Showing posts with label ஸ்ப்ரூஸ் மேஸ்ட்ரோ. Show all posts
Showing posts with label ஸ்ப்ரூஸ் மேஸ்ட்ரோ. Show all posts

Monday, December 28, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 12

படங்களை பெரிதாக காண படங்களை க்ளிக் செய்து பார்க்கவும்.

சில வசதிகளை பற்றி காண்போம் இந்த பகுதியில்

மேஸ்ட்ரோவில் முகப்பில் இருக்கும் டூல் பாரில் இருக்கும் விசயங்களை காண்போம்



மேலே உள்ள படத்தில் சில அயிட்டங்களை எண்களால் குறியிட்டுள்ளேன்

1.டிவிடி கம்பைல் செய்ய இந்த பட்டன் உதவுகிறது எல்லா வேலையும் முடிச்சு ப்ரிவீயூலாம் பார்த்த பின் எல்லாம் ஓக்கே எனும் நிலையில் இந்த பட்டனை அழுத்தி தோன்றும் மெனுவில் டிவிடி சேவ் ஆகவேண்டிய டிரைவை செலகட் செய்து கொடுக்கலாம்.

அந்த பட்டனை அழுத்தியதும் கீழே இருப்பது போல ஒரு திரை தோன்றும் அதிலே போல்டரை செலக்ட் செய்து கொடுக்க வேண்டும்.




மேலே படத்தில் உள்ளது போல் செய்துவிட்டு ஓக்கே கொடுத்தவுடன் கம்பைல் ஆகும் கம்பைல் டீட்டெய்ல்லாம் கீழே உள்ளது போல காட்டும். மேலும் எரர் ஏதும் இருந்தாலும் காட்டும். வார்னிங் இருந்தால் கம்பைல் முடிஞ்சதும் காட்டும்.





2- இது டிஸ்க் இமேஜ் உருவாக்க பயன்படுகிறது. இந்த மென்பொருளில் டிவிடி பர்ன் செய்யும் வசதி இருந்தாலும் இது ஹார்ட்வேர் சார்ந்து இயங்க கூடியது எனவே டிஸ்க் இமேஜ் பயன்படுத்த தேவையில்லை நாம் கம்பைல் செய்த புரோகிராமையே நீரோ கொண்டு பர்ன் செய்யலாம்

3-டிவிடியில் பர்ன் செய்ய பயன்படுகிறது இந்த பட்டன் . மேலே சொன்னது போல இப்பொழுது உள்ள ஹார்ட்வேர் இதனுடன் ஒத்தியங்காது எனவே பயன்படுத்த தேவை இல்லை.

4,5,6 இதுவும் ஹார்ட்வேர் சார்ந்து இயங்க கூடியது அதாவது இந்த டிவிடி புராஜக்ட்டை ஒரு டேப்பில் (பீட்டா டேப் , டிவி டேப்) பதிய இந்த மூன்று பட்டன்கள் பயன்படுத்தலாம். 4வது டேப்பில் ரெக்கார்ட் செய்ய , 5- டேப்பை வெரிபை செய்ய , 6-டேப்பை இயக்க.

7-ப்ரிவியூ பட்டன் இதனை கொண்டு நாம் செய்து வைத்துள்ள முழு புராஜக்ட்டையும் செக் செய்து பாக்கலாம் ப்ரிவியூவாக. அந்த பட்டனை அழுத்தினால் பின் வரும் திரை தோன்றும் அதில் டிவிடி ப்ளேயர் ரிமோட் போல பட்டன் இருக்கும் அதனை பயன்படுத்தி சோதனை செய்யலாம்.




மேலே உள்ள திரையே ப்ரிவியூ திரை பொதுவாக நாம் எல்லா வசதிகளையும் பார்த்துவிட்டோம்.

கடைசியாக ஒரு வசதி பார்ப்போம்




மேலே படத்தில் ஒரு மூவியின் மேலே ரைட் க்ளிக் செய்து அதில் தோன்றும் மெனுவில் ப்ராப்பர்ட்டியை க்ளிக் செய்யவும் செய்த உடன் பின் வரும் திரை தோன்றும்.



இதிலே டிஸ்ஸேபிள் யுசர் ஆக்சன் என்பதில் எல்லாவற்றையும் க்ளிக் செய்தால் இந்த வீடியோ ஓடும் போது தேர்வு செய்யப்பட்ட ஆக்சன்கள் எல்லாம் இயங்காது.

உதாரணமாக மோண்டாஜ் , விளம்பரங்கள் போன்றவை ஓடும் பொழுது ரிமோட் மூலமாக நெக்ஸ்ட், பார்வேர்ட், ஸ்டாப், மெனு போன்ற அயிட்டங்களை தேர்வு செய்ய முடியாது அவற்றில் வேண்டியவற்றை டிஸ்ஸேபிள் செய்ய இந்த ப்ராப்பர்ட்டீஸ் உதவுகிறது.
மிச்ச தகவ்ல்கள் எல்லாம் கொஞ்சம் வீடியோ தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் நன்றாக இருக்கும் தற்சமயம் அவை தேவை இல்லை என்றே கருதுகிறேன்.

டிவிடி மேஸ்ட்ரோவில் கருத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்:

1.இணைக்கும் வீடியோ/ஆடியோ பார்மட் m2v / ac3 யாக இருக்கட்டும்.

2.கனெக்சன் விண்டோவில் டைட்டில் மெனு , பர்ஸ்ட் ப்ளே அயிட்டம் போன்றவைகள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

3.ஒவ்வொரு வீடியோவிற்கும் கடைசி சாப்டரின் எண்ட் ஆக்சன் கட்டாயம் கொடுங்கள் அப்பொழுது தான் அந்த வீடியோ ஓடி முடிஞ்சதும் அடுத்த இடத்திற்கு செல்லும் இல்லையெனில் நின்று விடும்.

4.பர்ன் செய்ய நீரோ பயன்படுத்தும் பொழுது டேட்டா வெரிபிகேசன் கொடுங்க.

5.மெனுக்களை கட்டாயம் பிஎம்பி பார்மட்டில் சேவ் செய்யுங்கள்

6.சப்பிக்சரை சேமிக்கும் பொழுது பின்புலம் இல்லாமல் சேமியுங்கள் ஆனால் பிஎம்பியாக சேமிப்பதால் வெள்ளை பின்புலம் சேர்க்கப்படும். அதை மேஸ்ட்ரோவே நீக்கி விடும்.

7.மேஸ்ட்ரோ பழைய காலத்து சாப்ட்வேர் எனப்தால் பி4 வகை ப்ராசசர் வரை மட்டுமே சப்போர்ட் செய்யும் இந்த காலத்து i5,i7,dual core , core 2 dua  போன்ற பிராசசர்களை ஏற்றுக்கொள்ளாது. எனவே ஒரே ஒரு ப்ராசரை கொண்டு மேஸ்ட்ரோவை இயக்கும் படி செய்யுங்கள்.இதற்காக பி4யை தேடி செல்ல வேண்டாம் உங்களது லேட்டஸ்ட் ப்ரசசரிலே மேஸ்ட்ரோவுக்கு ஒரு ப்ராசரை மட்டும் எடுத்துக்கொள்ளும் படி செய்துகொள்ளுங்கள் அனேகமாக எல்லோருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன்.

நிறைவுற்றது. சந்தேகங்கள் இருந்தால் கேட்கும் கேள்விகளை தொகுத்து ஒரு பதிவாக போடலாம் என்று நினைக்கிறேன்.

பிடிச்சிருந்தால் ஓட்டளிக்கவும்.

Saturday, December 26, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 11

படங்களை முழுவதும் காண படத்தினை க்ளிக் செய்து காணவும்


அடுத்து சப்டைட்டில் எவ்வாறு சேர்ப்பது என்று காண்போம்


கீழே உள்ள படத்தினை கவனியுங்கள்





மேலே உள்ள படத்தில் ஒரு மூவிக்குரிய பகுதி காட்டப்பட்டுள்ளது இதைபற்றி ஏற்கனவே படித்துள்ளோம்.




முதல் பகுதி- வீடியோவிற்கு 


இரண்டாவது பகுதி - ஆடியோவிற்கு


மூன்றாவது பகுதி - 


சப்டைட்டில்க்கு அதாவது ஏபிசி என்று குறிப்பிட்டிருக்கும் பகுதி , ஒரு மூவிக்கு 99 சப்டைட்டில் வரை இணைக்கலாம். ஏபிசி என்பதற்கு அருக்கில் இருக்கும் பட்டன் மொழிக்குறிய பட்டன் ஆடியோவிலே இதைபற்றி நிறைய சொல்லிவிட்டேன் அதே பயன்பாடுதான் இங்கேயும் அதாவது சப்டைட்டிலின் மொழியை அறிய பயன்படுகிறது இதற்கு ரிமோட்டில் உள்ள பட்டன் உதவும். நீல வண்ணத்தில் கட்டமிடப்பட்டிருக்கும் en என்பதற்கு அருகில் உள்ள கட்டத்தில் டபுள் க்ளிக் செய்தால் சப்டைட்டில் உருவாக்கும் திரை தோன்றும் கீழே வரும் படத்தினை பாருங்கள்.





மேலே படத்தில் இருப்பது சப்டைட்டில் உருவாக்கும் திரை இதிலே சிகப்பு வண்ணத்திலே கட்டமிட்டு எண் இட்டுள்ளேன் அவற்றை காண்போம்.


ஒவ்வொரு எண்ணிற்கு உரிய விளக்கங்கள்


1.ஸ்டார்ட் - ஸ்டாப் எனும் இடத்தில் டைம்கோட் காட்டப்படும் உங்களுடைய வீடியோவின் வாய் அசைவினை கவனித்து அந்த இடங்களின் ஆரம்ப மற்றும் முடிவு நேரத்தை குறித்து இங்கு கொடுக்க வேண்டும்.


உதாரணமாக : ஒரு வசனம் வருகிறது.


“நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்”


இதற்குறிய ஆங்கில (அல்லது உங்களுக்கு எந்த மொழி வேண்டுமோ அந்த மொழிபெயர்ப்பு) மொழிபெயர்ப்பை செய்துகொண்டு இந்த வசனம் எந்த இடத்தில் ஆரம்பம் ஆகிறது என்று பார்க்க டைம்லைன்(வீடியோவிற்குரிய பகுதி) கொண்டு சரிபார்க்கம் அதை குறித்துக்கொண்டு இங்கே பேச ஆரம்பிக்கும் நேரம் அந்த வசனம் முடிய வேண்டிய நேரம் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.


fade in , fade out - 0 விலே வைத்துவிடுங்கள் அதாவத் ஒரு சப்டைட்டில் வசனம் முடிந்த அடுத்த வசனம் தோன்ற அல்லது முடியும் பொழுது கொஞ்சமாக மங்கி மறையும் நிலை இது அவ்வாறு கொடுத்தால் நன்றாக இருக்காது எனவே 0 விலே இருக்கட்டும்.


