Showing posts with label எங்கோ படித்தது. Show all posts
Showing posts with label எங்கோ படித்தது. Show all posts

Monday, November 16, 2009

பணம்

ஒரு மனிதன் இருந்தான் நல்லா உழைப்பான் நல்லா பணம் சேமிப்பான், அதே நேரம் அதை செலவழிக்க மாட்டான். பெரும் செல்வம் சேர்த்து வைத்தான். அதை எண்ணிப்பார்ப்பதில் பெரும் ஆனந்தம் கொள்வான். தினமும் வேலை முடித்து வந்து பணத்தை எண்ணிப்பார்த்து ஆனந்தப்பட்டுக்கொண்ட பின்பே தூங்க செல்வான்.

ஒரு நாள் தன் மனைவியிடம் சொன்னான்

“நான் இறந்துவிட்டால் என்னுடைய பணம் முழுவதையும் என்னுடன் சேர்த்து புதைக்க வேண்டும் , என்னுடைய இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கைக்கு அந்த பணம் தேவை”

“சரி” என்றாள் மனைவி

“நீ எனக்கு சத்தியம் செய்து கொடு “ என்றான் கணவன்

அவளும் பைபிள் மேல் வைத்து சத்தியம் செய்தாள்.இந்த நிகழ்ச்சி நடக்கும் போது மனைவியின் தோழியும் உடனிருந்தாள்.

திடிரென கணவன் இறந்துவிட அடக்கத்தின் போது ஒரு சிறிய கவரை சவப்பெட்டியினுள் போட்டாள், பின்பு அடக்கம் முடிந்தது.

தோழி கேட்டாள் “உன் கணவன் சொன்னபடி நீ பணத்தை போட வில்லையே”

“நான் கடவுள் நம்பிக்கை உள்ளவள் வாக்கு தவறமாட்டேன் நான் தான் சிறிய கவர் ஒன்னு போட்டேனே பாக்கலையா” திரும்பி கேட்டாள்

“உன் கணவன் நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தானே”

“ஆமாம் எல்லாவற்றையும் என்பேரில் ஒரு பேங்க் அக்கவுண்டில் போட்டு கணவரது பெயரில் செக் எழுதி அந்த கவரில் வைத்து போட்டேன் “என்றாள்

தோழிக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிட்டது

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க

Sunday, November 15, 2009

கடவுள் எங்கே

கடவுள் பூமியை படைச்சு களைச்சுப்போயி இருந்தார். மக்களுடன் மக்களாகவே தங்கி இருந்தார். ஏதாச்சும் ‘பக்’ இருந்தா களையுறதுக்கு.
ஒரு நாள் ஒரு விவசாயி வந்தாரு ,


“சாமி நான் நாத்து நட்டுருக்கேன் கொஞ்சம் இன்னைக்கு மழை பெய்ய வச்சீனா நல்லா இருக்கும்” சொல்லிட்டு நின்னார்

“சரிப்பா பாக்கலாம்” கடவுள் சொன்னார்

இன்னொரு குயவன் வந்து

“மண் பாண்டம்  செஞ்சு காய வச்சுருக்கேன் , மழை பெஞ்சு கெடுத்துட போகுது கொஞ்சம் மழை பெய்யாம வெயில் நல்லா அடிக்க வைச்சுப்பா” இப்படி ஒரு கோரிக்கை வைத்தார்

கடவுள் கொஞ்சம் திணறித்தான் போயிட்டார் ஒரே இடத்துல ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா வானிலை மாற்ற முடியாதே அதனால்.

இதே போல ஏட்டிக்குப்போட்டியாக பிரச்சினைகள் வந்தது கடவுளுக்கு ஆள் கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டாப்ல.

இந்த பயலுக கூட இருந்தா நம்மள கிண்டி கெழங்கெடுத்துடுவானுக. எங்கயாச்சும் போயி ஒக்காந்துகிடனும், யோசிச்சுப்பார்த்தாப்ல

இமய மலை உச்சியில போயி உக்கார்ந்த , ம்ஹூம் ஏறி வந்துடுவாங்க

சரி வானத்துல போயி உக்கார்ந்தா ம்ஹூம் அங்கயும் பறந்து வந்திருவாங்க.

கடலுக்குள்ள் போனாலும் வந்துருவாங்க ஒரே குழப்பமா இருக்கேனு ஆலோசனை கேக்க அந்த ஊரில் வயசான ஒருத்தர பாக்க போனாரு.

