Saturday, July 17, 2010

அடோப் என்கோர் சிஎஸ் 4 - டிவிடி மற்றும் ப்ளூரே டிஸ்க் உருவாக்கம் பகுதி -01

நண்பர்களே,

வணக்கம், ஏற்கனவே தொழில் முறை டிவிடி உருவாக்கத்தில் டிவிடி மேஸ்ட்ரோ ஸ்ப்ரூஸை பற்றி விரிவாக விளக்கியுள்ளேன். இங்கே மீண்டும் ஒரு டிவிடி/ப்ளூரே டிஸ்க் உருவாக்கம் பற்றி விளக்க போகின்றேன் . இப்பொழுது பயன்படுத்தப்போகும் மென்பொருள் இன்றைய நிலவரத்தில் முன்னனியில் இருக்கும் அடோப் என்கோர் டிவிடி . இதில் தற்போதைய வெர்சன் சிஎஸ்5. என்னிடம் இருப்பது சிஎஸ் 4 அதனை பின்பற்றி விளக்குகிறேன். பெரிய மாற்றங்கள் ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

இணையத்தில் தேடியதில் இது தான் கிடைத்தது சைனிஸ் எழுத்துக்களை கண்டு மிரள வேண்டாம் என்னிடம் உள்ள வெர்சன் ஆங்கிலமே அதனை கொண்டே மேலதிக விவரங்கள் தரப்போகிறேன்.

இது அடோப் நிறுவனத்தில் மென்பொருள் பெரும்பாலும் ப்ரீமியர் எனும் வீடியோ எடிட்டிங் மென்பொருளுடன் சேர்ந்தே வரும். இதனுடைய சிறப்பம்சங்கள் என்று பார்த்தால்

*எளிதான அணுகுமுறை மேஸ்ட்ரோ போல கடினம் இல்லை
*மிகவும் வேகமான டிவிடி பில்ட்
*தவறுகளை டிவிடி பில்ட் செய்யும் முன்னே கண்டுபிடித்து சரிசெய்துகொள்ளலாம்.
*ப்ளூ ரே டிஸ்க் உருவாக்கலாம்
*ஏசி3 ,டிடிஎஸ் , பிசிஎம் வேவ் போன்ற ஆடியோ பார்மட்டுகளையும் ஏற்றுக்கொள்ளும்
*சப்டைட்டில் சேர்க்கலாம்
*மெனுவினை நேரடியாக போட்டோஷாப்பில் இருந்து லேயர்களாக கொண்டு வந்து இங்கு சேர்க்கலாம்
*லேயராக இருப்பதால் பட்டன்கள் அமைப்பு எளிதாகிறது.
*ப்லோ சார்ட் வடிவில் இணைப்புகள் காட்டப்படுதால் தவறுகளை கண்டுபிடிக்க எளிதாக உள்ளது
*மென்பொருளிலே டிவிடி/ப்ளூரே பர்ன் செய்யும் வசதி
*அப்டேட் உள்ளது, மிகவும் எளிதான் ஹெல்ப் பிடிஎஃப் பார்மட் இணையத்தில் அவர்களுடைய அகப்பக்கத்திலே இருக்கிறது.

குறைகள்:

*ஸ்க்ரிப்ட் வகை சப்டைட்டில் பார்மெட் மட்டுமே சப்போர்ட் செய்கிறது
*சில வகையான ப்ளேயர்களில் ஆடியோ லாங்குவேஜ் சரியாக காண்பிப்பதில்லை
*டிவிடி 9 க்குரிய டபுள் லேயர் ப்ரேக் எனும் ஆப்சனை பில்ட் நேரத்தில் வைத்திருப்பது சரியாக இல்லை.
*ஒரு முறை இணைத்த பைலை மீண்டும் இணைக்கையில் முழுவதும் செக் செய்கிறது ரெபரன்ஸ் பைல் வைத்துக்கொள்வதில்லை.
*புராஜக்ட்டில் assets இனைக்கும் பொழுது அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

அடுத்த பகுதியில் இருந்து என்கோரை பிரிச்சு மேயலாம்.

1 comment:

  1. மிக பயனுள்ள தொழில் நுட்ப தகவல்களை எளிய முறையில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி. எடிட்டிங் தொடர்பான இது போன்ற அருமையான பதிவுகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். (adobe premiere pro version -களை பற்றி வேறு யாரும் தமிழில் எழுதுகிறார்களா என்பதை கூறினால் பயனடைவோம்)

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்