2.போர்ஸ் டூ டிஸ்ப்ளே - சப்டைட்டில் மெனுவிலே அல்லது ரிமோட்டிலே தேர்ந்தெடுக்காமல் ஆட்டோமேட்டிக்காக ஓடும் வண்ணம் செய்ய இந்த பட்டனை க்ளிக் செய்திருக்க வேண்டும். சப்டைட்டிலை வாட்டர் மார்க்காக கூட பயன்படுத்தலாம் அதற்கு இந்த போர்ஸ் டூ டிஸ்ப்ளே உதவும்.


3.சப் டைட்டிலை நீங்கள் பிட்மேப்(பிஎம்பி) பைலாக மாற்றி வைத்துக்கொண்டும் இங்கே இணைக்கலாம் அதற்குரிய வசதியே இது


4.டெக்ஸ்ட் - இது நேரடியாக மேஸ்ட்ரோவிலே சப்டைட்டில் தட்டச்சு செய்யும் முறை இந்த பெட்டியினுள் தட்ட வேண்டும் உள்ளீடு செய்யும் பொழுது பக்கத்தில் கறுப்பு வண்ணத்திரை(வீடியோ இணைக்கபட்டிருந்தால் வீடியோ தெரியும் பின்புலத்தில்)யில் நீங்கள் தட்டும் எழுத்துக்கள் தெரியும். safe area தாண்டி செல்லா வண்ணம் வரிகளை மடக்கி தட்டச்சவும்.


உதாரணம் படத்திலே உள்ளது அதன் வெளியீடை 7 என்று குறிக்கப்பட்டிருக்கும் இடத்தில் காணலாம்.


5.இங்கே எழுத்துரு வகை , அளவு , போல்ட், இட்டாலிக் போன்ற வகை உள்ளது அதனை தேர்ந்தெடுத்து உங்களுடைய விருப்ப பாண்ட் , மொழியை அமைக்கலாம். ஆங்கிலத்திற்கு என்னுடைய தேர்வு ஏரியல் அது தான் கண்ணை உருத்தாது.


6.நாம் உள்ளீடு செய்யும் எழுத்து எந்த பகுதியில் அதாவது ஸ்க்ரீனில் எந்த பாகத்தில் தோன்ற வேண்டும் என்று அமைக்க இந்த பகுதி உதவுகிறது. நம்முடைய தமிழ் மொழிப்படங்களில் பொதுவாக கீழ் பகுதியில் மட்டுமே சப்டைட்டில் காட்டப்படுகிறது. ஒரிஜினல் ஆங்கிலப்படங்களில் பேசும் ஏரியாவிற்கு தகுந்தார் போல சப்டைட்டில் அமைக்கப்படுகிறது.


7. முன்னரே சொன்னது போல வெளியீடை காட்டும் திரை.


சப்டைட்டில் பெரிய வசனம் என்றால் ஒரே பக்கத்தில் முடியா பட்சத்தில் அடுத்த பக்கதிற்கு செல்லும் பொழுது முன்னால் ..... இந்த வாறு சேர்த்துக்கொள்ளுதல் நன்றாக இருக்கும். பாடல்களுக்கு இட்டாலிக் முறையும். வசனங்களின் பின் புலத்தில் பாடல்கள் வரும் பொழுது அதாவது இப்பொழுது உள்ள படங்களில் பழைய இளையராஜா பாடல்களை பயன்படுத்துவது போல அவ்வாறு வரும் பொழுது தமிழரியாதவர் இரண்டையும் வேறுபடுத்தி காண பாடல்களுக்கு இட்டாலிக் மற்றும் வரியின் ஆரம்பத்தில் மியுசிக்கல் நோட் சிம்பளையும் சேர்ப்பது நலம்.


இது தான் பெரிய வேலை டிவிடியை பொருத்த வரையும் ஒவ்வொரு வசனத்தையும் பொறுமையாக தட்டச்சு செய்ய வேண்டும்.


அடுத்த பகுதியில் முடிவடையும் அதன் பிறகு அடுத்த தொடர் ஒளிப்படத்தொகுப்பு பற்றி ...


பிடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க

Saturday, December 12, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 9

இந்த பகுதியை கவனமாக புரிந்து கொள்ளவும் மிகவும் முக்கியமான பகுதி இது. புரியாததை கேள்விகள் மூலம் தெளிவு செய்து கொள்ளுங்கள்.

சென்ற பாடத்தில் மெனுக்கள்/மூவிகள்/ப்ளேலிஸ்ட்கள் உருவாக்கும் முறை கையாளும் முறை பற்றி கண்டோம். இன்று மேலதிக விசயங்கள் அவை சார்ந்ததாக பார்க்கப்போகின்றோம்

படங்களை முழுவதும் காண படத்தின் மீது க்ளிக் செய்து காணவும்.

முதலில் பார்க்க இருப்பது கனெக்சன்ஸ் பின் வரும் படத்தினை காணுங்கள்



மேலே உள்ள படத்தில் இருக்கும் கனெக்சன்ஸ் பட்டனை அழுத்தியவுடன் மேலே படத்தில் இருப்பது போல தோன்றும் இந்த கனெக்சன் விண்டோவில் புராஜக்ட் முழுவதும் காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது சிகப்பு கட்டத்தில் புராஜக்ட்டை நாம் சேமிக்கும் பொழுது கொடுக்கும் பெயர் தோன்றி அதை தேர்வு செய்துள்ளோம். இந்த கனெக்சன் விண்டோவினை இவ்வாறும் புராஜக்ட் மொத்ததிற்கும் அல்லது தனித்தனியாக மூவி/மெனு போன்றவற்றிற்கும் காணலாம் அவ்வாறு செய்ய அந்த அந்த மூவி/மெனுவினை தேர்வு செய்தால் போதும். view வழியாக கனெக்சன் விண்டோவினை வரவழைக்கும் முறை கீழே படத்தில் உள்ளது.


கீழ் வரும் படத்தில் கொஞ்சம் அதிகமான விளக்கம் இருக்கிறது கவனியுங்கள்


நான் மேலே சொன்னது போல மொத்த புராஜக்ட்டுக்கும் கனெக்சனை பார்க்க புராஜக்ட்டின் பெயரை படத்தில் சிகப்பு வண்ணத்தில்(இடது புறம்) கட்டம் கட்டியுள்ளதை செலக்ட் செய்யவேண்டும் செலக்ட் செய்வது என்றால் இங்கே அதன் மீது ஒரு க்ளிக் செய்தால் போது. அதற்கு முன்பு முதல் படத்தில் சொல்லியபடி கனெக்சன் விண்டோவினை தெரிவு செய்திருக்கனும்

சரி அவ்வாறு செய்த பின்பு வலது புற பகுதியில் மேலதிக கட்டங்கள் கட்டியுள்ளேன் ஒவ்வொன்றாக காண்போம்
1.first Play - டிவிடி ப்ளேயரில் ப்ளே ஆகும் பொழுது முதலில் எந்த அயிட்டம்(மூவி/மெனு) ப்ளே ஆகவேண்டும். உதாரணமாக தொழில் சார்ந்த டிவிடிக்களை ஏதேனும் சினிமா சம்பந்தமான நிறுவணங்கள் வெளியிடும் (உதாரணமாக:மோசர்பேயர் , ஐங்கரன், ஏபி இண்டர் நேஷனல்) இவர்கள் முதல் ஐயிட்டமாக அவர்களது கம்பெனியின் மோண்டாஜை(montage) வைத்திருப்பார்கள் அதாவது கம்பெணி பெயர் வருமே அது (உதாரணமாக : நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை- இது சன் டிவியின் montage) . அல்லது warning யை முதலில் ப்ளே ஆகும் படி செய்திருப்பாங்க. இது போல நீங்கள் உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்யலாம்.

நீங்கள் உங்களுடைய பெர்சனல் வீடியோ என்றால் டைட்டில்(நம்முடைய புராஜக்டில்top என்று ரீநேம் செய்துள்ளேன்) மெனுவை முதலில் ப்ளே ஆகுமாறு செய்யலாம்.

2.title menu: இதைப்பற்றியும் நாம் கொஞ்சம் விளக்கமாக பார்போம். உங்களுடைய டிவிடி ரிமோட்டை கவனியுங்கள் மெனுவிற்கு இரண்டு பட்டன்கள் இருக்கும்.

1.Title or title menu or Top menu
2.DVD menu or menu


மேலே உள்ள படத்தில் காணும் சாம்பிள் டிவிடி ரிமோட்டை காணுங்கள் அதன் கீழ் பகுதியில் உள்ள பட்டன்களில் Top menu and menu என்று இரண்டு பட்டன் இருக்கே . இவ்வாறு இருக்கும் அல்லது மேலே சொன்னது போல title னு கூட இருக்கும் பெரும்பாலும் title தான் இருக்கும்.

சரி மேட்டருக்கு வர்ரேன்.

இந்த டைட்டில் மெனு என்றால் பெரும்பாலும் முதன்மை மெனுவாக இருக்கும் உதாரணமாக இரண்டு படங்கள் உள்ள டிவிடியை எடுத்துக்கொள்வோம் அதில் டைட்டில் மெனு என்பது இரண்டு படங்களில் எதை தெரிவு செய்ய வேண்டும் என காட்டும் மெனு . டிவிடி ஓடும் பொழுது இந்த டைட்டில் பட்டனை அழுத்தினால் எங்கு இருந்தாலும் டைட்டில் மெனுவினில் கொண்டு வந்து நிறுத்திவிடும் அதற்கு நாம் இங்கே சரியாக தேர்வு செய்ய வேண்டும். நம்முடைய புராஜக்டில் டாப் எனும் மெனுவே டைட்டில் மெனு. 

டிவிடி மெனு என்பது- இரண்டு படங்கள் டிவிடியில் ஒரு படம் பார்த்துக்கிட்டு இருக்கோம் அந்த படத்திற்கு உரிய மெனுவிற்கு செல்ல வேண்டும்(டைட்டில் மெனு அல்ல) இந்த நிலையில் செட் செய்வதே டிவிடி மெனு அல்லது மெனு.

சரி மேலே உள்ள கனெக்சன் விண்டோவில் வட்டமிடப்பட்டுள்ள
title menu - இது தான் டாப்/டைட்டில் மெனு

அதன் கீழே கட்டமிடப்பட்டுள்ளது
song2: menu key - இங்கு song என்பது நாம் மூவிக்கு கொடுத்துள்ள பெயர் 2 என்பது அந்த மூவியில் உள்ள 2வது சாப்டரின் பெயர்.