அந்த கிழவன் ரெம்ப சிம்பிளா ஒரு பதில் சொன்னாரு

“மனிதனின் ஆள் மனதில் ஒளிஞ்சுக்க” என்று சொன்னார்

கடவுள் சந்தேகத்துடன் பாக்க

“எவன் ஒருவன் தன்னை அறிகிறானோ அவன் என்றுமே உன்னை தொந்தரவு செய்ய மாட்டான். தனக்குள்ளே இருக்கும் கடவுளை அறியாதவனும் உன்னை தொந்தரவு செய்ய முடியாது”

அன்னைக்கு போயி ஒக்காந்தவருதேன் இன்னும் அங்கேயே இருக்கார் இறைவன்,

Saturday, November 14, 2009

கணவன் விற்பனைக்கு

இப்படி ஒரு போர்ட் மாட்டி ஒரு விற்பனை அங்காடி மொத்தம் ஐந்து தளங்கள் கொண்ட அந்த பேரங்காடியில் ஒவ்வொரு தளமாக மேலே செல்ல செல்ல மிகவும் சிறந்த தகுதிகளுடன் கணவன்கள் இருப்பார்கள் மேலும் மேலே சென்றுவிட்டால் மீண்டும் கீழே வந்து தேர்ந்தெடுக்க முடியாது மேலே மட்டுமே செல்ல முடியும்.

ஒரு நவநாகரீக மங்கை விஜயம் செய்தாள் கடைக்கு


கீழ்தளத்தில் அவளிடம் கட்டுப்பாடுகளை விளக்கி கூறினான் விற்பனையாளன்
ஒவ்வொரு தளத்திலும் அந்த தளத்தை பற்றிய குறிப்பு வெளியே வைக்கப்பட்டிருக்கும். குறிப்பை படித்துவிட்டு உள்ளே சென்றாள் அந்த தளத்தில் மட்டுமே நீங்கள் கட்டாயம் உங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க முடியும் பிறதளங்களுக்குள் நுழைய முடியாது. மேலும் மேலே சென்று விட்டால் கீழே உள்ள தளங்களில் தேர்ந்தெடுக்க முடியாது.
சரி என்று தலையாட்டி கணவனை தேர்ந்தெடுக்க ஆயத்தமானாள் மங்கை.

1.முதல் மாடி - வெளியில் உள்ள குறிப்பு
இங்கே உள்ள ஆண்கள் வேலை கிடையாது வீட்டு வேலைகள் செய்வார்கள்.

வேணாம்னு நுழையாமல் அடுத்த மாடிக்கு ஏறினாள்

2.இரண்டாம் மாடி - குறிப்பு
இங்கே உள்ள ஆண்களுக்கு வேலை உண்டு ஆனால் வீட்டு வேலைகள் செய்ய மாட்டார்கள்

இது தேவையில்லைனு அடுத்த மாடிக்கு முன்னேறினாள்.

3 மூன்றாம் ஆம் மாடி - குறிப்பு
இங்கே உள்ள ஆண்கள் நல்ல உத்தியோகம் , நல்ல சம்பளம் , குழந்தைகளை கவணித்து கொள்வார்கள் ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லை.
அய்யோ இது நமக்கு ஆகாதுனு ந்கர்ந்தாள்

4 நான்காம் மாடி குறிப்பு
இங்கே உள்ள ஆண்கள் நல்ல வேலை , மிக அதிகமான சம்பளம், குழந்தைகளையும் கவனித்துக்கொள்வார்கள், கடவுள் நம்பிக்கை உண்டு, வீட்டு வேலைகளையும் செய்வார்கள் மற்றும் மனைவியை எதிர்த்து பேசமாட்டார்கள்.

இங்கே ஜெர்க்காகி நின்றாள் மங்கை இங்கேயே எடுத்துடுவோமேனு மனசு சொல்ல , நோ நோ இன்னும் ஒரு மாடி இருக்கு அங்க இதை விட பெஸ்ட் இருப்பாங்க தானே கீழே அப்படி தானே சொன்னாங்க  சோ நாம அங்க போயி தேர்ந்தெடுக்கலாம். என்று நகர்ந்தாள் 5வது மாடிக்கு

5 ஐந்தாவது மாடி
வெறும் மொட்டை மாடி வெறும் டிஜிட்டல் குறிப்பு மட்டும் தொங்கி கிட்டு இருந்தது. நீங்கள் 10000004 வது ஆள் இந்த மாடிக்கு. நீங்கள் நிற்பதற்கு நேர் எதிரானா திசையிலே உங்களுக்கு வெளியேறும் பாதை உள்ளது. நீங்கள் செல்லலாம்

நீதி : பேராசை பெரும் நஷ்டம் , பெண்களின் ஆசைக்கு அளவில்லை(பெண்கள் கோபம் கொள்ள வேண்டாம்)

குறிப்பு : படத்திற்கும் செய்திக்கும் சம்ப்ந்தம் இல்லை.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க , பிடிக்கலைனாலும் கருத்து சொல்லுங்க