை வெளியே தள்ளிக்கொண்டு பேலன்ஸ் செய்தது.

ராஜேஸ் இங்க வாடா- ஜேகே கூப்பிட

சார் ஒரு 5 நிமிசம்.... - ராஜேஸ்

ஜெஸி கிட்ட பார்க்க சொல்லிட்டு வா..- ஜேகே

இவன் தான் என்று ஜேகே பஜன்லாலை பார்வையிலே காட்டுகின்றார்.

நீ சொன்ன பையன் இவன் தானா ஜேகே

ஆமா லால் நல்ல டேலண்ட் டெக்னிக்கலி நல்ல அப்டேட் , எக்ஸ்ட்ராடினரி பாய். டோண்ட் வொரி

லால் கொஞ்சம் அவநம்பிக்கையுடன் தலையாட்டினார்.

ஹலோ சார் ரெம்ப நாளாச்சு பார்த்து ஆபிஸ் பக்கமே காணோம்- ராஜேஷ்

என்னைத்தெரியுமா - பஜன்

இவன் என் புள்ளை மாதிரி என்னைப்பற்றி எல்லாம் தெரியும் லால் - ஜேகே

ஓஓஓஓஓஒ....

ராஜேஷ் அந்த மெய்யோடு பொய்யாக கதையை நம்ம சேட்டுகிட்ட சொல்லு இவன் தான் உன் புரடியூசர் இப்பல இருந்த. ஆல் த பெஸ்ட்னு கை கொடுத்தார்.

மாடர்ன் பையன் தான் ராஜேஷ் ஆனாலும் சடார்னு ஜேகே கால்ல விழ மொத்த யுனீட்டும் திரும்பி பார்த்தது, அவனை தூக்கி கட்டிபிடித்து மீண்டும் வாழ்த்து சொன்னார்.

சார் , பேட்ஜ் ஒர்க் கொஞ்சம் இருக்கு அப்புறம் எடிட் கொஞ்சம் பேலன்ஸ் இருக்கு அது வரைக்குமாச்சும் நான் இருக்கேனே - ராஜேஸ் தயங்கி சொல்ல

உன்னை நம்பியே இருக்கமுடியுமா அடுத்தாளை ரெடி செய்யனும் , ஜெஸி இருக்கா தானே பார்த்துக்கிருவா.

ஜர்க் அடித்து நின்றான் ராஜேஷ் , சார் என்னோட அஸோசியேட்டா ஜெஸி தான் இருக்க போறா....

சரி அதை அப்புறம் பார்க்கலாம் நீ இப்ப பஜன்லால் கூட போய் கதை சொல்லு.

இருவரையும் உள்வாங்கிய போர்சே நுங்கம்பாக்கத்தின் மிகப்பெரிய ஹோட்டலின் வாயிலில் நின்றது. கார் ஜாக்கி போர்சேவின் கீயை ஆர்வமுடன் வாங்கி பார்க்க செய்ய கிளம்பினான்.

பஜன்லால் ஒரு சூட் போட்டிருந்தார்.

அரை மணி நேரத்தில் மொத்த கதையையும் அதன் முக்கியமான காட்சிகளையும் விளக்கி தெளிவாக கூறினான் ராஜேஷ்

சேட்டு ரெம்ப சந்தோஷத்தில் இருந்ததார் அடுத்த ஜேகே நீ தான்ப்பா.

என்ன பட்ஜெட் படத்திற்கு ப்ளான் செய்திருக்க?

அவன் சொன்ன தொகை சேட்டிற்கு செட் ஆகலை

இன்னும் கொஞ்சம் ஏத்திக்க , பட்ஜெட் பிரச்சினை இல்லை.

இல்லை சார் இவ்வளவு தான் ஆகும் என்று கான்பிடண்ட்டா பேசியதில் சேட்டு டோட்டல் ஆஃப்.

45 நாள் லண்டன் ஷெட்யூல் இருக்குல நீ இந்த வாரம் லோகேசன் பார்க்க போயிடு. எத்தனை அஸிஸ்டெண்ட் கூட்டிப்போற.

ஒரே ஒரு ஆள் சார் என்னோட அசோசியேட்

ஆங்...க் என்னவோ பேர் சொன்னீயே ஜெ.....ஸி...

ஆம சார் ஜெஸி கிறிஸ்டோபர்

சரி நீ பாஸ்போர்ட் டீட்டெய்ல் ரெண்டு பேரோடதை கொடுத்துடு நம்ம ஆபீஸ்ல. சௌகார் பேட் ஆபீஸ் ஓக்கேவா இல்லைனா சொல்லு உனக்கு ஏற்ற இடத்தில் வச்சுக்கலாம்.

படம் ஆரம்பிக்கும் போது அதை சொல்றேன்....

ஏதென்ஸ்(Athens, க்ரீஸ் நாடு) ன் தெற்கு பகுதியில் உள்ள Glyfada அழகான கடற்கரையை உடையது. ஏதென்ஸில் உள்ள பெரும் செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் எல்லோரையும் உள்ளடக்கி இருந்தாலும் Glyfada  அந்த அலை இல்லா கடலை போல ரெம்ப அமைதியா இருக்கும்.

கடற்கரையோரம் Karamanli Ave இருக்கும் Sea n' City இரவு விடுதியில் நான்கு பேர் அமரும் டேபிளை ஆக்கிரமத்து இருந்தனர். ஆர்1 , பிகாம்ப்ளக்ஸ், சைக்கிள் மற்றும் ரேடார் முறையே கடிகார முள் சுற்றும் திசையில் அவர்களது பெயர்.

ஆம் அவர்கள் 4 பேருக்குமே மற்றொவருடைய நிஜப்பெயர் தெரியாது. 4 பேரும் அமெரிக்க உளவு அமைப்பான் சிஐஏ வின் நேரடி ஏஜெண்டுகள்.

டாம் வருகைக்காக காத்திருந்தனர். க்ளன்ஃபெட்ஜ் சிங்கிள் மால்ட் 18  இய்ர்ஸ் தாகம் தனித்து கொண்டு இருந்தது நால்வருக்கும்.

நாலு டேபிள் தள்ளி ரூல்ஸ் , போன வாரம் பார்க் செய்திருந்த ரெமி மார்ட்டீனை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். இவர்களை நோட்டம் இட்ட படி.

ரூல்ஸீன் சாமர்த்திய பார்வையை கேட்ச் செய்த ரேடார் தன்னுடைய M1911 semi automatic ன் மேக்கசீனை அழுத்தி சரி பார்த்து டிரிக்கரில் விரலை மாட்டிக்கொண்டான்.

சரியா அடுத்த 4 நிமிடத்தில் டாம் வந்து சேர்ந்தான். சில சம்பாஷனைகளுக்கு பிறகு சைக்கிளின் பிஸ்டல் துப்பிய ஒரு தோட்டா டாமின் தலையில் வசதியாய் பார்க் செய்ய டாம் விழித்தபடியே பிணமானான்.

பாரில் ஏற்பட்ட குழப்பத்தை போக்க ரூல்ஸ் எழுந்து சத்தமாக..

போலீஸ் , ஐ’ம் சிட்டி கமிஷனர் ரூல்ஸ்

சிஐஏ கூட்டத்தை பார்த்து கமான் பாய்ஸ் லெட்ஸ் மூவ் என்று அழைத்து சென்றார்...

தொடரும்

No comments:

Post a Comment

நண்பர்களின் கருத்துக்கள்