அதாவது சாங்க் 2 ப்ளே ஆகும் பொழுது மெனு(டிவிடி மெனு) கீயை அழுத்தினால் என்ன நடக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இங்கு கொடுக்க வேண்டும் .

டிவிடி மெனு என்பது- இரண்டு படங்கள் டிவிடியில் ஒரு படம் பார்த்துக்கிட்டு இருக்கோம் அந்த படத்திற்கு உரிய மெனுவிற்கு செல்ல வேண்டும்(டைட்டில் மெனு அல்ல) இந்த நிலையில் செட் செய்வதே டிவிடி மெனு அல்லது மெனு.

சரியா....

அடுத்து உள்ளது
songs 2 : end action
song2: menu key - இங்கு song என்பது நாம் மூவிக்கு கொடுத்துள்ள பெயர் 2 என்பது அந்த மூவியில் உள்ள 2வது சாப்டரின் பெயர்.இதே போல எல்லா சாப்டருக்கும் இருக்கும் நான் இது ஒன்றை மட்டும் உதாரணமாக்கி கற்றுக்கொடுக்கிறேன்.

end action என்றால் இந்த 2 வது சாப்டர் முடிவடையும் பொழுது என்ன நடக்க வேண்டும் என்று சொல்வது.ஒரு சாப்டர்  எங்கு முடிவடையும் எனும் கேள்வி எழலாம் ஆமாம் அடுத்த சாப்டரின் தொடக்கதிற்கு முந்த ப்ரேமே ஒரு சாப்டர் முடிவடையும் இடம்
உதாரணமாக 1 வது சாப்டர் எங்கு முடியும் என்றால் 2 வது சாப்டர் ஆரம்பிக்கும் ப்ரேமுக்கு முதல் ப்ரேமில் முடிவடையும்.

சரி எண்ட் ஆக்சனுக்கு வரும் இதை நீங்கள் எல்லா இடங்களில் பயன்படுத்தனும்னு கட்டாயம் இல்லை. ஒரு படத்தில் பல சாப்டர்கள் இருக்கிறது எல்லா சாப்டருகும் இதே போல எண்ட் ஆக்சன் இருக்கும் அதிலே நீங்கள் அடுத்த சாப்டருக்கும் செல்லும் படி செய்தால் டிவிடி கொஞ்ச நேரம் நின்று பின்னரே ப்ளே ஆகும் இதை தவிர்க்க முழு படத்திற்கும் எண்ட் ஆக்சனை ஒன்னுமே செய்யாமல் விட்டுவிடலாம். ஆனால் கடைசி சாப்டரின் எண்ட் ஆக்சனை மட்டும் அதற்குரிய மெனுவிற்கு செல்லும் படி செய்யவேண்டும். இல்லைனா டிவிடி குழம்பிவிடும்.

ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்
கட்டாயம் டைட்டில் மெனு கொடுக்கனும், டிவிடி மெனு(மெனு) கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை.அவ்வாறு கொடுப்பது நன்றாக இருக்கும்.

சரி கீழே வரும் படங்களை கவனியுங்கள்


இடது புறத்தில் மூவியை(சாங்க்ஸ்) மட்டும் தேர்வு செய்ததால் தோன்றும் கனெக்சன் விண்டோ இங்கு பர்ஸ்ட் ப்ளே-டைட்டில் மெனு போன்றவை இருக்காது. அந்த மூவியில் இருக்கும் சாப்டர்களின் மெனு கீ மற்றும் எண்ட் ஆக்சன் மட்டுமே இருக்கும்.

இதே போல எத்தனை மூவி இனைத்துள்ளீர்களோ அத்தனைக்கும் கனெக்சன் விண்டோவினை தனித்தனியாக தோன்ற வைக்கலாம்.

கீழே வரும் விண்டோவினை கவனியுங்கள் இது மெனுவிற்கு மட்டும் உள்ள கனெக்சன் விண்டோ அதைப்பற்றிய மேலதிக தகவல்கள் படத்திற்கு கீழே


இது டாப் எனும் மெனுவினை தேர்வு செய்ததால் தோன்றும் கனெக்சன் விண்ட்டோ இதிலே இருக்கும் பகுதிகளை காண்போம்
1.Top timeout - Top என்பது மெனுவின் பெயர் இந்த மெனு டைம் அவுட் ஆகும் பொழுது என்ன செய்யனும் அப்படினு இங்கே கொடுக்கனும் அவ்வாறு கொடுக்கும் பொழுது அந்த மெனுவின் முதல் பட்டன் அல்லது பட்டனில்லா அந்த மெனுவினை தேர்வு செய்யலாம் அடுத்து வரும் படம் அதனை காட்டும்.
2.button1 - பட்டன்கள் மெனுவில் உருவாக்கினோம் அல்லவா அவையே இங்கு காட்டப்படுகின்றன. அதாவது முதல் பட்டனை அழுத்தினால் என்ன நடக்க வேண்டுமோ அதை இனைக்கவேண்டும் கீழே உள்ள படம் விளக்கும். இதே போல எல்லா பட்டன்களுக்கும்.



மேலே படத்தில் உள்ளது போல கனெக்சன் கொடுக்க வேண்டும்.top timeout க்கு சாம்பிள் காட்டபட்டுள்ளது இதை கொண்டு வர top timeout க்கு நேரே உள்ள காலிக்கட்டத்தில்(கட்டமிடப்பட்டுள்ளது) ரைட்க்ளிக் செய்தால் இந்த துனை வசதிகள் காட்டப்படும்.படத்தில் மெனு விரித்து காட்டப்பட்டுள்ளது இதே போல மூவிஸையும் விரித்தால் மூவிகள் /சாப்டர்கள் தோன்றும். இவ்வாறு இனைப்பு கொடுக்க வேண்டும்.


மேலே உள்ள படத்தில் மூவிக்கு கனெக்சன்



இது முழுவதும் கனெக்சன் செய்யப்பட்ட சாங்க்ஸ் கனெக்சன் விண்டோ .




இது புராஜக்ட் முழுவதும் கனெக்சன் செய்யப்பட்ட கனெக்சன் விண்டோ.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க


Tuesday, December 08, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 8

படங்களை முழுவதுமாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

சென்ற பகுதியில் பார்த்த மெனுவின் தொடர்ச்சியாக இந்த பகுதியில் மேலதிக தகவல்களை காண்போம்

நேற்றைய பாடத்தில் மெனுவினுள் பேக்கிரவுண்ட்/சப்பிக்சர் இணைத்து , சப்பிக்சரின் வண்ணத்தினை மாற்றுவது பற்றி பார்த்தோம். இன்று மெனுக்களின் நேவிகேசன் பற்றியும் மெனுக்களின் பட்டன்களின் இயக்கு முறை பற்றியும் பார்ப்போம்.

பின் வரும் படத்தினை காண்க


மெனுவில் நேற்று பார்த்த கலர் மேப்பிங்க்கு அடுத்த டேப் பட்டன்ஸ் இங்கே பட்டன்களுக்கு நகரும் முறை பற்றி நாம் நிர்ணயம் செய்யலாம். சிகப்பு வண்ணமிட்ட பகுதியை காண்க. மெனுவில் முதல் பட்டனும் சிகப்பு வண்ணமிடப்பட்டுள்ளது. அதாவது மெனுவில் முதல் பட்டனை தேர்ந்தெடுக்க சொல்லி இருக்கிறேன். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் பொழுது பட்டன்ஸ் டேப்பில் மேல் உள்ள படத்தில் இருப்பது போல தோன்றும்.நேவிகேசன் எனும் ப்ரேமில் 1 என்னும் மைய பெட்டியை சுற்றி 4 வெள்ளை காலி பெட்டி இருக்கு தானே.1 என்பது நாம் தேர்ந்தெடுத்துள்ள பட்டனை குறிக்கிறது. ரிமோட் கண்ட்ரோல் டிவிடிக்கு உரியது பார்த்திருப்பீங்க பயன்படுத்திருப்பீங்க அதுல ok எனும் பட்டனை சுற்றி நேவிகேசனுக்காக 4 அம்புகுறிகளுடன் பட்டன்கள் 4 இருக்கும். அந்த வேலையை இங்கே தீர்மானிக்க போகின்றோம்.அதாவது 1 வது பட்டனில் மெனு நிற்கும் பொழுது ரிமோட்டில் கீழ்/மேல்/இடது/வலது பட்டனை அழுத்தினால் அடுத்து எந்த பட்டனுக்கு செல்ல வேண்டும் என்று கட்டளையிடப்போகின்றோம் . கீழ் வரும் படத்தினை பாருங்கள்.


மேலே உள்ள படத்தில் பாருங்கள் 1 வது பட்டனில் மெனு கண்ட்ரோல் இருக்கும் பொழுது நேவிகேசன் பட்டன்களை(ரிமோட்) அழுத்தும் பொழுது

இடது புறம் - 2 வது பட்டனுக்கு செல்
கீழே - 2 வது பட்டனுக்கு செல்
மேலே - 3 வது பட்டனுக்கு செல்

இவ்வாறு எல்லா பட்டன்களுக்கு நேவிகசன் அமைக்க வேண்டும் இதில் ஏதேனும் பட்டன்களை தவறுதலாக அமைத்தால் யுசருக்கு ரெம்ப குழப்பமாயிடும். பெரும்பாலும் ஒன்றின் கீழ்/மேல் எந்த பட்டன் என்று அமைக்கலாம் உதாரணமாக
1 வது பட்டன்
மேல் - 3
கீழ் - 2

2வது பட்டன்
மேல் - 1
கீழ் - 3

3வது பட்டன்
மேல் - 2
கீழ் - 1

இது மிகவும் எளிமையான முறை இது போக நீங்க்ள் மெனு செய்யும் அமைப்பு ஏற்றவாரு அமைத்துக்கொள்ளுங்கள்.


இதுவரை பட்டன்கள் அமைப்பு , நேவிகேசன் பார்த்தோம், அடுத்து பட்டன்களை  அழுத்தும் பொழுது என்ன நிகழவேண்டும் என்று தீர்மானிக்க போகின்றோம்.
கீழ் வரும் படத்தினை காண்க.


