Tuesday, June 28, 2011

மெய்யா? பொய்யா?

காதல் மெய்யா? பொய்யா?
மெய் தான் ...

மெய் என்னும் உடல் கொஞ்சம்
உறங்கி எழ தேவைப்படும்
நிழல் தான் காதல்.

நீ பேசி விட்டு சென்ற வார்த்தைகள் 
உன்னைக் கொல்லுமா தினம்?
புரியவில்லை எப்படி என்று?

நீ பேசிய கனிமொழி இன்னுமும்
காதோரம் கேட்பதிலே 
உறக்கம் தொலைக்கின்றன் 
என் இரவுகள்

மெய்யிலே திளைத்த நம் காதல்
மெய்யோடு மெய் மறந்து நின்றதெப்படி?

வாய் வார்த்தைகள் கூட 
வாக்கு என்று வாழும் எனக்கு
உன் பொய் வார்த்தைகள் 
மெய் என்று புரியாமல் போனதே....

எத்தனை நடிப்புகள்
எத்தனை ஏமாற்று வித்தைகள்

நேற்று அல்ல இன்றல்ல 
எத்தனை நாட்கள் என்பதை 
எழுத நாள் காட்டி கூட கிடைக்காதே...

உன் மீது கோபம் வந்தாலும்
என் மீதே பழி தீர்க்கிறேன்

திருப்பி தந்த பரிசை எதிர்பார்க்கவில்லை
என்றோ சொன்ன வார்த்தை கூட 
உனக்கு ஞாபகமில்லையா?

பொய்களில் திளைக்கும்
பெண்களின் காதல் 
மெய்யோடு போய்விடுகிறது.

காதல் மெய்யில் திளைக்கும் பொய்யே
ஆதலால் காதல் செய்யாதீர் 


1 comment:

  1. வார்த்தைகளின் கோர்வை அருமையாக இருக்கிறது.இணைய இதழ்களில்(வார்ப்பு,திண்ணை,உயிரோசை,பதிவுகள்,முத்துக்கமலம்,நந்தலாலா,நவீன விருட்சம்) தொடர்ந்து எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பான சதுரங்கத்தை வாங்க தொடர்பு கொள்க 9597332952.எனது blog:pamathiyalagan.blogspot.com

    ReplyDelete

நண்பர்களின் கருத்துக்கள்