ஒன்பதுகளும் ஓர் அசைவிற்கு ஆட
பரமனின் பாதியவள் விக்கித்து நிற்க
பண்ணிரு கையோன் கையுறு நிலையிற்க
ஆனை முகத்தோன் அதிர்ச்சியுற
ஆடிய திருத்தாண்டவம் அகிலமே குலுங்க
ஆட்கொள்பவன் யாக்கை தூக்கி
ஒற்றைக்காலிலே ஒய்யாரமாய்
நின்று கொண்டே நீதி சொன்னவன்
இசையே தெய்வமாய் இறையே மானிடமாய்
அகிலமும் அவனென அன்பிலே பற்றி
கருப்பொருளே எனைக்கருக்கொள்வாய்
உன் பெரும் பாதத்தில் தூசியாய்
உன் கடும் கோபத்தில் சிறு அனலாய்
எங்கும் உனை எதிலும் உனை மறக்காத
வரம் வேண்டும் வேண்டுகிறேன்