இந்த படத்தில் முதல் பட்டனுக்கு மேல் வைத்து ரைட் க்ளிக் செய்துள்ளேன் அதில் தோன்றும் திரையே படத்தில் காண்பது. இந்த வசதி எதற்கு என்றால் 1 வது பட்டனுக்கு ரிமோட்டில் ok கொடுத்தவுடன் என்ன மாற்றம் நிகழ வேண்டும் என்று நிர்ணயம் செய்ய இங்கே மூவி என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் ஒரு மூவியின் முதல் சாப்டரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ரைட் க்ளிக் செய்தவுடன்
மூவி, மெனு , கமெண்ட் , ரெஸூம் ப்ளே போன்றவை தோன்றும் அதில் மூவியை தேர்ந்தெடுத்தால் அதில் நாம் இந்த புராஜக்ட்டில் பெயர் மாற்றி வைத்துள்ள Songs என்பதின் முதல் சாப்டரை படத்தில் காட்டியுள்ளது படி தேர்ந்தெடுக்கவும். இங்கு என்ன செய்து முடித்துள்ளோம் என்றால் மூவி எனும் முதல் பட்டனை அழுத்தியவுடன் படம் ஓடத்துவங்கும் இதே போல அடுத்த பட்டன்(2) சாங்க்ஸ் அழுத்தியவுடன் சாங்க்ஸ் மெனு தோன்ற வேண்டும், அடுத்த பட்டன்(3) ஆடியோ அழுத்தியவுடன் ஆடியோ தேர்வு மெனு வர வேண்டும்.பின் வரும் படம் அதை காட்டுகின்றன.

இவ்வாறு நாம் செய்யும் முறைக்கு பெயர் கனெக்சன்ஸ் அதைப்பற்றி இன்னும் 2 அத்தியாயங்களில் படிக்கலாம் விரிவாக.

அடுத்து பார்க்க இருப்பது ப்ளே லிஸ்ட் . அதாவது டிவிடிகளில் முழுப்படமும் ஓடும் மற்றொரு மெனுவில் பாடல் எனும் தொகுப்பின் கீழ் ஒவ்வொரு பாடலாகவும் , மொத்தமாகவும் ஓடும் வண்ணம் செய்திருப்பார்கள் அவ்வாறு செய்ய இந்த ப்ளே லிஸ்ட் உருவாகிறது. ஒரு மூவியில் உள்ள சாப்டர்களை பயன்படுத்தி 99 ப்ளே லிஸ்ட் வரை உருவாக்கி கொள்ளலாம். ப்ளே லிஸ்ட்டை உருவாக்க கீழ்காணும் படத்தினை பாருங்கள்.

இங்கே அசெட் பின்னிற்கு மேலே சிகப்பு கட்டம் கட்டப்பட்டுள்ள அந்த பட்டனை அழுத்தினால் ப்ளேலிஸ்ட் உருவாக்கும் திரைக்கு செல்லலாம். மேலே உள்ள திரை செல்ல தெரியும் தானே . எந்த மூவிக்கு ப்ளேலிஸ்ட் உருவாக்க வேண்டுமோ அந்த மூவியை செலக்ட் செய்தால் அந்த மூவிக்குரிய டைம் லைன் தோன்றும் அது தான் மேலே உள்ள திரை. சரி ப்ளேலிஸ்ட் பட்டனை அழுத்தியவுடன் தோன்றும் திரையை கீழே கானுங்கள்


மேலே உள்ள திரையில் இரண்டு பட்டன்கள் இருக்கும்
1.ஆட் ப்ளே லிஸ்ட்
இதனை அழுத்துவதன் மூலம் புதிய ப்ளே லிஸ்டை உருவாக்கலாம்
2டெலிட் ப்ளே லிஸ்ட்
இதனை அழுத்துவதன் மூலம் தேர்ந்தெடுத்த ப்ளேலிஸ்டை அழிக்கலாம்.

ஆட் ப்ளேலிஸ்ட் டை அழுத்துவதன் மூலம் தோன்றும் திரை


ஆட் ப்ளே லிஸ்ட் பட்டனை அழுத்தியவுடன் மூவிக்கு கீழே ஒரு ப்ளே லிஸ்ட் காட்டப்படும் இங்கே ரைட் க்ளிக் செய்து ப்ளே லிஸ்டின் பெயரினை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். மூவியின் பெயரோ , மெனுவின் பெயரோ அல்லது ப்ளேலிஸ்டின் பெயரோ ஒரே மாதிரியாக அமைக்க முடியாது.

ஆட் ப்ளேலிஸ்டை அழுத்தியவுடன் அதற்கு கீழே ,படத்தில்  உள்ளது போல ஒரு திரை இருக்கும் songs playlist1 இது உருவாக்கிய ப்ளேலிஸ்ட்டின் பெயர் songs என்பது மூவிக்கு நாம் மாற்றியிட்டிருக்கும் பெயர்.

இந்த ப்ளே லிஸ்ட் இப்பொழுது காலியாக உள்ளது இதிலே சாப்டர்களை சேர்க்க படத்தில் காட்டியுள்ளது போல songs playlist1 என்பதின் கீழே உள்ள காலி கட்டத்தில் (1 என்பதற்கு அருகில் உள்ள) வைத்து ரைட் க்ளிக் செய்யவும் படத்தில் உள்ள திரை தோன்றும் உங்கள் மூவியில் உள்ள சாப்டர்கள் காட்டப்படும் வேண்டிய சாப்டர்களை இந்த ப்ளே லிஸ்டில் இணையுங்கள் உங்கள் ப்ளே லிஸ்ட் ரெடி.

தொடரும்

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க

Monday, December 07, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 7

படங்களை முழுவதுமாக காண படத்தின் மீது க்ளிக் செய்யவும்.

சென்ற பகுதியிலிருந்து மேஸ்ட்ரோ மென்பொருளை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் வீடியோ இணைப்பது பற்றியும் கொஞ்சம் சாப்டர் பற்றியும் பார்த்தோம். இந்த பாடத்தில் மெனு இணைப்பை பற்றி காண்போம்.


மேலே உள்ள படத்தினை கவனியுங்கள் அதில் top எனும் மெனுவினை இரட்டை க்ளிக் செய்தவுடன் வலது புறத்தில் தோன்றும் மெனுவிண்டோவே அந்த மெனுவிற்கு உரியது இதிலே அந்த மெனுவிற்குறிய பேக்கிரவுண்ட்/சப்பிக்சர் மெனுக்களை இணைக்க வேண்டும்.இவற்றை உருவாக்குவது பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

வெள்ளை பின்புலத்தில் இரண்டு கறுப்பு நிறக்கோடுகள் இருக்கின்றனவே அந்த கோடுகள் safe area என்று அழைக்கப்படும் பட்டன்கள் அதைத்தாண்டாமலும் மெனு அயிட்டங்கள் அந்த எல்லைக்குள்ளும் இருக்கும் படி அமைத்துக்கொள்ளவும் அதை தாண்டி அமைக்கப்படும் மெனுக்கள் டிவி திரையில் தெரியாது.

இந்த மெனு திரையில் முதலில் பேக்கிரவுண்ட் இமேஜை இழுத்துவிடவும் பின் சப்பிக்சர் இமேஜை இழுத்துவிடவும். முதலில் இழுத்துவிடும் இமேஜ் பேக்கிரவுண்டாகவும் பின்னர் இழுத்துவிடும் இமேஜ் சப்பிக்சராகவும் தீர்மானித்துக்கொள்ளும். தவறுதலாக இழுத்துவிடப்பட்டால் அழிப்பதற்கு அந்த மெனுவில் ரைட்க்ளிக் செய்தால் அதற்குறிய வசதியினை பெறாலம்.

இந்த மெனு திரையில் உள்ள முக்கியமான அம்சங்களை பார்ப்போம்

நம்முடைய பேக்கிரவுண்ட்/சப்பிக்சர் இமேஜ்களை இழுத்துவிட்டபின் ஏற்படும் தோற்றம் மேலே உள்ள படத்தில் உள்ளது சப்பிக்சர் கருமை வண்ணத்த்தில் இருக்கிறது அதனை மஞ்சள் கட்டம் கட்டி காட்டியுள்ளேன். நாம் சப்பிகசரை என்ன வண்ணத்தில் வேண்டுமானாலும் கீழே இருக்கும் வண்ணக்ககலவை கொண்டு நிர்ணயம் செய்யலாம்.

இந்த சப்பிக்சர்களை நாம் பட்டன்களாக மாற்ற இங்கே பட்டன் வரைய வேண்டும் அது மிகவும் எளிது மௌசை கொண்டு சென்று அதன் மேல் சப்பிகசரின் முதல் பகுதி உதாரணமாக movie என்று இருப்பதற்கு நேரே உள்ள இதய வடிவ பகுதியின் மேலே உருவாக்க வேண்டும் அதே போலவே மற்ற இரண்டிற்கும். செய்துவிட்டால் கீழே வரும் படத்தில் இருப்பது போல இருக்கும்.

மூன்று பட்டன்கள் உருவாக்கப்பட்ட நிலையை கவனியுங்கள் முதல் பட்டன் செலக்ட் செய்யப்பட்டுள்ளதால் அந்த பட்டனின் அவுட்லைன் பச்சை வண்ணத்திலும் மிச்ச இரண்டு பட்டன்களின் அவுட்லைன் சிகப்பு வண்ணத்தில் இருப்பதையும் கவனியுங்கள்.இந்த அவுட் லைன் டிவிடியில் தெரியாது அந்த அவுட்லைனுக்குள் இருக்கும் சப்பிக்சர் பகுதியே டிவியில் காணும் பொழுது தெரியும் அதனுடைய வண்ணத்தை பின்புலத்திற்கு தகுந்தார் போல் மாற்ற கீழே இருக்கும் வண்ணங்களை பயன்படுத்தலாம்.

three என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில்

முதலில் subpicture க்கு உரிய வண்ணம் கருப்பில் இருப்பதன் ஒபாசிட்டியை 0 என்று மாற்றி உள்ளேன், ஏனெனில் சாதாரன நிலையில் அங்கு பட்டன் இருப்பது தெரிந்தால் அழகாக இருக்காது அந்த பட்டனுக்கு செலக்சன் வரும் பொழுது அங்கு பட்டன் இருப்பது தெரியவந்தால் அழகாக இருக்கும் எனவே இந்த வண்ணத்தை முழுவதுமாக நீக்கியுள்ளேன். பாருங்கள் முதல் பட்டனின் வண்ணம் மட்டும் தெரியும் மற்ற இரண்டும் தெரியாது சென்ற படத்துடன் ஒப்பிட்டு பாருங்கள்.

அடுத்து இருப்பது button selection க்கு உரிய வண்ணம் மஞ்சளில் ஒபாசிட்டி 15(முழுமையாக) ஆகா இருக்கும் வண்ணம் மாற்றியுள்ளேன் அதே நேரத்தில்color map 4 க்கு நேரே உள்ள கருஞ்சிவப்பு நிறத்தை 0 வாக்கி உள்ளேன்.ஏன் இந்த நிறத்தை 0 ஆக மாற்றப்பட்டுள்ளது எனில் இந்த வண்ணம் பட்டனுக்கு பின்புலம் கொடுக்க கூடிய வண்ணம் எனவே அதை நீக்கிவிட்டு பட்டனின் பின்புலம் டிரான்ஸ்பரண்டாக இருக்கும்வண்ணம் செய்துள்ளேன்.

அடுத்து இருப்பது button action  க்கு உரிய வண்ணம் இதனை சிகப்பாக்கி அதனுடைய பின்புல வண்ணத்தை 0 ஆக மாற்றியுள்ளேன். ஆனால் படத்தில் இந்த சிகப்பு தெரியவில்லை அதை காண two என்று கட்டமிடப்பட்டிருக்கும் பகுதியில் இருக்கும் 3 ஆப்சன்களை பயன்படுதலாம்.

none - பட்டன் செலக்ட் செய்யப்படாமல் இருக்கும் நிலை
selection color - பட்டன் செலக்ட் செய்யப்படும் பொழுது இந்த நிலை தற்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது
action color - செலக்ட் செய்த பட்டனை அழுத்தும் பொழுது அதாவது ரிமோட்டில் குறிபிட்ட பட்டனை செயல்படுத்தும் பொழுது.

இதில் வேண்டியதை தேர்வு செய்து ப்ரிவியூ பார்த்துக்கொள்ளுங்கள்

அதற்கு அருகாமையில் இருப்பது view layer இதிலும் 3 ஆப்சன்கள்
1.background
2.subpicture
3.both முன்னரே சொல்லிருக்கேன் பாருங்க.

அடுத்து மெனுவின் வகை 4:3 or 16:9

பட்டன்களை கையாளும் முறைகளையும் சாப்டர்களை கையாளும் முறைகளையும் அடுத்த பகுதியில் பார்ப்போம். நன்றி.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க.

Saturday, December 05, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 6

இந்த பகுதியினுள் நாம் மேஸ்ட்ரோவை ஆரம்பிக்க போகின்றோம்.
மேஸ்ட்ரோவை திறந்த உடன் கீழ் காணும் திரை அமைப்பு காணப்படும்.

மேலே படத்தில் காணப்படும் திரை போல தோன்றும் இடது புறம் மேலே இருப்பது நாம் ஒரு புராஜக்டில் எத்தனை வீடியோ , மெனுக்கள் இணைத்திருக்கிறோம் என்பதை காட்டும். இங்கு movie1, menu1 போன்றவை காட்டப்படும் இவற்றின் பெயரை right click செய்து rename என்பதை தேர்வு செய்து மாற்றலாம். அதே போல அதிகமான movie, menu சேர்க்க right click மூவி ஏரியாவில் வைத்து அதில் தோன்றும் திரையில் add movie அதே போலே மெனுவிற்கும் சேர்க்கலாம்.

அதற்கு வலது புறத்திலே இருப்பது connection window இது நாம் சேர்த்துள்ள மெனு மற்றும் வீடியோக்களை ஒருங்கினைக்க பயன்படுகிறது

கீழே இடது ஓரத்தில் இருப்பது compile , result window இது கம்பைல் செய்யும் போது நடைபெறுவதை காட்டுகிறது மேலும் ஏதேனும் தவறுகள் இருக்குமாயின் கம்பைலின் போது சுட்டிக்காட்டும்.

கீழே நடுவில் இருப்பது preview window ப்ரிவியூ பார்க்க பயன்படுகிறது

கீழே வலது புறத்தில் இருப்பது asset bin இந்த பகுதியில் நாம் ஒரு புராஜக்ட்டில் இனைக்க வேண்டிய மெனு/வீடியோ /ஆடியோ போன்றவற்றை கொண்டு வந்து வைத்துக்கொள்ளவேண்டும். இங்கே எடுத்து வைப்பதால் புராஜக்ட்டில் இணைத்துவிட்டதாய் அர்த்தம் இல்லை. இங்கே இருப்பதால் புராஜக்ட்டின் கொள்ளவும் மாறப்போவதில்லை.ஆனால் புராஜக்ட்டில் இணைக்கும் அனைத்து பைல்களும் இந்த விண்டோவினுள் இருந்தாக வேண்டும். எவற்றையும் இங்கு கொண்டு வராமல் நேரடியாக இனைக்க இயலாது.
இந்த asset bin ல் பைல்களை சேர்க்க பின்வரும் படத்தினை கவனியுங்கள்


asset bin ல் வைத்து ரைட்க்ளிக் செய்து தோன்றும் மெனுவில் import media asset என்பதை தேர்வு செய்யவும் வழக்கம் போல விண்டோஸின் open திரை தோன்றும் வேண்டிய பைலை இனைத்துக்கொள்ளுங்கள் வீடியோ/ஆடியோ மட்டும் இணைக்க கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் இரண்டும் செக் செய்ய வேண்டி உள்ளதால் ஒரு 3-5 நிமிடங்கள் ஆகலாம் மூன்று மணி நேர வீடியோவுக்கு.
மேலே உள்ள படத்தின் கீழ்-வலது புறத்தில் சிகப்பாய் வட்டமிடப்பட்டிருக்கும் இடம் புராஜக்ட்டின் சைஸை குறிப்பிடுகிறது. ஒரு டிவிடி5 புராஜக்ட் என்றால் 4.7 ஜிபியை தாண்ட அனுமதிக்ககூடாது.


மேலே உள்ள படத்தில் அசெட் பின்னில் ஒரு வீடியோ ஒரு ஆடியோ ஒரு பின்புல மெனு ஒரு சப்பிக்சர் மெனு இணைக்கப்பட்டுள்ளது.

மேலே உள்ள படத்தில் movie1 என்று இருக்கும் பகுதியை ரைட்க்ளிக் செய்து ரீநேம் மூலம் songs என்று மாற்றியுள்ளேன். அதே போல menu1 என்பதை top என்று மாற்றியுள்ளேன்.இப்பொழுது அந்த songs எனப்படும் movie யை இரட்டை க்ளிக் செய்யும் பொழுது படத்தில் உள்ளது போல அந்த songs க்கு உரிய வீடியோ வைக்கும் டைம் லைன் தெரியும். படத்தில் காட்டியுள்ளது போல இப்பொழுது இங்கு வீடியோ பகுதி/ ஆடியோ பகுதி பிரித்துக்காட்டியுள்ளேன் படத்தில் அந்த அந்த இடங்களும் முறையே வீடியோ/ஆடியோவை drag செய்து விட்டால் போதும் இனைக்கப்பட்டுவிடும்.படத்தில் குறிப்பிட்டது போல ஆடியோ டிராக்கில் en என்று இருப்பது english யை குறிப்பது அதாவது ஆடியோவின் மொழியைக்குறிப்பது இது எதற்கு என்றால் உங்களுடைய டிவிடி ப்ளேயரின் ரிமோட்டில் audioஎனும் பட்டன் இருப்பதை பார்த்திருப்பீர்கள் அந்த பட்டனை அழுத்திய வுடன் சில விவரங்கள் காட்டப்படும்

ஆடியோ வகை - dolby digital(5.1 or 2 channel) or dts or pcm

ஆடியோ மொழி - என்ன மொழி இங்கு தேர்வு செய்கிறோமோ அதைக்காட்டும்.

அதாவது தமிழ் மொழி அறிமுகமே இல்லாத நபர் ஒருவர் தமிழ் படத்தை காணும் போது ஆர்வத்தினால் இது என்ன மொழி என்று அறிய முயற்சிக்கும் பொழுது இந்த வசதி கைகொடுக்கும்.

இங்கு en ல் அழுத்தவும் தோன்றும் மெனுவில் தமிழையோ அல்லது உங்களது வீடியோவின் ஒலி மொழியை தேர்ந்தெடுத்துக்கங்க.

வீடியோவினையும் ஆடியோவினையும் அதற்குறிய இடத்தில் பொருத்திய பின்னர் கீழே-வலது மூலைளில் பாருங்கள் அந்த பச்சை வண்ண பகுதியில் புராஜக்ட்டின் அளவு காட்டப்படும். கூடி இருக்கிறதா? இதே போல நாம் சேர்க்கும் பைலுக்கு ஏற்ப அளவு கூடும். டிவிடி5 என்றால் இந்த அளவினை 4.7 ஜிபிக்குள் அடக்க வேண்டும்.

மேலே உள்ள படத்தில் edit marker எனும் துனை திரை காணப்படுகிறது அது chapter உருவாக்க பயன்படும் திரை. இந்த திரை தோன்ற நாம் வீடியோவின் மேல் பகுதில் (படத்திலே குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியில் ) க்ளிக் செய்ய வேண்டும்.,இந்த திரையில் எளிதான சாப்டர் மார்க் செய்வது பற்றி சொல்கிறேன்

சாப்டர் நேம் என்று இருப்பதில் உங்களுக்கு அடையாளம் காணக்கூடிய பெயரை கொடுத்தால் நன்றாக இருக்கும். start time எனும் பகுதியில் சாப்டர் ஆரம்பிக்கும் நேரத்தை கொடுக்க வேண்டும் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் அதற்கு கீழே snap to default க்கு கீழே 3 பட்டன் இருக்கும்  இந்த பட்டன்களை பயன்படுத்தி அடுத்தடுத்த ப்ரேம்களை பெறாலம் சரியான ப்ரேம் வந்த உடன் ஓக்கே கொடுத்து வெளியேறினால் சாப்டர் உருவாக்கப்பட்டிருக்கும். இங்கே ஒரு சந்தேகம் வரலாம் இந்த பட்டன்களை இயக்கும் பொழுது வீடியோவை எங்கு காண்பது என்று அதற்கு தான் மேலே உள்ள படத்தில் மேற்பகுதியில் ப்ரிவியூ திரை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதனில் பார்க்கலாம். இதே போல எத்தனை சாப்டர்கள் வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம்.

ப்ளே கர்சரும் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது இந்து டைம்லைனில் எங்கு வேண்டுமானாலும் வைத்து அந்த இடத்தில் வீடியோவை இயக்கி பாக்கலாம். டைம்லைனில் ப்ளே கர்சரை வைக்க எங்கு வேண்டுமோ அங்கு ரைட் க்ளிக் அதன் மூலம் ப்ளே கர்சர் ஆப்சனை தேர்வு செய்யலாம்.

இது வீடியோ ஆடியோவினை கையாளும் முறை இதில் இன்னும் கொஞ்சம் தகவல் இருக்கு அதற்கு முன் அடுத்த பகுதியில் மெனுவினை கையாளும் முறை பற்றி காண்போம்.

பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க

Thursday, December 03, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி 5

சென்ற 4 பகுதிகளாக அறிமுகம் மற்றும் வீடியோ /ஆடியோ மாற்றியைப்பற்றி பார்த்தோம். இன்று மெனு க்கள் பற்றி பார்ப்போம்.

ஒரு டிவிடிக்கு மெனுக்கள் மிகவும் தேவை , எத்தனை மெனு வேண்டுமானாலும் அமைத்துகொள்ளலாம்(99 வரை). மெனுக்களின் வாயிலாக டிவிடியில் இருக்கும் சிறப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

உதாரணமாக,

சப்டைட்டில் எனப்படும் வசன மொழிபெயர்ப்பை வேண்டிய மொழியில் தெரிவு செய்து கொள்ளும் வகையில் செய்யலாம்.

ஆடியோ ஆப்சன்களை மாற்ற அதாவது ஒரு டிவிடியில் உள்ள வீடியோவின் ஆடியோவை AC3 , Dts , Pcm போன்ற வகை ஆடியோக்களை இனைத்து உங்களுக்கு தேவையான ஒலிக்கோப்பை இயக்குமாறு செய்யலாம்.

வீடியோவினை பகுதிவாரியாக பிரித்து சாப்டர் வைத்து தேர்தெடுக்க.

பாடல்களை மட்டும் காண

இப்படி நிறைய ஆப்சன்களை இந்த மெனுக்களின் வாயிலாக பயன்படுத்த இயலும்.

பொதுவாக மெனுக்களில் இரண்டு வகை
1.நிலையான மெனு - அதாவது மெனுவின் பின்புறம் ஒரு அசையா படம் இருக்கும் static menu
2.Animated menu - அதாவது பின்புலத்தில் நகரும் அசைபடத்தினை வைத்திருப்பது.

இந்த அசை பட மெனுவினை அவரவர் ரசனைக்கேற்ப உருவாக்கி கொள்ளலாம் அதற்கு ஏதேனும் வீடியோ எடிட்டிங் மென்பொருட்களை பயன்படுத்தலாம்.

அசையா மெனுக்களை உருவாக்க போட்டோஷாப்பை பயன்படுத்தலாம்

நம்முடைய மேஸ்ட்ரோவில் ஏற்றுக்கொள்ளும் பார்மட் bmp முறை

மேஸ்ட்ரோவில் ஒரு மெனுவில் இரண்டு பாகங்கள் உள்ளன,
1.பின்புலம் படம்(background image)
2.துணை ப்படம்(sub picture)

1.பின்புலம் - சினிமா என்றால் அந்த படத்தின் நடிகர்/நடிகையர் உருவம் படத்தின் பெயர் மற்றும் அந்த மெனுவில் செய்யப்போகும் வேலை போன்றவற்றை உள்ளடக்கியது
2.துனைப்படம் - மெனுக்களை தேர்ந்தெடுக்க உதவும் பட்டன்களை அமைக்க உதவுகிறது.

போட்டோஷாப்பில் new என்பதில் preset size ல் 720 X 540 std ntsc 601 எனும் அமைப்பை தேர்ந்தெடுக்கம் கீழ்வரும் படத்தில் உள்ளது போல்


தேர்ந்தெடுத்த உடன் தோன்றும் திரையில் மெனுவில் சேர்க்க வேண்டிய விசயங்களை சேர்த்துக்கொள்ளுங்கள் உங்கள் ரசனைக்கேற்ப.
உதாரணத்திற்கு பின் வரும் மெனுவை பாருங்கள்


மேலே உள்ள படத்தில் காணப்படுவது ஒரு சிம்பிள் மெனு இதிலே 3 ஆப்சன்களை வைத்துள்ளேன் movie , songs , audio இந்த மெனுவிலே மூவி என்பதை க்ளிக் செய்த உடன் எனக்கு படம் ஓடனும் , சாங்க்ஸ் என்பதை தேர்வு செய்த உடன் பாடல்களை தேர்வு செய்யும் அடுத்த மெனு தோன்ற வேண்டும். ஆடியோவை தேர்வு செய்த உடன் ஆடியோ தேர்வு செய்யும் மெனு தோன்ற வேண்டும். இது தான் பின்புல மெனு background image இதனை சேமிக்கும் பொழுது bmp யாக சேமிக்க வேண்டும் எனவே save As எனும் ஆப்சன் சென்று bmp யை தேர்வு செய்து ஏதேனும் பெயர் கொடுத்து சேமியுங்கள்

 இந்த மெனு interactive ஆக இருக்க வேண்டும்.அதனை செய்ய இங்கு பட்டன் கள் தேவைப்படுகிறது. அந்த பட்டன்களை உருவாக செய்யப்போவதே sub picture தேர்வு.

பின் வரும் படத்தினை பாருங்கள்


மேலெ உள்ள படத்தில் காணப்படும் இதய வடிவிலான பகுதியே பட்டன்கள் உருவாக்க்க தேவைப்படும் sub picture கள். இதனை தனி லேயரில் போட்டோ ஷாப்பில் உருவாக்கி வைத்துக்கொள்ளுங்கள் , இதனை சேமிக்கும் பொழுது இந்த லேயர்களை மட்டும் enable வைத்துக்கொண்டு மற்றவற்றை disable செய்து விடுங்கள் , பின் வரும் படத்தினை பாருங்கள்


சேமிக்கும் பொழுது bmp வகையாக சேமியுங்கள் (மெனுவின் பெயரோடு சப்பிக்சர் எனும் பெயர் சேர்த்து செய்தால் எளிதாக அடையாளம் காண இயலும்)

அம்புட்டுதான் ஒரு சிம்பிள் மெனு உருவாக்கும் வேலை , இதே போல உங்களுக்கு தேவையான மெனுக்களை முன்னரே திட்டமிட்டு உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இது நிலையான மெனு

அனிமேட்டட் மெனுவினை ஒரு வீடியோ உருவாக்குவது போல உருவாக்கி கொள்ள வேண்டும் டைம்லைனில் வைத்து. கடைசி ஒரு 20 செகண்டுகளை நகராதபடி செய்து கொள்ள வேண்டும் அப்ப தான் யுசருக்கு எரிச்சல் ஏற்படாமல் இருக்கும்.

முன்குறிப்பு - அதாவது முன்னாடி போட்ட படத்தின் குறிப்பு அந்த பொண்ணு என்னனு யாருக்காச்சும் சந்தேகம் வரலாம் அந்த புள்ள பேரு சலோனி.

Wednesday, December 02, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி-4

சென்ற 3 ஆம் பகுதியில் உள்ளீடு கொடுப்பது பற்றி பார்ப்போம் அதில் கொஞ்சம் மேலதிக தகவல்கள் பார்ப்போம்

கீழே உள்ள படத்தினை பாருங்கள்


உங்களுடைய இனைக்கப்பட்ட வீடியோ சிகப்பு வண்ணமிட்ட இடத்தில் இருக்கும் படி மாற்றப்போகின்றோம் அந்த வெளியீட்டு வீடியோவில் மாற்றங்கள் செய்ய சில பில்டர்களை பயன்படுத்தலாம் நிறைய பில்டர் இருக்கு ஆனால் எல்லாவற்றையும் விளக்க கொஞ்சம் தாமதம் ஆகும் கொஞ்சம் தேவையான பில்டர்களை பார்ப்போம் சிகப்பு வண்ணமிட்டுருக்கும் பகுதியை இரட்டை க்ளிக் செய்யவும் கீழ்வரும் திரை தோன்றும்.

மேலே உள்ள திரையில் இருக்கும் video filter எனும் tab யை தேர்ந்தெடுக்கவும் பின் B என்று குறிப்பிட்டுருக்கும் பட்டனை அழுத்தவும். இதே விண்டோவில் original and result எனும் இரண்டு ப்ரிவியூ திரையிலும் உங்கள் வீடியோ தெரியும் source - target வித்தியாசம் பாத்துக்கலாம்.

மேலே படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள bitmap keying என்பதை பயன்படுத்தி வீடியோவினுள் logo - watermark text போன்றவை செய்யலாம். இதற்கு உங்களது லோகோவை அல்லது டெக்ஸ்டை ஒரு bitmap file ஆக உருவாக்கி கொள்ளுங்கள் பேக்கிரவும் ஒரே வண்ணத்தில் உருவாக்கி அந்த வண்ணமும் லோகோ-டெக்ஸ்ட் வண்ணமும் வேறு வேறாக இருக்கட்டும் அப்பொழுது தான் பேக்கிரவுண்டை நீக்க வசதியாக இருக்கும்.


மற்றொரு பில்டர் pulldown இது எதுக்குனா ஒரு வீடியோவின் ப்ரேம் ரேட் பிலிம் ரேட்டுக்கு அதாவது 23.97 ஆக இருந்தால் அதை டிவிடிக்கு ஏற்ற 29.97 க்கு மாற்ற பயன்படும் இதிலே உள்ள மற்றொரு ஆப்சனின் மூலம் 29.97 லிருந்து 23.97 க்கு மாற்றலாம்.
B என்ற இடத்தில் வட்டமிடப்பட்டிருக்கும் sharpen எனும் பில்டர் கொண்டு உங்கள் வீடியோவின் sharpness கூட்டலாம். குறைக்கலாம். மிக அதிகமான sharpness வைத்தால் படம் தெளிவாக இருக்காது. வீடியோ கொஞ்சம் டல்லாக இருந்தால் மட்டும் 1-2 பாயிண்ட் சார்ப்னெஸ் வைக்கலாம். மத்தபடி கெனாபஸின் கோடெக்கிலே சார்ப்னெஸ் இருக்கு,


ஆடியோ பில்டர் இதிலே இரண்டு முக்கியமான பில்டர்களை சுட்டிக்காட்டியுள்ளேன்.
A - normalize இதன் மூலம் உங்கள் வீடியோவின் ஒலியை ஒரே சீராக மாற்றியமைக்கலாம் ஏற்ற இறக்கம் இல்லாத ஒலியாக.
B-volume இதன் மூலம் உங்கள் வீடியோவின் ஒலியை அதிகப்படுத்தலாம்.
இதையெல்லாம் முடிச்சிட்டு ஓக்கே கொடுத்து இடது புறம் உள்ள convert பட்டனை சொடுக்கவும்


convert -   button யை சொடுக்கினால் வீடியோ நம்முடைய மாற்றத்திற்கு செய்யப்படும். preview tic செய்யப்பட்டிருந்தால் வீடியோ மாற்றத்தின் போது என்ன ப்ரேம் மாற்றப்படுகிறது என்பதனை காணலாம். வேலை முடிந்தவுடன் கணினியை தானாகவே நிறுத்த shutdown pc when finished எனும் தேர்வை தேர்ந்தெடுக்கலாம்.

இப்படியாக உங்களது சோர்ஸ் வீடியோவினை மேஸ்ட்ரோவுக்கு ஏற்ற பார்மட்டுக்கு மாத்திடலாம். அடுத்து மெனு , அதன் பின் மேஸ்ட்ரோவில் டிவிடி செய்யும் முறை.

Saturday, November 28, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பகுதி-3

போன பகுதி கொஞ்சம் குழப்பிருக்கலாம் மன்னிச்சுக்கங்க அவை எல்லாம் சொல்ல வேண்டிய கட்டாயம்.

சரி புரோகோடரில் உள்ளீடு கொடுத்தாச்சா?

உள்ளீடு கொடுத்த உடன் அந்த வீடியோவின் குணாதிசயங்களை கவனியுங்கள் ntsc/pal ,  frame rate , 4:3 or 16:9 , field order

இதை கவனித்து வெளியீட்டு வீடியோவிலும் இதே முறையை பின்பற்ற வேண்டும்.



டார்கெட்(target) எனும் பட்டனை க்ளிக் செய்யவும் அதில் தோன்றும் விண்டோவில் ஆட்(add) பட்டனை தேர்வு செய்து


மேலே படத்தில் உள்ளது போல தோன்றும் டிவிடியை க்ளிக் செய்தது அதற்கு நேரே உள்ள ஸ்க்ரீனில் mpeg2 - dvd-ntsc(mastering quality) என்பதை தேர்வு செய்யவும்.
தேர்வு செய்து பின் ok க்ளிக் செய்து வரவும்.
இப்பொழுது பின் வரும் திரை தோன்றும்



அந்த ஸ்க்ரால் பாரை கீழே இறக்கினால் மேலதிக தகவல் கிடைக்கும் அது கீழே உள்ள படத்தில் உள்ளது.


மேலே உள்ள இரண்டு படங்களில் காணப்படும் பகுதிகளை பற்றி காண்போம்.

1.base name - உங்களுடைய வெளியீட்டு பைலின் பெயர் குறிப்பிட
2.path - எங்கு சேமிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க
3.use source file name -  பெயர் கொடுக்க சோம்பேறித்தனம் இருந்தா raw பைலின் பெயரை எடுத்துக்கொள்ள சொல்லலாம்
4.file name -  மேலே நீங்கள் செய்த 3 மாற்றங்களின் இறுதி மாதிரி இந்த வரி
stream basic:
1.Stream format - இதற்கு நேரே உள்ள பெட்டியில் இருக்கும் dvd (mpeg Program/elementary stream ) என்பதை தேர்வு செய்யவும் , மேலதிக ஆப்சன்கள் உள்ளன vcd , dvd , svcd ,  hdvd ... போன்றவை அவை நமக்கு இங்கு தேவையானவைகளை தேர்வு செய்துள்ளோம்
2.stream type - இங்கே MPEG2 Elementary stream என்பதை தேர்வு செய்யவும் . ஏன்னா எலிமெண்டரி ஸ்டீர்ம் தான் மேஸ்ட்ரோ எடுத்துக்கும்.
3.file extension video - m2v முன்னரே குறிப்பிட்டுருக்கேன்.
4.file extension audio - default m2a இருக்கும் நாம செய்யபோறது ac3 அதை கீழே உள்ள அப்சனில் தேர்வு செய்யலாம்.
அடுத்து இருக்கும் use marker point if exist என்பதில் இருக்கும் டிக்கை எடுத்து விடுங்க.
video basic:
1.Video standard என்பதில் Ntsc 720 X 480
2.width 
3.height இவை இரண்டும் டிஸ்ஸேபிளா இருக்கும் காரணம் நாம டிவிடிய தேர்ந்தெடுத்தனால் raw mpeg தேர்ந்தெடுத்தா இவை எனபிளாக இருக்கும்.
4.frame rate - 29.976(ntsc) என்பதை தேர்ந்தெடுக்க டிவிடிக்கு (நாம் டார்கெட் செலக்ட் செய்யும் போதே dvd ntsc என்பதை தேர்வு செய்துள்ளோம் என்பதை கருத்தில் கொள்க)
5.interlacing - இங்கே உங்களுடைய source video குனாதிசயங்களை கவனிக்க சொன்னதை பாருங்கள் அங்கே இந்த பகுதியில் என்ன பண்பு இருந்ததோ அதையே இங்கும் கொடுங்கள் . உங்கள் ப்ளேயர் progressive scan ப்ளே செய்தால் progressive கொடுக்கலாம். இல்லையெனில் top or bottom இரண்டே வாய்ப்புகள்.

6.aspect ration - 4:3 or 16:9(wide screen) உங்கள் வீடியோ எந்த பார்மட்டில் இருக்கிறதோ அந்த பார்மட்டை தேர்வு செய்யுங்கள்

7. Quality / speed - இதில் mastering quality என்பதை தேர்வு செய்யுங்கள் அது தான் நல்ல வெளியீடு கொடுக்கும் ஆனால் நேரம் கொஞ்சம் அதிகம் எடுக்கும். இல்லை வேகமாக செய்யனும்னா அதுக்கும் ஆப்சன் இருக்கு.
use closed GOP - remove the tic இதை பத்தி சொன்னா எல்லோரும் என்னை அடிக்க வந்துருவீங்க கொஞ்சம் குழப்பும் அதனால விட்டிடுவோம்

video bit rate 
bitrate type : இதில் VBR(variable bit rate) என்று இருப்பதை தேர்வு செய்தல் நலம் காரணம் இது தான் குறைவான பைல் சைஸில் நிறைவான தரத்தை கொடுக்கும். ஒரு வீடியோ எத்தனை மணி நேரம் ஓடினாலும் அதனுடைய அளவினை(file size) நிர்ணயிக்கும் பகுதி இது தான் பிட்ரேட் அதிகரிக்க அதிகரிக்க பைலின் அளவு கூடும். பிட்ரேட் 8000 மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிட்ரேட் கால்குலேட் எனும் இலவச மென்பொருள் இருக்கிறது இணையத்தில் வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நீங்கள் டிவிடி 5(4.7 ஜிபி) அல்லது டிவிடி 9(8.5 ஜிபி) பயன்படுத்த போறீங்களா என்பதை தீர்மானம் செய்துக்கங்க. டிவிடி 5 யை எடுத்துக்குவோம்.

vbr choose செய்ததும் கீழே இருக்கும் பெட்டிகளில்
1.number of passes - 2 pass கொடுங்க கொஞ்சம் நீளமான வீடியோ என்றால் குறைவான நேரம் கொண்ட வீடியோ என்றால் நாம் vbr தேர்ந்தெடுக்க தேவையில்லை அதற்கு constant bitrate ஓக்கே.
இந்த 2 பாஸில் என்ன செய்யும்னா இரண்டும் முறை என்கோடிங் செய்யும் அதாவது முதல்முறை குவாலிட்டியை நிலை நிறுத்தும் இரண்டாவது முறை நாம் கொடுத்துள்ள பிட்ரேட்டிற்கு தகுந்தார் போல பைல் சைஸை நிலை நிறுத்தும். சில மென்பொருட்களில் 99 பாஸ் கொடுக்கும் வசதி கூட இருக்கு (உதாரணம் சினிமா க்ராப்ட்) ஆனால் அவ்வள்வு தேவையில்லை என்பது என் கருத்து.
video bitrate இதுக்கு இன்னொரு பேரு average bitrate இங்க கொடுக்க கூடிய அளவுதான் நம்முடைய வீடியோவின் அளவினை(size) நிர்ணயிக்க போகிறது எனவே பிட்ரேட் கால்குலேடர் பயன்படுத்தலாம்.
உதரணமாக  ஒரு 3 மணி நேர வீடியோவிற்கு 3200 kbps  கொடுக்கலாம் இது டிவிடி 5 க்கு இதனுடைய கொள்ளளவு 4.7 ஜிபி என்பதை நினைவில் கொள்க.
max bitrate இங்கே 8000 கொடுங்கள் இதை தாண்டி கொடுக்க வேண்டாம்
min bitrate - 0 போதும்

audio basic :
use audio : use always - நீங்கள் இந்த வீடியோவில் உள்ள ஆடியோவை பயன்படுத்துவதாக இருந்தால் இந்த தேர்வை செய்யுங்கள் இல்லை வேற ஆடியோ தனியாக என்கோடிங்க் செய்வதாக இருந்தால் dont use என்பதை தேர்வு செய்துவிடுங்கள்.

audio stream type : AC3 என்பதை தேர்வு செய்யுங்கள் இதுதான் குறைவான பைல் சைஸில் நிறைவான தரம் ஏற்கனவே ஆடியோ பற்றி சொல்லியுள்ளேன் ரிவைஸ் செய்துகங்க.

sample rate - 48.0 disable ஆ இருக்கும் காரணம் நாம டார்கெட்டில் டிவிடி என்பதை தேர்வு செய்ததால் எப்பொழுதுமே டிவிடி ஆடியோ சாம்பிள் ரேட் 48000 . விசிடி, ஆடியோ சிடி போன்றவற்றிற்கு 44100 .

channels : 3 options
               mono - ஆடியோ சிங்கிள் டிராக் என்றால் இது
               stereo - இரண்டு டிராக் என்றால்
               5.1 - சரவுண்ட் சவுண்ட் என்றால் (சாதரண ஆடியோவையும் இதற்கு தேர்ந்தேடுக்கலாம் ஆனால் எபெக்ட் கிடைக்காது தேவையில்லாமல் இடத்தை தான் அடைக்கும்)
audio bitrate : stereo - 128kbps minimum - maximum - 192 kbps
                      5.1 - 224kbps minimum - maximum - 448  kbps
இந்த செட்டிங்கோட இந்த பகுதியை நிறுத்திக்கொள்வோம் மேலதிக டார்கெட் ஆப்சன்கள் அடுத்த பகுதியில்

சந்தேகங்கள் இருந்தால் கேள்விகள் கேட்கலாம்....

பிடிச்சிருந்தா ஓட்டு/கமெண்ட் போடுங்க

Thursday, November 26, 2009

தொழில் முறை டிவிடி உருவாக்கம் பாகம் -1

நண்பர்களே இன்றைய காலகட்டத்தில் நிறைய டிவிடி உருவாக்க மென்பொருட்கள் இருக்கின்றன. என்ன பார்மட் வீடியோ கொடுத்தாலும் அதை டிவிடியாக மாற்றிக்கொடுப்பவை கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும் தொழில் ரீதியாக என்று பார்த்தால் சில மென்பொருட்களே தேறும்.

1.அடோப் நிறுவனத்தின் என்கோர் டிவிடி(Encore) எனும் மென்பொருள்
2.சோனிக் நிறுவனத்தின் டிவிடி இட் (dvd it) மற்றும் scenario
3.சோனி நிறுவனத்தின் டிவிடி ஆர்க்கிடெக்ட்(dvd architect)
4.டிவிடி லேப் (dvd lab)

போன்றவைகள் முன்னிலை வகிக்கின்றன. இந்த வரிசையில் இல்லாத ஆனால் இவற்றிற்கு எல்லாம் முன்னோடியான ஒரு மென்பொருள் மூலமாக நாம் கற்றுக்கொள்ள போகிறோம்,அந்த மென்பொருளின் பெயர்

Spruce Maestro இந்த மென்பொருள் இப்பொழுது விற்பனையில் இல்லை அப்டேட் இல்லை ஏன் கம்பெணியே இல்லை. ஆமாம் இதனுடைய அருமை பெருமைகளை பார்த்த ஆப்பிள் நிறுவனம் இதை விலைக்கு வாங்கி விட்டது . கீழ்வரும் படத்தை பார்த்தாலே தெரியுமே எந்த காலத்து வெர்சன்னு.


ஓல்ட் ஸ் கோல்ட் எனும் பொன்மொழி இந்த மென்பொருளுக்கு பொருந்தும் மேலே சொன்ன 4 மென்பொருட்களும் இன்னும் இந்த மென்பொருளின் வசதிகளையும் உருவாக்கத்தையும் காப்பி அடித்து உருவாகிக்கொண்டிருக்கின்றன ஆனாலும் மேஸ்ட்ரோவின் இடத்தை பிடிக்க இயலவில்லை. இந்த மென்பொருள் வேண்டுவோர் எங்காவது தளங்களில் தேடி எடுத்துக்கொள்ளவும்.

இந்த தளத்தில் இருக்கலாம்

காப்பிரைட் பிரச்சினை எப்படினு தெரியல ஏன்னா கம்பெனியே இல்லை ஒருவேளை கையகப்படுத்திய ஆப்பிள் நிறுவனம் ஏதும் செய்யலாம்.

சரி இந்த மேஸ்ட்ரோவை கற்றுக்கொள்ளும் முன் நமக்கு சில விசயங்கள் தேவை மேஸ்ட்ரோ வெறும் டிவிடி ஆத்தரிங் மென்பொருள் மட்டுமே அதற்கு தேவையான வீடியோக்களை நாம் தனியாக உருவாக்க வேண்டும். எனவே அதற்கு தேவையான ஒரு எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு வீடியோ மாற்றியை நாம் படிக்கலாம்.

நமக்கு தேவையான மென்பொருட்கள்

1.ஸ்ப்ரூஸ் டிவிடி மேஸ்ட்ரோ பதிப்பு எண் 2.9
2.எடியஸ் தற்போதைய பதிப்பு எண் 5 அல்லது புரோகோடர் தற்போதைய பதிப்பு 3 அல்லது கார்பன் கோடர் பதிப்பு 3 
3.போட்டோஷாப்

போட்டோஷாப்:
மெனுக்களை உருவாக்க பயன்படுத்த போகிறோம்

எடியஸ் (அ) புரொகோடர்:
வீடியோவை மாஸ்ட்ரோ மென்பொருளுக்கு ஏற்றவாரு மாற்ற பயன்படுத்த போகிறோம்

ஸ்ப்ரூஸ்:
மாற்றிய வீடியோவையும் , மெனுக்களையும் பயன்படுத்தி டிவிடி உருவாக்கம் செய்ய போகின்றோம்.

முதலில் படிக்க இருப்பது புரோகோடர்:


புரோகோடர் பற்றி சொல்லனும்னா இது க்ராஸ்வேலி(கெனாபஸ்) நிறுவணத்தின் தயாரிப்பு இதே நிறுவணத்தின் தயாரிப்பு தான் எடியஸ்.


புரோகோடருக்கும் , எடியஸ்க்கும் என்ன வித்தியாசம் என்றால்

புரோகோடர் ஒரு சக்திவாய்ந்த வீடியோ/ஆடியோ மாற்றி தொழில் ரீதியாக பயன்படுத்தலாம். பெரும்பாலான பார்மட்டுகளை இன்புட்டாக கொடுக்கலாம். அதே போல அவுட்புட்டாகவும் பெறலாம்,

எடியஸ் என்பது ஒரு தொழில்ரீதியிலான எடிட்டிங் மென்பொருள். நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுவது இல்லை. மற்ற மென்பொருள் கோடக்குகளை விட எடியஸின் கோடக்குகள் சக்திவாய்ந்தவை நல்ல அவுட்புட் கொடுக்க வல்லவை. இந்த எடியஸ் பற்றி படிக்கவே பெரிய தொடர் ஆகும் என்பதால் நாம் புரோகோடர் பற்றி மட்டும் பார்ப்போம். டைம் லைனில் வேலை செய்ய தெரிந்தவர்கள் எடியஸை பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருட்களை கொஞ்சம் சேகரித்து நிறுவிக்கங்க அடுத்தடுத்து வரும் பகுதிகளில் ஒவ்வொரு செய்முறையாக பார்ப்போம்.

கொஞ்சம் வீடியோக்களை பற்றிய முன்னுரை கொடுப்போமே...

வீடியோக்களில் நிறைய பார்மெட்டுகள் உள்ளன avi ஆரம்பித்து mkv வரை இருக்கின்றன.

raw video format என்று பார்த்தால் அது avi தான். இந்த avi யிலே நிறைய கோடக்குள் இருக்கின்றன. இதில் பொதுவானது மற்றும் நல்ல தரமானது என்றால் uncompressed avi format தான்.

ஆனால் இந்த பார்மட்டை நாம் டிவிடி ஆத்தரிங்கில் நேரடியாக பயன்படுத்த முடியாது எனவே ஆத்தரிங் மென்பொருள் ஏற்றுக்கொள்ளும் வகையில் வீடியோவை மாற்ற வேண்டும் .

பொதுவாக ஆத்தரிங்க் மென்பொருட்கள் ஏற்றுக்கொள்ளும் பார்மட்
mpeg2 , mpeg1 - for videos
pcm , ac3 , dts - for audios

முதலில் வீடியோவை பார்ப்போம்

raw avi யிலிருந்து எம்பெக் காக மாற்றும் பொழுது கோடக்குகளுக்கு தகுந்த அவுட்புட் கிடைக்கும். ஒரு காலத்தில் இதில் கோலோச்சியது Main concept codecs இந்த கோடக்குகள் தான் இன்றுவரை அடோப் ப்ரிமீயர் , சோனி வேகாஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் இது சிறந்த கோடக் அல்ல என்பது என் கருத்து ஏனென்றால் வெளியீடு கொஞ்சம் டல்லா இருக்கும். ப்ரிமீயர் , வேகாஸ் இரண்டுமே ஒரே கோடக் என்பதால் வெளியீடு ஒரே தரத்தில் இருக்கும் என்பதை குறித்துக்கொள்க. ஆனாலும் அடோப்பிற்கு ஒரு அருமையான ப்ளக்கின் இருக்கு அது தான் சினிமா க்ராப்ட் என்கோடர்(CCE) விலை தான் கொஞ்சம் கண்ணைக்கட்டும் 2000 டாலர் . இதை காசு கொடுத்து வாங்குனா ஏதோ ஏமாந்த மாதிரி இருக்கும் ஆமா வெறும் 5 எம்பி கூட வராது இந்த மென்பொருள்.

இந்த மெயின்கான்சப்ட் கோடக்கை விட சிறந்தது கெனாபஸின் கோடக் எனவே எடியஸ்/புரோகோடர் அவுட் புட் அருமையாக இருக்கும்.

வீடியோவில் இரண்டு வகையான முறைகள் உள்ளன

1.ntsc
2.pal


நம்ம ஊரு பக்கம் டிவிடிக்கு ஏற்ற முறை ntsc , விசிடிக்கு ஏற்ற முறை pal.

டிவிடிக்கு தேவையான mpeg-2 வகை பற்றி பார்ப்போம்

mpeg2 களை இரண்டு வகையாக பிரிக்கலாம்

1.Program stream
2.Elementary stream

program stream file இன் விரிவுப்பெயர்(extension name) *.mpg (இதில் வீடியோவுடன் இனைந்த பகுதியாக ஆடியோவும் இருக்கும்)
elementary stream file இன் விரிவுப்பெயர் *.m2v,*.m1v  இதில் வீடியோ தனியாக பிரிக்கப்பட்டு இருக்கும்.

நம்முடைய மேஸ்ட்ரோ இந்த elementary stream file களை மட்டுமே எடுக்கும். அதாவது *.m1v and *.m2v பைல்களை மட்டுமே வீடியோவில் ஏற்றுக்கொள்ளும்.

அடுத்து ஆடியோ

ஒரு டிவிடிக்கு தேவையான ஆடியோ வகைகள்

புரோகிராம் ஸ்ட்ரீம் என்றால் வீடியோவுடன் ஆடியோ இனைந்து வரும்
எலிமெண்டரி ஸ்ட்ரீம் என்றால் தனியாக உருவாக்க வேண்டும்

மேஸ்ட்ரோ ஏற்றுக்கொள்ளும் ஆடியோ பார்மட்டுகள்
1.*.ac3
2.*.wav(pcm wav)
3.*.dts

இந்த dts sound support இப்பதான் கொஞ்ச காலமாக என்கோரில் இருக்கு இன்னும் டிவிடி ஆர்க்கிடெக்டில் இல்லை.

ac3 - இதில் இரண்டு வகைகள்
1)2 channel  ஸ்ட்ரியோ
2)5.1 சேனல் சரவுண்ட் சவுண்ட் இந்த வகை ஆடியோ பைல்கள் மிகவும் சிறிய கொள்ளவை எடுக்கும் என்பது சிறப்பானது ஒலியும் துல்லியமாக இருக்கும்.

wav - இதிலும் அதே இரண்டு வகை ஆனால் இது uncompressed என்பதால் இதன் அளவு மிகவும் அதிகம்.

dts - தியேட்டரில் பார்க்கும் எபெக்ட் ஏசி-3 யைவிட கொஞ்சம் பெட்டர், பைல் சைஸ் சிறியதே ஆனால் எல்லா டிவிடி ப்ளேயர்களிலும் dts யை ப்ளே செய்யும் வசதி இருப்பதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

சரி நாம் படிக்கபோவது எந்த பார்மெட்டுகளை பற்றினு பார்ப்போம்
1.*.m2v
2.*.ac3

அடுத்த பாடத்தில் புரோகோடர் வருகிறது Procoder யை தேடிப்பிடிங்க.....
பிடிச்சிருந்தா ஓட்டு போடுங்க பிடிக்கலைனாலும் கருத்து போடுங்க சந்தேகங்கள் இருப்பின் கேள்விகளும் கேக்கலாம்.